அன்னதான சிவன்.
அன்னதான
சிவன்.
புண்ணியங்களில் எல்லாம் பெரும் புண்ணியம் பசித்தவர்களுக்கு உணவளித்தல்
என்கின்றனர் நமது பெரியோர். அந்தக் காலத்தில் சுமார் எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்
இப்போது போல ஊரெங்கும் உணவு விடுதிகளும், தேநீர் கடைகளும் கிடையாது. குறிப்பாக மிகப்
பெரிய திருவிழாக்கள், கோயில் விசேஷங்கள் ஆகியவை நடக்கும் ஊர்களில் வந்து கூடும் ஆயிரக்கணக்கான,
லட்சக்கணக்கான பக்தர்கள் உணவுக்கு அலைவார்கள். அதுமாதிரியான இடங்களில் எல்லாம் வரும்
பக்தர்களுக்கு உணவளிக்க சில தர்ம சிந்தனை உடையவர்கள் அன்ன தானத்துக்கு ஏற்பாடு செய்வார்கள்.
கும்பகோணம் நகரில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் வரும். மாயூரம் போன்ற
ஊர்களில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நானம் செய்ய மக்கள் வந்து கூடுவர். இன்னும்
வேறு பல ஊர்களிலும் இதுபோல பெருமளவில் மக்கள் வந்து கூடி திருவிழாக்களில் கலந்து கொள்வது
வழக்கம்.
கும்பகோணத்தில் சென்ற நூற்றாண்டில் நடக்கும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளின் போதெல்லாம்
தேப்பெருமாநல்லூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் வருகின்ற பக்தர்களுக்கு
அன்னதானம் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். மகா சுவாமிகளின் அறிவுரைப்படி அவர்
ஒவ்வொரு ஊராகச் சென்று மகாமகத்துக்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் இருந்தே அரிசி, பருப்பு,
புளி என்று தேவையான பொருள்களை பலரிடமும் கேட்டு வாங்கி வந்து சேமித்து வைத்துக் கொள்வார்.
ஒரு நாளில் பல்லாயிரக் கணக்கில் உணவு அருந்தும் அளவுக்கு அவருடைய சேமிப்பு இருக்கும்.
அவருடைய சிவன் என்னும் பெயரோடு அவர் செய்யும் இந்த புண்ணிய காரியத்தின் "அன்னதான"
எனும் அடைமொழியையும் சேர்த்தே அழைத்தார்கள். அவர் இருக்கும் வரை அந்த புண்ணிய காரியம்
மிகச் சிறப்பாக நடந்து வந்தது என்பதை தமிழ்நாடே நன்கு அறியும்.
ஒரு முறை மகா சுவாமிகள் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் முகாமிட்டிருந்தார்.
அப்போது ஐப்பசி மாதமாதலால் அருகில் இருந்த திருவிசைநல்லூர் எனும் சிறிய கிராமத்தில்
ஸ்ரீதர ஐயாவாள் எனும் மகான் வாழ்ந்த வீட்டில் அவருக்கு ஆராதனை நடந்து கொண்டிருந்தது.
அந்த ஆராதனையின்போது அவர் வீட்டுக் கிணற்றில் கங்கை நீர் வருவதாக நம்பிக்கை. ஆகையால்
மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த கிணற்று நீரை இறைத்துத் தலையில் ஊற்றிக் கொள்வர்.
அதன் பின் வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெறும். முதலில் நூற்றுக் கணக்கில்
வந்த பக்தர்கள் நாளாக ஆக ஆயிரக் கணக்கில் வந்து கூடி ஸ்ரீதர ஐயாவாள் எனும் அந்த மகானுக்கு
அஞ்சலி செய்ய வந்தனர். அப்படி வருகின்ற அத்தனை பேருக்கும் அன்னதானம் செய்யும் பொறுப்பு
இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பல ஆண்டுகள் அந்த ஊரில் ஸ்ரீதர ஐயாவாள் ஆராதனையும், அந்த
சமயத்தில் அன்ன தானமும் நடைபெறுவது வழக்கம். அந்த ஆண்டு அருகில் இருந்த திருவிடைமருதூரில்
மகா சுவாமிகள் முகாமிட்டிருந்ததாலோ என்னவோ, வழக்கத்துக்கு மாறாக ஆயிரக் கணக்கில்
ஏராளமானோர் திருவிசை நல்லூருக்கும் வந்து கலந்து கொண்டனர். அவர்கள் பசியாற அன்னதானம்
செய்யும்படி சுவாமிகள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யச் செய்திருந்தார்.
