"செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் மிகவும் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவேற்றி முடிப்பதற்கான வசதிகளோ இந்த நாட்டில் இல்லை. நம்மிடம் அறிவு இருக்கிறது, ஆனால் பணி புரிவதற்கான கைகள்தாம் இல்லை. நம்மிடம் வேதாந்தக்கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு உரிய ஆற்றல் இல்லை. நமது நூல்களில் உலக சமத்துவம் பற்றிய கொள்கைகள் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் நடைமுறை வாழ்க்கையிலோ நாம் வேற்றுமை பாராட்டுகிறோம்.
எப்போது பரந்த இதயம் படைத்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் வாழ்க்கையின் ஆடம்பரங்களையும் இன்பங்களையும் துறந்துவிட்டு, ஆதரவற்ற நிலை, அறியாமை ஆகிய நீர்ச்சுழலில் சிறிது சிறிதாக மிகக்கீழ் நிலைக்கு மூழ்கிக் கொண்டிருக்கும் நம் நாட்டுக் கோடானுகோடி மக்களின் நல்வாழ்விற்காக வருந்தித் தங்கள் முழு ஆற்றலையும் செலுத்தி உழைக்க முன்வருவார்களோ, அப்போதுதான் இந்தியா விழித்தெழும்."
= சுவாமி விவேகானந்தர்.
12--1--2013 இன்று சுவாமிஜியின் 150ஆவது பிறந்த நாள்.
1 comment:
கர்ம யோகிகள் பெருகவே... இந்தத் துயரக் கடல் வற்றும் என்கிறார் சுவாமிஜி!
நிச்சயம் இறையருளால் யாவும் விரைவில் நிகழும் என்று நம்புவோம்!
Post a Comment