பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, July 16, 2017

சிவ தாண்டவம்

      
சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கும்பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவபெருமானின் தாண்டவம் உலக நலனை நோக்கியே நிகழ்ப்படுவதாகவும், அதனுடைய நோக்கமானது உயிர்களை மலங்கள் (குற்றங்கள்) பிடியிலிருந்து விடுவிப்பதாகும். சிவதாண்டவத்தில் சிவனின் உடலமைப்பு அணி கலன்கள் கைகளில் உள்ள படைக்கலன்கள், தலைமுடி மற்றும் பாதங்களின் அமைப்பு ஆகிய அனைத்திற்குமே மெய்ப்பொருளியல் விளக்கங்கள் சைவர்களால் எடுத்துரைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவங்களும் வெவ்வேறு மெய்பொருளியல் கோட்பாடுகளை விளக்குகின்றன
சிவதாண்டவ வகைகள்
6.    
சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ஏழு தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களை குறிப்பதாக அமைகின்றன. இந்தஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹாத் தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம் என்ற ஏழு தாண்டவங்களும் சப்த தாண்டவங்கள் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமானை சுந்தரர், ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார்.

சப்த விடங்க தாண்டவங்கள்
1.   அஜபா தாண்டவம
2.   வீசி தாண்டவம
3.   உன்மத்த தாண்டவம
4.   குக்குட தாண்டவம
5.   பிருங்க தாண்டவம
6.   கமல தாண்டவம
7.   ஹம்சபாத தாண்டவம
8.    
நவராத்திரியின் காலத்தில் சிவபெருமான் ஒன்பது தாண்டவங்கள் ஆடுவதாக நம்பப்படுகிறது. அவையாவன,.
1.   நவராத்திரியின் முதல் நாள் : ஆனந்த தாண்டவம்
2.   நவராத்திரியின் இரண்டாம் நாள் : ஸந்தியா தாண்டவம்
3.   நவராத்திரியின் மூன்றாம் நாள் : திரிபுரதாண்டவம்
4.   நவராத்திரியின் நான்காம் நாள் : ஊர்த்துவ தாண்டவம்
5.   நவராத்திரியின் ஐந்தாள் நாள் : புஜங்க தாண்டவம்
6.   நவராத்திரியின் ஆறாவது நாள் : முனி தாண்டவம்
7.   நவராத்திரியின் ஏழாவது நாள் : பூத தாண்டவம்
8.   நவராத்திரியின் எட்டாவது நாள் : சுத்த தாண்டவம்
9.   நவராத்திரியின் ஒன்பதாம் நாள் : சிருங்காரத் தாண்டவம் 

சிவபெருமானது தாண்டவங்களில் பன்னிரு தாண்டவங்கள்.
சிவ பெருமானான இந்நடராஜர் ஆடும் நடனம் தாண்டவம். மகிழ்ச்சியின் உச்சத்தைக் காட்டும்போது ஆடுவது ‘ஆனந்த தாண்டவம்’. இவரே தீமையை அழிப்பதற்காக ஆடியது ‘ருத்ர தாண்டவம்’. இந்த இரண்டு உச்சங்களும் இன்றி, மென்மையாக பார்வதி ஆடும் நடனத்திற்கு ‘லாஸ்யா’ என்று பெயர். நளினமான உடல் அசைவுகளுக்கு அடவு என்று பெயர். இவை மொத்தம்120 வகைகள். பல அடவுகளைக் கொண்டது ‘ஜதி’.
சப்தவிடங்கத்தலங்கள் என்பது தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும். இவற்றின் தலைமையிடம் திருவாரூர்      ஆகும்.   
பிற விடங்கத்தலங்கள் திருநள்ளாறுநாகபட்டினம்  (நாகைக்காரோணம்)திருக்காராயில்திருக்குவளைதிருவாய்மூர்வேதாரண்யம் ஆகியனவாகும். இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் லிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும். .  இந்திரனிடம் முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு [3] இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.
சப்தவிடங்கத்தலங்கள் குறித்து தனிப்பாடல் ஒன்று உள்ளது.
சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில்-பேரான
ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
சத்த விடங்கத் தலம்
டங்கம்என்றால் உளியால் பொளிதல், உளியால் பொள்ளாத சுயம்புமூர்த்தியாக, தானே தோன்றியதாகக் கொள்ளப்படுகிறது. மேற்குறிய அனைத்துக் கோயில்களிலும்விடங்கர்என அழைக்கப்படும் பளிங்குக்கல்லில் செய்யப்பட்ட சிறிய லிங்கத்திற்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன. விடங்கர் என்ற சொல் ஆடவல்லான் பெருமானைக் குறிக்கும்போதுபேரழகன்என்ற பொருளில் வரும்.[
சப்தவிடங்கத்தலங்களில் உள்ள இறைவன் பின்வரும் நிலையில் அமைகின்றனர்.
·         திருவாரூர் - தியாகராசப்பெருமான்
·         திருநள்ளாறு - நாகவிடங்கர்
·         நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
·         திருக்காராயில் - ஆதிவிடங்கர்
·         திருக்குவளை - அவனிவிடங்கர்
·         திருவாய்மூர் - நீலவிடங்கர்
·         வேதாரண்யம் - புவனிவிடங்கர்
ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது.
1.   திருவாரூர் தியாகராசப்பெருமான் - உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனம்
2.   திருநள்ளாறு - பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்
3.   நாகைக்காரோணம் - கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்
4.   திருக்காராயில் - கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்
5.   திருக்குவளை - வண்டு மலருக்குள் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்
6.   திருவாய்மூர் - தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்
7.   வேதாரண்யம் - அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்
இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளை குறிக்கும் தாண்டவங்களை சிவபெருமான் ஆடினார்.
100.              விஷ்ணுக்ராந்தம்
101.              ஸம்ப்ராந்தம்
102.              விஷ்கம்பம்
103.              உத்கட்டிதம்
104.              வ்ருஷ்பக்ரீடிதம்
105.              லோலிதம்
106.              நாகாபஸர்ப்பிதம்
107.              ஸகடாஸ்யம்

108.              கங்காவதரணம்

No comments:

Post a Comment

You can give your comments here