பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 4, 2015

15. உண்மை (தொடர்ச்சி II )

  புனர்ஜன்மம் (1)

புனர் ஜன்மம் உண்டு.

மதுரையிலே ஒரு சாஸ்திரியார் நேற்று மாலை இறந்துபோனதாக வைத்துக் கொள்ளுவோம். அவர் திரும்பவும்பிறப்பாரா ?தெரு வழியாக ஒருவன் நடந்து போகும்போது காலிலேஒரு சிற்றெறும்பு மிதிபட்டு இறந்து போவதாக வைத்துக்கொள்ளுவோம். அது திரும்பவும் பிறக்குமா?  இதையெல்லாம்பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும் விஸ்தாரமாகப் பேசியிருக்கின்றன.அவற்றிலே படித்துக்கொள்ளலாம். ஆனால், நான் இப்போது சொல்லவந்த கதை இதுவன்று. நான் சொல்ல வந்த விஷயம்ஹிந்துஸ்தானத்தின் புனர்ஜன்மம்.

'ஹிந்து ஸ்தானம்' என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இதுநமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக் கூட்டத்திற்கும் பெயர்.இந்த ஜனக்கூட்டத்திற்கு 'பாரத ஜாதி' என்று பெயர் சொல்வதுண்டு.
 பாரத ஜாதி

பாரதம், பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன்துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்யாகுமரிமுனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்றுசேர்த்துஅதன்மிசை முதலாவது சக்ராதிபத்யம் ஏற்படுத்தியபடியால்,இந்த நாட்டிற்கு 'பாரத தேசம்' என்று பெயர் உண்டாயிற்று.கங்கையிலே  வந்து  சேரும்  வாய்க்கால்களெல்லம் கங்கையாகவே  மாறிவிடும்.  பாரத  தேசத்தில்  வந்துகுடியேறித்  தலைமுறை  தலைமுறையாக  இங்குவாழ்பவர்களெல்லாம்  நமது  ஜனக்  கூட்டத்தைச்சேர்ந்தவராகின்றனர்.
கிருஸ்தவர்களாயினும், பார்ஸிகளாயினும்,"மகம்மதியராயினும், இங்கிருந்து வந்து எந்த இஷ்டதெய்வத்தைக் கொண்டாடிய போதிலும், பாரத பூமியிலேபிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களையெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும்.இது ஒரே ஜாதி பிரிக்க முடியாதது; அழிவில்லாதது.இதற்குஆதாரமும் மூலபலமுமாவது யாதெனில், ஆர்ய ஸம்பத்து.அதாவது ஆரியரின் அறிவும் அந்த அறிவின் பலன்களும்.
ஆர்ய ஸம்பத்து

ஸம்பத்து என்பது ஸம்ஸ்கிருதச் சொல். இதன்பொருள் செல்வம் ஆனால் இங்கு செல்வம் என்பதுதிரவியத்தையும், பூஸ்திதியையும், ஆடு மாடுகளையும்மாத்திரமே குறிப்பிடுவதன்று. (1) அறிவுச்செல்வம், (2)ஒழுக்கச் செல்வம், (3) பொருட்செல்வம் ஆகியமூன்றையும் குறிப்பிடும். 'ஆர்ய ஸம்பத்து' என்பதுஹிந்துக்களுடைய அறிவு வளர்ச்சி.
நமது வேதம், நமது சாஸ்திரம், நமதுஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம்,நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள்,நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள்-இவை அனைத்துக்கும் பொதுப் பெயர்'ஆர்ய ஸம்பத்து.'காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாக்ஷையிலேதுளஸீதாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம்,"சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி - இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஸம்பத்து.தஞ்சாவூர் கோயில், திருமலை நாய்க்கர் மஹால், தியாகையர்கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில்,ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல்- இவையனைத்துக்கும் பொதுப் பெயர் ஆர்ய ஸம்பத்து.எனவே, ஆர்யஸம்பத்தாவது ஹிந்துஸ் தானத்தின் நாகரீகம்.இந்த ஸம்பத்தைப் பாதுகாக்கும் வரையில் இந்த ஜாதிக்குஉயிருண்டு. இந்த ஸம்பத்திலே துருப்பிடிக்க இடம்கொடுத்தால், இந்த ஜாதியைச் செல் அரித்துவிடும்.
இந்த ஆர்ய ஸம்பத்தை உலகம் உள்ளவரைஸம்ரக்ஷணம் செய்து, மேன்மேலும் ஒளியும் சிறப்பும்உண்டாகும்படி செய்யுங் கடமை, தேவர்களால் பாரதஜாதிக்கு ஏற்படுத்தப்பட்ட கடமையாகும்.
இடையில் நமக்கு நேர்ந்த கேடு

