பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 4, 2015

14. உண்மை (தொடர்ச்சி I)

 நம்பிக்கை

மயிலாப்பூரில் ஸ்ரீ கலவல கண்ணன் செட்டியார்ஏற்படுத்திய புதிய ஸம்ஸ்க்ருத கலாசாலையின் க்ருஹப் பிரவேசத்தை ஒட்டி நீதிப்ரவீண ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர்செய்த ஆசி வசனங்களிடையே, ராமானுஜா சார்யருடையமகிமையைப்பற்றிச் சில வார்த்தைகள் சொன்னார். ஸ்ரீமான்நீதிமணி அய்யர் பிரம்மவேதாந்தியாகையால் இவருக்குத்துவைதம், விசிஷ்டாத்து வைதம், அத்வைதம், என்ற மூன்றுகட்சியும் ஸம்மதம். ஸத்யம் ஒன்று; அதனை ஆராதனைசெய்யும் வழிகள் பல; அத்வைத ஸ்தாபனம் செய்தசங்கராச்சார்யரே ஷண்மத ஸ்தாபனமும் செய்ததாகஅவருடைய சரித்திரம் சொல்லுகிறது.
பக்தியின் பெருமையை உலகத்துக்கு விளங்கக்காட்டிய மஹான்களிலே ராமானுஜாசாரியார் ஒருவர்; பக்தியாவதுதெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும்,பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்தபொருளைக் கண்"நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும்தெய்வத்தை நம்பவேண்டும். இரவிலும் பகலிலும், இன்பத்திலும்துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம்தெய்வ அருளைப்பற்றி நினைக்க வேண்டும்.நோய் வந்தால், அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணியவேண்டும். செல்வம் வேண்டுமானால், தெய்வத்தினிடம் கேட்கவேண்டும். கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லாமங்களங்களையும் தெய்வத்தினிடம் உண்மையுடன் கேட்டால்அது கொடுக்கும். தெய்வம் கொடுக்காவிட்டாலும் அதை நம்பவேண்டும். கேட்டவுடனே கொடுப்பது தெய்வத்திற்கு வழக்கமில்லை. பக்தி பக்குவமடைந்த பிறகுதான் கேட்ட வரம்உடனே கிடைக்கும். அதுவரை தாமஸங்கள் உண்டாகும். இதுகர்ம விதி. ''அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்தகருமங்கள் ஆகா''. எனவே,நாம் தெய்வத்தினிடம் கேட்ட பயன்கைகூடுவதற்கு எத்தனை காலமான போதிலும், அதைரியப்படாமல்,தெய்வபக்தியையும் அதனாலுண்டாகும் ஊக்கத்தையும்முயற்சியையும் துணையாகக் கொண்டு நடக்கவேண்டும். விதியின்முடிவுகளைத் தெய்வபக்தி வெல்லும். இந்த உலகம் முழுமைக்கும்ஈசனே தலைவன். அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன்எது கேட்டாலும் கைகூடும். நம்பு; கேள். ஓயாமல் தொழில் செய்துகொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே. தெய்வம் நிச்சயமாக வரம்கொடுக்கும். தெய்வம் பிரஹ்லாதனை ஹிரண்யனிடமிருந்து காத்தது."முதலை வாயிலிருந்து யானையை விடுவித்தது. பாஞ்சாலியின்மானத்தைக்காத்தது. தெய்வம் விக்கிரமாதித்யனுக்கும்,காளிதாஸனுக்கும், சிவாஜி ராஜாவுக்கும், நிகரில்லாத வெற்றியும் தீராதபுகழும் கொடுத்தது. இவ்விதமான தெய்வ பக்தியை ராமாநுஜர் மனிதருடைய இஹபரவாழ்வுக்கு முதல் ஸ்தானமாகச் சொன்னார்.ஆழ்வார்களுடைய பாட்டில் விடுதலை யொளி நிற்பதுகண்டு,அவற்றை வேதம் போல் கருதவேண்டுமென்று போதனை செய்தார்.
நம்பிக்கை

