பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 13, 2013

பொங்கல் திருநாள் வாழ்த்து


”பொங்கல்” வளமாய் வைக்கட்டும்!

இன்று முதல்....................!

மங்கலம் சிறப்பாய் பொங்கட்டும்
எங்கும் நிலையாய் நிற்கட்டும்
வங்கக்கடலின் அலையாய்ப் பெருகட்டும்
”பொங்கல்” வளமாய் வைக்கட்டும்!

வாழ்வு

கரும்பின்  இனிமையாய் அமையட்டும்
மஞ்சல் மணமாய்த் திகழட்டும்
இஞ்சியின் இதமாய் இருக்கட்டும்
வஞ்சமிலா வாழ்வு தொடரட்டும்!

நேர்மை நிறைவாய் மலரட்டும்
பார்வை நன்றாய்த் தெரியட்டும்
பால்போல் வெண்மை மிளிரட்டும்
கார்போல் குளுமை வீசட்டும்!

ஊழல் ஒழிந்து போகட்டும்
தேடல் சிறந்து தொடரட்டும்
 பாடல் தொடர்ந்து கேட்கட்டும்
நாட்டில் அமைதி நிலவட்டும்!

பொங்கல் திருநாள் வாழ்த்துக்களோடு

என் வி சுப்பராமன்

N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

2 comments:

 1. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. எங்கும் நிறைந்த இறைவியின் செவிகளில்
  சங்கென இவை ஒலிக்கட்டும்

  தங்கு தடையின்றி அன்பும் அருளும்
  மங்காதச் செலவமென வளரட்டும்.

  அற்புதமான கவிதைகளோடு வந்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஐயா!.

  ReplyDelete

You can give your comments here