பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, November 28, 2015

வீர சாவர்க்கர் செய்த சாகசம்.

                                       
வீர சாவர்க்கர் லண்டனில் இருந்த போது இந்தியா ஹவுசில் புரட்சி இயக்கத்தில் சம்பந்தப் பட்டிருந்தார் என்று வழக்கு நடந்தது. அவரை இந்தியாவுக்கு பலத்த காவலுடன் கப்பலில் அனுப்ப வேண்டுமென்று லண்டன் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதன்படி ஏராளமான காவலர்கள் புடைசூழ சாவர்க்கர் இந்தியா செல்லும் கப்பலில் ஏற்றப்பட்டார்.
இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் ஒரு வார காலம் பயணம் செய்திருக்கும். அப்போது அந்தக் கப்பல் பிரான்ஸ் நாட்டின் மார்சேல்ஸ் எனும் பிரபலமான துறைமுக நகரில் வந்து நங்கூரம் பாய்ச்சி நின்றது. அங்கு ஒரு விடியற்காலை நேரம், சாவர்க்கர் கழிவரைக்குப் போகவேண்டுமென்று சொன்னதும், பலத்த காவலுடன் அவரை அங்கு செல்ல அனுமதித்தனர். காவலர்கள் கழிவரை வாயிலில் நின்று காவல் காத்தனர். உள்ளே நுழைந்த சாவர்க்கர் அந்த அறையின் கதவை உட்புறம் தாழிட்டுக் கொண்டார். அங்கு எதிரில் சுவற்றில் காற்று வெளியேறுவதற்கென்று ஒரு வட்டமான துவாரம் காணப்பட்டது. மெல்ல அதனுள் நுழைய முயற்சி செய்தார் அவர் உடல் அதனுள் நுழைய முடியவில்லை. உடனே தன்னுடைய ஐரோப்பிய பாணி உடைகளையெல்லாம் களைந்துவிட்டு நிழைந்து பார்த்தார். அவர்கள் உடை ஏராளமானவை என்பதால், அவைகளைக் களைந்தவுடன் அவர் உடல் அந்த துவாரத்தினுள் நுழைந்தது. இந்த சந்தர்ப்பத்திற்காக அவர் பல நாட்கள் பட்டினி இருந்து உடலை இளைக்க வைத்திருந்தார்.

                                                                 மேடம் காமா

அந்த துவாரத்தினுள் நுழைந்து வெளிப்புறம் வெளியேறி கடல் நீரில் குதித்து நீந்தத் தொடங்கினார். அப்படி உடைகளை நீக்கிய நிலையில் நிர்வாண கோலத்தில் இவர் கடல் நீரில் நீந்துவதைக் கண்டு மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த சிலர் கூச்சலிட்டனர். உடனே கழிப்பறை வாயிலில் காவல் இருந்த காவலர்கள் ஒடிவந்து பார்த்தபோது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியக் கைதி கடலில் நீந்திச் செல்வதைக் கண்டனர்.
உடனே இரு காவலர்கள் கடலில் குதித்து “திருடன், திருடன், கைதி தப்பியோடுகிறான்” என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரைப் பின் தொடர்ந்து நீந்திச் சென்றார்கள். இப்படி தப்பியோடும் சாவர்க்கரின் முயற்சிக்கும், அவரைப் பிடிக்க கடமை உந்தப் பின்தொடரும் காவலர்களின் முயற்சிக்கும் வித்தியாசம் உண்டல்லவா? எப்படியும் தப்பிவிட வேண்டுமென்கிற வாழ்வா சாவா போராட்டத்தில் நீந்திய சாவர்க்கரே முதலில் கரை சேர்ந்தார். இங்கு கப்பலில் இருந்து சாவர்க்கர் தப்பியோடி வருவார் என்பது தெரிந்திருந்த மேடம் காமா அம்மையாரும், வேறு சிலரும் இவரது வரவுக்காகக் ஒரு காரோடு கரையில் காத்திருந்தனர். கடற்கரைக்கும் கார் நின்ற இடத்துக்குமிடையே சற்று தூரம் அதிகம் இருந்தது.


நிர்வாணமாக கரையேறிய சாவர்க்கர் காரை நோக்கி ஓடத் துவங்கினார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த பிரெஞ்சு காவலன்  ஒருவன் இவர் காரை நெருங்கும் முன்னரே அவரைப் பிடித்துவிட்டான். அதற்குள் கப்பலில் இருந்து இறங்கி வந்த சில காவலர்களும் தங்கள் கைதி தப்பி ஓடிவருகிறான், அவனைத் தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்று பிரெஞ்சு காவலரிடம் கேட்டனர். அந்த நேரத்தில் வ.வே.சு.ஐயர் உள்ளிட்ட சில இந்திய புரட்சிக்காரர்கள் அங்கு வந்து, இந்த இடம் பிரெஞ்சு பிரதேசம், இங்கு ஆங்கில அதிகாரிகள் யாரையும் கைது செய்ய உரிமையில்லை என்று வாதிட்டார்கள். ஆனால், அவர்களுடைய வாதம் எடுபடாமல் போனது. அந்தப் பிரெஞ்சு அதிகாரி சாவர்க்கரை கப்பலில் வந்த ஆங்கில அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவர் மீண்டும் ஆங்கில அதிகாரிகளிடம் கைதியாக மாட்டிக் கொண்டு கப்பலில் ஏற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மறுநாள் பிரெஞ்சு பத்திரிகைகள் இப்படி தங்கள் பிரதேசத்தினுள் நுழைந்து ஆங்கில அதிகாரிகள் ஒருவரைக் கைது செய்ததை கண்டித்து எழுதின. பிரெஞ்சு அரசாங்கமும் தங்கள் ஆட்சேபணையை பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் அப்போது தி ஹேக் எனுமிடத்தில் இருந்த சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பிரிட்டிஷ் போலீசார் நியாயம் தவறவில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

இப்படி நாட்டுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தேசபக்தர்களையும் அவர்களுடைய தியாகங்களையும் புரியாமல் சிலர் பிற்காலத்தில் இவர் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி அவரை அவமரியாதை செய்தனர் என்பதை அறியும்போது, நம் இந்திய தேசத்தில் தேசபக்திக்கு இதுதானா மரியாதை என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

Sunday, November 15, 2015

அரவான் கதை

                                             
முன்பெல்லாம் கிராமங்களில் திரெளபதி அம்மன் கோயில்களில் கோடைகாலத்தில் திருவிழா நடக்கும் அப்போது அந்தக் கோயில்களில் உடுக்கடித்துக்கொண்டு அரவான் கதை சொல்வார்கள். நள்ளிரவில் பாதி தூக்கத்தில் எழுந்து இந்த உடுக்கு ஓசையைக் கேட்டால் அடிவயிற்றைக் கலக்கும். இப்போதெல்லாம் கிராம கோயில்களில் அதுபோல திருவிழாக்கள் உண்டா என்பது தெரியவில்லை. போகட்டும், யார் இந்த அரவான்?

