மகாத்மா காந்தியடிகள் எழுதியதின் ஒரு பகுதி:--
"தன்னைத் தானே தூய்மைப் படுத்திக் கொண்டுவிடாமல், எல்லா உயிர்களிடத்திலும்தன்னை ஒன்றுபடுத்திக் கொள்வது என்பது முடியாத காரியம். தம்மைத் தாமே தூய்மைப் படுத்திக் கொள்ளாமல் அஹிம்சை தருமத்தை அனுசரிப்போம் என்பது வெறும் கனவாகவே முடியும். மனத்தூய்மை இல்லாதார் என்றுமே கடவுளை அறிதல் இயலாது. ஆகையால் தம்மைத் தாமே தூய்மைப் படுத்திக் கொள்ளுவது வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் தூய்மை அடைவதற்கொப்பாகும்.
ஆன்மத் தூய்மைக்கான பாதை மிகவும் கஷ்டமானதாகும். பூரணத் தூய்மையை ஒருவர் அடைவதற்கு அவர் எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் காமக் குரோதங்களை அறவே நீக்கியவராக இருத்தல் வேண்டும். அன்பு, துவேஷம், விருப்பு, வெறுப்பு எனும் எதிர்ப்புஸ் சுழல்களினின்று அவர் வெளிப்பட்டவராகவும் இருக்க வேண்டும். அம்மூவகைத் தூய்மையையும் அடைவதற்காக இடைவிடாது நான் முயற்சி செய்து கொண்டு வருகிறேனாயினும் அந்த மூன்று தூய்மைகளும் இன்னும் என்னுள் இல்லை என்பதை நான் அறிவேன். இதனால்தான் இவ்வுலகத்தின் புகழுரைகள் எல்லாம் எனக்கு இன்பம் தருவதில்லை. உண்மையில் அவற்றால் எனக்கு அடிக்கடி மனக் கஷ்டமே உண்டாகிறது. ஆயுத பலத்தைக் கொண்டு உலகத்தையே வெற்றி கொண்டுவிடுவதைவிட உள்ளுக்குள் இருக்கும் காமக் குரோத உணர்வுகளை வென்று விடுவது அதிகக் கஷ்டமாக எனக்குத் தோன்றுகிறது."
-- மகாத்மா காந்தி.
வரும் 2-10-2012 அன்று தஞ்சாவூர் மாவட்டம் திருப்பந்துறுத்தி கிராமத்தில் காந்தி ஜயந்தி விழா நடைபெறவிருக்கிறது. அங்கு அமைந்துள்ள கருணையானந்தர் ஆசிரமத்தில் காலையில் விழா தொடங்குகிறது.
காலை: 10-00 மணி.
கருத்தரங்கம். திருவையாறு அரசர் கல்லூரி சமூகப் பணித்துறை பேராசிரியர் திருமதி மணிக்குமரி அவர்கள் தலைமையில் அக்கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர்.
காந்திய சிந்தனைகள் குறித்து விவாதமும், மாணவர்களின் ஐயப்பாடுகளுக்கு விளக்கங்களும்
அளிக்கப்படும்.
1-00 மணி உணவு இடைவேளை.
பிற்பகல் 2-00 மணி "காந்தி" திரைப்படம்
மாலை 4-00 மணி கீழ்கண்டபடி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தலைமை: திரு சாலமோன்,
தலைவர் கருணையானந்தர் ஆசிரமம், திருப்பந்துறுத்தி
சிறப்புரை: திரு வெ.கோபாலன்
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்
சிறுவர் சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள்.
நன்றி நவிலல்.
நாட்டுப் பண்.
1 comment:
விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.!!!
/////ஆன்மத் தூய்மைக்கான பாதை மிகவும் கஷ்டமானதாகும். பூரணத் தூய்மையை ஒருவர் அடைவதற்கு அவர் எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் காமக் குரோதங்களை அறவே நீக்கியவராக இருத்தல் வேண்டும். அன்பு, துவேஷம், விருப்பு, வெறுப்பு எனும் எதிர்ப்புஸ் சுழல்களினின்று அவர் வெளிப்பட்டவராகவும் இருக்க வேண்டும். அம்மூவகைத் தூய்மையையும் அடைவதற்காக இடைவிடாது நான் முயற்சி செய்து கொண்டு வருகிறேனாயினும் அந்த மூன்று தூய்மைகளும் இன்னும் என்னுள் இல்லை என்பதை நான் அறிவேன். இதனால்தான் இவ்வுலகத்தின் புகழுரைகள் எல்லாம் எனக்கு இன்பம் தருவதில்லை. உண்மையில் அவற்றால் எனக்கு அடிக்கடி மனக் கஷ்டமே உண்டாகிறது. ஆயுத பலத்தைக் கொண்டு உலகத்தையே வெற்றி கொண்டுவிடுவதைவிட உள்ளுக்குள் இருக்கும் காமக் குரோத உணர்வுகளை வென்று விடுவது அதிகக் கஷ்டமாக எனக்குத் தோன்றுகிறது."////
இது ஒவ்வொரு இந்தியனுக்குமான (ஒவ்வொரு மனிதுனுக்குமான) வேதம். எத்தனை அழகான விளக்கம். இந்த நான்கு வரிகளும் நான்மறைக்கு ஒப்பானது.
சத்தியத் தாயின் கடைசிக் குழந்தையின் வாக்கல்லவா இது! அருமை. அருமை.அருமை.
Post a Comment