ஆழ்வார்களுடைய குலம் நானாவிதம்;அப்படியிருந்தும் அவர்களைக் கோயிலில் வைத்துப் பூஜைசெய்யலாமென்று ராமாநுஜர் நியமித்தார். முற்காலத்தில்பிராமணர் இதர ஜாதியாரை இழிவாக வைத்துக் கெடுத்தார்களென்றும், ஞானத்துக்குத் தகாதவரென்று சொல்லி அடிமைப்படுத்தினார்களென்றும் பொய்க்கதைகள் சொல்லி ஹிந்துதர்மத்தை அழிக்க விரும்புகிற கிறிஸ்துவப் பாதிரிகளும்அவ்விடத்து, சிஷ்யர்களும் ராமாநுஜாசாரியர் பிராமணர்என்பதை அறிய மாட்டார் போலும். சூத்திரராகிய திருக்கச்சிநம்பியை ராமாநுஜர் குருவாகக்கொண்டு அவருடையஉச்சிஷ்டத்தை உண்ணத் திருவுளங் கொண்டார். திருநாராயணபுரத்தில் பறையர் ஒருசமயம் கோயிலுக்குள் வரலாமென்றுஸ்ரீராமாநுஜர் நியமித்தருளிய முறை இன்றைக்கும் நடந்துவருகிறது.
இப்படிப்பட்ட மனுஷ்யர்களுடைய தர்மத்தைஇக்காலத்தில் வளரும்படி செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன்ஸ்ரீ கண்ணன் செட்டியார் ஏற்படுத்தியிருக்கும் கலாசாலையில்,பிற மதங்களும் உண்மையென்ற சமரஸ ஞானத்தை ஊட்டத்தவறலாகாது. இந்த ஸமரஸ ஞானம் இல்லாவிட்டால் எந்தச்சித்தாந்தமும் நாளடைவில் பொய்யாகவும், குருட்டுநம்பிக்கையாகவும், வீண் அலங்காரமாகவும் முடிந்து ஜனங்களை "மிருகங்களைப் போலாக்கிவிடும். வேத தர்மம் ஒன்று. அதில்ராமாநுஜர் தர்மம் ஒரு கிளை. பாஷ்ய விசாரணை நல்லது.உண்மையான பக்தியே அமிர்தம். எல்லா உயிர்களிடத்திலும்நாராயணன் விளங்குவது கண்டு, அந்த ஞானத்தாலே கலியைவென்று தர்ம ஸ்தாபனம் செய்வதற்குள்ள பயிற்சி மேற்படிகண்ணன் செட்டியார் கலாசாலையிலும், அதுபோன்று எல்லாப் பாடசாலைகளிலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், தேசம்மறுபடி மேன்மையடையும். இது கைகூடும் வண்ணம் பராசக்திஅருள் செய்க.
தைரியம்

நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றிநாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும்ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத்தெய்வபாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்றஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்றுசொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடையபாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா?அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷையென்கிறோம்.
அந்தப் பாஷையில் தைரியம் என்பதோர்சொல்லுண்டு தீரனுடைய இயற்கை. தைரியம். தீரன் என்றவார்த்தையின் தாதுப் பொருளைக் கவனிப்போமானால்"அறிவுடையவன் என்ற அர்த்தமாகும். துணிவுடையவனுக்கும்அந்தப் பாஷையிலே அதுவே பெயராக வழங்கப்படுகிறது.எனவே 'தைரியம்' என்ற சொல் அறிவுடைமை யென்றும்துணிவுடைமையென்றும் இருவித அர்த்தங்கள் உடையது.இங்ஙனம் இவ்விரண்டு கருத்துக்களுக்கும் ஒரே சொல்லைவழங்குவது அந்த பாஷையின் பெருமைக்குள்ள சின்னங்களிலே ஒன்றாகும்.