மகாபாரதம் அனைவருக்கும் தெரிந்த கதை; அதிலும் இப்போது இருவேறு தொலைக் காட்சிகளில் மகாபாரதம் காண்பிக்கப்பட்டு வருகிறது. மகாபாரதக் கதையில் அரவான் என்பவன் ஒரு சிறிய ஆனால் ஆணிவேர் போன்ற கதாபாத்திரம். இப்போதெல்லாம் விழுப்புரம் அருகே கூத்தாண்டவர் கோயில் விழாவுக்காக இந்தியா முழுவதிலுமிருந்து அரவாணிகள் வந்து குவிந்தனர் என்று செய்தி சொல்லுகிறார்கள். அவர்களுடைய முக்கிய கடவுளாகக் கருதப்படுபவர் இந்த அரவான். இவர் அர்ஜுனனுக்கும் நாக இளவரசி உலுப்பி என்பாருக்கும் பிறந்த மகன். அப்படி இந்த அரவான் செய்ததுதான் என்ன?

மகாபாரதப் போர் துவங்குமுன்பாக தங்கள் வெற்றிக்காக சர்வ லட்சணங்களும், வீரமும் ஒருங்கே பொருந்திய ஒருவனை பலி கொடுக்க வேண்டுமெனும் சூழ்நிலையில், அரவான் தானே முதல் பலியாக ஆக சம்மதம் தந்தான். அப்படி அரவான் தன்னை களபலி கொடுக்க முன்வந்த காரணத்தால் அவனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மூன்று வரங்களை அளித்தார். அதன்படி அரவான் தான் இறக்குமுன் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். அதன்படி பகவான் ஸ்ரீகிருஷ்ணரே ஒரு மோகினி வடிவம் கொண்டு அவன் வேண்டுதலை நிறைவேற்றினார். போரில் அரவான் களபலியானதும் மோகினி விதவையாகி விடுகிறாள். இதைத்தான் அரவாணிகள் கூவாகம் திருவிழாவில் அரவான் இறப்பையும், அதைத்தொடர்ந்து தாங்கள் விதவைக் கோலம் பூணுவதையும் செய்து காட்டுகிறார்கள்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அரவானுக்குக் கொடுத்த மற்றொரு வரத்தின் மூலம் வெட்டுண்ட அவனுடைய தலையிலுள்ள கண்கள் மகாபாரதப் போர் முழுவதையும் பார்க்கும் சக்தியைக் கொடுத்தார். திரெளபதி அம்மன் கோயில்களில் ஒரு கம்பத்தின் மீது வைக்கப்பட்டுள்ள ஒரு தலையைப் பார்க்கலாம், அதுதான் அரவான் தலை. கிராமங்களில் அரவான் தலையை மரத்தால் செய்து வைத்துக் கொள்வார்கள், அந்தத் தலை அவர்களைத் தீமைகளிலிருந்து காக்கும் என்பது நம்பிக்கை.

திரெளபதி அம்மன் கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும் அரவான் தலையின் முகத்தில் பெரிய மீசை, உருண்டையான கண்கள், பெரிய காதுகள் ஆகியவற்றுடன் காணப்படுவார். தலையில் ஒரு மகுடம், நெற்றியில் பரந்த நாமம், காதில் தொங்கும் காதணிகள் இவற்றையும் பார்க்கலாம். மகுடத்தின் மீது ஒரு நாகம் படமெடுத்து ஆடுவது போன்ற தோற்றம் காணப்படும். சில இடங்களில் அரவானின் வாயில் இரு புறமும் இரு கோரைப் பற்கள் இருக்கும். திருவிழா காலங்களில் அரவான் தலை ஊர்வலமாக தாரை தப்பட்டைகள் முழங்க எடுத்துச் செல்லப்படும். இரவில் அரவான் கதை நடக்கும்போது மக்கள் கூட்டமாக வந்து கேட்பார்கள்.

அரவானுடைய தியாக வரலாற்றை முதன் முதலாக தமிழிலக்கியத்தில் பெருந்தேவனார் எழுதிய “பாரத வெண்பா”வில் குறிப்பிடுகிறார். இது ஒன்பதாம் நூற்றாண்டு இலக்கியம். இது தவிர வில்லிபுத்தூரார் பாரதக் கதையிலும் அரவான் கதை சொல்லப்படுகிறது. தற்காலத்தில் கூத்தாண்டவர் திருவிழா பற்றிய செய்திகளிலும் அரவான் பற்றிய செய்திகள் உண்டு.

முற்காலத்தில் சினிமா, தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்கள் இல்லாத காலத்தில் கிராமங்களில் தெருக்கூத்துதான் பொழுதுபோக்கு. நமது தமிழ்நாட்டு கிராமியக் கலைகளில் இந்த கூத்துக்கு நல்ல மதிப்பு உண்டு. அந்த கூத்துகளில் அரவான் களபலியையும், அதைத்தொடர்ந்து ஒப்பாரியும் கேட்க முடியும். கோடை நாட்களில் வயல் வேலைகள் இல்லாத போது திரெளபதி அம்மன் கோயில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. அரவான் இறந்த பின்னும் மகாபாரத போரைக் கண்களால் கண்டான் என்பதுதான் சில கூத்துக்களில் கருப்பொருளாக இருந்திருக்கிறது.

முற்காலத்தில் போர்கள் நடக்கும்போது படைவீரர்களாகச் செல்வோரில் சிலர் பெற்றோர், மனைவிமார்கள் ஆகியோர் வருத்தப்பட வைத்துவிட்டுத்தான் போருக்குச் செல்வர். அப்படிச் செல்பவர்கள் போரில் மாண்டுபோய்விட்டால், அந்தக் குடும்பத்தார் படும் வேதனையைத்தான் அரவான் கதை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிவிடுகிறது.

துருபதனின் மகளான திரெளபதியை போட்டியில் வென்ற அர்ஜுனன் திருமணம் செய்து கொள்ள எண்ணி தன் தாயிடம் வந்து தான் ஒன்றை வென்று வந்திருக்கிறேன் என்று சொல்ல, அந்த பொருள் எதுவென தெரியாத குந்தி சொன்னாள் அதனை நீங்கள் ஐவரும் சமமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாள்; அதன் பயனாய் பாஞ்சாலி ஐவருக்கும் துணையானாள்.

அர்ஜுனனின் இந்தச் செயல் விதிமீறிய செயல் என்பதால் அவன் தலைநகர் இந்திரபிரஸ்தத்திலிருந்து ஓராண்டுகள் தலயாத்திரை செய்யவேண்டுமென்று பெரியவர்கள் சொல்ல அர்ஜுனனும் பாரத வர்ஷத்தின் வடகிழக்குப் பகுதிக்குச் சென்றான். அங்கு நாக வம்சத்து இளவரசி உலுப்பி எனும் பெண் மீது அர்ஜுனன் காதல் கொள்கிறான். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஒரு மகனைப் பெற்றெடுத்தனர். அவன்தான் அரவான். அவனையும் உலுப்பியையும் அங்கேயே விட்டுவிட்டு அர்ஜுனன் தன் புனித யாத்திரையை மேலும் தொடர்ந்தான். அரவானோ தன் தாயின் அரவணைப்பில் நாகலோகத்திலேயே வளர்ந்து வந்தான். மகாபாரதப் போர் துவங்கியபோது அர்ஜுனன் தன் மகன் அரவானைப் போரில் உதவ அழைத்ததனால் அரவான் போரில் கலந்துகொள்ள வந்து சேர்ந்தார். தமிழ்நாட்டில் மட்டும்தான் அரவான் போருக்கு களபலியாக பலிகொடுக்கப்பட்டார் என்று கூறுகிறது. ஆனால் வேறு பல மகாபாரதக் கதைகளில் அரவான் எட்டு நாட்கள் போரிட்டதாகக் கூறப்படுகிறது. எட்டாம் நாள் போரில் துரியோதனன் ஏவிவிட அலம்பூசன் எனும் அரக்கனால் அரவான் கொல்லப்பட்டதாக வரலாறு இருக்கிறது.

