பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 21, 2012


Trinity of Carnatic Music

திருவையாற்று கீர்த்தனைகள் பயிலரங்கம்

Sapthasthana Muthup pallakku in Tiruvaiyaru

திருவையாறு மரபு பவுண்டேஷனில் இன்று முதல் ஐந்து நாள் திருவையாற்று மூவர் கீர்த்தனைகள் பயிலரங்கம் தொடங்குகிறது. திறமை மிக்க ஆசிரியர்கள் வந்து பயிற்றுவிக்கிறார்கள். கலந்து கொண்டு பயனடைவோர் பாக்கியசாலிகள். முழுமையாக ஐந்து நாட்களும் கலந்து கொள்ள முடியாதவர்கள் ஒரு நாளாவது சென்று பயிலரங்கில் அமர்ந்து கொண்டு ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகி ஆகியோர் மீது தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி இயற்றிய பாடல்களை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க, பங்கு பெறுவோர் கூடப்பாடுகின்ற இனிய சூழ் நிலையில் சிறிது அமர்ந்துவிட்டு வரலாமே. எந்த கைமாறும் வேண்டாமல் இந்தப் புனிதப் பணியைச் செய்து வரும் திருமதி ருக்மணி அம்மாள், முனைவர் இராம.கெளசல்யா, திருமதி மீனாட்சி, திருமதி மதுவந்தி ஆகியோருக்கு வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.
                             
                                                           Atkondar Sannithi from South Street


Ayyarappar temple Rajagopuram

Satguru Sri Thyagaraja Swamigal

Thillaisthanam Neiyadiappar temple
(Workshop takes place in Thillaisthanam village)
Tuesday, May 15, 2012

Dr.Rama Kousalya wearing specs in the centre 
her mother Smt.Rukmani ammal on her right with Marabu children & guests


Beautiful scene of Cauvery river from Tiruvaiyaru bridge
The buildings seen are Pushya Mantapam & Music College

காவிரிக் கரையில் இசையின் ஊற்று

கீழே காணும் கட்டுரை ஆங்கில பத்திரிகையொன்றில் வெளிவந்தது. சென்னை பிரகிருதி ஃபவுண்டேஷன் திருவையாற்றிலுள்ள மரபு ஃபவுண்டேஷனுடன் இணைந்து ஒவ்வோராண்டும் மூன்று நாட்கள் கலாச்சார பின்னணியுள்ள திருவையாற்றில் இயற்கை சூழ்நிலையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதற்கு மூலகாரணம் முனைவர் இராம.கெளசல்யா. அவர்கள் தில்லைஸ்தானத்தில் நடத்தும் பல பயிலரங்கங்கள் இசை தொடர்பானவை. அவர் வருகிற 22ஆம்தேதி முதல் நடத்தும் பயிலரங்கம் குறித்த அறிவிப்பும் இந்த வலைப்பூவில் வெளியாகியிருக்கிறது. பிரகிருதி ஃபவுண்டேஷன் தலைவர் ஷா அவர்கள் இந்த மரபு குறித்து சொன்ன செய்திகளும் இந்தக் கட்டுரையில் காணப்படுகின்றன. இயற்கை அழகு கொஞ்சி விளையாடும் தில்லைஸ்தானம், திருவையாறு போன்ற இடங்களில் பழமையும், பண்பாடும், கலாச்சாரமும் நிலைத்து நிற்பதற்காக முனைவர் இராம.கெளசல்யா போன்றோர் பாடுபட்டு வருகின்றனர். எங்கோ ஒரு மூலையில் நடப்பதாக இவற்றை நினையாமல் குடத்திலிட்ட விளக்காக இருக்கும் இந்த நிகழ்ச்சிகள் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய கலங்கரைவிளக்கம் என்பதை உலகுக்கு அறிவிக்க வேண்டும். நன்றி.

                                                  Dr.Rama Kousalya with Marabu children
One evening at dusk, in the lovely sparkle of twilight, two years ago, on the banks of the famous Cauvery river, in an old temple in Thiruvaiyaru — a town in Tamil Nadu, steeped in history and heritage, the birth place of Saint Thyagaraja and counted among the sacred spots of India — Chennai-based musician Aruna Sairam began her performance. Swathed in an attire of lights, the space illuminated with a historical, cultural and spiritual sheen. In praise of the presiding deity of the temple, Sri Panchanadheeshwarar, Sairam sang a Thyagaraja composition called Ilalo Prahatharthihara, in ragam Atana. “I cannot articulate the sense of fulfillment of that experience,” she says, referring to the Festival of Sacred Music that is slated for March 2, 3 and 4.
Curated by Chennai-based Prakriti Foundation, this festival occupies top shelf among Ranvir Shah’s many cultural fetishes that have become events and platforms worth reckoning. Influenced by the Festival of Sacred Music, Fez, Morocco, the inspiration for the festival was personal, really. “After I bought a ruined house in Thiruvaiyaru, I had huge, idealistic dreams of living by the Cauvery in winter,” Shah says, “But I found the ghats were actually being used as toilets. It made me think of what little civic pride a town of such great significance — it hosts the Thyagaraja Aradhana every year — had.” Six months later, the first edition of the Festival of Sacred Music was unleashed with performances by talented musicians, Bombay Jayashri, Dr Jayanthi Kumaresh and the Sikkil Sisters.
A handful of foreigners and a whole bunch of locals sat quiet and mesmerised by the music, sounds and the mood. Shah and his loyal coterie from Chennai were there too; this year, friends, well-wishers and culture vultures from Mumbai, Delhi and Europe have added it on to their travel calendar.
The festival’s guiding principles are heritage and its preservation, and of course music. For company and collaboration, Shah has Dr Rama Kausalya, retired principal of the Thiruvaiyaru Music College and her Marabu Foundation. “Thiruvaiyaru often tends to get missed; people end up going to Thanjavur mostly,” Shah says, “Our idea is to motivate people in this town and villages nearby to feel a sense of pride about where they belong. T M Krishna, who has also been one of the show-stoppers at the festival, reiterates the importance of “recreating these places of heritage as magnificent aesthetic creations of art. And what better way to do it than with the performing arts?”
You bet. The line-up this year is a delicious platter. Monks from the Drepung Loseling Monastery will perform sacred Buddhist chants at the courtyard of an old Maratha palace after which Dr Phillipe Bruguiere, an ethnomusicologist from France (and the “sole” Western disciple of Ustad Zia Mohiuddin Dagar to play the Bin, now Rudra Veena) will take on the stage. There’s a Nadaswaram concert, and a show by Asima, a male vocal and percussion band from Thiruvananthapuram on March 3 at the Pushya Mahal Ghat. On the last day, Ambalapuzha Vijayakumar will sing Sopana Sangeetham and Sudha Raghunathan will conclude the festival with a two-hour long concert.  
Delhi-based Thumri-Dadra singer, Vidya Rao, who performed there a couple of years ago, remembers her experience with fondness: “At this festival, meal-times, journeys to concert venues, temple visits, all became a happy picnic deepened by interesting conversations with each other.” And that’s what matters. Conversations about culture.Dr.Rama Kousalya teaching music to children

Monday, May 14, 2012


Marabu Foundation
Jatavallabar House,
6/78, Thillaisthanam,
Thanjavur Dt., 613 203.

WORKSHOP – THIRUVAIYARU KSHETRA KRITIS OF MUSICAL TRINITY

Marabu Foundation is going to conduct a workshop on the compositions of the Musical Trinity, (Thagarajar, Muthuswamy Dikshitar and Syama Sastri) on Panchanatheeswara and Dharmambikai of Thiruvaiyaru kshetra.

          The workshops will be conducted in Gurukula pattern at Marabu Foundation, Thillaisthanam near Tiruvaiyaru, free of cost.

Course Director    :        Dr.Rama.Kausalya

Resource Persons :      Smt.S.Rajeshwari
                               Smt. Leelavathi Gopala Krishanan
                               Smt. Gayathri

         Dates :                         22.05.2012 to 27.05.2012

         Participants:      Young Musicians, Music teachers and  Students 
                                      
     
          Contact                 : Marabu Foundation, Jatavallabar House,
                                  6/78, Thillaisthanam, Thanjavur Dt., 613 203.   
                                  Phone: (04362)260606.


