பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, September 27, 2012

காந்திஜியின் சிந்தனைகள்.

காந்திஜியின் சிந்தனைகள்.

ஸ்ரீராமநவமி, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி இவற்றிற்குப் பிறகு ஒருவருடைய பிறந்த நாளை பாரதத் திருநாட்டில் சிறப்பாக எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றால் அது மகாத்மா காந்திஜியின் பிறந்த நாளான அக்டோபர் 2. இன்னும் ஒரு வார காலத்தில் அவருடைய ஜயந்தி வருகிறது. இன்று முதல் நாள்தோறும் காந்தி ஜயந்தி வரை ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் அவருடைய பொன் மொழிகள் இடம்பெறும். அவர் பேசிய அல்லது எழுதிய அதே ஆங்கிலத்தில் அப்படியே படியுங்கள். பாபுஜியின் கருத்துக்களுக்கு உங்களுடைய அபிப்பிராயங்களையும் தெரிவியுங்கள். நன்றி.

1. INDIA - A TEACHER

A Nation with a constitution like this is fitter to teach others than to learn from others. This Nation had Courts, Lawyers and Doctors, but they were all within bounds. Everybody knew that these professions were not particularly superior; moreover, the Vakils and Vaids did not rob people; they were considered Peoples' dependants, not their masters. Justice was tolerably fair. The ordinary rule was to avoid courts. There were no touts to lure people into them. This evil, too was noticeable only in and around capitals. The common people lived independently and followed their agricultural occupation. They enjoyed true Home Rule. The Indian civilization, as described by me, has been so described by its votaries. In no part of the world, and under no civilization, have all men attained perfection. The tendency of the Indian Civilisation is to elevate the moral being, that of the Western civilization is to propagate immorality. The latter is godless, the former is based on a belief in GOD. So understanding and so believing, it behoves every lover of India to cling to the old Indian Civilisation even as a child clings to the mother's breast.
“Indian Home Rule” by Mahatma

2. TO THE WOMEN

Woman has been suppressed under custom and law, for which man was responsible and in the shaping of which she had no hand. In a plan of life based on non-violence, woman has as much right to shape her own destiny as man has to shape his. But as every right in a non-violent society proceeds from the previous performance of a duty, it follows that rules of social conduct must be framed by mutual co-operation and consultation. They can never be imposed from outside. Men have not realized this truth in its fullness in their behavior towards women. They have considered themselves to be lords and masters of women instead of considering them as their friends and co-workers. It is the privilege of men to give the women of India a lifting hand. Women are in the position somewhat of the slave of old and who did not know that he could or ever had to be free. And when freedom came, for the moment he felt helpless. Women have been taught to regard themselves as slaves of men. It is up to men to see that they enable them to realize their full status and play their part as equals of men.

Wives should not be Dolls.

This revolution is easy, if the mind is made up. Let us begin with our own homes. Wives should not be dolls and objects of indulgence, but should be treated as honoured comrades in common service. To this end, those who have not received a liberal education should receive such instruction as is possible from their husbands. The same observation applies, with the necessary changes, to mothers and daughters.
It is hardly necessary to point out that I have given a one-sided picture of the helpless state of India's women. I am quite conscious of the fact that in the villages generally they hold their own with their menfolk and, in some respects, even rule them. But, to the impartial outsider, the legal and customary status of woman is bad enough throughout and demands radical alteration.
“The Constructive Programme (1945)

3 comments:

Unknown said...

இது மகாத்மா பகன்றதா! இல்லை மகாகவி பாடியதா!!
மகா புருஷர்களின் எண்ணமும் சிந்தனையும் ஒரே மாதிரி இருந்திருக்கிறதே!
மகாதுறவி சுவாமி விவேகனந்தர் கூறுவார்... மேல நாடுகளில்; ஓ வென்று அழும் ஓலம் கேட்க்கும் ஒரு நாள் அதனை நோக்கியப் போக்கு தான் அங்கே காண்கிறது என்பார்.

மகாத்மாவும் அதனையே கூறுகிறார்... அதற்கு இந்தியா ஒரு ஆசிரியராகத் திகழும் (திகழ்கிறது) என்று.
மகாகவியோ இன்னும் மேலே சென்று ஆன்மீக விடுதலை மனித லட்சியம் அதனை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்று கூறியதோடு விட்டு விடாமல். அதற்கு முன்பாக அதற்கு ஏதுவாக இங்கே நாடு சுதந்திரமும், பெண் விடுதலையும் கல்வியும் வேண்டும் அதோடு சமூக நீதியும் வேண்டும் என்று கூறி எல்லோரையும் இந்நாட்டு மன்னனாக்கி விட்டான்.

'' அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்'' கம்பன் பெண்ணுரிமையை ஆரம்பித்தான் என்பார் சிலம்புச் செல்வர். இந்திய சமூக அமைப்பிலே சத்தியவான்களே மிகுந்திருந்த இதற்கு முந்திய யுக புருஷர்களையும் அவர் தம் மக்களையுமே காண்பித்து... அவர்களைப் போல் இல்லாத ஆண்கள் பெண்களை மட்டும் ஏமாற்றி அடிமைப் படுத்தி இருந்ததை... மறுத்து, அதிர்ந்து வள்ளுவனால் கூட பேசமுடியாமல் இருந்த சமூகத்தில் கம்பன் பிள்ளையார் சுழி தான் போட்டு இருந்தான்.

இடையிலே அதை பெரிய அளவிலே யாரும் வளர்க்க எண்ணவில்லை. இருந்தும், அதை அடிமை இந்தியாவில் பிறந்த புனித ஆத்மாக்கள் முன்னெடுத்தன. பாரதி வேதகாலத்தைக் கூட சுட்டிக் காண்பித்தான். பெண்ணடிமை நமது கலாச்சாரமல்ல என்று!!

இங்கே மகாத்மாவே இந்திய கிராமத்தின் சிறப்பையும், அதே நேரம் நகரங்களில் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டிய நீதியும், மருத்துவமும் எப்படி ஏமாற்று வேலைகளை செய்து கொண்டு இருந்திருக்கிறது என்றுக் கூறியதோடு கிராம அமைப்பையும் அதன் வாழ்வியலையும் அதற்கு அடிப்படையான தெய்வ பக்தியையுமே காரணமாகவும் காட்டியும் இருக்கிறார். இவைகளையெல்லாம் அன்றே அளந்து தெளிவாக உரைத்தும் இருக்கிறார். அவர் அன்று கூறியது அந்த நகர நிலை.... இன்று புற்றீசல் போல் எங்கும் நீக்கமற வியாபித்து இருப்பது தான் அவலம்.

அடுத்து பெண் எப்படி நடத்தப் பட வேண்டியவள் என்றும், அது எத்தனை முக்கியமானதும் என்றும் சுதந்திரம் பெற்றாலும் ஒரு ஆண்மகன் பெண்ணுக்கு சுதந்திரம் தராமல் போனால் பாதகமே என்பதை உள்ளடக்கி அவளையும் கை கொடுத்து தூக்கி விடவேண்டும் என்றும் வேண்டுகோளிடுகிறார். அந்த சம நீதி எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதன் ஆரம்பப் புள்ளியையும் குறியிட்டும் காட்டியுள்ளார்.

நமது நாட்டிலே இல்லை, இதை உலகிற்கும்; மனித இனத்திற்கே பொருந்தும் என்றும் கூறலாம். நல்லக் கருத்தைக் கூறும் மகான்களை தெய்வமாக மதிப்பதோடு சரி அவர் கூறிய தெய்வீகக் கருத்தை யாரும் நினைவில் கொள்வதில்லை. அப்படித் தான் மகாத்மாவின் கருத்துக்களும் மறக்கப் பட்டு இருக்கிறது. தெய்வீகக் கருத்துக்கள் கூறிய மகான்கள் கல்லில் செதுக்கப் பட்டு தெய்வங்களாக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் கருத்துக்கள் மறக்கப் பட்டே போயிருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் அன்றே.. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சோப லட்ச மக்களின் காதுகளில் இவைகள் விழவில்லையே. காந்தியைப் போற்றிய இவர்கள், நான் காங்கிரஸ் காரன் என்று பெருமைப் படக் கூறிய இவர்கள், உண்மைத் தியாகிகள் மட்டும் அல்லாமல்....தியாகிகள் என்றுக் கூறிக் கொண்டு கூலிகளை பெற்றுக் கொண்டோர் சும்மா இருந்த நேரங்களிலாவது இந்தக் கொள்கைகளை தனது வீட்டிலும், ஊரிலும் பரப்பி இருக்கலாமே! எதுவும் நடக்கவில்லை.

Unknown said...

இன்னும் சொல்லப் போனால், இந்தக் கருத்துக்களை எந்தப் பாடப் புத்தகங்களும், கல்லூரிப் பாடங்களிலும் ஒரு பகுதியாகக் கூட இருக்கிறதா?.. ஒவ்வொரு இந்திய ஆண்மகனும் இந்த மகாத்மாவின் கொள்கைளை அறிவானா? என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். மாறாக இன, மொழி துவேசமும், சுய புராணம் பாடும் பாடங்கள் தான் நிறைந்து இருக்கின்றன.