உலகத்தில் வேறு எந்தப் பாஷையிலும்மேற்கூறிய இரண்டு கருத்துக்களையும் சேர்த்துக் குறிப்பிடக்கூடிய ஒரே பதம் கிடையாது. எந்த நாட்டினரைக் காட்டிலும்அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்தமஹான்கள் வழங்கிய பாஷையாதலால், அந்தப் பாஷையிலே இவ்விரண்டு பொருள்களுக்கும் ஒரே பதம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து தெரியக்கூடியது யாதென்றால்,துணிவுள்ளவனையே அறிவுள்ளவனென்பதாக நமதுமுன்னோர்கள் மதிக்கிறார்கள். எடுத்ததற்கெல்லாம் அஞ்சும்இயல்புடைய கோழையொருவன் தன்னைப் பலசாஸ்திரங்கள்கற்றவன் என்றும் அறிவாளியென்றும் சொல்வானானால்,அவனை நம்பாதே! அவன் முகத்தை நோக்கிக் காறியுமிழ்ந்துவிட்டு, அவனிடம் பின்வருமாறு சொல்:- ''?அப்பா, நீ ஏட்டைத்துளைக்கும் ராமபாணப் பூச்சியைப்போல், பல நூல்களைத் துளைத்துப் பார்த்து ஒரு வேளை வாழ்நாளைவீணாக்கி யிருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருக்கும் வரை நீஅறிவாளியாகமாட்டாய். அஞ்சாமைக்கும் அறிவுக்கும் நமதுமுன்னோர்கள் ஒரே சொல்லை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.அதை நீ கேள்விப்பட்டதில்லை போலும்!'''
ஆம், அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு.விபத்துக்கள் வரும்போது நடுங்குபவன் மூடன். அவன்எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன்தான். விபத்துக்கள்வரும்போது, எவன் உள்ளம் நடுங்காமல் துணிவுடன்"அவற்றையெல்லாம் போக்க முயற்சி செய்கிறானோ, அவனேஞானி. ''ஹரி: ஓம்'' என்று எழுதத் தெரியாத போதிலும் அவன்ஞானிதான்.
சிவாஜி மஹாராஜா தமது சொந்தப்பிரயத்தனத்தினாலும்,துணிவாலும், புத்தி கூர்மையாலும் அவுரங்கசீப்பின்கொடுங்கோன்மையை அழித்து, மகாராஷ்டிரம் ஏற்படுத்திதர்மஸ்தாபனம் செய்தார். அவர் ஏட்டுப்படிப்பில் தேர்ந்தவர்அல்லர். இந்தக் காலத்தில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துப் பரீக்ஷைகள் தேறி 15 ரூபாயைக் கொண்டு பிழைப்பதற்காகத் தமது தர்மத்தையும் ஆத்மாவையும்  விலைப்படுத்தக் கூடிய மனிதர்கள், ஆயிரக் கணக்கான சுவடிகள்  படித்துக் கண்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவாஜிக்கு மகாராட்டிர ராஜ்யம் லாபம்.இவ்விருவரிலே யார்சிறந்தவர்,இவ்விருவரிலே யார் அறிஞர்?
பாரதவாசிகளாகிய நாம் இப்போது புனருத்தாரணம்பெறுவதற்குக் கல்வி வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள்.நாம் 'துணிவு வேண்டும்' என்கிறோம். துணிவே தாய்; அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும்பிறக்கின்றன.
உயிரின் ஒலி