இந்தக் “களபலி” பற்றி சொல்லப்படும் கதை இதுதான். போர் துவங்குவதற்கு முன்பாக துரியோதனன் களபலி கொடுக்க நாளையும் ஆளையும் தீர்மானிக்க எதிரியான ஜோசியத்தில் வல்லவனான சகாதேவனிடம் வந்து ஆலோசனை கேட்டு களபலிக்கான நேரத்தை முடிவு செய்து கொள்கிறான். களபலிக்கு அர்ஜுனனின் மகன் அரவானே தகுந்தவன் எனக் கருதி அவனிடம் பேசி துரியோதனன் அவன் சம்மதத்தைப் பெற்று விடுகிறான்.

துரியனின் இந்த சதியை அறிந்து கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் அரவான் கெளரவர்கள் வலையில் விழுந்துவிடாமல் பாண்டவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்யும்படியாக ஒரு திட்டம் தீட்டிவிடுகிறார். அதன்படி தருமனிடம் சென்று களபலி பற்றி சொல்லி இந்தப் பலிக்குத் தகுந்தவர்கள் நான்கு பேர். அதில் தானும் ஒருவர் என்கிறார் கண்ணன். மற்ற மூவர் சால்யன், இவர் துரியனுடன் இருப்பவன், மற்றொருவன் அர்ஜுனன், அடுத்தவன் அர்ஜுனனின் மகன் அரவான் என்கிறார். இதில் அரவானே சரியான தேர்வு என்று முடிவு செய்து அவனையே பலி கொடுக்க சம்மதம் பெறுகின்றனர். இப்படியாக அந்த வீர நாகர் குல இளைஞன் மகாபாரதப் போரில் களப்பலி ஆகிறான்.

இவனுடைய வீரம், தியாகம் இவை போற்றப்படுகின்றன. இந்தக் கதையில் பல்வேறு குழப்பங்களும், மாறுபாடான வரலாறுகளும் குறுக்கிட்டாலும், அரவான் எனும் இளைஞனின் தீரமிக்க தியாகம் வெளிப்படுகிறது. அவன் வீரத்தினைப் புகழ்வோம். தியாகத்தினை மதிப்போம். அதுதான் நாம் செய்யக்கூடிய செயல்.
திருவையாறு தலப் பெருமை.

                                   
திருவையாறு,  தஞ்சாவூருக்கு வடக்கே 15 கி.மீ.தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஒரு சிவத்தலம். இங்கு கோயில் கொண்டுள்ள ஐயாறப்பர், அறம்வளர்த்தநாயகி ஆலயம் சிறப்புடையது. இத்தலத்தின் சிறப்பினைப் பெரியோர்கள் மிகவும் பெருமைப்படுத்திப் பாடியிருக்கிறார்கள். திருநாவுக்கரசர் சுவாமிகள் “ஐயாறே ஐயாறே என்பீராகில், அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே” என்கிறார். ஐயடிகள் காடவர்கோன் நாயனார் “ஐயாறு வாயாறு பாயாமுன் ஐயாறு வாயால் அழை” என்கிறார். ஐயாற்று இறைவனை வாயால் அழைத்துப் போற்றினாலே பெரும் பேறு சித்திக்கும் என்பர் பெரியோர். அப்படியிருக்க அந்தப் பெரும் பதிக்குச் சென்று நேரில் வழிபட்டால் அதன் பெருமையினைச் சொல்லவும் வேண்டுமோ?

திருவையாறு தலத்தின் பெருமைகள் இங்கு மிக சுருக்கமாகப் பார்க்கலாம். இது மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்பும் உடைய தலம். தேவாரம் பாடப்பெற்ற தலங்களில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 51ஆவது தலம். 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தலம், இவ்வாலயத்தைச் சுற்றியே இவ்வூர் அமைந்திருப்பது சிறப்பு. இவ்வூருக்கு ஐயாறு, பஞ்சநதத்தலம், பூலோக கைலாசம், ஜெப்பேசம், ஜீவன்முக்திபுரம், காவிரிக்கோட்டம் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இதன் தலவிருட்சம் வில்வம்.

ஐந்து ஆறுகள் ஓடுவதனால் இந்தப் பெயர் வந்தது சொல்வாரும் உண்டு.

இவ்வூரில் காவிரி ஆற்றில் 23 படித்துறைகள் உண்டு. இவற்றை அச்சுதப்பராயர் காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதர் என்பார் முயன்று கட்டியதாக வரலாறு சொல்கிறது.  அவை 1. சாமராயர் படித்துறை, 2. பதினைந்து மண்டப படித்துறை 3. சீதாபாயி அம்மை படித்துறை 4. ஓடத்துறை படித்துறை 5. அரண்மனை படித்துறை 6. சகாஜிப் படித்துறை 7. சிங்கப்பூர் சாமி படித்துறை 8. புஷ்யமண்டபப் படித்துறை 9. மோட்சப் படித்துறை 10. கல்யாணமஹால் படித்துறை 11. ராணி கல்யாபாய் படித்துறை 12. கைலாசவாகன படித்துறை 13. திருமஞ்சனப் படித்துறை 14. எசந்தரப்பா படித்துறை 15. முத்துநாயக்கன் படித்துறை 16. ராஜா படித்துறை 17. விட்டோபா கோயில் படித்துறை 18. செவ்வாய்க்கிழமை படித்துறை 19. ராமப்பா அக்ரஹாரம் படித்துறை 20. சேதுபாவா படித்துறை 21. தியாகையர் படித்துறை 22. மயானப் படித்துறை 23. ஐராவணப் படித்துறை.


திருவையாற்றுக்குத் தேவார பதிகங்கள் 18 உண்டு. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்கள். அப்பர் பெருமான் கயிலை சென்று சிவபெருமானை தரிசிக்கச் சென்றபோது இறைவனால் தடுத்தாள்கொள்ளப்பட்டு, இப்பூதவுடலோடு கைலாயம் செல்வது இயலாத காரியம், ஆகையால் நீர் இந்த பொய்கையில் மூழ்கி எழுவீராக என்று வழியில் சிவபெருமான் முதியவர் வடிவில் வந்து சொல்ல, அப்பரும் அப்படியே மூழ்கி எழும்போது தான் திருவையாற்றில் இருப்பதை உணர்ந்தார். அப்போது ஐயன், அம்மையோடு ரிஷப வாகனத்தில் தோன்றி, இப்பிரபஞ்சத்தின் இயற்கையை விளக்கிக் காட்சி தருகிறார். அப்போது அப்பர் பெருமான் பாடிய பாடல் தேவாரப் பாடல்களில் இன்றியமையா இடத்தைப் பெற்றுவிட்டது. அதுதான் “மாதர்பிறை கண்ணியானை” எனத் தொடங்கும் தேவாரம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கண்டியூர் வந்து அங்கு பிரம்மசிரக்கண்டீசரைத் தரிசித்துவிட்டு ஐயாறு வரமுடியாமல் காவிரியில் வெள்ளம் பாய, வருந்திப் பாடியபோது காவிரி வெள்ளம் அவருக்கு வழிவிட்டு நகர்ந்து ஐயாறு சென்று பிரணதார்த்திஹரனை தரிசிக்கும் பாக்கியத்தை அளித்தார். அப்போது சுந்தரரை மறுகரையிலிருந்து கூவி அழைத்த விநாயகர் இப்போது “ஓலமிட்ட விநாயகர்” எனும் பெயரோடு ஆட்கொண்டார் சந்நிதிக்கு அருகில் கோயில் கொண்டுள்ளார்.