மரபு பவுண்டேஷன்
ஜடாவல்லபர் இல்லம் ,
6/78,தில்லைஸ்தானம்,தஞ்சாவூர் 61

பயிலரங்கம்                                                        
                                                                                                                                                             சங்கீத மும்மூர்த்திகளின்  திருவையாறு க்ஷேத்திரக்  கீர்த்தனைகள்

தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷன் சங்கீத மும்மூர்த்திகளின் (த்யாகராஜர்முத்துசுவாமி தீக்ஷதர்சியாமா சாஸ்திரி) திருவையாறு க்ஷேத்திரக்  கீர்த்தனைகளுக்கான ஆறு நாள் பயிலரங்கம் ஒன்றனை நடத்தத் திட்டமிட்டுள்ளது.  இப்பயிலரங்கம் குருகுல முறைப்படி தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷனில் நடைபெறும். கட்டணம் எதுவும் இல்லை. 

பயிலரங்க இயக்குனர்:     முனைவர் ராம. கௌசல்யா. 
ஆசிரியர்கள்:                          திருமதி எஸ். ராஜேஸ்வரி 
                                                    திருமதி லீலாவதி கோபாலக்ருஷ்ணன் 
                                                    திருமதி காயத்ரி 
தேதி                                       22.05.2012 முதல் 27.05.2012 வரை 
பயில்வோர்:                          சை ஆசிரியர்கள்இளம் கலைஞர்கள்
                                                   முதுநிலை மாணவர்கள். 

தொடர்புக்கு:--                        மரபு பவுண்டேஷன்,
                       ஜடாவல்லபர் வீடு, 6/78, தில்லைஸ்தானம்,                       தஞ்சாவூர் 613203. தொ.பேசி எண்04362 260606
                                                                                                                       ராம.கௌசல்யா.
                                      பயிலரங்க இயக்குநர்


                                                     
                            த்யாகராஜர்  
முத்துசுவாமி தீக்ஷதர்

                            சியாமா சாஸ்திரி

                                 


                                         

Friday, May 11, 2012

ஸ்ரீ சித்தாந்தசாமி திருக்கோயில்


ஸ்ரீ  சித்தாந்தசாமி திருக்கோயில் 

புதுச்சேரியில் உள்ள இந்த சித்தாந்தசாமி கோயிலைப் பற்றி பாரதியாரே தன்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறார் . வேதபுரம் என வழங்கப்பட்ட புதுச்சேரிக்கு வடக்கே இரண்டு கல் தொலைவில் சித்தாந்த சாமி கோயில் இருக்கிறது. அங்கு ஒரு மடமும் உண்டு. அந்த மடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரதேசி இருந்தார் என்று பாரதி தனது கட்டுரையில் சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்து சொல்கிறார். அந்தப் பரதேசியின் மீதுதான் அந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கிறதாம்.

பாரதியார் புதுவையில் வாழ்ந்திருந்த போது ஒரு நாள் நாராயணசாமி என்பவருடன் போய் அந்த கோயிலின் மூலஸ்தானத்துக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் உட்கார்ந்தார்களாம். அன்று பகல் முழுவதும் புதுச்சேரியைச் சுற்றியுள்ள இயற்கை வளம் மிகுந்த பகுதிகளில் சுற்றிவந்து பொழுதைக் கழிக்க இருவரும் முடிவு செய்திருந்தனர். வழக்கமாக பாரதியார் அங்கிருந்த மடு ஒன்றில் ஸ்நானம் செய்துவிட்டு அங்கு அடர்ந்து வளர்ந்திருந்த மாந்தோப்பு, பின்னாளில் அவர் குயில் பாட்டை அங்கு பாடியதால் குயில் தோப்பு என்ற பெயர் பெற்ற இடங்களில் உட்கார்ந்து பாடுவார், நண்பர்களுடன் உரையாடி மகிழ்வார். அப்போது அடித்த புயற்காற்றில் தோப்பிலிருந்த மரங்களெல்லாம் விழுந்து வெட்டவெளியாகி விட்டதால் நிழல் தேடி பாரதியும், நாராயணசாமியும் அருகில் இருந்த இந்த சித்தாந்தசாமி கோயில் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

கோயிலைச் சுற்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மரங்கள் விழுந்து கிடந்த காட்சிகள்தான் தென்பட்டன. சில மரங்கள் காற்றில் சாய்ந்து இப்போதோ எப்போதோ விழும் என்கிற நிலையில் காணப்பட்டன. ஒரு சில மரங்கள் மட்டும் எந்த காத்து வந்தால் என்ன, எங்களை என்ன செய்யமுடியும் என்கிற மதார்ப்பில் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தன. புயற்காற்று கார்த்திகை மாதத்தில் அடித்தது; இவர்கள் அங்கு போன சமயம் புயல் அடித்து ஐந்தாறு மாதங்கள் ஆன பின்பும் அதே கதைதான். இந்த விழுந்த மரங்களை என்ன செய்வது? எப்படி அகற்றுவது என்று மக்கள் முடிவு செய்யமுடியாமல் இருந்தனர்.

பாரதியாரை நண்பர்கள் 'காளிதாசன்' என்று அழைப்பதாக பாரதி தன் கட்டுரைகளில் எழுதுகிறார். அந்த முறையில் கூட வந்திருந்த நாராயணசாமி பாரதியாரைப் பார்த்து சொல்கிறார், "கேட்டீரா காளிதாசரே! இந்த ஹிந்து ஜனங்களைப் போல சோம்பேறிகள் மூன்று லோகத்திலும் இல்லை. இந்த மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டு போய் எப்படியேனும் உபயோகப்படுத்தக் கூடாதா? விழுந்தால் விழுந்தது. கிடந்தால் கிடந்தது. ஏனென்று கேட்பவர் இந்தியாவில் இல்லை. பாமர தேசமய்யா! பாமர தேசம்" என்று.

மகாகவியோ மனநிலைக்கேற்ப பேசவோ, பாடவோ, மெளனமாக சிந்திக்கவோ செய்பவர். இப்போது அமைதி நாடி இயற்கை சூழ்நிலைக்குப் போயிருக்கிறார். அங்கு அந்த நாராயணசாமி இப்படிச் சொன்னதும் பாரதி சொல்கிறார், "நாராயணா! ஹிந்துக்கள் எப்படியேனும் போகட்டும், தனியிடமாயிருக்கிற இந்த இடத்தில் மனுஷ்ய வாசனை கிடையாது. எந்தத் தொந்தரவும் இல்லை. மடத்தில் எப்போதும் கூடியிருக்கிற பரதேசிகள் கூடப் பிச்சைக்குப் போயிருக்கிறார்கள். பகல் பன்னிரெண்டு மணிக்குத்தான் திரும்பி வருவார்கள். நீ தொணதொணவென்று பேசாமல் 'சிவசிவா' என்று படுத்துத் தூங்கு" என்றார்.

நாராயணசாமி உடனடியாக பாரதியார் வாக்கை ஏற்றுத் தன் மேல் துண்டை எடுத்துத் தரையில் விரித்துப் படுத்துக் கொண்டான். உடனே தூங்கியும் போய்விட்டான்.

பாரதியார் கையில் "குருபரம்பரா ப்ரபாவம்" எனும் வைஷ்ணவ நூலொன்றைக் கையில் கொண்டு வந்திருந்தார். அவரும் அமைதியான அந்த இடத்தின் நிலைமைக்கேற்ப தன் மேல்சட்டை, அங்கவஸ்திரம் முதலியவற்றைக் கழற்றித் தலைக்கு வைத்துக் கொண்டு கீழே படுத்துக் கொண்டார். கையிலிருந்த நூலைப் படிக்கத் தொடங்கியதுமே தூக்கம் வந்து தூங்கிவிட்டார். நல்ல குளுமையான காற்று, அமைதியான சூழல், கேட்க வேண்டுமா? பாரதியாருக்கு நல்ல தூக்கம்.

அவர் தூங்கி கண் விழித்துப் பார்த்த போது பகல் மணி பதினொன்றைத் தாண்டிவிட்டது. எழுந்ததும் கோயில் கிணற்றில் தண்ணீர் இறைத்து இருவரும் ஸ்நானம் செய்தார்கள். அந்தக் கிணற்று நீர் நல்ல ருசியான குடிநீர். அப்போது புதுச்சேரியிலிருந்து ஒருவர் இவர்களுக்காக உணவு கொண்டு வந்தார். அதைச் சாப்பிட்டுவிட்டு வழக்கம் போல பாரதியார் தாம்பூலம் தரித்துக் கொண்டார். சற்று நேரம் வரை அங்கு பாரதியாரின் பாட்டும் பேச்சுமாகப் பொழுது கழிந்தது. அதன் பின் வீட்டுக்குத் திரும்பிவிட்டோம் என்று சித்தாந்தசாமி திருக்கோயிலுக்கு அவர் முதன்முதல் நுழைந்த செய்தியை நமக்குத் தருகிறார் பாரதி.

இங்கு சமாதி கொண்டிருக்கும் சித்தர் சித்தானந்த சுவாமி யார்? அவருடைய வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.

