“லக்ஷ்மி
ராமாயணம்.”
(பெயரே
புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர்
இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை
எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன்
சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின்
மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி
என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி
ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர்
இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை
இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள்,
படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி
எழுதத் தூண்டுங்கள். -- வெ.கோபாலன்.)
எளிய மொழியில் ‘கம்பராமாயணம்’
ஆக்கம்: திருமதி லக்ஷ்மி ரவி, தஞ்சாவூர்.
அறநெறி வழுவா மல் அரசாண்ட
க்ஷத்ரிய வீரனென இராம னை
விஸ்த ரித்து, சித்தரித்து, வால்மீகி
வடமொழியில் படைத் துள்ளார் ‘இராமாயண்’ 1
புவிமீதில் உதித்த இரா மன்
அவதா ரப் புருஷ ரென்று
கவிக் கம்பர் தமிழ் மொழியில்
‘இராமா வதாரம்’ அளித்து ள்ளார் 2
பின் னாளில் அந் நூலும்,
‘இராமா யணம்’ என்ப தாகப்
பேருடன், புகழும் பெற் று,
பார் பிரசித்தம் ஆன துவாம்! 3
முதல் மூன்று பாக்களிலும்; கம்பன்
பரம் பொருளை வணங்கி விட்டுப்,
பின் வரும் பாக் களிலே
தன் னிலையை விளக்கு கின்றார். 4
ஆக்கல். காத்தல். அழித்த லென
முத்தான தொழில் மூன்றி னையும்
தப் பாமல் செய் பவராம்
தலைவனின் தாள் பணி கின்றார். 5
வால் மீகி யென்ற வொரு
மா மேதை இயற்றி யதை
எளி யேனாம் கம்ப னின்று
எழுதிடவே முனைந் திட்டேன்! – அது 6
பே ரிரைச்சலும், பே ரலையும் கொண்ட
பாற்கடல் நீரினைப் பாலென் றெண்ணி
நாக் கொண்டு பருகிட விழையும்
பேரவா கொண்ட பூனைக்கு ஒப்பென்றார். 7
வாழ்த் துப்பா பாடிய பின்
அவை யடக்கம் கூறி விட்டு
‘பால காண்டம்’ என்ப திலே
‘ஆற்றுப் படலம்’ ஆற்று கின்றார். 8
ஆற்றுப்படலம்
பாட் டுடைத் தலை வனின்
நாட்டி னையும், நதி யினையும்,
பாட் டிலே காட்டுதல் – தமிழ்க்
காப் பியத்தின் மர பாகும். 9
ஆற்றின் வரு ணனையைப் பலரும்
நாட்டின் வருணனைக்குள் அடக்குவர் – ஆனால்
ஆற்றிற் கென ஓர் ‘படலம்’
அமைத்து விட்டார் கம்ப நாடர். 10
இம யத்தில் உரு வாகி,
இடை விடாது உருண் டோடி,
நில வளம் பெருக்கி வரும்
குல வள்ளல் ‘சரயு நதி.’ 11
தாய்ப் பாலுக் கொப்பான – இவ்
வாய்க் காலின் வெள்ளத் தால்,
நோயொ ன்றும் தாக்கா வண்ணம்
வாழ்ந் தனராம் கோ சலத்தார். 12
நாட்டுப் படலம்
மணி யும், இரத்தின மும்,
மயி லின் பீலி யும்,
அகிற், சந்தனக் கட்டை களும்,
அனைத் தையும் இச் சரயு நதி, 13
வாரி வழங் கிய தால்
வணிக மும் வளர்ந்ததுவாம் - மும்
மாரி பொழிந் ததி னால்
நெற் குதிரும் நிறைந் ததுவாம்.. 14
வறுமையும் இங் கில்லை – அதனால்
வள் ளலும் எவரும் இல்லை!
பகையும் இருக்க வில்லை – அதனால்
வீ ரமும் வெளிப் படவில்லை! 15
கள்வர் எங்கு மில்லை – அதனால்
கா வலுக்குத் தேவை யில்லை!
பொய் யுரை ஏதுமில்லை – அதனால்
வாய் மையும் சிறக்க வில்லை. 16
இத் தகு நாட் டுடை
வித் தகு தலை நகர்,
‘அ யோத்தி’ என் பதிலே
வியப் புக்கும் இட முண்டோ? 17
இயற்கை வளமும், செல்வச் சிறப்பும்
அளப்பதற் கரியதாம் அமரா புரியில்;
அதனினும் உயர்ந்ததாம் அளகாபுரியில்; - அயோத்தியோ
அனைத்திலும் முதன் மையாம் இப்புவியில்! 18
நகரப் படலம்
பளிங் கினை அடுக்கி வைத்தும்,
பசும் பொன்னை அரிந்து பொதிந்தும்,
வெள்ளி விட்டமும், வைரத் தூணுமாய்க்
கண்ணைப் பறித்ததுவாம் வாயிற் கோபுரங்கள்! 19
கப்பப் பொருள் அளப்பதற் கெனவும்,
மாந்தர் நடன மாடுதற் கெனவும்,
வேத மதை ஓதுதற் கெனவும்,
விதவித மாய்மணி மண்ட பங்களாம்! 20
கல்வி விதையொன்று, கேள்விக் கிளையாகி,
தவ இலையும், அன் பரும்பும்,
தருமப் பூக்களும், போகக் கனியும்,
தந்திடுமாம் அயோத்தி மா நகரத்திலே! 21
அரசியற் படலம்
நேர்மையும், பெருமையும் நிரம்பப் பெற்று
நீதிவழிசென்று நல்லாட்சி புரிந்தோன்தான்
- இச்
சீருடை காப்பியத் தலைவனைப் பெற்ற
பேருடை தவச் சீலனாம் தசரதன் 22
அன்பு செலுத்தலில் அன்னையைப் போலவும்,
நன்மை பயத்தலில் தவத்தை ஒத்தும்
முன்சென்று வழிகாட்டலில் புதல்வனைப் போன்றும்,
துன்பம் தொலைப்பதில் நன் மருந்தும் ஆனவன். 23
(தொடர்ந்து வரும்)
No comments:
Post a Comment