நந்தி தேவர் இங்குதான் சிலாத முனிவரின் மகனாக அவதரித்தார். நந்தியம்பெருமான் சிவகணங்களின் தலைமைப் பதவியைப் பெற்ற தலம். இங்கு சுசரிதன் எனும் சிறுவனை காலன் உயிர் பறித்துச் செல்ல வந்தபோது சிவபெருமான் ஆட்கொண்டாரைக் கொண்டு காலனை உதைத்து சிறுவனைக் காத்த தலம்.

ஐயாற்றில் இறைவனுக்குப் பூஜைகள் செய்துவந்த ஒரு ஆதிசைவர் காசி சென்று திரும்பாதபோது, அவருடைய குடும்பத்தினரைக் காக்கவென்று தானே அந்த ஆதிசைவர் வடிவில் வந்து தனக்கே பூசனைகள் செய்த ஒப்பற்ற தலம்.

காவிரிப் பெண் சமுத்திர ராஜனைத் தேடி வரும்போது அவளை ஐயாற்றில் நிறுத்தி சமுத்திர ராஜனை அங்கே வரவழைத்து அறம்வளர்த்தநாயகி திருமணம் செய்துவைத்த தலம். அதனை குறிக்க இங்கு சமுத்திர தீர்த்தம் எனும் நீர்நிலை உண்டு. இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் “தர்மாம்பாள் குறம்” எனும் குறவஞ்சி இலக்கியமும் உண்டு.

காசிக்குச் சமமான தலங்கள் ஆறு, அதில் திருவையாறு ஒன்று. பதின்மூன்று சித்தர்களில் அகப்பேய்சித்தர் அமர்ந்த இடம் இது. இங்கு அமைந்துள்ள சிவலிங்கம் மண் (ப்ருத்வி) ணால் ஆனது. இங்கு லிங்கத்துக்கு அபிஷேகம் இல்லை, ஆவுடையாருக்கு மட்டுமே உண்டு. புனுகு சட்டம் லிங்கத்துக்குச் சாத்தப்படும்.

இந்த சுவாமிக்கு எத்தனை பெயர்? ஐயாறப்பர்; செம்பொற்ஜோதியார், பஞ்சநதீசர், பஞ்சாபகேசர்; பிரணதார்த்திஹரர்; ஜெப்பேசர்; திரிசூலி, ஐயாறுடைய அடிகள்; ஐயாற்று மகாதேவர்.
                  தருமையாதீனம் கட்டளை விசாரணை முனைவர் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள்

அன்னை அறம்வளர்த்தநாயகி (தர்மசம்வர்த்தினி). அபிராமி அந்தாதியில் 57ஆவது பாடலில்:

 “ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு இவ்வண்டம் எல்லாம்                                         உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்                                                   செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்                                              மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உந்தன் மெய்யருளே!”

இதன்படி ஐயன் சிவபெருமான் இருநாழி நெல்லை அளந்து அம்மையிடம் கொடுத்தார். அதனைக் கொண்டு அம்மை 32 அறங்களைச் செய்து வந்தாராம். இந்த அம்மை அறம்வளர்த்தநாயகி எனப் பெயர் பெற்றாள். இவளுக்கு இங்கு தர்மாம்பிகை, தர்மசம்வர்த்தினி, அறம்வளர்த்தநாயகி, காமக்கோட்டத்து ஆளுடைநாயகி, உலகுடைய நாச்சியார் என்றெல்லாம் பெயர்கள் உண்டு.

சுருங்கச் சொல்லின் இத்தலத்தில் வழிபட்டால் பெறும் பேறுகள்:--
1.    கல்வி வளம் பெருகும்  2. வேண்டுவோர் வேண்டியபடி அருள் கிடைக்கும் 3. திருமணம் நடக்கும் 4. குழந்தைப் பேறு கிட்டும்  5. நோய்கள் நீங்கிடும்  6. அல்லல் அகலும் 7. குடும்பத்தில் அமைதி நிலவும்  8. பாவங்கள் நீங்கும்  9. எமபயம் தீரும்.

இங்கு வந்து இறைவனையும் அன்னையையும் வழிபட்டுச் செல்வோர் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.
             Friday, November 13, 2015

காலபைரவாஷ்டகம்

                    

காலபைரவாஷ்டகம்

देवराजसेव्यमानपावनांघ्रिपङ्कजं
व्यालयज्ञसूत्रमिन्दुशेखरं कृपाकरम् 
नारदादियोगिवृन्दवन्दितं दिगंबरं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥१॥
Deva-Raaja-Sevyamaana-Paavana-Angghri-Pangkajam
Vyaala-Yajnya-Suutram-Indu-Shekharam Krpaakaram |
Naarada-
[A]adi-Yogi-Vrnda-Vanditam Digambaram
Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||1||
भानुकोटिभास्वरं भवाब्धितारकं परं
नीलकण्ठमीप्सितार्थदायकं त्रिलोचनम् 
कालकालमंबुजाक्षमक्षशूलमक्षरं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥२॥
Bhaanu-Kotti-Bhaasvaram Bhavaabdhi-Taarakam Param
Niila-Kannttham-Iipsita-Artha-Daayakam Trilocanam |
Kaala-Kaalam-Ambuja-Akssam-Akssa-Shuulam-Akssaram
Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||2||
शूलटङ्कपाशदण्डपाणिमादिकारणं
श्यामकायमादिदेवमक्षरं निरामयम् 
भीमविक्रमं प्रभुं विचित्रताण्डवप्रियं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥३॥
Shuula-Ttangka-Paasha-Danndda-Paannim-Aadi-Kaarannam
Shyaama-Kaayam-Aadi-Devam-Akssaram Nir-Aamayam |
Bhiimavikramam Prabhum Vicitra-Taannddava-Priyam
Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||3||
भुक्तिमुक्तिदायकं प्रशस्तचारुविग्रहं
भक्तवत्सलं स्थितं समस्तलोकविग्रहम् 
विनिक्वणन्मनोज्ञहेमकिङ्किणीलसत्कटिं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥४॥
Bhukti-Mukti-Daayakam Prashasta-Caaru-Vigraham
Bhakta-Vatsalam Sthitam Samasta-Loka-Vigraham |
Vi-Nikvannan-Manojnya-Hema-Kingkinnii-Lasat-Kattim
Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||4||
धर्मसेतुपालकं त्वधर्ममार्गनाशकं
कर्मपाशमोचकं सुशर्मदायकं विभुम् 
स्वर्णवर्णशेषपाशशोभिताङ्गमण्डलं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥५॥
Dharma-Setu-Paalakam Tvadharma-Maarga-Naashakam
Karma-Paasha-Mocakam Su-Sharma-Daayakam Vibhum |
Svarnna-Varnna-Shessa-Paasha-Shobhitaangga-Mannddalam
Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||5||
रत्नपादुकाप्रभाभिरामपादयुग्मकं
नित्यमद्वितीयमिष्टदैवतं निरंजनम् 
मृत्युदर्पनाशनं करालदंष्ट्रमोक्षणं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥६॥
Ratna-Paadukaa-Prabhaabhi-Raama-Paada-Yugmakam
Nityam-Advitiiyam-Isstta-Daivatam Niramjanam |
Mrtyu-Darpa-Naashanam Karaala-Damssttra-Mokssannam
Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||6||
अट्टहासभिन्नपद्मजाण्डकोशसंततिं
दृष्टिपातनष्टपापजालमुग्रशासनम् 
अष्टसिद्धिदायकं कपालमालिकाधरं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥७॥
Atttta-Haasa-Bhinna-Padmaja-Anndda-Kosha-Samtatim
Drsstti-Paata-Nasstta-Paapa-Jaalam-Ugra-Shaasanam |
Asstta-Siddhi-Daayakam Kapaala-Maalikaa-Dharam
Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||7||
भूतसंघनायकं विशालकीर्तिदायकं
काशिवासलोकपुण्यपापशोधकं विभुम् 
नीतिमार्गकोविदं पुरातनं जगत्पतिं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥८॥
Bhuuta-Samgha-Naayakam Vishaala-Kiirti-Daayakam
Kaashi-Vaasa-Loka-Punnya-Paapa-Shodhakam Vibhum |
Niiti-Maarga-Kovidam Puraatanam Jagatpatim
Kaashikaapuraadhinaathakaalabhairavam Bhaje ||8||
कालभैरवाष्टकं पठंति ये मनोहरं
ज्ञानमुक्तिसाधनं विचित्रपुण्यवर्धनम् 
शोकमोहदैन्यलोभकोपतापनाशनं
प्रयान्ति कालभैरवांघ्रिसन्निधिं नरा ध्रुवम् ॥९॥
Kaalabhairavaassttakam Patthamti Ye Manoharam
Jnyaana-Mukti-Saadhanam Vicitra-Punnya-Vardhanam |
Shoka-Moha-Dainya-Lobha-Kopa-Taapa-Naashanam
Prayaanti Kaalabhairava-Amghri-Sannidhim Naraa Dhruvam ||9||