தென்னாற்காடு என அழைக்கப்பட்ட கடலூரைத் தலைநகரமாகக் கொண்ட பழைய மாவட்டத்தில் வண்டிப்பாளையம் எனும் ஊரில் இவர் பிறந்தார். திருப்பாதிரிப்புலியூர் சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் பாடலீஸ்வரரை இவர் குடும்பத்தார் வழிபட்டு வந்தனர். சித்தானந்தரும் அங்கிருந்த அம்மன் திருக்கோயிலுக்கு மலர்கள் கொய்து கொண்டு வந்து கொடுப்பார். ஒரு நாள் கடுமையான மழை; கோயிலைச்சுற்றி வெள்ளப் பெருக்கு; ஆலயத்தில் பூஜைகள் செய்ய முடியவில்லை. அப்போது எங்கிருந்தோ கைகளில் பூக்களோடு ஓடும் வெள்ளப் பெருக்கில் குத்தித்து நீந்தி கோயிலினுள் சென்று பூஜை செய்தான் சிறுவன் சித்தானந்தன்.

பகல் முழுதும் வெள்ளத்தைத் தாண்டி சிறுவனால் வெளியே வரமுடியாததால் இரவு வரை அங்கேயே இருக்க நேர்னதது. இரவு நல்ல குளிர்; இருட்டு. சிறுவன் சித்தானந்தன் அங்கேயே தரையில் படுத்துக் கொண்டு இறைவன் நாமத்தைச் சொல்லிக் கொண்டு தூங்கிவிட்டான். அவன் கனவில் கண்டானா, அல்லது உண்மையில் நிகழ்ந்ததா என்று சொல்லமுடியாத மயக்க நிலையில் இறைவர் பாடலீஸ்வரரும் பெரியநாயகி அம்மையும் இவனுக்குக் காட்சியளித்தனராம். ஊனுருக, உளம் உருக இந்த அற்புதக் காட்சியைக் கண்டு நிலைதடுமாறி நின்ற சிறுவனுக்கு இறைவன் அருட்கடாட்சம் நல்கி மறைந்தாராம்.

அதுமுதல் சித்தானந்தரின் செயல்பாட்டில் மாற்றம் தெரிந்தது. பல சித்துக்களை அவன் செய்யத் தொடங்கினான். அவன் சொன்ன வாக்கு பலித்தது; தொட்ட வியாதியஸ்தர்கள் குணமடைந்தனர். இவன் புகழ் பரவத் தொடங்கியதும் மக்கள் வெள்ளம் இவரைத் தேடி வரத் தொடங்கிவிட்டது. சித்தானந்தன் சித்தானந்த சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். கடலூரைத் தாண்டி இவர் புகழ் அண்டையிலுள்ள புதுச்சேரியையும் சென்றடைந்தது. ஆங்காங்கிருந்த மக்கள் இவர் தங்கள் ஊருக்கு வரமாட்டாரா? நமக்கெல்லாம் தரிசனமும் அருட்கடாட்சமும் தரமாட்டாரா என்று ஏங்கத் தொடங்கி விட்டார்கள்.

அப்போது புதுச்சேரி முத்தியால்பேட்டையில் வசித்து வந்த முத்துக்குமாரசாமி பிள்ளை என்பவர் இவரைப் பற்றிக் கேள்விப் பட்டு, தீராத வயிற்று வலியால் தவித்து வரும் தனது மனைவி அன்னம்மாளின் துன்பத்தை இவர் போக்கமாட்டாரா என்று எண்ணினார். உடனே புறப்பட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சித்தானந்த சுவாமிகளை தரிசித்தார். பிள்ளை அவர்களைக் கண்டதுமே, அவரது பிரச்சினையைப் புரிந்து கொண்ட சுவாமிகள் அவரிடம் "சரி! புறப்படு போகலாம்" என்று சொல்லிக்கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு போனார்.

இவ்விருவரும் புதுச்சேரியில் முத்தியால்பேட்டைக்குச் சென்று அவரது வீட்டிற்குள் நுழைந்ததுமே பிள்ளை அவர்களின் மனைவி அன்னம்மாளின் வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாம். பிள்ளைக்கு மிகுந்த மகிழ்ச்சி. பின்னர் சிலகாலம் சித்தானந்த சாமி அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

அங்கு இவர் தங்கியிருக்கும் செய்தி கேட்டு குறைகளுக்கு நிவர்த்தி தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். அப்படிப்பட்டவர்களின் மனக்குறைக்கு சுவாமிகள் நிவாரணம் அளித்து வந்தார். ஒரு நாள் மாலை பிள்ளையுடன் சுவாமிகள் கருவடிக்குப்பம் எனும் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தார். வழியில் பிள்ளைக்குச் சொந்தமான தோட்டமொன்று இருந்தது. இது நமது இடம்தான் என்றார் பிள்ளை. உடனே சுவாமிகள், "அப்படியா? வா! போய் பார்க்கலாம்" என்று தோட்டத்திற்குள் நுழைந்து விட்டார். அப்படி அந்த தோட்டத்தைச் சுற்றி வருகையில் ஓரிடம் வந்ததும் சிந்தனையோடு சுவாமிகள் அந்த இடத்தில் உட்கார்ந்து விட்டார். பிள்ளைக்கு ஒன்றும் புரியவில்லை. கண்மூடி மெளனமாக தியானத்தில் இருக்கும் அவரை எழுப்பமுடியாமல் பிள்ளை தயங்கினார்.

சிறிது நேரம் கழிந்தபின் சுவாமி கண் திறந்து பார்த்து பிள்ளையைத் தன் அருகில் அழைத்து, அவர் காதருகில் மெல்லிய குரலில் சொன்னார், "இது இங்கேதான் இருக்கப் போகுது" என்று. அப்படிச் சொல்லிக் கொண்டே தன் உடலையும் காட்டி கீழே அந்த தரைப்பகுதியையும் மூன்று முறை ஜாடை செய்து காட்டினார். உடனே அருகில் மற்றொரு இடத்தையும் காட்டி இங்கேதான் அன்னம்மாளின் சமாதியும் அமையப் போகிறது என்றார். பிள்ளைக்கு ஒரே அதிர்ச்சி.

அதன்பின் அவ்வூரில் இவர் பல சித்துக்களை நிகழ்த்திக் காட்டினார். பலரது குறைகளை தீர்த்து ஒன்றுமில்லாமல் செய்தார். குடிகாரர்களை குடிப்பழக்கத்தை நிறுத்தச் செய்தார். திருவண்ணாமலை தீபதரிசனத்தை அங்கேயே காணச் செய்தார். இவரது சித்து வேலைகள் அவரை நாடி வந்து உண்மையில் அவர் மீது நம்பிக்கை வைத்து வேண்டியவர்களுக்கு வேண்டியவைகளை செயல்படுத்திக் காட்டினார். இவர் புகழ் எங்கெங்கும் பரவத் தொடங்கியது.

இப்படி அங்கு இவருக்கு அறுபது வயது கடந்தது. 1837ஆம் வருஷம் மே மாதம் 28ஆம் நாள் வெள்ளிக் கிழமை அவரிடம் ஒரு மாறுதல் ஏற்பட்டது. திடீரென்று அவர் மெளனமானார். இவரிடம் பேச வந்து நின்றவர்களுக்கு இது ஓர் அதிர்ச்சி. இவர் முத்துக்குமாரசாமி பிள்ளை அவர்களை அழைத்து அவரிடம் குறிப்பால், ஹேவிளம்பி வருஷம் வைகாசி 28இல் வெள்ளிக்கிழமை தனக்குக் கல்யாணம் என்பதாகத் தெரிவித்தார். பிள்ளைக்கு ஒரே குழப்பம். இந்தச் செய்தியை எல்லோருக்கும் தெரிவிக்குமாறு வேறு சுவாமி சொல்லிவிட்டார். என்ன செய்வார் பிள்ளை? திகைத்துப் போனார்.

1837 மே மாதம் 28இல் சித்தானந்த சுவாமி பிள்ளை அவர்களின் வீட்டுக்கு வந்தார். அங்கிருந்து முத்தியால்பேட்டையில் இருந்த சிங்காரத் தோட்டம் சென்று அமர்ந்து கொண்டார். அங்கு அவர் பத்மாசனம் இட்டு உட்கார்ந்தார். அவர் முன்பே பிள்ளையிடம் சொல்லி வைத்திருந்தபடி அவருக்கு அபிஷேகம் நடந்தது. கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டது. ஊன் உருக கும்பிட்டுக் கண் திறந்த பக்தர்கள் சுவாமிகள் அமர்ந்தபடி பரிபூரண சமாதி அடைந்திருப்பதை உணர்ந்தனர்.

