பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 8, 2014

5. யாவும் பராசக்தியே!

                                                                “பாரதி லீலை”
வாழ்க்கைக் குறிப்பு
எழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
வெளியீடு: 1-7-1938.
                                                     நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.


                                                             5. யாவும் பராசக்தியே!      
                              "அனைத்துயிரினும் அன்னை யுருவாய்
                               இலங்குந் தாய்திருதேவி யாரோ
                               அன்னவள் பொற்றி அன்னவள் போற்றி
                               போற்றி போற்றி!"
                                             - தேவி மகாஹிமியம் மொழிபெயர்ப்பு.

சென்னை மத்தியத் தொழிலாளர் சங்கத்துக்குப் பாரதியார் ஒரு சமயம் சென்றிருந்தார். தமிழ் நாட்டின் தவப்புதல்வர் ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரும் அப்பொழுது அங்கே இருந்தார். சங்கத்திலே அன்னிபெஸண்ட் படம் மாட்டப்பட்டிருந்தது. "இந்த அம்மாளை எல்லாரும் திட்டுகின்றனரே" என்று அப்படத்தைப் பாரதியாருக்குக் காட்டிக் கூறினார் ஸ்ரீமான் முதலியார்.

"அவளையா திட்டுகிறார்கள்! அவள் பராசக்தியன்றோ?" என்று சொன்னார் பாரதியார். சொல்லிவிட்டுப் பத்து நிமிஷம் அந்தப் படத்தையே உற்றுக் கவனித்தார். கவனித்துவிட்டு

"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர் மணிப்ப்பூண்"

என்ற பாட்டைப் பாடினார். அரசியல் கொள்கையிலே மாறுபட்டிருந்த போதிலும் பெண்ணத் தெய்வமாகப் பாரதியார் பாவித்திருந்தார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

(தொடரும்)


No comments:

Post a Comment

You can give your comments here