இந்த ஆர்யஸம்பத்தை நாம் பல நூற்றாண்டுகளாகஆதரித்துக் கொண்டு வந்தோம். சென்ற சில நூற்றாண்டுகளாகஇதில் துருப்பிடிக்க இடங் கொடுத்து விட்டோம். தேவர்கள்நமக்குக் கொடுத்த கடமையைக் கர்வத்தாலும், சோம்பலாலும்,சிறுமையாலும் உல்லங்கனம் செய்யத் தொடங்கினோம்.தேவர்கள் 'இந்தப் பாரத ஜாதியைக் கொஞ்சம் செல் அரிக்கக்கடவது' என்று ஆசீர்வாதம் பண்ணினார்கள்.
மலைப் பாம்புக் கதை கேட்டிருக்கிறீர்கள் அல்லவா?அதன் வாலிலே தீப்பற்றி எரியுமாம். மலைப் பாம்பு சுகமாகக்குறட்டை விட்டுத் தூங்குமாம். செல்லரித்துக் கொண்டு போனதுநமது ஸ்மரணையிலே தட்டவில்லை. அத்தனை கர்வம்,"அத்தனை கொழுப்பு, அத்தனை சோம்பல்.
நமது கவிதையிலே ஆனந்தம் குறையத்தொடங்கிற்று; ருசி குறைந்தது. கரடுமுரடான கல்லும் கள்ளிமுள்ளும் போன்ற பாதை நமது கவிகளுக்கு நல்ல பாதையாகத்தோன்றலாயிற்று. கவிராயர் ''கண்'' என்பதை ''சக்கு'' என்றுசொல்லத் தொடங்கினார். ரஸம் குறைந்தது;சக்கை அதிகப்பட்டது.உண்மை குறைந்தது; பின்னல் திறமைகள் அதிகப்பட்டன.
'சவியுறதெளிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர்  கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்'
என்று கம்பன் பாடியிருக்கின்றான்.
''சவி'' என்பது ஒளி; இது வடசொல்; கம்பன் காலத்தில்அதிக வழக்கத்திலிருந்தது போலும். ''ஒளி பொருந்துபடி தெளிவுகொண்டதாகித் தண்ணென்ற (குளிர்ந்த) நடையுடையதாகி, மேலோர்"கவிதையைப் போலக் கிடந்தது கோதாவரி நதி' என்று கம்பன்வர்ணனை செய்கிறான். எனவே, கவிதைகளில் ஒளி, தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்கவேண்டுமென்பது கம்பனுடையமதமாகும். இதுவே நியாயமான கொள்கை.
மேலும், நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்டநூல்கள் அக்காலத்துப் பாஷையைத் தழுவினவை. காலம் மாறமாற,பாஷை மாறிக்கொண்டு போகிறது; பழைய பதங்கள் மாறிப் புதியபதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்துஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்கவேண்டும். அருமையான உள்ளக்காட்சிகளை எளிமை கொண்டநடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனால் சென்ற சிலநூற்றாண்டுகளாக, புலவர்களும் சாமியார்களும் சேர்ந்து வெகுஸாதாரண விஷயங்களை அஸாதாரண அலௌகிக அந்தகாரநடையில் எழுதுவதுதான் உயர்ந்த கல்வித் திறமை என்று தீர்மானஞ்செய்துகொண்டார்கள்.
இடைக்காலத்து ஸங்கீதம்