இப்படி சித்தானந்த சுவாமிகள் தங்கியிருந்து, சமாதியான இடத்தில் அவருக்கு ஒரு சமாதி கோயில் அமைக்கப்பட்டது. அதுதான் சித்தாந்தசாமி திருக்கோயில். இவ்விடத்தைப் புகழ்ந்து பாரதி பாடியிருக்கிற பாடல் இதோ:--

சித்தாந்தச் சாமி கோயில்

சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலி
தீப வொளி யுண்டாம் - பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச் சுடராம் - பெண்ணே

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்ட வருஞ் சுடராம் - பெண்ணே
கள்ளத் தங்க ளனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம் - பெண்ணே

தோன்று முயிர்க ளனைத்து நன்றென்பது
தோற்ற முறுஞ் சுடராம் - பெண்ணே
மூன்று வகைப்படு கால நன்றென்பதை
முன்ன ரிடுஞ் சுடராம் - பெண்ணே

பட்டினந் தனிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிர் சுடராம் - பெண்ணே
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காண வொளிர் சுடராம் - பெண்ணே.


திருவையாறு தேவாரத் திருப்பதிகம்


திருவையாற்றில் உள்ள அருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர் ஆலயத்துக்குக் குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி தில்லைஸ்தானத்தில் இயங்கும் மரபு ஃபவுண்டேஷனில் ஐந்து நாட்கள் திருவையாற்றுத் தேவாரப் பதிகங்களைக் கற்றுத்தரும் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கற்றுத்தரப்பட்ட தேவாரப்பாடல்கள் 18, இதில் திருஞானசம்பந்தரின் 5 பதிகங்கள், திருநாவுக்கரசரின் 12 பதிகங்கள் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் 1 பதிகம் ஆகியவை இடம்பெற்றன. இவை தவிர திருவையாற்றுத் தனிப்பாடல்கள் சிலவும் அருணகிரிநாதர் இங்கு அருளிச்செய்த இரு திருப்புகழும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் படித்து ஐயாறப்பர் அருள் பெருவீராக!

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருவையாறு தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 6வது திருப்பதிகம்)

திரு ஐயாறு 
பண் - தக்கராகம்
கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே.
1
மதியொன் றியகொன் றைவடத்தன்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வும்
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே.
2
கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகுந்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே.
3
சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே.
4
உமையா ளொருபா கமதாகச்
சமைவார் அவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே.
5
தலையின் தொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே.
6
வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங் கொடுசே ருமையாறே.
 7
வரையொன் றதெடுத் தஅரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே.
8
(*)சங்கக் கயனும் மறியாமைப்
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கிக் கெதிர்காட் டுமையாறே.
(*) சங்கத்தயனும் என்றும் பாடம்.
9
துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே.
10
கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞான சம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே.
11
பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
1
கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
2
வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
3
வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
4
வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.
5
முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்
இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.
6
வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.
7
விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்
அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
8
விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.
9
மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே.
10
நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்
அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்
கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.
11

பண் - மேகராகக்குறிஞ்சி
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி 
அறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் 
றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட 
முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி 
முகில்பார்க்குந் திருவையாறே.
1
விடலேறு படநாகம் அரைக்கசைத்து 
வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர் 
பலியென்னு மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி 
னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் 
கீன்றலைக்குந் திருவையாறே.
2
கங்காளர் கயிலாய மலையாளர் 
கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் 
விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் 
இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் 
இரைதேருந் திருவையாறே.
3
ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின் 
பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் 
தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி 
மந்திபாய் மடுக்கள்தோறுந்
தேன்பாய மீன்பாய செழுங்கமல 
மொட்டலருந் திருவையாறே.
4
நீரோடு கூவிளமும் நிலாமதியும் 
வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த 
தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் 
பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் 
நடம்பயிலுந் திருவையாறே.
5
வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் 
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த 
புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார் 
பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் 
நடமாடுந் திருவையாறே.
6
நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு 
புரமூன்றும் நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி 
மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச 
மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு 
கண்வளருந் திருவையாறே.
7
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த 
அரக்கர்கோன் தலைகள்பத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக் 
கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ 
இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல 
வயல்படியுந் திருவையாறே.
8
மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை 
மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத 
வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் 
குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார் 
நடமாடுந் திருவையாறே.
9
குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு 
சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே 
யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர் 
இறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள் 
வந்தலைக்குந் திருவையாறே.
10
அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம் 
பெருமானை அந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான 
சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால் 
ஈசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகில் தவநெறிசென் 
றெய்துவார் தாழாதன்றே.
11

பண் - இந்தளம் 
கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்
ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார்
பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே.
              01
தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே
பின்னு முன்னுஞ் சிலபேய்க் கணஞ்சூழத் திரிதர்வர்
துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடிப் பூசுவர்
அன்னம் ஆலுந் துறையானும் ஐயாறுடை ஐயனே.
              02
கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலை
மாறி லாருங்கொள் வாரிலை மார்பி லணிகலம்
ஏறும் ஏறித் திரிவரிமை யோர்தொழு தேத்தவே
ஆறும் நான்குஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே.
             03
பண்ணின் நல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்
எண்ணின் நல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார்
வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுகந் தானும் ஐயாறுடை ஐயனே.
                04
வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்
தேன்நெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும் பின்தெளி
ஆனஞ் சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே.
               05
எங்கு மாகி நின்றானும் இயல்பறி யப்படா
மங்கை பாகங் கொண்டானும் மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
அங்க மாறுஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே.
              06
ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாஞ்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்
ஆதி யாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே.
              07
குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய்
விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே.
பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால்
அரவ மார்த்துகந் தானும் ஐயாறுடை ஐயனே.
              08
உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன்
வரைசெய் தோளடர்த் தும்மதி சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்
அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே.
              09
மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர்
ஆல நீழ லுளானும் ஐயாறுடை ஐயனே.
             10
கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால்
மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யல
மைகொள் கண்டத் தெண்டோ ள்முக் கணான்கழல் வாழ்த்தவே
ஐயந் தேர்ந்தளிப் பானும்ஐ யாறுடை ஐயனே.
            11
பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினைக்
கலிக டிந்தகை யான்கடல் காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய்
மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே.
             12

பண் - இந்தளம் 
திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார்
மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே.
            01
கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ்
சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே.
            02
கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்
கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே.
            03
நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர்த்
தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே.
           04
வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே.
           05
பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப்
பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே.
            06
துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப்
பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர்
மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே.
           07
இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர்
அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத்
துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர்
வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே.
           08
பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றிப்
பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங்
கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார்
வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே.
          09
பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே.
         10
வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே.


         11
                                                 
திருநாவுக்கரசு சுவாமிகள் இயற்றிய திருவையாறு தேவாரப்  பாடல்கள்

பண் - காந்தாரம்         திருச்சிற்றம்பலம் 

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் 
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் 
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது 
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.             1 

போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி 
வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன் 
ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது 
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.             2 

எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி 
முரித்த இலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன் 
அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது 
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.             3 

பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித் 
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன் 
அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது 
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.             4 

ஏடு மதிக்கண்ணி யானை ஏந்திழை யாளொடும் பாடிக் 
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன் 
ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது 
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.             5 

தண்மதிக் கண்ணியி னானைத் தையல்நல் லாளொடும் பாடி 
உண்மெலி சிந்தைய னாகி உணரா வுருகா வருவேன் 
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது 
வண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.             6 

கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாலொடும் பாடி 
வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன் 
அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது 
இடிகுர லன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.             7 

விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப் 
பெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன் 
அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போது 
கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.             8 

முற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப் 
பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன் 
அற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போது 
நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.             9 

திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி 
எங்கருள் நல்குங்கொ லெந்தை எனக்கினி யென்னா வருவேன் 
அங்கிள மங்கைய ராடும் ஐயா ரடைகின்ற போது 
பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.             10 

வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக் 
களவு படாததோர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன் 
அளவு படாததோ ரன்போ டையா றடைகின்ற போது 
ளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.             11 

பண் - பழந்தக்கராகம் 


                                      திருச்சிற்றம்பலம் 

விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும் 
இடைகிலேன் அமணர்கள்தம் அறவுறைகேட் டலமலந்தேன் 
தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான் 
அடைகின்றேன் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.               1 

செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர் 
கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர் 
வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த 
அம்பவள ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.                          2 

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின் 
துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே 
மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும் 
அணியானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.                    3 

ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய் 
வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே 
பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம் 
ஆழித்தீ ஐயாறார்க் காளாய்நான் உய்ந்தேனே.                          4

சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே 
விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே 
உடையானே உடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும் 
அடையானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.                   5

நீரானே தீயானே நெதியானே கதியானே 
ஊரானே உலகானே உடலானே உயிரானே 
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென் 
றாராத ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.                              6 

கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய் 
எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய் 
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே 
அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.                      7 

மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய் 
பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய் 
நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி 
அன்னானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.                      8 

முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப் 
பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த 
எத்திசையும் வானவர்கள் எம்பெருமா னென இறைஞ்சும் 
அத்திசையாம் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.                  9 

கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத் 
திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி 
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும் 
அருவரைசூழ் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.                   10 

திருவையாறு 


                                        திருச்சிற்றம்பலம் 

கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார் 
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் 
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார் 
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயனை யாற னாரே.                           1

பொடிதனைப் பூச வைத்தார் பொங்குவெண் ணூலும் வைத்தார் 
கடியதோர் நாகம் வைத்தார் காலனைக் காலில் வைத்தார் 
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார் 
அடியிணை தொழவும் வைத்தார் ஐயனை யாற னாரே.                                     2 

உடைதரு கீளும் வைத்தார் உலகங்க ளனைத்தும் வைத்தார் 
படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார் 
விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார் 
அடைதர அருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.                                3 

தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார் 
இண்டையைத் திகழ வைத்தார் எமக்கென்று மின்பம் வைத்தார் 
வண்டுசேர் குழலி னாளை மருவியோர் பாகம் வைத்தார் 
அண்டவா னவர்கள் ஏத்தும் ஐயனை யாற னாரே.                                  4 

வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார் 
கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார் 
ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார் 
ஆனையின் உரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.                            5 

சங்கணி குழையும் வைத்தார் சாம்பல்மெய்ப் பூச வைத்தார் 
வெங்கதிர் எரிய வைத்தார் விரிபொழி லனைத்தும் வைத்தார் 
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் 
அங்கம தோத வைத்தார் ஐயனை யாற னாரே.                                       6

பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார் 
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார் 
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார் 
அத்தியின் உரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.                              7 

ஏறுகந் தேற வைத்தார் இடைமரு திடமும் வைத்தார் 
நாறுபூங் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார் 
கூறுமை யாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார் 
ஆறுமோர் சடையில் வைத்தார் ஐயனை யாற னாரே.                            8 

பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார் 
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார் 
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் 
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.                                    9 

இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார் 
கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார் 
பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார் 
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.                              10 


திருநேரிசை பண் - கொல்லி 

குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத் 
துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி யாகி நின்ற 
அண்டனே அமரர் ஏறே திருவையா றமர்ந்த தேனே 
தொண்டனேன் தொழுதுன் பாதஞ் சொல்லிநான் திரிகின் றேனே.      1 

பீலிகை  இடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணி 
வாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னே 
வாலியார் வணங்கி ஏத்துந் திருவையா றமர்ந்த தேனோ 
டாலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த வாறே.                                  2 

தட்டிடு சமண ரோடே தருக்கிநான் தவமென் றெண்ணி 
ஒட்டிடு மனத்தி னீரே உம்மையான் செய்வ தென்னே 
மொட்டிடு கமலப் பொய்கைத் திருவையா றமர்ந்த தேனோ 
டொட்டிடும் உள்ளத் தீரே உம்மைநான் உகந்திட் டேனே.                   3 

பாசிப்பல் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு 
நேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன் 
தேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனை 
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.                          4 

கடுப்பொடி யட்டி மெய்யிற் கருதியோர் தவமென் றெண்ணி 
வடுக்களோ டிசைந்த நெஞ்சே மதியிலி பட்ட தென்னே 
மடுக்களில் வாளை பாயுந் திருவையா றமர்ந்த தேனை 
அடுத்துநின் றுன்னு நெஞ்சே அருந்தவஞ் செய்த வாறே.                        5 

துறவியென் றவம தோரேன் சொல்லிய செலவு செய்து 
உறவினால் அமண ரோடும் உணர்விலேன் உணர்வொன் றின்றி 
நறவமார் பொழில்கள் சூழ்ந்த திருவையா றமர்ந்த தேனை 
மறவிலா நெஞ்ச மேநன் மதியுனக் கடைந்த வாறே.                                6 

பல்லுரைச் சமண ரோடே பலபல கால மெல்லாஞ் 
சொல்லிய செலவு செய்தேன் சோர்வனான் நினைந்த போது 
மல்லிகை மலருஞ் சோலைத் திருவையா றமர்ந்த தேனை 
எல்லியும் பகலு மெல்லாம் நினைந்தபோ தினிய வாறே.                       7 

மண்ணுளார் விண்ணு ளாரும் வணங்குவார் பாவம் போக 
எண்ணிலாச் சமண ரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே 
தெண்ணிலா எறிக்குஞ் சென்னித் திருவையா றமர்ந்த தேனைக் 
கண்ணினாற் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்த வாறே.                      8 

குருந்தம தொசித்த மாலுங் குலமலர் மேவி னானுந் 
திருந்துநற் றிருவ டியுந் திருமுடி காண மாட்டார் 
அருந்தவ முனிவ ரேத்துந் திருவையா றமர்ந்த தேனைப் 
பொருந்திநின் றுன்னு நெஞ்சே பொய்வினை மாயு மன்றே.                  9 

அறிவிலா அரக்க னோடி அருவரை எடுக்க லுற்று 
முறுகினான் முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி 
நிறுவினான் சிறுவி ரலால் நெரிந்துபோய் நிலத்தில் வீழ 
அறிவினால் அருள்கள் செய்தான் திருவையா றமர்ந்த தேனே.           10 

                                        திருச்சிற்றம்பலம் 

திருவையாறு 

தானலா துலக மில்லை சகமலா தடிமை யில்லை 
கானலா தாட லில்லை கருதுவார் தங்க ளுக்கு 
வானலா தருளு மில்லை வார்குழல் மங்கை யோடும் 
ஆனலா தூர்வ தில்லை ஐயனை யாற னார்க்கே.                                     1

ஆலலால் இருக்கை இல்லை அருந்தவ முனிவர்க் கன்று 
நூலலால் நொடிவ தில்லை நுண்பொரு ளாய்ந்து கொண்டு 
மாலுநான் முகனுங் கூடி மலரடி வணங்க வேலை 
ஆலலால் அமுத மில்லை ஐயனை யாற னார்க்கே.                                  2

நரிபுரி சுடலை தன்னில் நடமலால் நவிற்ற லில்லை 
சுரிபுரி குழலி யோடுந் துணையலால் இருக்கை யில்லை 
தெரிபுரி சிந்தை யார்க்குத் தெளிவலால் அருளு மில்லை 
அரிபுரி மலர்கொண் டேத்தும் ஐயனை யாற னார்க்கே.                          3 

தொண்டலாற் றுணையு மில்லை தோலலா துடையு மில்லை 
கண்டலா தருளு மில்லை கலந்தபின் பிரிவ தில்லை 
பண்டைநான் மறைகள் காணாப் பரிசின னென்றென் றெண்ணி 
அண்டவா னவர்கள் ஏத்தும் ஐயனை யாற னார்க்கே.                            4 

எரியலா லுருவ மில்லை ஏறலால் ஏற லில்லை 
கரியலாற் போர்வை யில்லை காண்டகு சோதி யார்க்குப் 
பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென் றேத்தும் 
அரியலாற் றேவி யில்லை ஐயனை யாற னார்க்கே.                                5 

என்பலாற் கலனு மில்லை எருதலா லூர்வ தில்லை 
புன்புலால் நாறு காட்டிற் பொடியலாற் சாந்து மில்லை 
துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழு தாடிப் பாடும் 
அன்பலாற் பொருளு மில்லை ஐயனை யாற னார்க்கே.                          6 

கீளலால் உடையு மில்லை கிளர்பொறி யரவம் பைம்பூண் 
தோளலாற் றுணையு மில்லை தொத்தலர் கின்ற வேனில் 
வேளலாற் காயப் பட்ட வீரரு மில்லை மீளா 
ஆளலாற் கைம்மா றில்லை ஐயனை யாற னார்க்கே.                              7 