சில தினங்களுக்கு முன்பு கல்கத்தாவில் ஸ்ரீ ஜகதீசசந்திரவஸு, தமது ''வஸு மந்திரம்'' என்ற கூடத்தைப்பாரதமாதாவுக்குச் சமர்ப்பணம் செய்கையில், ''உயிரின் ஒலி''என்ற மகுடமிட்டு ஒரு பிரசங்கம் செய்தார்.
அவருடைய கொள்கை எப்படியென்றால்:- நாம்ஜடபதார்த்தமாக நினைக்கும் உலோகாதிகளில் உயிர்நிறைந்திருக்கிறது. ஐந்துக்களைப் போலவே விருக்ஷாதிகளுக்கும்உணர்ச்சியிருக்கிறது. ஆகவே, மண், செடி, ஐந்து, மனுஷ்யன்அத்தனைக்குள்ளும் ஒரே விதமான ப்ராணசக்தியிருக்கிறது. 'இந்தஉலகமே உயிர்க்கடல்ய என்பது அவரது சித்தாந்தம். அவர் பலநுட்பமான கருவிகள் செய்திருக்கிறார். ஹிந்து தேசத்துத்தொழிலாளிகளைக் கொண்டு அந்த ஸூக்ஷ்மக் கருவிகளைஎல்லாம் செய்து கொண்டார். அந்தக்கருவிகளின் நேர்த்தியைப்பார்த்து ஐரோப்பிய சாஸ்திரிகளும் யந்திரிகளும்"ஆச்சரியப்படுகிறார்கள். அந்தக் கருவிகளின் உதவியால், ஒருபூண்டின் கையில் ஒரு ஊசி எழுதுகோல் கொடுக்கிறார். ஒருபுகைபட்ட கண்ணாடியின் மேல் அந்த ஊசி எழுதுகிறது;அதாவது,கோடுகள் கீறுகிறது. அந்தக் கோடுகளினால் மேற்படி செடியின்உள்ள நிலையை, அதன் நாடியின் அசைவு தெரிவிக்கிறது.
செடிக்கு விஷத்தைக் கொடுத்தால் மூர்ச்சைபோடுகிறது.மறுபடி, தெளிய மருந்து கொடுத்தால் தெளிகிறது. மதுபானம்செய்வித்தால் உண்டாட்டுக் கேளிகள் நடத்துகிறது. செடியின்சந்தோஷம், சோர்வு, வளர்ச்சி, சாவு ஆகிய எல்லாநிலைமைகளையும் கண்ணாடியிலே கீறிக் காட்டுவதைப்பார்க்கும்போது ''செடியின் நாடியுணர்ச்சிகளுக்கும் இதரமனுஷ்யமிருகாதி ஐந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை''என்பது ருஜுவாகிறது.
இவ்விதமான அற்புதப் பரீக்ஷைகளினால் உலகத்தின்உயிரொலியை நமக்குத் தெரியும்படி செய்த மஹானாகிய மேற்படிஜகதீச சந்திரவஸு நம்முடைய ஹிந்து மதத்தில் ஆழ்ந்தபக்தியுடையவர் என்பது சொல்லாமலே விளங்கும். ஹிந்துக்களின்மேன்மையைப்பற்றி அவர் வார்த்தை சொல்லும்போது, அந்தவார்த்தைகளிலே மிகச்சிறந்ததொரு ஜீவநாதம் உண்டாகிறது. அந்தவார்த்தைகளைப் படிக்கும்போதே படிப்போரின் ஜீவசக்திமிகுதிப்படுகிறது.
அவர் சொல்லுகிறார்:- 'ஸாதாரணக் கருவிகளால்மஹத்தான காரியங்களை நிறைவேற்றிய மஹான்களின்ஸந்ததியிலேநாம் பிறந்திருக்கிறோம். ஒருவன் ஒரு பெருங்காரியத்தில் முழுதும்தன்னை ஈடுபடுத்தினால், அடைத்திருந்த கதவுகள் திறக்கும்.அஸாத்யமாகத் தோன்றுவது அவனுக்கு ஸாத்யமாகும்; உண்மை"தேடுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் சிற்றின்பங்களைவிரும்பலாகாது. லாப நஷ்டங்களையும் வெற்றி தோல்விகளையும்ஒன்று போலக் கருதி அவன் தனது ஜீவனை உண்மைக்குநைவேத்யமாக விடவேண்டும். பாரததேசம் இப்போது வென்றுகாப்பாற்ற வேண்டிய வஸ்து யாது?  சிறியதும் வரம்புற்றதுமாகியஒரு பொருளினால் பாரதமாதா திருப்தியடைவாளா?  இவளுடையஅற்புதமான பூர்வ சரித்திரத்தையும் பூர்வ சாஸ்திரங்களையும்செயல்களையும் யோசிக்கும்போது, தாழ்ந்த தரமுள்ளது சிலநாள்நிற்கிறதுமான பாலமொன்றை இவள் விரும்பமாட்டாளென்பது தெரியும்.
'இப்போது நம்முடைய கண்முன்னே இரண்டு விதமான தர்மங்கள் காணப்படுகின்றன.
உயிரின் ஒலி

