பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 8, 2015

23. மாதர் - தமிழ்நாட்டின் விழிப்புஜீவஹிம்ஸை கூடாது. மதுமாம்ஸங்களால்பெரும்பான்மையோருக்குத் தீங்கு உண்டாகிறது.மதுமாம்ஸங்கள் இல்லாதிருந்தால் பிராமணருக்கு பெரிய கீர்த்தி.அது பெரிய தவம். அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக்கூடியஅநுஷ்டானம்.

ஆனாலும், தாம் ஒரு காரியத்தைச்செய்யாமலிருக்குமிடத்து, அதைப் பிறர் செய்யும்போது அஸூயைகொள்வது தவறு.

ஊண், உடை, பெண் கொடுக்கல, வாங்கல் முதலியவிஷயங்களில் மூடத்தனமாகக் கட்டுப்பாடுகளும் விதிகளும்,தடைகளும் கட்டுவதில் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.

மேலும் உலகத்து மனிதர்களெல்லோரும் ஒரே ஜாதி."''இந்தச் சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அநியாயமாகமடிகிறார்களே'' யென்பதை நினைத்து நான் கண்ணீர் சிந்தியதுண்டு.இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன்,அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில் எனக்குச் சம்மதம்கிடையாது. எல்லாமனிதரும் ஒரேவகுப்பு.

சகல மனிதரும் சகோதரர். மனுஷ்யவர்க்கம் ஓருயிர்.இப்படியிருக்க நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமாக ஆசாரச்சுவர்கள் கட்டி, 'நான் வேறு ஜாதி. என் மைத்துனன் வேறு ஜாதி.இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது. அவனை ஜாதிப்பிரஷ்டம் பண்ணவேண்டும்' என்பது சுத்த மடமையென்பதைக்காட்டும் பொருட்டாக இத்தனை தூரம் எழுதினேனே தவிரவேறில்லை.

தமிழ் நாட்டில் ஜாதி ஸம்பந்தமான மூட விதிகளும்ஆசாரங்களும் சடசடவென்று நொறுங்கி விழுகின்றன.

அடுத்த விஷயம், பெண் விடுதலை. தமிழ் நாட்டில்பெண் விடுதலைக் கக்ஷிக்கு தலைவியாக ஸ்ரீமான் நீதிபதிசதாசிவய்யரின் பத்தினி மங்களாம்பிகை விளங்குகிறார். ஸ்ரீஅனிபெசண்ட் இந்த விஷயத்தில் அவருக்குப் பெரிய"திருஷ்டாந்தமாகவும், தூண்டுதலாகவும் நிற்கிறார்.

இவ்விருவராலும் இப்போது பாரத தேசத்தில்உண்மையான பெண் விடுதலை உண்டாக ஹேது ஏற்பட்டதுஇவ்விருவருக்கும் தமிழுலகம் கடமைப்பட்டது இவர்களுடையகக்ஷி என்னவென்றால், ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு; மனம்உண்டு; புத்தியுண்டு; ஐந்து புலன்கள் உண்டு. அவர்கள் செத்தயந்திரங்களல்லர். உயிருள்ள செடிகொடிகளைப் போலவுமல்லர்.சாதாரணமாக ஆண் மாதிரியாகவேதான். புறவுறுப்புக்களில்மாறுதல்; ஆத்மா ஒரே மாதிரி.''

இதனை மறந்து அவர்களைச் செக்கு மாடுகளாகப்பாவிப்போர் ஒரு திறத்தார். பஞ்சுத் தலையணிகளாகக் கருதுவோர்மற்றொரு திறத்தார். இரண்டும் பிழை.

ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம்செய்து கொள்ளலாம். விவாகம் செய்துகொண்ட புருஷனுக்குஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; ழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும்போலே. விஷ்ணுவும் லக்ஷ்மியும் போலே. விஷ்ணுவும்சிவனும் பரஸ்பரம் உதைத்துக் கொண்டதாகக் கதை சொல்லும்பொய்ப் புராணங்களிலே லக்ஷ்மியை அடித்தாரென்றாவது,சிவன் பார்வதியை விலங்கு போட்டு வைத்திருந்தாரென்றாவதுகதைகள் கிடையா. சிவன் ஸ்திரீயை உடம்பிலே பாதியாக"தரித்துக்கொண்டார். விஷ்ணு மார்பின் மேலே இருத்தினார்.பிரம்மா நாக்குக் குள்ளேயே மனவியைத் தாங்கி நின்றார்.ஜத்திற்கு ஆதாரமாகிய பெருங் கடவுள் ஆண் பெண் எனஇரண்டு கலைகளுடன் விளங்குகிறது. இரண்டும் பரிபூர்ணமானசமானம். பெண்ணே அணுவளவு உயர்வாகக் கூறுதலும்பொருந்தும். எனவே, இன்று தமிழ் நாட்டில் மாத்திரமேயல்லாதுபூமண்டல முழுதிலும், பெண்ணைத் தாழ்வாகவும் ஆணைமேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும்தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்;அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம்.

இந்த விஷயம் தமிழ் நாட்டில் பல புத்திமான்களின்மனதிலே பட்டு, பெண் விடுதலைக் கக்ஷி தமிழ் நாட்டின் கண்ணேபலமடைந்து வருவதை நோக்குமிடத்தே எனக்கு அளவில்லாதமகிழ்ச்சி யுண்டாகிறது. இந்த விஷயத்திலும் தமிழ் நாடுபூமண்டலத்துக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குமென்பதில்ஆக்ஷேபமேயில்லை.

அடுத்த விஷயம் மத பேதங்களைக் குறித்தது. இதில்பாரத தேசம் - முக்கியமாகத் தமிழ்நாடு - இன்று புதிதாக அன்று,நெடுங்காலமாக தலைமையொளி வீசிவருதல் எல்லோருக்கும்தெரிந்த விஷயம். ராமானுஜர் தமிழ் நாட்டில் பிறந்தவர் அன்றோ? "ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதாரம் புரிந்தது தமிழ்நாட்டிலன்றோ? பறையனைக் கடவுளுக்கு நிகரான நாயனாராக்கிக்கோயிலில் வைத்தது தமிழ் நாட்டிலன்றோ ? சிதம்பரம்கோயிலுக்குள்ளே நடராஜாவுக்கு ஒரு சந்நதி, பெருமாளுக்கொருசந்நதி. ஸ்ரீீரங்கத்திலே, பெருமாளுக்கு ஒரு துருக்கப் பெண்ணைத்தேவியாக்கித் துலுக்கநாச்சியார் என்று பெயர் கூறிவணங்குகிறார்கள். 'எம்மதமும் சம்மதம்' என்றார் ராமலிங்கஸ்வாமி.

உலகத்திலுள்ள மதபேதங்களை யெல்லாம் வேருடன்களைந்து ஸர்வ ஸமய ஸமரஸக் கொள்கையை நிலைநாட்டவேண்டுமானால், அதற்குத் தமிழ் நாடே சரியான களம். உலகமுழுவதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத்தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மஹான்கள் இப்போதுதமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியேபூமண்டலத்தில் புதிய விழிப்பு தமிழகத்தே தொடங்குமென்கிறோம்.

மேலே சொன்னபடி, ''பரிபூரண ஸமத்வம் இல்லாதஇடத்தில் நாம் ஆண் மக்களுடன் வாழமாட்டோம்'' என்றுசொல்லுவதனால் நமக்கு நம்முடைய புருஷராலும் புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மை யுடையனவாயினும் நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே!ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; தர்மத்துக்காக இறப்போரும்இறக்கத்தான் செய்கிறார்கள். ஆதலால், சகோதரிகளே! பெண்விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம்வெற்றி பெறுவோம். நமக்குப் பராசக்தி துணைபுரிவாள்.வந்தே மாதரம்.

 பதிவிரதை

இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப்போகின்றன.பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகச் சிதறுகின்றன. பலஅநீதிகள் உடைக்கப்படுகின்றன. பல அநியாயக்காரர்கள்பாதாளத்தில் விழுகிறார்கள்.

இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத்தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது. பத்திரிகைகள்தான்,இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள்இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள்.

'ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும்' என்றுஎல்லாரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்ன வென்றால்,ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில்ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்கவேண்டு மென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ,அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே"காட்டுவதில்லை ஒவ்வொருவனும் ஏறக்குறைய தன் இனத்து ஸ்திரீகளைப் பதிவிரதை என்று நம்புகிறான்.

ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாகஇருந்தால் நன்மையுண்டாகும்; பதிவிரதைக்கு அதிக வீரமும்சக்தியும் உண்டு. சாவித்ரீ தனது கணவனை எமன் கையிலிருந்துமீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது.ஆனால், பதிவிரதை இல்லை என்பதற்காக ஒரு ஸ்திரீயைவதைத்து ஹிம்சை பண்ணி அடித்து ஜாதியை விட்டுத் தள்ளிஊரார் இழிவாக நடத்தி அவளுடன் யாவரும் பேசாமல்கொள்ளாமல் தாழ்வுபடுத்தி அவளைத் தெருவிலே சாகும்படிவிடுதல் அநியாயத்திலும் அநியாயம்.

அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால்ஸ்திரீகள் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்? கற்பனைக்கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில்லக்ஷம் ஜனங்கள், ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம்ஆண்கள் பரஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக்கொள்வோம் அதிலிருந்து குறைந்த பக்ஷம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பரபுருஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும். இந்தக் கூட்டத்தில்இருபதினாயிரம் புருஷர்கள் தம் இச்சையை ஓரளவு"நிறைவேற்றுவதாக வைத்துக்கொள்வோம். எனவே குறைந்தபக்ஷம் இருபதினாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக இருத்தல்அவசியமாகிறது. அந்த இருபதினாயிரம் வ்யபசாரிகளில் நூறுபேர்தான் தள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் புருஷனுடன்வாழ்கிறார்கள். ஆனால், அவளவளுடைய புருஷனுக்குமாத்திரம் அவளவள் வ்யபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது.தெரிந்தும் பாதகமில்லையென்று சும்மா இருப்பாருமுளர்.

ஆகவே, பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனே தான்வாழ்கிறார்கள். இதனிடையே, பாதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும்பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும்,கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன.சீச்சீ! மானங்கெட்ட தோல்வி, ஆண்களுக்கு! அநியாயமும்கொடுமையும் செய்து பயனில்லை!

இதென்னடா இது! ''என்மேல் ஏன் விருப்பம்செலுத்தவில்லை?''என்று ஸ்திரீயை அடிப்பதற்கு அர்த்தமென்ன?இதைப்போல் மூடத்தனம் மூன்று லோகத்திலும்வேறே கிடையாது.

ஒரு வஸ்து நம்முடைய கண்ணுக்கு இன்பமாகஇருந்தால், அதனிடத்தில் நமக்கு விருப்பம் இயற்கையிலேஉண்டாகிறது. கிளியைப் பார்த்தால் மனிதர் அழகென்று "நினைக்கிறார்கள். தவளை அழகில்லை என்று மனிதர் நினைக்கிறார்கள் இதற்காகத் தவளைகள் மனிதரை அடித்தும்,திட்டியும், சிறையிலே போட்டும் துன்பப்படுத்த அவற்றுக்கு வலிமை இருப்பதாக வைத்துக் கொள்வோம் அப்படி அவைசெய்தால் நாம் நியாயமென்று சொல்லுவோமா?

தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசுசெலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜ பக்தி செலுத்த வேண்டுமென்றும் அங்ஙனம் பக்தி செய்யாவிட்டால், சிறைச்சாலையிலே போடுவோம் என்றும் சொல்லுகிறார்கள்.அப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள்அவமதிக்கிறார்கள்.

அந்த அரசுபோலே தான், ஸ்திரீகள் மீது புருஷர் செய்யும் ''கட்டாய ஆட்சியும்'' என்பது யாவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக விளங்கும். கட்டாயப் படுத்தி,என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா?

ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்கவேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்தவேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மைப்போன்ற தொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை.அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்யஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளேதுரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும்.

அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.


No comments:

Post a Comment

You can give your comments here