சகமலா தடிமை யில்லை தானலாற் றுணையு மில்லை 
நகமெலாந் தேயக் கையான் நாண்மலர் தொழுது தூவி 
முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர் 
அகமலாற் கோயி லில்லை ஐயனை யாற னார்க்கே.                               8 

உமையலா துருவ மில்லை உலகலா துடைய தில்லை 
நமையெலா முடைய ராவர் நன்மையே தீமை யில்லை 
கமையெலா முடைய ராகிக் கழலடி பரவுந் தொண்டர்க் 
கமைவிலா அருள் கொடுப்பார் ஐயனை யாற னார்க்கே.                       9

மலையலா லிருக்கை யில்லை மதித்திடா அரக்கன் றன்னைத் 
தலையலால் நெரித்த தில்லை தடவரைக் கீழ டர்த்து 
நிலையிலார் புரங்கள் வேவ நெருப்பலால் விரித்த தில்லை 
அலையினார் பொன்னி மன்னும் ஐயனை யாற னார்க்கே.                    10 

                                       திருச்சிற்றம்பலம்

திருவையாறு - திருவிருத்தம் 


அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென் 
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ 
சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த 
நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.                          1

பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி 
நாடகக் கால்நங்கை முன்செங்கண் ஏனத்தின் பின்னடந்த 
காடகக் கால்கணங் கைதொழுங் காலெங்க ணாய்நின்றகால் 
ஆடகக் காலரி மான்றேர் வலவன்ஐ யாற்றனவே.                                   2

திருவிருத்தம் 
குறுவித்தவா குற்ற நோய்வினை காட்டிக் குறுவித்த நோய் 
உறுவித்தவா வுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி 
அறிவித்த வாறடி யேனை ஐ யாறன் அடிமைக்களே 
செறிவித்தவா தொண்டனேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.      1 

கூர்வித்த வாகுற்ற நோய்வினை காட்டியுங் கூர்வித்தநோய் 
ஊர்வித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி 
ஆர்வித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே 
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.       2

தாக்கின வாசல மேவினை காட்டியுந் தண்டித்தநோய் 
நீக்கின வாநெடு நீரினின்றேற நினைந்தருளி 
ஆக்கின வாறடி யேனைஐயாறன் அடிமைக்களே 
நோக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே       3 

தருக்கின நான்றக வின்றியு மோடச் சலமதனால் 
நெருக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி 
உருக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே 
பெருக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.     4 

இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்துக் 
கழிவித்த வாகட்ட நோய்வினை தீர்ப்பான் கலந்தருளி 
அழிவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே 
தொழுவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. 5 

இடைவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்து 
உடைவித்த வாறுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி 
அடைவித்த வாறடி யேனைஐயாறன் அடிமைக்களே 
தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. 6 

படக்கின வாபட நின்றுபன் னாளும் படக்கினநோய் 
அடக்கின வாறது வன்றியுந் தீவினை பாவமெல்லாம் 
அடக்கின வாறடி யேனைஐயாறன் அடிமைக்களே 
தொடக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. 7 

மறப்பித்த வாவல்லை நோய்வினை காட்டி மறப்பித்தநோய் 
துறப்பித்த வாதுக்க நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி 
இறப்பித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே 
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.      8

துயக்கின வாதுக்க நோய்வினை காட்டித் துயக்கினநோய் 
இயக்கின வாறிட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்தருளி 
அயக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே 
மயக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.       9 

கறுத்துமிட் டார்கண்டங் கங்கை சடைமேற் கரந்தருளி 
இறுத்துமிட் டார்இலங் கைக்கிறை தன்னை இருபதுதோள் 
அறுத்துமிட் டாரடி யேனைஐயாறன் அடிமைக்களே 
பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. 10

திருவையாறு – திருவிருத்தம்
 
சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன் 
முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு 
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி 
அந்திப் பிறையணிந் தாடும்ஐயாறன் அடித்தலமே.                                 1 

இழித்தன ஏழேழ் பிறப்பும் அறுத்தன என்மனத்தே 
பொழித்தன போரெழிற் கூற்றை யுதைத்தன போற்றவர்க்காய்க் 
கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன்சென் 
றழித்தன ஆறங்க மானஐயாறன் அடித்தலமே.                                        2

மணிநிற மொப்பன பொன்னிற மன்னின மின்னியல்வாய் 
கணிநிற மன்ன கயிலைப் பொருப்பன காதல்செய்யத் 
துணிவன சீலத்த ராகித் தொடர்ந்து விடாததொண்டர்க் 
கணியன சேயன தேவர்க்கை யாறன் அடித்தலமே.                                3 

இருள்தரு துன்பப் படல மறைப்பமெய்ஞ் ஞானமென்னும் 
பொருள்தரு கண்ணிழந் துண்பொருள் நாடிப் புகலிழந்த 
குருடருந் தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின் 
றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐயாறன் அடித்தலமே.                           4 

எழுவாய் இறுவாய் இலாதன வெங்கட் பிணிதவிர்த்து 
வழுவா மருத்துவ மாவன மாநர கக்குழிவாய் 
விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்கவன்போ 
டழுவார்க் கமுதங்கள் காண்கஐயாறன் அடித்தலமே.                             5 

துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை 
இன்பக் கரைமுகந் தேற்றுந் திறத்தன மாற்றயலே 
பொன்பட் டொழுகப் பொருந்தொளி செய்யுமப் பொய்பொருந்தா 
அன்பர்க் கணியன காண்கஐயாறன் அடித்தலமே.                                  6 

களித்துக் கலந்ததோர் காதற் கசிவொடு காவிரிவாய்க் 
குளித்துத் தொழுதுமுன் நின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன் 
தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப 
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐயாறன் அடித்தலமே.                      7 

திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்துடலை 
வருத்திக் கடிமலர் வாளெடுத் தோச்சி மருங்குசென்று 
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு விண்பட் டிகையிடுமால் 
அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐயாறன் அடித்தலமே.                                 8

பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க் 
கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள் 
நீடுங் குழல்செய்ய வையம் நெளிய நிணப்பிணக்காட் 
டாடுந் திருவடி காண்கஐயாறன் அடித்தலமே.                                         9 

நின்போல் அமரர்கள் நீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த 
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா 
என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையுமெல்லாம் 
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐயாறன் அடித்தலமே.                      10

திருவையாறு - திருவிருத்தம் 

மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடமன்னி 
நிலையா யிருப்பன நின்றோர் மதிப்பன நீணிலத்துப் 
புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுல கம்மளிக்கும் 
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐயாறன் அடித்தலமே.                      1 

பொலம்புண் டரீகப் புதுமலர் போல்வன போற்றியென்பார் 
புலம்பும் பொழுதும் புணர்துணை யாவன பொன்னனைய 
சிலம்புஞ் செறிபா டகமுஞ் செழுங்கிண் கிணித்திரளும் 
அலம்பும் திருவடி காண்கஐயாறன் அடித்தலமே.                                    2

உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன ஓதிநன்னூல் 
கற்றார் பரவப் பெருமை யுடையன காதல்செய்ய 
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும் 
அற்றார்க் கரும்பொருள் காண்கஐ யாறன் அடித்தலமே.                        3 

வானைக் கடந்தண்டத் தப்பால் மதிப்பன மந்திரிப்பார் 
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன உத்தமர்க்கு 
ஞானச் சுடராய் நடுவே யுதிப்பன நங்கையஞ்ச 
ஆனை யுரித்தன காண்கஐயாறன் அடித்தலமே.                                      4 

மாதர மானில மாவன வானவர் மாமுகட்டின் 
மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின வெந்நமனார் 
தூதரை யோடத் துரப்பன துன்பறத் தொண்டுபட்டார்க் 
காதர மாவன காண்கஐயாறன் அடித்தலமே.                                           5 

பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால் 
ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல் 
மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னி 
ஆணிக் கனகமு மொக்கும்ஐயாறன் அடித்தலமே.                                   6 

ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலிசிறந்த 
வேதியர் வேதமும் வேள்வியு மாவன விண்ணுமண்ணுஞ் 
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோ 
டாதியும் அந்தமு மானஐயாறன் அடித்தலமே.                                         7 

சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடுவண் 
டணங்குங் குழலி யணியார் வளைக்கரங் கூப்பிநின்று 
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும்வண் காந்தளொண்போ 
தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ யாறன் அடித்தலமே.                           8

சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னும் 
நிழலா வனவென்று நீங்காப் பிறவி நிலைகெடுத்துக் 
கழலா வினைகள் கழற்றுவ கால வனங்கடந்த 
அழலார் ஒளியன காண்கஐயாறன் அடித்தலமே.                                    9 

வலியான் றலைபத்தும் வாய்விட்டலற வரையடர்த்து 
மெலியா வலியுடைக் கூற்றை யுதைத்துவிண் ணோர்கள்முன்னே 
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன்னாளும் பலர்இகழ 
அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே.                               10
                திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை.