''முதலாவது, (ஐரோப்பியரைப் போல நாமும்) படிப்பின்பரவுதலாலும், நகரத்தானுக்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாலும், கைத்தொழில், வியாபார சம்பந்தமான பலவிதமுயற்சிகளாலும், பாரதநாட்டை வலிமையுடைய நாடாகச் செய்யவேண்டும். இவையெல்லாம் தேசக் கடமையின் முக்கியாம்சங்கள்.இவற்றைப் புறக்கணித்தால் நமது ஜீவனுக்கே ஆபத்து நேரிடும்,வாழ்க்கையிலே ஜயமும், அவனவன் தன் தன் அவாவைத் திருப்திசெய்து கொள்ளும் வழியும் வேண்டிப் பாடுபட்டால், அதிலிருந்தேமேற்கூறிய லௌகிக தர்மத்திற்குத் தூண்டுதல் உண்டாகும்.இரண்டாவது, ஆத்மதர்மம். க்ஷணமாயிருக்கும் இன்பங்களைமாத்திரம் கருதாமல், மனுஷ்ய வாழ்க்கையின் அத்யுந்நதமான"நோக்கத்தை நாடி உழைத்தவர்கள். நமது நாட்டில் எக்காலத்திலும்மாறாமல் இருந்து வருகிறார்கள்.'
ஆத்ம தர்மமாவது யாதென்றால், ஸ்ரீ வஸுசொல்லுகிறார்: 'மனுஷ்ய ஜாதியின் பரம க்ஷேமத்திற்காக ஒருவன்தன்னைத் துறந்து விடுதல்' என்று. வந்தே மாதரம். இந்தத்தர்மத்தை எக்காலத்திலும் இடைவிடாமல் ஒரு சிலரேனும் ஆதரவுசெய்து வந்தமையாலேதான்-அஸ்ஸிரியா தேசத்திலும் நீலநதிக்கரையிலும் தலைதூக்கி நின்ற பெரிய ஜாதிகள் அழிந்துபோயின - நாம் அழியாமல் என்றும் இளமை கொண்டிருக்கிறோம்.கால வெள்ளத்தில் வரும் மாறுதல்களுக்கெல்லாம் மாறாமல், தான்அவற்றைத் தனதாக்கிக்கொண்டு வாழும் திறமை நமது நாட்டிற்குஇருக்கிறது.
வந்தே மாதரம்.
இதுவே உயிரின் ஒலி. ஹிந்துஸ்தானத்தைவணங்குகிறேன், ஹிந்து தர்மத்தைப் போற்றுகிறேன். லோகநன்மைக்காக என்னை மறந்து, என்னை இரை கொடுப்பேன்.
இதுதான் ஜீவசக்தியின் சாந்தி வசனம். தர்மம்ஐரோப்பியருக்குத் தெரியாது. அதை நாம் ஐரோப்பியருக்குக்கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய முயற்சிகளை நாம்"கற்றுக்கொண்டு, பிறகுதான் அவர்களுக்கு நாம்உபாத்யாயராகலாம்.
ஐரோப்பாவின் தொழில் நுட்பங்களை நாம் பயிற்சிசெய்தல் எளிதென்பது ஸ்ரீமான் வஸுவின் சரிதையிலே நன்குவிளங்கும். நம்முடைய சாந்தி தர்மத்தை ஐரோப்பியர் தெரிந்துகொள்வதால், அவர்களுக்கு விளையக்கூடிய நன்மையோ மிகமிகப் பெரியது.
ஸ்ரீீமான் ஜகதீச சந்திர வஸு சொல்லுகிறார்:-  'தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்யநாகரிகமானது சேதப் படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டுநிற்கிறது. ஸர்வ நாசத்திலே கொண்டு சேர்ப்பதாகிய இந்த வெறிகொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்றொருதர்மம் வேண்டும்.' அதாவது, நம்முடைய ஹிந்து தர்மம்.ஏனென்றால், 'ஆத்மத்யாகம் தனக்குத் தனக்கென்ற அவாவினால்உண்டாகாது. எல்லாச் சிறுமைகளையும் அழித்துப் பிறர்நஷ்டமெல்லாம் தனக்கு லாபமென்று கருதும் அஞ்ஞானத்தை"வேரறுப்பதால் விளையும்' என்கிறார்.
முன்னொரு முறை சில வருஷங்களுக்கு முன்புஜகதீசசந்திரர் சொல்லிய வாக்கிய மொன்றையும் இங்கு மொழிபெயர்த்துக்காட்டுதல் பொருந்தும். லண்டன் நகரத்தில் 'ராயல்ஸொஸைடி'என்ற பெரிய சாஸ்திர சங்கத்தார் முன்பு செய்தப்ரசங்க மொன்றிலே அவர் சொன்னார்:- 'ஸ்வலி கீதங்களின்பேசாத ஸாக்ஷ்யத்தை நான் பார்த்தேன். எல்லாப் பொருளையும்தன்னுள்ளே கொண்ட ஏகவஸ்துவின் கலை ஒன்றை அங்குக்கண்டேன். ஒளியின் சிறு திரைகளுக்கிடையே தத்தளிக்கிறதுரும்பும், பூமியின் மேலே பொதிந்து கிடக்கும் உயிர்களும்,நமது தலைமேலே சுடர் வீசும் ஞாயிறும் - எல்லாம் ஒன்று.இதைக் கண்ட பொழுதே, மூவாயிர வருஷங்களுக்கு முன்புஎன் முன்னோர் கங்கைக் கரையில் முழங்கின வாக்கியத்திற்குச்சற்றே பொருள் விளங்கலாயிற்று. ''இந்த ஜகத்தின் பேதரூபங்களில் ஒன்று, காண்பார் எவரோ அவரே உண்மைகாண்பார்.'' பிறர் அல்லர், பிறர் அல்லர்; இதுதான் ஜீவஒலி.வாயுபகவானுடைய ஸ்ரீ முக வாக்யம். எல்லாவற்றிலும் ஓருயிரேஅசைகிறது. அதை அறிந்தால் பயமில்லை; பயம் தீர்ந்தால் சாவில்லை. அமிர்தம் ஸதா.'


No comments:

Post a Comment

You can give your comments here