               காலபைரவாஷ்டகம் (தமிழ் விளக்கம்)
               தமிழாக்கம்: தஞ்சை வெ.கோபாலன்.

1.   காசிநகர் வாழ் காலபைரவா! நின் மாண்பினைப் பாடுகிறேன் – நினது தாமரைப் பாதங்களில் தேவேந்திரன் வந்து பணிந்து வணங்குகிறான்;  நீ அணிகின்ற யக்ஞோபவீதமோ நச்சினைக் கக்கிடும் அரவம் அன்றோ; நினது சடாமுடியை அலங்கரிப்பதோ பாலொளிவீசும் முழுநிலவு; அருட் பார்வையை அள்ளி வீசும் நினது ஒளிவீசும் நயனங்கள்; நாரத முனிவரும் ஏனைய இசை வாணர்களும் நயம்பட இசைக்கும் புகழுடையாய்; திக்குகள் அனைத்தையும், டையாய் அணிந்த எழிலுறு மேனியனே! நின்னைப் பாடுகின்றேன்.

2.   காசி நகராளும் காலபைரவா! நின் புகழை என் நாவால் உரக்கப் பாடுகின்றேன். கோடி சூரியர் நாடிய ஒளிக்கதிர் வீசிடும் ஞாயிறே; மீண்டும் மீண்டும் வந்து பிறக்கும் கேட்டினை அழிப்பாய்; பிரபஞ்சத்தின் அதிபதியே நீலகண்டா! எங்கள் பெற்றியைப் போற்றி வரம் தரும் கருணையே; முக்கண் உடைய மூலப் பரம்பொருளே; காலனையழித்த கருணை வள்ளலே; தாமரைக் கண்ணா; அழிவற்ற ஆயுதம் கரங்களில் தாங்கிய கருணையே நீதான் நிலையானவன்.

3.   காசி நகரையாளும் காலபைரவா நின் புகழினைப் பாடுகின்றேன். கடிந்திடும் கோடரி கைக்கொண்டு, பாசக் கயிற்றினை பற்றிய கையுடன், இப்புவனந்தனை படைத்துக் காத்திடும் பேரருள் கருணையே! சாம்பல் பூசிய கவின்மிகு உடலுடன், தேவாதி தேவா தேவருள் தலைமையே! அழிவினை அழிக்கும் அழியாச் செல்வமே; நோய்நொடிதனையே நெருங்காமல் செய்து உடல்நலம் காக்கும் உத்தமத் தலைவா! வலிமையனைத்தும் ஒருங்கே கொண்ட பிரபஞ்சத்தைப் படைத்து, சிற்சபைதனிலே தாண்டவமாடும் தனிப்பெரும் இறைவா!

4.   காசி நகராளும் காலபைரவரைப் புகழ்வேன்! மனதில் தோன்றும் விருப்புகளையும், அதனை அடையும் மார்க்கங்களையும் காட்டி அருள்புரியும் தேவா! மனதை கொள்ளை கொள்ளும் எழிலுடை தோற்றமுடையாய்! பணிவோர் தம்மை பரவசப்படுத்தும் கருணைக் கடலே! நிரந்தரப் பொருளே! பல்லிடந்தோறும் பற்பல தோற்றம் பயின்றிடும் தேவே! இடையில் ஒளியுமிழ் பொன்னணியுடனே மணிகள் ஒலிக்க நடமிடும் இறைவா!

5.   காசி நகரில் கருணை வழங்கும் காலபைரவர் புகழினை இசைப்பேன். நேர்மை வழிதனை நிலைத்திடச் செய்வோன்; அறவழி பிறள்வோரை அழித்திடும் காலன்; கர்ம வினைகள் விளைத்திடும் செயல்கள் அனைத்தையும் அழித்துக் காப்போன்; அளிக்கும் நலன்களை அடக்கமோடு அளிப்போன்; அற்புதத்திலும் அற்புதமானவன்; அணியும் அணிகலன் அனைத்தும் ஒளிருகின்றன பொன்னின் நிறத்தில்.

6.   காசி நகராளும் காலபைரவர் புகழினைப் பாடுவேன்; பொன்னாலான காலணி இரண்டும் மின்னிடும் கால்களை யுடையோன்; நிரந்தரமானவன்; ஈடில்லை இவருக்கு மாற்றார் எவரும்; விரும்பியதனைத்தையும் விரைந்து அருள்பவன்; தனக்கென விருப்பம் எதுவும் இலாதவன்; இறப்பையும் வென்ற மேலோனாவன்; ஆன்ம விடுதலையைத் தன் பற்களால் தருபவன்.

7.   காசி நகராளும் காலபைரவர் புகழினைப் பாடுவேன். படைப்புத் தேவன் தாமரைச் செல்வன் பிரம்மன் படைத்த அனைத்தையும் தன் கர்ஜனையால் மட்டுமே உடைக்கும் ஆற்றல் படைத்தோன்; பாவங்கள் அனைத்தையும் தன் கருணைப் பார்வையால் கருகிடச் செய்வோன்; ஆள்பவரில் இவனே ஆண்மையாளன் எனும் பெருமையைப் பெற்றோன்; அட்டாங்க சித்தி* அருளும் பெரியோன்; கபால மாலையை அணிந்திடும் பெற்றியன்.