சிந்தை வாய்தல் உளான் வந்து சீரியன்
பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்
முந்தி வாயது ஓர் மூயிலை வேல்பிடித்து
அந்தி வாயது ஓர் பாம்பர் ஐயாறரே.                                              1

பாகம் மாலை மகிழ்ந்தனர் பால்மதி
போக ஆனையின் ஈர் உரி போர்த்தவர்
கோக மாலை குலாயது ஓர் கொன்றையும்
ஆக ஆன் வெய் அஞ்சு ஆடும் ஐயாறரே.                                      2

நெஞ்சம் என்பது ஓர் நீள்கயம் தன்னுளே
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப் பட்டு நான்
துஞ்சும் போழ்து நின் நாமத் திரு எழுத்து
அஞ்சுந் தோன்ற அருளும் ஐயாறரே.                                             3

நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடுமாமதில்
அனைத்தும் ஒள் அழல் வாய் எரி யூட்டினார்
பனைக்கை வேழத்து உரி உடல் போர்த்தவர்
அனைத்து வாய்தல் உள்ளாரும் ஐயாறரே.                                   4

பரியர் நுண்ணியர் பார்த்தற்கு அரியவர்
அரிய பாடலர் ஆடலர் அன்றியும்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கு எலாம்
அரியர் தொண்டர்க்கு எளியர் ஐயாறரே.                                     5

புலரும் போதும் இலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுகளால் பணியச் சிலர்
இலரும் போதும் இலாததும் அன்றியும்
அலரும் போதும் அணியும் ஐயாறரே.                                           6

பங்க மாலைக் குழலி ஓர் பால் நிறக்
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமும் கண்ணியும்
அங்க மாலையுஞ் சூடும் ஐயாறரே.                                               7

முன்னை ஆறு முயன்று எழுவீர் எலாம்
பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள்
மன்னை ஆறு மருவிய மாதவன்
தன்னை ஆறு தொழத் தவம் ஆகுமே.                                          8

ஆனை ஆறு என ஆடுகின்றான் முடி
வானை ஆறு வளாயது காண்மினோ
நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன்னருள்
தேனை ஆறு திறத்தாலே ஒக்குமே.                                               9

அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடி யாள் அஞ்ச அஞ்சல் என்ற
அரக்கன் ஈரைந்து வாயும் அலறவே
அரக்கி நான் அடியாலும் ஐயாறனே.                                           10
திருச்சிற்றம்பலம்திருக்குறுந்தொகை.

சிந்தை வண்ணத் தராய்திறம் பாவணம்
முந்தி வண்ணத் தராய் முழு நீறணி
சந்தி வண்ணத் தராய்த்தழல் போல்வது ஓர்
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே.                                  1

மூல வண்ணத்தராய் முதல் ஆகிய
கோல வண்ணத்தர் ஆகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்தர் ஆகி நெடும்பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே.                                    2

சிந்தை வண்ணமும் தீயது ஓர் வண்ணமும்
அந்திப் போது அழகாகிய வண்ணமும்
பந்திக் காலனைப் பாய்ந்தது ஓர் வண்ணமும்
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே.                                  3

இருளின் வண்ணமும் ஏழிசை வண்ணமும்
சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும்
மருளு நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமும் ஆவர் ஐயாறரே.                              4

இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும்
மழைக்கண் மாமுகில் ஆகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே.                        5

இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமும்
தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும்
சுண்ட வண்ணங்களாய்க் கனல் மாமணி
அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே.                                6

விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே.                           7

ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும்
வேழ ஈருரி போர்த்ததுஓர் வண்ணமும்
வாழித் தீஉரு ஆகிய வண்ணமும்
ஆதி வண்ணமும் ஆவர் ஐயாறரே.                                    8

செய்தவன் திருநீறு அணி வண்ணமும்
எய்த நோக்கரிது ஆகிய வண்ணமும்
கைது காட்சி அரியது ஓர் வண்ணமும்
ஐது வண்ணமும் ஆவர் ஐயாறரே.                                     9

எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்
இடர்கள் போல்பெரிது ஆகிய வண்ணமும்
கடுத்த கைந்நரம் பால் இசை வண்ணமும்
அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே.                               10


                             திருவையாறு - திருத்தாண்டகம்
 ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனலாடி ஆரமுதே யென்றேன் நானே 
கூரார் மழுவாட் படையொன் றேந்திக் குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே 
பேரா யிரமுடையா யென்றேன் நானேபிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே 
ஆரா வமுதேயென் ஐயாறனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.                 1 

தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந் தீர்த்தா புராணனே யென்றேன் நானே 
மூவா மதிசூடி யென்றேன் நானே முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே 
ஏவார் சிலையானே யென்றேன் நானே இடும்பைக் கடல்நின்று மேற வாங்கி 
ஆவாவென் றருள்புரியும் ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.      2

அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே அடியார்கட் காரமுதே யென்றேன் நானே 
நஞ்சணி கண்டனே யென்றேன் நானே நாவலர்கள் நான்மறையே யென்றேன்
நானே 
நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது நிறையு மமுதமே யென்றேன் நானே 
அஞ்சாதே ஆள்வானே ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 3 

தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே 
எல்லை நிறைந்தானே யென்றேன் நானே ஏழ்நரம்பி னின்னிசையா யென்றேன் நானே 
அல்லற் கடல்புக் கழுந்து வேனை வாங்கி யருள்செய்தா யென்றேன் நானே 
எல்லையாம் ஐயாறா வென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 4 

 
இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே இருசுடர் வானத்தா யென்றேன் நானே 
தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே 
கண்டங் கறுத்தானே யென்றேன் நானே கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே 
அண்டத்துக் கப்பாலாம் ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.        5 

பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே பசுபதி பண்டரங்கா வென்றேன் நானே 
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே கடுவிடையொன் றூர்தியா யென்றேன் நானே 
பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே பார்த்தற் கருள்செய்தா யென்றேன் நானே 
அற்றார்க் கருள்செய்யும் ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.       6 

விண்ணோர் தலைவனே யென்றேன் நானே விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே 
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே ஏகம்பம் மேயானே யென்றேன் நானே 
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே பசுபதீ பால்நீற்றா யென்றேன் நானே 
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.  7 


அவனென்று நானுன்னை அஞ்சா தேனை அல்ல லறுப்பானே யென்றேன் நானே 
சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச் செல்வந் தருவானே யென்றேன் நானே 
பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று பண்டை வினையறுப்பா யென்றேன் நானே 
அவனென்றே யாதியே ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.         8

கச்சியே கம்பனே யென்றேன் நானே கயிலாயா காரோணா வென்றேன் நானே 
நிச்சன் மணாளனே யென்றேன் நானே நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே 
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
 
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    9 


வில்லாடி வேடனே யென்றேன் நானே வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே 
சொல்லாய சூழலா யென்றேன் நானேசுலாவாய தொன்னெறியே யென்றேன் நானே 
எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானேஇலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே 
அல்லா வினைதீர்க்கும் ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 10

                                                       திருச்சிற்றம்பலம் 

                        
திருவையாறு - திருத்தாண்டகம் 

ஓசை ஒலியெலா மானாய் நீயே உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே 
வாச மலரெலா மானாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே 
பேசப் பெரிது மினியாய் நீயே பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே 
தேச விளக்கெலா மானாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.        1 

நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே நோவாமே நோக்கருள வல்லாய் நீயே 
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே 
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே 
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 2

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே 
தனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே 
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே 
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ                         3

வானுற்ற மாமலைக ளானாய் நீயே வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே 
ஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே 
ஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே 
தேனுற்ற சொல்மடவாள் பங்கன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 4 


பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே 
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே 
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே 
திண்ணார் மழுவாட் படையாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 5 

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே 
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே 
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே 
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.    6 

எல்லா வுலகமு மானாய் நீயே ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே 
நல்லாரை நன்மை யறிவாய் நீயே ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே 
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே 
செல்வாய செல்வந் தருவாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.     7 

ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே அளவில் பெருமை யுடையாய் நீயே 
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே 
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே 
தேவ ரறியாத தேவன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.                8

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே ஏகம்ப மேய இறைவன் நீயே 
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே வாரா வுலகருள வல்லாய் நீயே 
தொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே 
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 9 

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே 
கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே 
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே 
திண்டோள்விட் டெரியாட லுகந்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 10


ஆரு மறியா இடத்தாய் நீயே ஆகாயந் தேரூர வல்லாய் நீயே 
பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத் திறுத்தாய் நீயே 
ஊரும் புரமூன்று மட்டாய் நீயே ஒண்டா மரையானும் மாலுங் கூடித் 
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. 11

சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருவையாறு தேவாரப் பாடல்
சுந்தரமூர்த்தி நாயனார்.