பாரத தேசத்து ஸங்கீதம் பூமியிலுள்ள எல்லாத்தேசத்து ஸங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்போலவே ஸங்கீதத்திலும் நவரஸங்களின் தொழில் இருக்கவேண்டும். நவரஸங்களைப்பற்றி இந்தப் பத்திரிகையிலே*சுதேசமித்திரன் பத்திரிக்கை தனியாக ஒரு வியாஸம் பின்எழுதப்படும். இன்ன இன்ன ராகங்களிலே இன்ன இன்னசமயங்களில் இன்ன இன்ன ரஸங்கள் தோன்றப் பாடவேண்டுமென்று விதிகள் எல்லாம் பூர்வகாலத்து நூல்களிலேகாணப்படுகின்றன. கீர்த்தனத்திலுள்ள சொற்களின் அர்த்தமும்ராகத்தின் ஒளியும் ரஸத்திலே ஒன்றுபட்டிருக்க வேண்டும்.தியாகையர் காலம்வரை நமது தேசத்து ஸங்கீதம்ஒளியுடனிருந்தது. பிறகு இதிலும் இருள் சேரத்தொடங்கி"விட்டது. பாட்டிலே ரஸச் சேர்க்கை கிடையாது.அப்படியேசேர்த்தாலும் சோக ரஸம் (கருணாரஸம்) தான் சேர்ப்பார்கள். மற்றவை மடிந்து போயின. பாட்டுக் கிசைந்தபடி தாளம்'' என்பது மாறிப் போய்'' தாளத்துக்கிசைந்தபடி பாட்டாகிவிட்டது. ''இன்பத்தைக் காட்டிலும் கணக்கே பிரதானம்'' என்று முடிவுசெய்து கொண்டார்கள். இன்பமும் கணக்கும் சேர்ந்திருக்கவேண்டும். இன்பமில்லாமல் கணக்கு மாத்திரமிருந்தால், அது பாட்டாகாது
மறு பிறப்பு

இடைக் காலத்தே நமக்குச் சேர்ந்த கேட்டிற்குஸங்கீதத்தையும் கவிதையையும் திருஷ்டாந்தங் காட்டினோம்.ஆனால், இந்தக் கேடு அவை இரண்டையும் மாத்திரமேதொட்டு நிற்கவில்லை. நமது சித்திரத் தொழில், நமது சிற்பம்,நமது ஜனக்கட்சி, ஜன நீதி, நமது சாஸ்திரம், தலை, கால் -எல்லாவற்றிலும் இந்தக் கேடு பாய்ந்து விட்டது. நோய்முற்றிப்போயிருந்தது. பராசக்தி நல்ல வேளையில் நமக்குள்உயர்ந்த வைத்தியர் பலரை அனுப்பினாள். அவளுக்கும்நம்மீது கிருபை வந்து விட்டது. எனவே, பிழைத்தோம்ஆனாலும், இம்முறை பிழைத்தது புனர்ஜன்மம். இந்தப் புனர்ஜன்மத்தின் குறிகளை எல்லாவற்றிலும் காண்கிறோம். பாரதஜாதி புதிதாய் விட்டது. தற்காலத்திலே பூமண்டலத்து மஹா"கவிகளில் நமது ரவீந்த்ரநாதர் ஒருவர் என்று உலகம் ஒப்புக்கொள்ளுகிறது. இதுவரை ஐரோப்பியப் பண்டிதர்கள் இயற்கைநூல் (ப்ரகிருதி சாஸ்திரம்) தமது விசேஷ உடமை என்றுகருதி வந்தார்கள். இப்போது நமது ஜகதீச சந்திர வஸு அந்தவழியில் நிகரற்ற திறமை பெற்றவர் என்பதை மேல் நாட்டுவித்வான்களில் ஒப்புக்கொள்ளாதார் யாருமில்லை. தமிழ்நாட்டிலே புதிய கவிதையும் சாஸ்திர ஒளியும் விரைவிலேதோன்றும். உலகம் பார்த்து வியப்படையும்.
செத்துப் பிழைத்தோம். ஆனால் உறுதியாக நல்லவயிரம் போலே பிழைத்து விட்டோம். புதிய ஜன்மம் நமக்குமிகவும் அழகான ஜன்மமாகும்படி தேவர்கள் அருள்புரிந்திருக்கிறார்கள் அதன் பொருட்டு அவர்களை இடைவிடாமல் வாழ்த்துகின்றோம்.


No comments:

Post a Comment

You can give your comments here