(*அட்டாங்க சித்தி என்பது: அனிமா, மஹிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, ப்ரகாம்யா, ஈசத்வா, வசித்வா எனும் சித்திகளாம்)

8.   காசி நகராளும் கற்பகமாம் காலபைரவரைப் பாடுகின்றேன். பேய்க்கணங்கள் அனைத்துக்கும் அதிபதியானவனே! அளவற்ற புகழினை அள்ளித் தெளிப்பவனே! காசியில் வாழ்வோர் பிணிகளை நீக்கி, பாவங்கள் போக்கி பவித்திரமாய்ச் செய்வோனே! ஒளிமயமானவனே! நல்வழி காட்டிடும் நலம் தரும் நாயகனே! காலத்தை வென்ற நிரந்தரமானவனே! பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து வழிநடத்தும் வல்லோனே! நின் பாதம் பணிகின்றேன்.

காலபைரவரின் புகழ்பாடும் இவ்வெட்டு வசீகரப் பதிவினையும் படித்து ஆன்ம விடுதலை எனும் அரும்பொருளை உணர்ந்தோர் எல்லோரும், பாவ வழி மறந்து நற்செயல்கள் புரிந்து, துக்கம் அழிந்து, பற்றும் பாசமும் ஒழித்து, ஆசையும், கோபமும் துறந்து பரம்பொருளாம் காலபைரவரின் பாதரவிந்தங்களை அடைவர் என்பது திண்ணம்.

காலபைரவர் காசியில் கோயில்கொண்ட ஈசனின் அச்சம்தரும் அம்சமாகும். காசி நகரைத் தன் கருணைப் பார்வையால் ஆண்டுவரும் பெரியோன். ஒரு முறை படைக்கும் கடவுளாம் பிரம்மன் சிவபெருமானை கேலிசெய்யும் முகத்தான், தன் ஐந்தாம் முகத்தால் ஏளனமாய்ச் சிரித்தான். சினங்கொண்ட பரமசிவனார் காலபைரவர் எனும் உருவெடுத்துக் கோபத்துடன் சிரித்த அந்த பிரம்மனின் ஐந்தாம் தலையைக் பிய்த்தெறிந்தார். இதனைக் கண்ட மகாவிஷ்ணு சிவனுடைய கோபத்தைத் தீர்த்துவைத்து தவறிழைத்த பிரம்மனை மன்னித்துவிடச் செய்தார். பிரம்மனின் சிரத்தைக் கொய்த அந்த பிரம்மஹத்தி தோஷம் மட்டும் காலபைரவரைத் தொடர்ந்து கொண்டிருந்தது பிரம்மனின் துண்டித்த தலையோடு. பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட காலபைரவர் காசி புண்ய க்ஷேத்திரத்தினுள் நுழைந்தார். புண்ணியம் கோலோச்சும் அந்த காசி நரினுள் அந்த பிரம்மஹத்தி தோஷம் நுழைய முடியவில்லை. உள்ளே நுழைந்த காலபைரவர் காசி நகரின் கோட்டைக் காவலராக நியமனமானார். கோட்டைப் பாதுகாவலுக்காக காலபைரவர் நாயின் முதுகிலேறிப் பயணம் செய்தார். காசி புண்ணியத் தலம் செல்லும் எவரும் காலபைரவர் ஆலயத்திற்குச் சென்று வணங்காவிடில் அவர்தம் தலயாத்திரை பூர்த்தியாவதில்லை.

மற்றுமொரு வரலாறும் சொல்லப்படுகிறது. அது தட்சயக்ஞத்தின் போது வீரபத்திரர் தாட்சாயினியின் தன்தை தட்சனின் தலையைக் கொய்து விடுகிறார். சிவபெருமானுக்கு ஆஹுதி கொடுக்காமல் யக்ஞம் செய்யமுயன்ற தட்சனுக்கு அவர் கொடுத்த தண்டனை அது. தாட்சாயினியின் உடல் எட்டு பாகங்களாக நாடு முழுவதும் தூவப்பட்டு அவை சக்தி பீடங்களாக ஆயின என்பதும் ஒன்று. அப்படி உருவான சக்தி பீடங்கள் ஒவ்வொன்றின் வெளியிலும் காலபைரவருக்கு ஆலயம் உண்டு.
மற்றொரு விளக்கம் இதோ: காலம் என்பது நேரத்தைக் குறிக்கும். சிவபெருமான் காலத்தை அளந்தவன், காலத்தை ஆள்பவன். தனக்குக் கிடைத்த காலத்தை, அல்லது நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய இறைவனைத் தொழுகிறான். அந்த இறைவனே காலபைரவர் என்கிறது இன்னொரு செய்தி.

மற்றொரு நம்பிக்கை: சிவாலயங்களுக்குக் காவலாக இருப்பவர் காலபைரவர். நித்திய பூசனைகள் முடிந்தபின்னர் சிவாலயங்களைப் பூட்டி அதன் சாவியை பைரவரிடம் கொடுத்துவிட்டு மறுநாள் ஆலயத்தைத் திறக்க அவரிடமிருந்து சாவியைப் பெறுவார்களாம்.

இந்த “காலபைரவாஷ்டகம்” எனும் ஸ்தோத்திரம் சம்ஸ்கிருதத்தில் ஆதி சங்கரரால் இயற்றப்பட்டது என்கின்றனர். இந்த ஸ்லோகங்கள் இப்போதும் காசியில் உள்ள காலபைரவர் ஆலய சந்நிதியில் பாடப்படுகின்றன. பிரம்பு ஒன்றினால் பக்தர்களை மெல்லத் தட்டி ஆசி வழங்கி இந்த ஸ்லோகம் சொல்லப்படுகிறதாம்.

(தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் மார்க்கத்தில் திருக்கண்டியூர் எனும் அட்டவீரட்டான தலமொன்று உண்டு. இங்கு கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு “பிரம்ம சிரக்கண்டீசர்” என்று பெயர். இவ்வாலயத்துக்கு எதிரே ஒரு பெருமாள் கோயில். அங்கிருக்கும் மூர்த்தம் “ஹரசாப விமோசனப் பெருமாள்” என்பதாகும்.)

(காலபைரவாஷ்டகம் ஸ்லோகங்களின் தமிழாக்கம்: தஞ்சை வெ.கோபாலன். இந்த விளக்கத்தில் ஏதேனும் பொருட்குற்றம் இருக்குமாயின் தயைகூர்ந்து தெரிவித்தால் திருத்திக் கொள்ளமுடியும்.)


Wednesday, November 11, 2015

குச்சிப்புடி நடனக் கலைஞர்கள் பகுதி II.

                         
                                            கர்நாடக மாநிலம்.

முந்தைய கட்டுரையில் குச்சிப்புடி நடனம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டோம். இந்த அற்புதமான நடனக் கலை இந்தியாவின் புகழ்மிக்க ஏழு நடன வகைகளில் சிறப்பிடம் பெற்றது. பொதுவாக நடனக் கலை பற்றி அதிகம் அறியாதவர்கள்கூட மேடையில் கலைஞர்கள் ஆடும் முறைகளைக் கண்டு இது குச்சிப்புடி என்று புரிந்து கொள்ளுமளவுக்கு இது பிரபலமடைந்திருக்கிறது. மேலும் கலை உலகில் பல நடனக் கலைஞர்களும் பரதக் கலையையும், குச்சிப்புடியையும் விரும்பிக் கற்று மேடைதோறும் ஆடி வருவதையும் நாம் அறிவோம்.

