பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, September 18, 2011

G Alasiam on பாரதியார் - ரமண மகரிஷி சந்திப்பு


பாரதியார் - ரமண மகரிஷி சந்திப்பு
X
Inbox
X

ReplyReply
More
G Alasiam to me
show details 07:50 (3 hours ago)
வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.     வணக்கம் ஐயா! இன்றைய கட்டுரை அருமையான ஒரு தகவலை தாங்கி வந்தது நன்றிகள்.. எனது பின்னூடமும் அது தொடர்பான நேற்றைய நிகழ்வும் அமைத்தால் சற்று விரிவாக எழுதியுள்ளேன்... வலைப்பூவில் பின்னூட்டம் செல்ல சிரமப்படுகிறது அதனால் தங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்புகிறேன்.. நன்றிகள் ஐயா!

உண்மையில் அருமையான செய்தி, எனக்கும் பல முறை இது போன்ற ஒரு நிகழ்வு நடந்ததா? ஏன் நடக்காமல் போனது? என்று தோன்றியது உண்டு. அருமையானத் தகவல். பகவான் ரமணரைப் பற்றி நேற்றுக் காலையில் இருந்து (நண்பர் ஒருவரின் வீட்டில் சந்தித்த அவரின் நண்பரை சந்தித்தப் பிறகு)   பகவான் ரமணரின் சிந்தனையில் மனம் இருந்து கொண்டே இருந்தது.

நேற்று ஏன் நண்பரின் வீட்டில் கிரகபிரவேசம் அங்கு சென்ற போது, ஆன்மீகம் சம்பந்தமாக பேச்சு வந்தது (வழக்கமாக இதற்கு முன்பு சந்திக்கும் போதும் அவருடன் இப்படி பேசுவது வழக்கம்) அப்படி பேசிக் கொண்டு இருக்கையில், அவர் ஒரு தகவல் சொன்னார். அவர் கேள்விப் பட்டதா, படித்தறிந்ததா என்பது தெரியவில்லை...

ஒருமுறை பகவான் ரமணர் ஆசரமத்தில், சமபந்தி போஜனம் நடந்தது, அப்போது அங்கு அமர்ந்திருந்த வரிசையில் ஒரு பிராமணர் வந்து அமர்ந்திருந்தார். அதைப் பார்த்த பகவான் ரமணர், அந்த பிராமணரிடம் வந்து உங்களுக்கு தனியாக அந்தப் பக்கமாக விருந்து தரப்படுகிறது என்றுக் கூறினாராம். அதற்கு அந்த பிராமணர் சமபந்தி தானே சுவாமி நீங்கள் எப்படி பிராமணாளுக்கு என்று தனியாக பந்தி நடப்பதாக கூறுகிறீர்கள். என்றுக் கேட்டாராம், அதற்கு பகவான், நீங்கள் உங்கள் வீட்டில் எப்படி செய்கிறீர்களோ அப்படியே இங்கும் செய்வது நல்லது... ஆக, அதன்படி உங்களின் பழக்கப் படி இங்கேயும் போஜனம் செய்யலாம் என்றாராம்..

என்று என்னுடன் உரையாடிய என் நண்பரின் நண்பர் சொன்னார் மேலும் வழக்கத்தை எல்லாம் மாற்ற வேண்டாம்... என்பதற்காகத் தான் பகவான் அப்படி சொல்லி இருக்கிறார் என்றுக் கூறினார்...

அதன் கேட்டு சற்று நிதானத்துடன், அப்படியா!... ஒருவேளை, நீ வீட்டிலும் எல்லோரையும் சமமாக பாவித்து சமபந்தி செய்கிறாயா? செய்வதில்லையே அப்படி இருக்க இங்கும் மட்டும் ஏன்? வீட்டிலும் செய்வதென்றால்.. இங்கு செய்து கொள்.. இல்லை என்றால் உன் பழக்கத்தை மாற்ற வேண்டாம் என்று, அவரின் தவற்றை சுட்டிக் காட்டு வதற்காக கூட அப்படி பகவான் சொல்லி இருக்கலாம் அல்லாவா! என்றேன் அந்த நண்பர் ஆ..ஆ..ஆம்ம், இருக்கலாம் என்று சொன்னார், அதன் பிறகும் பேச்சு தொடங்கியது... வீட்டில் வேதம் சொல்லித்தருவதற்கு வசதியாக இடம் தந்திருப்பதாகவும் சொல்லி சந்தோசப் பட்டுக் கொண்டார் (சந்தோசப் படுத்தினார்)... இருந்தும் அவரிடம் நான் படித்த சில விவேகானந்தர் மற்றும் பாரதியின் வேதாந்தக் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டேன்....