ஐயாவாள் ஆராதனை அன்று அந்த சிறிய கிராமம் மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழிந்தது. பூஜை
முடிந்து தீபாராதனை ஆனவுடனேயே அன்னதானம் தொடங்கலாம் என்று உத்தரவு கிடைத்தது. ஒரு
பந்தியில் சுமார் இருநூறு பேருக்கும் மேலாக உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினர். வரிசையாக,
ஒன்று இரண்டு, மூன்று, நான்கு என்று பந்திகள் முடிந்த பின்னும் மேலும் இரண்டு மூன்று
பந்திகளுக்குப் போதுமான மக்கள் காத்திருந்தனர். சமையல் கட்டில் மறுநாளுக்காக சேமிக்கப்பட்டிருந்த
அரிசி, காய்கறிகள் அனைத்துமே இன்றைக்கே செலவிடப்பட்டு விட்டன. நான்காம் பந்தி நடைபெறும்
நேரத்தில் இவர் சென்று சுவாமிகளிடம் ரகசியமாக நிலைமையை விளக்கினார். மேலும் சாப்பிட
வேண்டிய ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்பதையும் அவர்களுக்கு அரிசி, காய், மற்ற
சாமான்கள் முதலானவற்றை சமாளித்துவிட முடியுமென்றும், நெய் மட்டும் சொட்டு கூட மிச்சமில்லை
என்ன செய்வது என்று கேட்டார்.
இவர் சொன்னதைக் கேட்ட சுவாமிகள் மெல்ல தலையை ஆட்டி விஷயத்தை கிரகித்துக் கொண்டார்.
முகத்தில் எந்தவித சலனமோ, கவலைக் குறியோ காணப்படவில்லை. சற்று கண்ணை மூடிக் கொண்டு
அமைதியாக இருந்துவிட்டு இந்த பந்தி எப்போ முடியும் என்று கேட்டார். இன்னும் கால்மணியாவது
ஆகும் என்று அவர் பதிலளித்தார். சரி பார்த்துக் கொள்ளலாம் ஏதாவது ஏற்பாடு செய்யலாம்
போ என்று அவரைப் போகச் சொல்லி விட்டார்.
அப்போது அங்கே வந்த அவருடைய உதவியாளர் ஒருவரை சுவாமிகள் அழைத்தார். அவரை 'நீ போய்
திருவிடைமருதூர் வடக்குத் தெரு முனையில் போய் இரு. நம் மடத்தைத் தேடிக்கொண்டு யாராவது
வழி கேட்டால் அவர்களுக்கு வழி சொல்லி இங்கே அனுப்பு' என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அந்த மனிதரும் பணிவோடு தலையை ஆட்டிவிட்டு திருவிடைமருதூருக்குச் சென்று விட்டார்.
அடுத்த சில நிமிஷங்களில் பந்தி முடிந்து, அடுத்த பந்திக்கு இலை போட்டாகிவிடும். இதுபோன்ற
இடங்களில் பரிமாறப்படும் பந்திகளில் நெய் போடுவது என்பது மரபு. அன்னம் பரிமாறியபின்
ஒருவர் ஒவ்வொரு இலையாகப் போய் ஒரு சொட்டு நெய்யை அவர் இலையில் இடுவதும், சிறிது
சாதத்தின் மீது ஊற்றுவதும் உண்டு. ஆகையால் இங்கு நெய் இல்லை என்பது பெரிய பிரச்சனையாக
ஆகிப்போனது. சுவாமிகளே தலையிடும் அளவுக்குப் பிரச்சனை பெரிது. இப்போது போல அங்கு
அப்போது நெய் கடைகள் கிடையாது. மாடு வைத்திருப்போர் நெய் காய்ச்சி கொடுப்பதுதான்
அப்போதைய வழக்கம்.
திருவிடைமருதூருக்குச் சென்றவர் அங்கு வடக்கு வீதி சந்திப்புக்குச் சென்ற சமயம் டின்களை
ஏற்றிக் கொண்டு ஒரு வண்டி வந்து நின்றது. அந்த வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தவர் மடத்து
ஊழியரிடம் "சாமி, இங்கே சுவாமிகள் வந்து எங்கேயோ தங்கியிருக்காராமே, அந்த இடம்
எது?" என்று கேட்டார். அந்த ஊழியர் அந்த டின்னைப் பார்த்தார், கிட்டே நெருங்கி
தொட்டுப் பார்த்தார் நெய் வாசம் அடித்தது.