ஆந்திர மாநிலம் தவிர கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய பகுதிகளிலும்கூட இந்த அற்புதக் கலைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதும், அங்கெல்லாம் குச்சிப்புடி நடனம் கற்பிக்கப் பல அமைப்புகள் தோன்றியிருப்பதும் ஒரு நல்ல வரவேற்கத்தக்க அம்சமாகும். அந்த வகையில் இந்தக் கட்டுரையில் கர்நாடக மாநிலத்தில் வாழும் ஒருசில குச்சிப்புடி நடனக் கலைஞர்களைப் பற்றியும், அவர்கள் நடத்தும் நாட்டியப் பள்ளிகள் பற்றியும் பார்க்கலாம். முதலில் பெங்களூரு.

                                      பெங்களூரு கலைஞர்கள்: 
1. அகிலா தீபக், உத்தரஹள்ளி மெயின் சாலை, பெங்களூரு
2. என். அனுபமா பூஷன், மகதி மெயின் சாலை, பெங்களூரு
3. தீபா சஷீந்திரன், குச்சிப்புடி பரம்பரா ஃபவுண்டேஷன், வித்யாரண்யபுரம், பெங்களூரு. (she is a regular participant in our Ayyarappar Natyanjali)
4. குருராஜ், ஜோதிநகர், பெங்களூரு
5. ஹிதைஷி தனன், இந்திரா நகர், பெங்களூரு
6. கலாமண்டலம் உஷா தத்தார், பெங்களூரு
7. மஞ்சு பார்கவி (சங்கராபரணம்) குரு: வெம்பட்டி சின்ன சத்யம், பெங்களூரு.
8. எச்.எம். பரமேஷ், பழைய தரகுபேட்டை, பெங்களுரு
9. பிரதீக்ஷா காக்ஷி, கெங்கேரி சாடிலைட் டவுன், பெங்களூரு
10. ராஜஸ்ரீ ஹொல்லா, ஜெயநகர், பெங்களூரு
11. ராஷ்மி ஹெக்டே கோபி, ஜே.பி.நகர், பெங்களூரு
12. சஞ்சய் சாந்தாராம், குமரா பார்க் மேற்கு, பெங்களூரு
13. என்.ஜி.சந்தோஷ், ஸ்ரீலதா சந்தோஷ், தாசரஹள்ளி, பெங்களூரு
14. சரஸ்வதி ராஜதேஷ், சஞ்சய் நகர், பெங்களூரு
15. ஷில்பா அரவிந்த், அவலஹள்ளி, பெங்களூரு
16. சுனிதா பாலசரஸ்வதி, ஜெயநகர், பெங்களூரு
17. சூர்யா என்.ராவ், ஆர்.டி.நகர், பெங்களூரு
18. உதய்காந்த், ஜெயநகர், பெங்களூரு
19. வசந்த் கிரண், கங்காநகர், பெங்களூரு
20. வீணாமூர்த்தி விஜய், வையாலிக்காவல், பெங்களூரு
21. எஸ்.வி.வித்யா, விஜய்நகர், பெங்களூரு
22. வைஜயந்தி காஷி, கெங்கேரி, பெங்களூரு

சென்னப்பட்டணா:
1. எம்.சி.சுஜேந்திர பாபு, சென்னப்பட்டணா, கர்நாடகா                                                            Deepa Sashindran
                                                             Akhila Deepak
                                                        Anupama Bhooshan
                                                                 Gururaj
                                                           Vyjayanthi Kashi
                                                          Manju Barghavi
                                                       Rashmi Hegde Gopi
                                                         Sanjay Shantharam
                                                               Surya Rao
                                                      Vasanth Kiran


   
                      கேரள மாநில குச்சிப்புடி நடனக் கலைஞர்கள்.

கண்ணனூர்:
1. நயந்தாரா மகாதேவன், கண்ணனூர்

எர்ணாகுளம்:
1. எம்.எம்.ஜோலி, திருவங்குளம், எர்ணாகுளம்

கொச்சி:
1. அனுபமா மோகன், கொச்சி
2. தீபா கர்த்தா, கொச்சி
3. கலாமண்டலம் சந்திரிகா மேனன், எடப்பள்ளி, கொச்சி
4. மோகனா துளசி, காளூர், கொச்சி

கோழிக்கோடு:
1. ரஜனி பலக்கல், சேமன்சேரி, கோழிக்கோடு

பாலக்காடு:
1. மெதில் தேவிகா, ராமனாதபுரம், பாலக்காடு

பந்தணம்மிட்டா:
1. கலாமண்டலம் ஸ்ரீதேவி மோகனன், அரண்முலா, கேரளா

திருவனந்தபுரம்:
1. கலாமண்டலம் மீரா நம்பியார், சாஸ்தாமங்கலம், திருவனந்தபுரம்
2. கலாமண்டலம் சத்யபாமா (Jr.) குண்ணுகுழி, திருவனந்தபுரம்
3. நீனா பிரசாத், குண்ணுகுழி, திருவனந்தபுரம்
4. தாரா கல்யாண், சுவாதிநகர், திருவனந்தபுரம்

திருசூர்:
1. ஸ்ரீலக்ஷ்மி கோவர்தனன், நாதவரம்பா, இரிஞ்சாலகுடா, திருசூர்

                              தமிழ்நாட்டு குச்சிப்புடி கலைஞர்கள்

சென்னை:
1. எஸ்.உதித் நாராயண், கே.கே.நகர், சென்னை
2. அம்பிகா காமேஷ்வர், ஆர்.கே.நகர், சென்னை
3. அரூப் & அர்ப்பணா கோஷ், காந்திநகர், சென்னை
4. பீனா சுரேஷ், பெசண்ட் நகர், சென்னை
5. திவ்யசேனா ஹரிபாபு, சி.ஐ.டி.நகர், சென்னை
6. ஆர்.கணேஷ், அயனாவரம், சென்னை
7. கிஷோர் மொசாலிகந்தி, பத்மவாணி, சைதாபேட்டை, சென்னை
8. கல்பலதிகா தியாகராஜன், தி.நகர், சென்னை
9. லக்ஷ்மி மணி, சாந்தோம், சென்னை
10. மதூரிமா நர்லா, கோடம்பாக்கம், சென்னை
11. மகங்களி வெங்கடசத்ய ரவிகுமார், வான்மீகிநகர், திருவான்மியூர், சென்னை
12. மஞ்சு ஹேமமாலினி, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை
13. மாயா வினயன், திருவான்மியூர், சென்னை
14. எம்.வி.என்.மூர்த்தி, தி.நகர், சென்னை
15. பிரியா சுந்தரேசன், கற்பகம் அவென்யூ, சென்னை
16. ஷைலஜா (குரு: வெம்பட்டி சின்ன சத்யம்) நந்தனம், சென்னை
17. ஷோபா நடராஜன், ராமகிருஷ்ணநகர், சென்னை
18. ஸ்ரீமயி வெங்கட், குச்சிப்புடி ஆர்ட்ஸ் அகாதமி, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை
19. உமா முரளி, நீலாங்கரை, சென்னை
20. வசந்தலக்ஷ்மி, தி கலா சமர்ப்பணா ஃபவுண்டேஷன், ஆழ்வார்பேட்டை, சென்னை
21. வி.வாசந்தி, அசோக்நகர், சென்னை
22. வினீத் ராதாகிருஷ்ணன், குரு: வெம்பட்டி சின்ன சத்யம், கீழ்ப்பாக்கம், சென்னை

தஞ்சாவூர்:
1. அருணா சுப்ரமணியம், ஸ்ரீ சக்தி நாட்டிய கலாலயம், தஞ்சாவூர்

திருச்சி:
1. செளமித் முகுந்தன், பொன்னகர், திருச்சி

தூத்துக்குடி:
1. ஜி.அனுஷா, குரு கீதாகிருஷ்ணன், தூத்துக்குடி

கலைஞர்கள் அனைவரும் எல்லா வளங்களும், கலைமகளின் கடாட்சமும் கிடைக்கப் பெற்று கலையுலகில் சிறந்த நிலை அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

நன்றி: நர்த்தகி.Tuesday, November 10, 2015

குச்சிப்புடி

                                                            குச்சிப்புடி
                                   நன்றி:   கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா

Vempatti Sinna Sathyam garu

                            குச்சிப்புடி  (தெலுங்கு: కూచిపూడి) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசமாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது தென்னிந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிப்புடி என்னும்கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.

