Bharatha Natyam
1. பரத நாட்டியம்: இது தமிழ் நாட்டில் ஆடப்பட்டு வரும் அரிய நடனக் கலை.
Kuchipudi
2. 'குச்சிபுடி' எனும் இவ்வகை நடனம் ஆந்திரப் பிரதேசம் கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள குசேலபுரி எனும் கிராமத்தின் பெயரைக் கொண்டது. இவ்வகை நடனம் ஆந்திராவில் பிரபலமாக ஆடப்படுவது.
Kathakali
3. 'கதக்களி' எனும் அற்புதமான நாட்டிய நாடக வகை கேரள மாநிலத்தின் கலை நயத்துக்குப் பெயர் போன நடனம். கேரளத்தில் கலாமண்டலம் எனும் அமைப்பு அமைத்துத் தந்த இந்த அரியவகை நாட்டிய நாடக வகையில் பெரும்பாலும் ஆண்களே பங்கேற்பார்கள்.
Mohiniattam
4. 'மோகினியாட்டம்' எனும் இவ்வகை நடனமும் கேரள மாநிலத்தின் கலைக் கொடை. கதக்களி ஆண்களே ஆடுவதற்கு இருப்பதைப் போல பெண்கள் பங்கேற்பதற்கென்று கலாமண்டலம் உருவாக்கிய அரிய வகை நடன பாணிதான் 'மோகினியாட்டம்'. இதில் தலைசிறந்த நடனக் கலைஞர்கள் இருந்து வருகிறார்கள்.
Odissi
5. 'ஒடிசி' எனும் இந்த நடனம் ஒடிஷா மாநிலத்தை பிறப்பிடமாகக் கொண்டது. சோனாலி மான்சிங் எனும் மாபெரும் கலைஞர் இந்தக் கலையை உலகறியச் செய்தவர். இப்போது கரக்பூர் பல்கலைக் கழகத்தில் ஒடிசி நடனப் பயிற்சி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
Kathak
6.'கதக்' எனப்படும் இவ்வகை நடனம் பாரசீகத்தில் உருவான கலை. இது முகலாயர் காலத்தில் இந்தியாவுக்கு வந்து இந்திய பாரம்பரிய கலை வடிவத்தோடு இணைந்து 'கதக்' எனும் பெயரில் ஆடப்பட்டு வருகிறது. முகலாய மன்னர்கள் அவைகளில் இவை பெரிதும் அந்தக் காலத்தில் ஆடப்பட்டு வந்திருக்கிறது. இவ்வகை நடனத்தில் 'கால்கள்' தாளமிடும் வேகத்தையும், நடனம் சுற்றிச் சுழன்று ஆடும் வேகத்தையும், பார்ப்போர் மனங்களைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்தது.
Manipuri
7. 'மணிப்புரி' நடனம், அசாம், மணிப்புரி, மேகாலயா மாநிலங்களில் ஆடப்படும் நடன வகை. இதில் உடைகளும், ஆடும் விதமும் மற்ற நடன வகைகளிலிருந்து மாறுபட்டிருக்கும். வண்ணமயமான கலை இது.
Yakshagana
8. "யக்ஷ கானம்" எனப்படும் கர்நாடக மாநிலத்தின் தெருக்கூத்து வகையைச் சேர்ந்த நாட்டிய நாடகம். இது குறித்து கன்னட மொழி எழுத்தாளர்கள் ஆர்வமும், ஆய்வும் நடத்தி வந்திருக்கிறார்கள்.
Pride of Tamilnadu Therukkoothu
9. 'தெருக்கூத்து' இது தமிழ் நாட்டின் பாரம்பரியமான கிராமியக் கலை. இரவு முழுவதும் பாடி, நடித்து புராணக் கதைகளைச் சொல்லும் கலை. இதில் ஆண்களே பெண் வேஷமும் அணிவர், கலைஞர்களே சொந்தக் குரலில் பாடுவர் (அபஸ்வரமாக இருந்தாலும்). கிராமப் புறக் கலையான இது இப்போது நலிந்து வருவது வருத்தமளிக்கிறது.
1 comment:
சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு
Post a Comment