கடைசியில் அவர் விடைபெற்று செல்லும் போது... இது போன்றக் கருத்துக்களை எனக்கு தெரிந்து வலியிருத்திப் பேசுபவர்கள்.. இருவர்; அதில் ஒருவர் சுகி சிவம், இன்னொருவர் எழுத்தாளர் பாலகுமாரன்... இதில் பாலகுமாரன் அவர்களுடன் அருகிலே அமர்ந்ந்து நிறைய பேசி இருக்கிறேன்... தொலை பேசியிலும் தொடர்பு கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது அவைகளை நிறுத்திக் கொண்டு விட்டேன். இன்னும் நிறைய சொன்னார்.... அதோடு;  காந்தியின், பாரதியின் மறைவுகள் கூட கொடுரூமானதிற்கு காரணம்.. எண்ணவாக இருக்கும் என்று யாரோ சொன்னதாகவும் கூறினார்... 

அதாவது இயற்கைக்கு மாறாக செயல் பட்டார்கள் அதனாலாம்.... எனக்கு சிறு வருத்தம் வந்தாலும் சிரிப்பும் வந்தது... இப்படி கேட்டிருக்கலாமே என்றும் பின்பு தோன்றியது.. மரணம் என்பது யாருக்கு, பாரதிக்கும், மகாத்மாவிற்குமா? அல்லது அவகளின் ஆத்மா இருந்த உடம்பிற்கா? என்று.... 

மறுபிறவிக் கொள்கைகளைப் பற்றியும் பேசினோம்.... அப்போது, அவரின் மனைவி அவரை வீட்டிற்கு செல்லவேண்டும் என்று அவசரப் படுத்திக் கொண்டு இருந்தார்கள்; அதைப் போலவே நானும் சுருக்கிக் கொள்கிறேன்... 

அமரத்துவம் பெற்றவர்கள் தன்மை என்பது கடவுள் தன்மை தானே! அவர்களின் நடவடிக்கையில் எப்படி மாற்றம் இருக்கும்?.. என்ற உணர்விலே இருந்தேன்... மேலும் அந்த நண்பர் சொல்வார்!.. 

நான் நீங்கள் சொல்வதெற்கெல்லாம், சரி என்று ஒத்துக் கொண்டு போகலாம்.. இருந்தும் எனக்கு சொல்லத் தோன்றியதை சொல்லி விடுகிறேன் என்று சொல்லி.... நிறைய படித்து தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.. இருந்தும் அதிலே ஆர்வம் கொண்டு அங்கே இருந்துவிடாதீர்கள் என்றார், அவர் கூறியது உண்மைதான்... 

ஆனால், இதில் இரண்டு விஷயம் தான் என்னை உறுத்தியது... ஒன்று பாலகுமாரன் அவர்களுடன் தொடர்பை விட்டுவிட்டேன் என்பதும்... நீங்கள் சொல்வதை அப்படியே ஆமாம் என்று சொல்லி விட்டுப் போகலாம், இருந்தும்... என்ற இந்த இரண்டும் தான்.. எங்கே அவரின் மனம் கஷ்டப் படும் அளவிற்கு மாற்றுக் கருத்தைக் கூறி அவரை சங்கடப் படுத்தி விட்டிருக்கிறேனோ? என்பது தான் அந்த நினைவு...

அந்த நினைவிலே பகவானை பற்றிய சிந்தனையிலும் இருந்தேன்... இரவு வெகு நேரம் ஆனது அப்போது மீண்டும்.... விவேகானந்தரின் ஞான தீபம் நான்காம் பகுதியைப் படித்தேன்.. அங்கே... பகவத் கீதையின் மூன்றாம் அதிகாரம், இருபத்தாறாம் வசனத்திற்கு சரியான விளக்கம் இது தான் மற்றவர்கள் அதை மாற்றிக் கூறுகிறார்கள் என்றுக் கூறியும்....

"கடவுளையும், எல்லாம் அறிந்த அவரது தன்மையையும் பற்றி நாம் அறிந்தவற்றின் தொகுப்பே வேதங்கள்... அது எந்த மத வேத சாஸ்திரங்களில் இருந்தாலும் ஏற்போம்... மேலும் கூறுகிறார், வேதங்களில் பகுத்தறிவுக்கு ஒத்திருக்கும் பகுதிகளே வேதங்கள் என்று மனு கூறுகிறார்.. மற்றவைகள்!!???... இதையே தான் பாரதியும் பல இடங்களிலும் கூறி இருக்கிறார்... மேலும் வேதம் புதுமை செய்ய வேண்டும் என்றும் அறைகூவல் விடுகிறார்..