Bhavana

கருநாடக இசையோடு இவ்வகை நடனம் ஆடப்படுவது வழக்கமாகும். அதோடு மிருதங்கம்வயலின்புல்லாங்குழல் மற்றும் தம்புரா ஆகிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படலாம். இது 7ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் புகழ்பெறத்தொடங்கியது.


Kuchipudi artist Achutha Manasa 

நெடுங்காலமாக  இந்த நாட்டிய நாடகத்தை ஆந்திராவின் கோவில்களில்ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு இடைக்காலத்தில்  இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது.
                                                          Balathiripurasundari
தற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது
இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்தநடனம்.
                                                               
நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கோ ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயற்பட்டிருக்கிறது
. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம். 

இந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம்கஞ்சீராபுல்லாங்குழல்வீணை மற்றும் வயலின்பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும்.
                                                           Manju Bhargavi
குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு.


Raja & Radha

ஆந்திரப் பிரதேசத்தில் மையமாகக் கொண்டு இந்த நடனக் கலை இந்தியா முழுவதும் ஆடப்பட்டு நடனக் கலையில் ஒரு சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது. இந்த குச்சிபுடி நடனக் கலையில் தற்காலத்தில் சிறந்து விளங்கும் பல கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் ஜீவன் நமது கலைகளில்தான் இன்னமும் உயிர்ப்புடன் இருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த அற்புத நடனக் கலையை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் அந்தக் கலைஞர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி எப்போதும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
வெம்பட்டி சின்ன சத்யாம் குச்சிபுடி நடன குருவாக மிகச் சிறப்பான பணிகளைச் செய்தவர். இவருடைய மாணவி மஞ்சு பார்கவி “சங்கராபரணம்” திரைப்படத்திலும் மிகச் சிறப்பாக நடித்தவர்.

 Few Kuchipudi Artists: 
எல்லூரு: திரு கே.வி.சத்யநாராயணா. 
குண்டூர்: கோக்கா விஜயலக்ஷ்மி, மகம்காளி சூர்ய நாராயண சர்மா, செளம்யாஸ்ரீ பாஸகர், ஐதராபாத் அச்சுத மனஸா, அஜய் ஸ்ரீநிவாஸ் சக்ரவர்த்தி, அலேக்யா புஞ்லா, ஆனந்த் ஷங்கர் ஜெயந்த், அனுபமா கைலாஷ், அனுராதா ஜோன்னலகட்டா, ஆதிநாரீஸ்வரம் வெங்கட், பாகவதலு சேதுராம், தேவரகொன்டா ஸ்ரீநிவாஸ், எக்கிரல வேதவதி, கீதா மாதுரி, ஜானகி, ஜ்வாலா ஸ்ரீகலா, கலா கிருஷ்ணா, கொத்தபள்ளி பத்மா, மடலி உஷா காயத்ரி, எஸ்.மாதவிமாலா, மதுரிமா நர்லா, நூபுரா ஜெய்ஸ்வால், வி.பத்மா கல்யாண், பசுமர்தி மிருத்ஞ்சய சர்மா, பசுமர்தி வெங்கடேஸ்வர சர்மா, பெரினி ரவி தேஜா, பிரதிமா சாகர், எம்.வி.ரமணி, ரேணுகா உதய், எம்.சந்தியா சந்தியா ராஜு, சஞ்சய்குமார் ஜோஷி, சாரதாம்பா கிள்ளி, சரளகுமாரி, சத்ய நரசிம்ம சாஸ்திரி, சிவராஜ் சுக்கா, எம்.எஸ்.சிவராஜு, ஷோபா நாயுடு, கே.சி.ஸ்ரீவாணி, கே.உமா ராம ராவ், டி.வருண், வேதாந்தம் சித்தேந்திர வரபிரசாத், விஜயலக்ஷ்மி பர்குலா, யசோதா தாகூர், எல்லேஸ்வரபு சலபதி சாஸ்திரி, 
கிருஷ்ணா மாவட்டம்: சிந்தா ரவி பாலகிருஷ்ணா, பசுமர்த்தி கேசவ பிரசாத், பசுமர்த்தி மிருத்யம் ஜயா சர்மா, சாம்பசிவராவ் டெகேலா, தாடேபள்ளி சத்யநாராயண சர்மா, வேதாந்தம் ராதே ஷ்யாம், வேதாந்தம் வெங்கட நாகசலபதி, வெம்பட்டி லக்ஷ்மண குமார், வெம்பட்டி சத்ய ப்ரசாத், எல்லேஸ்வரபு ஸ்ரீநிவாசலு, 
நெல்லூர்: ஆதர்ஷ், 
ராஜமுந்திரி: ஒய்.லலிதா சிந்தூரி, 
செகந்திராபாத்: ஜெட்டி மார்கண்டேய ஷர்மா, பசுமர்த்தி சாய் தீபிகா, பாவனி ஸ்ரீலதா, பி.ரமா தேவி, சரளா தேவி பெத்தடா, ஸ்வப்னா திருனாகரி, ஸ்வாதி சோம்நாத், உமா காத்யாயனி வீருபோத்லா, உமா வெங்கடேஸ்வரலு, 
விஜயவாடா: அஜய் குமார், பாகவதுலு ஸ்ரீநிவாச சர்மா, பி.கெளரி குமார், ஜோஷிலா சீதாராம சாஸ்திரி, லதா மன்சூஷா, மஞ்சுஷா வெங்கட ராமகிருஷ்ணன்,  பேரா கெளரி, கே.சாரதா ராமகிருஷ்ணா, பி.வி.என்.செளம்யா, பி.ஹெச்.ஸ்ரீநிவாச சர்மா, வேதாந்தம் வெங்கட நாகசலபதி ராவ், 
விசாகப்பட்டினம்: அடப கமலாஸ்ரீ, ஆதித்ய புல்லி பிரம்மம், வி.ஆர்.ஆர். அர்ஷிதா, பங்காரய்யா உப்புலுரி, வி.எஸ்.என்.எஸ்.காமேச்வர ராஒ, கே. நீலிம ராஜு, என்.என்.வி. சத்யபானு, சுவர்ண பாப்பு, எலமன்சிலி ஹனுமந்த ராவ் ஆகியோர் இவர்கள் தவிர வேறு பல கலைஞர்களும் உள்ளனர்.