பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, September 9, 2015

பாரதியாரின் 94ஆவது நினைவு நாள்.மகாகவி பாரதியாரின் 94ஆவது நினைவு நாள்.
11 செப்டம்பர் 2015
மகாகவிக்கு இரண்டு பெண்கள் மட்டுமே. மகன் இல்லாத குறை நீங்க 'சிவாஜி' பத்திரிகாசிரியராக இருந்த திருலோக சீதாரம் அவர்கள் திருச்சியில் பாரதியாரின் இறந்த திதியில் அவருக்கு ஸ்ரார்த்தம் செய்து வந்தார் என்பது முதல் செய்தி.
பாரதியார் மகாகவியா என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாரதிதாசன் எழுதிய கவிதை.
"ஞானரதம் போலொரு நூல் எழுதுதற்கு
நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்
போல் நவிலக் கற்பனைக்குப் போவதெங்கே?
புதிய நெறி பாஞ்சாலிசபதம் போலே
தேன் இனிப்பில் தருபவர் யார்? மற்றும் இந்நாள்
ஜேய பேரிகை கொட்டடா என்றோதிக்
கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டி வைத்த கவிதை திசை எட்டும் காணோம்!"
இவ்விரு செய்திகளோடு மகாகவியின் 94ஆவது நினைவு நாளில் அவர் சிந்தனையில் ஆழ்வோம்! வாழ்க மகாகவி பாரதி புகழ்!!

1 comment:

  1. நன்னாளில் ஒரு நல்ல செய்தி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

You can give your comments here