"மதப் பிரிவுகளும், சடங்குகளும், நூல்களும் மனிதன் தன் உண்மை இயல்பை உணர்ந்துக் கொள்வதற்கு உதவுகின்ற அளவிற்குச் சரிதான்; உணர்ந்துக் கொண்டதும் அவற்றை அவன் துறந்து விடுகிறான். 'நான் வேதங்களைத் துறக்கிறேன்' என்பது வேதாந்தத் தத்துவத்தின் கடைசி வார்த்தை......."

" 'மாறாத ஒன்றை அறிய உதவுவதே' உண்மையானக் கல்வி. படிப்பாலோ, நம்பிக்கையாலோ, ஆராய்ச்சியாலோ அதைப் பெறமுடியாது; அது உணர்வு கடந்த நிலையிலும், சமாதி நிலையலும் பெறக்கூடிய ஒன்று. அந்த நிறைநிலையை அடையும் போது சகுனக் கடவுளின் நிலையை அடைகிறான்....."

ஆக, அந்த நிலையை அடைந்த பகவான் ஸ்ரீ ரமணரின் வார்த்தையின் அர்த்தம் என்னவாக இருக்கும் என்பதை என்னால் அப்போது தீர்க்கமாக புரிந்துக் கொள்ள முடிந்தது... 

இன்று காலையில் பாரதி இலக்கியப் பயிலகத்தின் பக்கத்தை புரட்டும் போது... அதே பகவான், ரமணரையும் பாரதியையும், மகாத்மாவையும் தொடர்படுத்திய கட்டுரை.. இது ஆச்சரியம் என எனக்கு தோன்றுகிறது... 

வருஷம் இரண்டாயிரத்து ஒன்றில், பகவான் ரமணர் வீட்டிற்கும் இப்படித் தான் நான் முதன் முதலில் இழுத்துச் செல்லப் பட்டேன்... அவரின் படத்தை வாங்க அலைந்து கடைசியில் வரும் வழியில் அவர் பிறந்த வீட்டிற்கே சென்றது இன்னொரு பெரிய அற்புதம், முன்பு எனக்கு நடந்தது....

இப்போது மாகாத்மா, பகவான் ரமணர் தொடர்புகொண்ட இரண்டு செய்தி.... ராஜேந்திர பிரசாத் அவர்கள் காந்தியடிகளின் ஆலோசனையின் பெயரில் ரமணாஷ்ரமம் வந்து தங்கி விடை பெரும் போது.. சுவாமி மகாத்மாவிற்கு ஏதும் செய்தி இருக்கிறதா? என்றுக் கேட்டிருக்கிறார்.. அதற்கு ஸ்ரீரமணர் ஒன்றும் இல்லை நேற்று இரவு தான் இருவரும் பார்த்துப் பேசி கொண்டோம் என்றாராம்.... அமரத்துவம் பெற்றவர்களின் ஆத்மா பரம் பொருளோடு ஐக்கியமானது....
 
 ///ரமண மகரிஷி ராஜேந்திர பிரசாத்திடம், "எந்த சக்தி இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறதோ, அதே சக்திதான் அங்கும் இயங்கிக் கொண்டிருக்கிறது" என்று காந்தியடிகளைக் குறிப்பிட்டுப் பெருமைப் படுத்தி உள்ளார்.////

ஆக இதுவேறு அதுவேறு அல்லவே! என்பதே பகவானின் இந்த வார்த்தைகளும் உணர்த்துகிறது... மகாத்மாவும், பாரதியும் பகவான் ரமணரை நேரில் சந்தித்து பேசாவிட்டாலும்... பேரொளியில் ஒன்றானர்வர்கள் அல்லவா!.... அதற்கு தகுதியானவர் பாரதி என்பதை மகாத்மாவின் உள்ளுணர்வே சென்னையில் பாரதி மகாத்மாவை சந்தித்து சென்ற பிறகு "இவரை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" சொல்லச் செய்திருக்கிறது... திலகரை அரசியல் குருவாக கொண்டாலும் காந்தியை பாரதி மிகவும் போற்றினான் என்பதை நாம் அறிவோம். பாரதி திலகரையும்!!?? விட்டு வைக்கவில்லை...

அதே போல் மகாத்மா இறந்த செய்தி கூட, ஸ்ரீ ரமணரிடம் ஒருவர் வந்து அன்று கூறுகையில் எனக்குத் தெரியும் என்றாராம்... ஒளி பெற்ற ஆத்மாக்கள் ஒன்றை ஓன்று உணரமுடியும் என்பதற்கு சான்றுகள் தாம் இவை போலும்....

வாழ்வில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் ஒன்றுக் கொன்று தொடர்பு கொண்டே இருக்கின்றன என்பதை கூர்ந்துக் கவனித்தால் உணர முடிகிறது.... இந்த மகான்களின் அருள் நமக்கும் கிடைக்கட்டும்...

நன்றிகள் ஐயா!

வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.   

No comments:

Post a Comment

You can give your comments here