"இது நெய் போல இருக்கே? யாருக்கு கொண்டு போறீங்க?" என்றார் ஊழியர்.
"மாயவரத்திலேர்ந்து வரோம் சாமி, எங்க முதலாளி இந்த நெய் டின்னை சாமி முகாம் போட்டிருக்கிற
இடத்திலே கொண்டு போய் கொடுத்துட்டு வரச் சொன்னாங்க, வண்டி வர நேரமாயிடுச்சி, அதான்
தாமதமா வரோம், இடத்தைச் சொல்லுங்க, சீக்கிரம் கொண்டு போய் கொடுக்கணும்" என்றான்
அந்த ஆள்.
ஊழியர் வழியைக் காட்டினார். வண்டி அந்த மண் சாலையில் விரைந்து சென்றது. ஊழியர் முகாமுக்குச்
சென்று சுவாமிகளிடம் விஷயத்தைச் சொன்னதும், அவர் ஒரு புன்னகையோடு தலையாட்டினார்.
அன்ன தானம் நடந்த இடத்தில் அடுத்த பந்தி தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அன்னம் பரிமாறியவுடன்
ஒருவர் பெரிய தூக்கில் நெய்யைச் சுமந்து கொண்டு ஒவ்வொரு இலைக்கும் நெய் ஊற்றிக் கொண்டிருந்தார்.
நல்ல உள்ளத்தோடு நல்ல காரியங்களைச் செய்வோருக்கு தெய்வமே துணை நிற்கும் எனும் உண்மையை
இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
'AnnadAna Sivan'
(from the book titled Maha PeriyavAL Virundhu by Raa. Ganapathi, pages 83-92)
"The cooked rice (sAdam) would have been gathered into a very huge heap, looking dazzling white like the Himalayas. Even if an elephant drowns in the sAmbAr andA (huge vessel containing sAmbAr), you wouldn't know. It is said that Himalachala Sivan created a huge pit of food for the sake of Gundodaran during the Meenakshi Kalyanam (Shiva's celestial wedding with Meenakshi at Madurai). In the same way, this poor brahmana Sivan did a marvellous and mighty task."
Kanchi Paramacharya was reminiscing about the annadhAnam festivities of Sri Ramaswamy Iyer of Tepperumal Nallur, Tamilnadu, who was more popularly (and appropriately) known as 'Annadhana Sivan'. These food festivities took place in Kumbakonam during the Mahamaham festivals in the years 1921 and 1933, and fed several thousand people.
Since the middle of the eighteenth century until the middle of the twentieth, Kumbakonam was the headquarters of Kanchi Matam. Sivan virtually made the Matam his home from 1916 since his demise in 1939.
Paramacharya continued his reminiscences about the big event thus:
"It was during the 1933 Mahamaham annadhAnam. The wood brought for fuel was a hundred cartloads. For pickles, ten cartloads of the amala fruit ( phyllanthus emblica) were received. He would just smell the vapours of the dishes being cooked and say correctly what needed to be added to a dish. From the vapours of rasam, he would order the amount of coriander yet to be ground and added. Not just a handful of corianders. 'Ground a large pan of coriander and add to the rasam', he would shout to a cook. If a large pan of coriander was to be added more than what has already been done, imagine the quantity of rasam that would have been made. And there ware two cartloads of broomsticks (of the coconut tree) that were used to clean the floor after a dining session.
"However much the number of cooked rice vessels or however long the serial wood furnaces be, they couldn't just meet the amount of rice required. So what he would do is to first cook ten or twenty bags of rice, spread the lots over long mats, cover the steaming, cooked rice (anna pAvadai) with a thin, white cloth and spread bags of raw, uncooked rice over the cloth with the cooked rice under. Then he would cover this uncooked rice with long jute sacks and fold them tightly under the mat. In the next half hour, when the sacks were removed, all the upper layer of uncooked rice would have been cooked, soft like flowers! Such was his technique to speed up the rice-making task.
"Where did he go for all the milk required for curd to serve the multitudes of diners? Sivan had another technique for this requirement. In those days when there were no refrigerators, Sivan had invented his own! Weeks or even months before the samArAdhanA (food festival), Sivan used to go about the task of collecting milk and making curds. He would pack the curd in wooden barrels, seal them with wax and drown the barrels in deep ponds. When the barrels were extracted and opened, the curd would be just like it was formed yesterday! We should say, it was not just the coolness of the pond, but the cool compassion of his mind also that made the task possible."
