பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, September 7, 2012

மகாத்மா காந்தியடிகளின் இறுதி யாத்திரை.

மகாத்மா காந்தியடிகளின் இறுதி யாத்திரை.

ஜனவரி 30, 1948 மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம். அவருடைய மறைவுக்காக உலகமே கண்ணீர் சிந்தியது. அந்த மகா புருஷனின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு டில்லியின் யமுனை நதிக்கரையில் எரியூட்டப்பட்ட காட்சியினை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் அல்லவா? இப்போது இந்த புகைப் படங்களில் பாருங்கள். இந்த மகா மனிதனை உலகம் என்றென்றும் மறக்கக்கூடாது, எப்போதும் அவர் நினைவு மட்டுமல்ல, அவருடைய செயல்பாடுகளும் நம் மனத்தில் நிலைத்திருக்க வேண்டும். அவரை ஒருவர் கேட்டார், பாபுஜி! எங்களுக்குத் தங்களுடைய அறிவுரை என்ன என்று. காந்திஜி சொன்னார், என்னுடைய வாழ்க்கைதான் உலகத்துக்கு உபதேசம் என்று. அவருடைய உபதேசத்தை எத்தனை பேர் கடைபிடிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டாம்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அரிய புகைப்படங்கள்... மிக்க நன்றி...

Unknown said...

ஜோதியோடு ஜோதியாகக் கலந்த இந்த மகாத்மா விடிவெள்ளியாக விண்ணிலே
உலகம் உள்ளவரை ஒளிவிட்டுக் கொண்டே இருக்கும்.
நெஞ்சைக் கனக்கச் செய்கின்றன இந்த மகாபுருஷரின் இறுதியாத்திரை காட்சிகள்.