1. பரவும் பரிசொன் றறியேன் நான் 
பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் 
எய்த நினைய மாட்டேன் நான்
கரவில் அருவி கமுகுண்ணத்
தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

2. எங்கே போவேனாயிடினும்
அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை ஒன்றும் இன்றியே
தலைநாள் கடைநாள் ஒக்கவே
கங்கை சடைமேற் கரந்தானே
கலைமான் மறியுங் கனல் மழுவும்
தங்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

3. மருவிப் பிரிய மாட்டேன் நான்
வழி நின்றொழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரற்
பட்டை கொண்டு பகடாடிக்
குருவி ஒப்பிக் கிளிகடிவார்
குழல்மேல் மாலை கொண்டோட்டந்
தரவந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

4. பழகா நின்று பணிசெய்வார்
பெற்ற பயனொன் றறிகிலேன்
இகழாது மக்காட் பட்டோர்க்கு
வேக படமொன் றரைச்சார்த்தி
குழகா வாழைக் குலைத் தெங்கு
கொணர்ந்து கரைமேல் எறியவே
அழகார் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

5. பிழைத்த பிழைஒன் றறியேன்நான்
பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட
மலையும் நிலனுங் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசங் கலந்தெங்கும்
கழனி மண்டிக் கையேறி
அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

6. கார்க்கொள் கொன்றை சடைமேலொன்
றுடையாய் விடையாய் கையினால்
மூர்க்கர் புரமுன் றெரிசெய்தாய்
முன்னீ பின்னீ முதல்வன் நீ
வார்க்கொள் அருவி பலவாரி
மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

7. மலைக்கண் மடவான் ஒருபாலாய்ப்
பற்றி உலகம் பலிதேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயிலெய்த
செங்கண் விடையாய் தீர்த்தன்நீ
மலைக்கொள் அருவி பலவாரி
மணியும் முத்தும் பொன்னும் கொண்
டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

8. போழும் மதியும் புனக்கொன்றைப்
புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ
உன்னைத் தொழுவார் துயர்போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

9. கதிர்க்கொள் பசியே ஒத்தேநான்
கண்டேன் உம்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன்நான்
எம்மான் தம்மான் தம்மானே
விதிர்த்து மேகம் மழைபொழிய
வெள்ளம் பரந்து நுரைசிதறி
அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

10. கூசி அடியார் இருந்தாலும்
குணம் ஒன்றில்லீர் குறிப்பிலீர்
தேச வேந்தன் திருமாலும்
மலர்மேல் அயனுங் காண்கிலாத்
தேசம் எங்குந் தெளித்தாடத்
தெண்ணீர் அருவி கொணர்ந்தேங்கும்
வாசந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

11. கூடி அடியார் இருந்தாலும்
குணம் ஒன்றில்லீர் குறிப்பிலீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன்
உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி எங்கும் காண்கிலேன்
திருவாரூரே சிந்திப்பன்
ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.


திருவாசகம் 8ஆம் திருமுறை
1.
கையார் வளை சிலம்பக் காதார் குழையாட
மையார் குழல் புரளத் தேன்பாய வண்டு ஒலிப்பச்
செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானை.


2.
முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம் நல்தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார் மகளும்
நா மகளோடு பல்லாண்டு இசைமின்
சித்தியும் கெளரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி
ஆடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

3
கையால் த்கொழுது உன் கழற் சேவடிகள்
கழுமத் தழுவிக் கொண்டு
எய்யாது என்றன் தலைமேல் வைத்து
எம்பெருமான் பெருமான் என்று
ஐயா என்றன் வாயால் அரற்றி
அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே.

ஐயடிகள் காடவர் கோன்

குந்தி நடந்து குனிந்து ஒரு கை கோல் ஊன்றி
நொந்து இருமி ஏங்கி நுறைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.கபில தேவர்
திருவிரட்டை மணிமாலை

தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந்தே நிலவு
நக்கு வருங்கண்ணி சூடி வந்தார் நறும்புன்னை முன்னம்
அக்கு வருங்கழிக் கானல் ஐயாறரைக் காண அன்பு
மிக்கு வரும் வரும் போது அவரைக் காண வெள்குவனே.

பட்டினத்தார்
திரு ஏகம்பமுடையார் திருவந்தாதி

மலையத்து அகத்தியன் அர்ச்சிக்க மன்னி வடகயிலை
நிலையத்து அமரர் தொழ இருந்தான் நெடு மேரு என்னும்
சிலை அத்தன் பைம்பொன் மதில் திரு ஏகம்பத்தான் திகழ்நீர்
அலையத் தடம்பொன்னி சூழ் திரு ஐயாற்று அருமணியே.

திருவையாறு திருப்புகழ்
அருணகிரிநாதர்

சொரியு மாமுகிலோஇருளோ குழல்
          சுடர்கொள் வாளிணையோ பிணையோ விழி
         சுரர்தம் ஆரமுதோ குயிலோ மொழி                          இதழ்கோவை
   துவரதோ இலவோ தெரியா இடை
         துகளிலாவனமோ பிடியோ நடை
         துணைகொள் மாமலையோ முலை தானென           உரையாடிப்

பரிவினால் எனை ஆளுக நானொரு
          பழுதிலான் எனவாணுத லாரொடு
          பகடியே படியா வொழியாஇடர்                                 படுமாயப்
    பரவி மீதழியா வகைஞானிகள்
          பரவுநீள் புகழேயது வாமிகு
          பரமவீடது சேர்வது மாவது                                   மொரு நாளே

கரிய மேனியனானிரை யாள்பவன்
           அரிய ராவணை மேல்வளர் மாமுகில்
           கனகன் மார்பது பீறிய வாளரி                             கனமாயக்
     கபடன் மாமுடியாறுடனாலுமொர்
           கணையினால் நிலமீதுற நூறிய
           கருணை மால்கவி கோப க்ருபாகரன்                  மருகோனே

திரிபுராதிகள் தூளெழ வானவர்
            திகழவே முனியாவருள் கூர்பவர்
            தெரிவை பாதியர் சாதியிலாதவர்                      தருசேயே
    சிகர பூதர நீறுசெய் வேலவ
           திமிர மோகர வீர திவாகர
           திருவையாறு உறை தேவ க்ருபாகர                  பெருமாளே!

சப்த ஸ்தானம் திருப்புகழ்

மருவு லாவிடுமோ திகுலைப்பவர்
           சமர வேலெனு நீடுவி ழிச்சியர்
           மனதிலே கபடூபரத்தைய                                 ரதி கேள்வர்
   மதனோடுறழ் பூசலிடைச்சியர்
          இளைஞராருயிர் வாழு முலைச்சியர்
          மதுரமா மொழி பேசு குணத்தியர்                     தெருமீதே

சருவி யாரையும் வாவென அழைப்பவர்
          பொருளிலே வெகு ஆசை பரப்பிகள்
          சகல தோதக மாடை படிப்பரை                       அணுகாதே
   சலச மேவிய பாத நினைத்துமு
         னருணை நாடதிலோது திருப்புகழ்
         துணிய வோகையிளொத எனக்கருள்               புரிவாயே

அரிய கானக மேவு குறத்தித
           னிதணிலே சிலநாளு மனத்துட
          னடவி தோறுமெ வாழியல பத்தினி                  மணவாளா
   அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட
          உழவர் சாகர மோடி யொளித்திட
         அமரர் நாடு பொன்மாரி மிகுத்திட                   நினைவோனே

திருவின் மாமர மார்பழ னப்பதி
          அயிலு சோறவை யாளுது றைப்பதி
          திசையி னான்மறை தேடிய முற்குடி                விதியாதிச்
   சிரமு மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி
          பதும நாயகன் வாழ்பதி நெய்ப்பதி
         திருவையாறுடனேழு திருப்பதி                           பெரு
மாளே!திருவையாறு தேவாரத் திருப்பதிகம்