Though Sivan conducted the festivities on behalf of Kanchi Matam, the 1921 and 1933 MahamahamsamArAdhanAs were eventful in the sense, Paramacharya was not there in Kumbakonam at that time, as he had undertaken the ganga yAtrA (pilgrimage to the banks of Ganga) in the year 1919, which lasted for twenty-one long years. During the Mahamaham of 1933, Paramacharya had camped on the outskrits of Kumbakonam, in Patteesvaram and Tiruvidai Marudhur, en route to Ramesvaram, from where he was to proceed to Varanasi. Observing the tradition, he did not enter the Kumbakonam matam until his yAtrAwas completed. He would go to the Mahamaham pond to take bath or to the temples of Kumbakonam from his camp and return. It was during the year 1933 that the renovation work of the Matam was completed, under the supervision of Sivan.
A speciality about Sivan's annadhAnam festivities was that until the evening of the previous day there were no signs at the place of dining of any activity of food preparation. The articles would start arriving only in the night. In the 1933 festival, it was past midnight and yet not a cartload of articles arrived! Even the fearless taskmaster Sivan started worrying over the actual time left for arranging the things and start cooking to feed a lakh of people on the next morning.
The news reached the camp where Paramacharya was staying. In the next few minutes, the carts started arriving.
The carts that were usually exempted from the traffic regulations during the Mahamaham festival were at that time held up by the traffic police, who were not aware of the relaxation of rules for Sivan's carts. The circle inspector suddenly had a flash at one-thirty at night and proceeded to the scene of holdup. Thereafter, the carts that were parked outside the city moved in, and Paramacharya's blessings saw to it that everything went on well from that time.
A most notable thing about the festivities was that neither the 'Walking Sivan', nor the 'Annadhana Sivan' ever tasted a morsel of the food served! Paramacharya usually took the flattened rice offered to Sri ChandraMauleesvara, even that when he was not on fast. Annadhana Sivan would go a friend's house and take just curd rice, which was his usual, favourite dish, which he took even on normal days after offering it to his ishta devata (personal God) Sri Dakshinamurthi.
Paramacharya said later, that contrary to the popular perception that Sivan did the annadhAnam on behalf of the Kanchi Matam, it was his festivities that restored the financial status of the Matam during those difficult days.
13 comments:
. நல்ல உள்ளத்தோடு நல்ல காரியங்களைச் செய்வோருக்கு தெய்வமே துணை நிற்கும் எனும் உண்மையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
தெய்வத்தின் குரலாக அமுதமாக ஒலித்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
நல்ல உள்ளம் என்றும் தெய்வம்... சிறப்பான பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...
Dear sir.can you please send me a better / bigger quality picture of sri annadana sivam..thankyou sir
அன்னதான சிவன் புகைபடத்துக்கு பதில் சிவன் சார் அதாவது பெரியவரின் சகோதரர் படம் உள்ளது அன்னதான சிவன் பற்றி அறிய http://aggraharam.blogspot.in/2015/05/1.html
அன்னதான சிவன் புகைபடத்துக்கு பதில் சிவன் சார் அதாவது பெரியவரின் சகோதரர் படம் உள்ளது அன்னதான சிவன் பற்றி அறிய http://aggraharam.blogspot.in/2015/05/1.html
Asking questions are genuinely pleasant thing if you
are not understanding anything completely, but this article gives good understanding even.
Thank you, I have recently been searching for information approximately this topic for a while
and yours is the best I have found out so far.
However, what about the conclusion? Are you positive in regards to the supply?
I was wondering if you ever thought of changing the structure of
your blog? Its very well written; I love what youve got
to say. But maybe you could a little more in the way of content
so people could connect with it better. Youve
got an awful lot of text for only having 1 or 2 images.
Maybe you could space it out better?
Hey There. I found your blog using msn. This
is a really well written article. I will make sure
to bookmark it and come back to read more of your useful
info. Thanks for the post. I'll certainly comeback.
For most recent news you have to visit world wide web and on world-wide-web I found this web site
as a most excellent site for newest updates.
Can I simply just say what a relief to find an individual who really understands what they
are talking about over the internet. You actually understand how to bring an issue
to light and make it important. A lot more people have
to look at this and understand this side of your story.
It's surprising you're not more popular given that you certainly have the gift.
all the time i used to read smaller articles or
reviews that also clear their motive, and that is also
happening with this paragraph which I am reading
at this time.
This design is steller! You obviously know how to keep a reader amused.
Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost...HaHa!) Fantastic
job. I really enjoyed what you had to say, and more than that, how you presented it.
Too cool!
Post a Comment