எனக்கு ஒரு ஆசை... சுதந்திர இந்தியாவில் மக்கள் பிரதிநிதிகளாக போட்டியிட வேண்டுவோருக்கு இது போன்றப் பாடங்களைப் படிக்கச் செய்து பரீட்சை நடத்தி தேர்ச்சி பெற்றால் மாத்திரமே அவர்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்ற நிலை வரவேண்டும். நடக்குமா.. நடக்கும் ஒருநாள் என்று நம்புவோம்.

தேசிய நதிகளை இணைத்தாலே மகாத்மா கூறிய, இந்திய முதுகெலும்பான விவசாயமும் கிராமப் புறங்களும் வலுபெற்று நிமிரும். விஞ்ஞானிகள் கூறினாலும், இந்த வீணர்கள் அதை கேட்க தயாராக இல்லை. மேதகு விஞ்ஞானி கலாம் சொல்கிறார்... நாளைய பிரதமர் என்று வர்ணிக்கப் படும் ஒரு மேதாவி கூடாது என்கிறார்??!! கொடுமை என்னவென்றால் இந்தக் காந்தீயக் கருத்துக்களுக்கு எதிராக இருப்பவர்களே இன்றைய காங்கிரஸ்காரர்கள் தாம். பாவம் அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை அவர்கள் இதையெல்லாம் அறியாதவர்கள். காந்தியை எங்கேப் படித்திருக்கிறார்கள். அல்லது கட்சி தான் காந்தியையும் அவர்தம் கருத்துக்களையும் எங்கே இளைஞர்களிடத்தில் பரவச் செய்கிறது.... எனக்குத் தெரிந்து நான் பள்ளியில் படிக்கும் போது புதிய ஏற்பாடு மாத்திரமே யாரோ சிலர் வந்து அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாகப் பள்ளியில் வந்துக் கொடுத்தார்கள். அப்படியானால் எது வளரும். காந்தியாமா? விதை போடவில்லை அறுவடைக்கும் அவசியம் இல்லை... விதைத்தவன் அறுக்கட்டும். விட்டுவிடுவோம்.

திரும்பும் இடமெல்லாம் மகாத்மாவின் போதனைகளை எழுதி வைக்க வேண்டும் என்று ஒரு சட்டம் வந்தால் அதை அரசாங்கம் செய்தால் காவல்துறையும், நீதித் துறையும் ஏன்? அரசின் எல்லாத் துறைகளும் தானாக ஒழுங்கு பெரும். இதை வலியிறுத்தி யாரும் வீதியில் நின்று போராடுவதில்லை. உண்ணாவிரதமும் இருப்பதில்லை.

காந்தி என்ன சொன்னார் என்று ஒவ்வொரு பாமரனும் சட்டம் பேச வேண்டும் அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியா நிச்சயம் தர்மத்திலும் நேர்மையிலும் ஒளிரும். அப்போது இந்த மகான்களின் கனவுகள் யாவும் நினைவாகும்.

வாழ்க இந்திய கலாச்சாரம், வாழ்க காந்தீயம், வளர்க பாரதம் அதனால் இந்த வையமும்.
நன்றிகள் ஐயா!

Unknown said...

வீரமாகா துறவி பிறந்து பெருமைப்பட இந்தியாவை இந்துத்துவத்தையும், இந்தியனையும் உலகிற்கு காட்டியவரின் சொந்த மண்ணில் (இதை இங்கே சொல்வது பொருந்தும்) இது தான் இன்றைய நிலைமை....

''கொல்கத்தா,செப்.27-

தேசிய அளவில் குடும்ப நலன் தொடர்பாக 2011-ம் ஆண்டு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பெண்களிடையே கருத்து கேட்கப்பட்டது. திருமணமான குடும்ப பெண்களில் படித்தவர்களின் செல்வாக்கு வீட்டில் எப்படி இருக்கிறது, அவர்கள் பேச்சு எடுபடுகிறதா? குடிநீர் தேவையை எப்படி சமாளிக்கிறீர்கள், மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் நாட்டிலேய மேற்கு வங்காளமும், ராஜஸ்தான் மாநிலமும்தான் குடும்பத்தில் பெண்கள் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தில் பெண்கள் கருத்துரிமை கூட இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்ற கசப்பான உண்மையை சுட்டிக் காட்டியுள்ளது.

குடிநீர் பிடிப்பற்காக அன்றாடம் 2 மணி நேரத்தை பெண்கள் செலவிடுவதாகவும், அடுப்பு எரிப்பதற்காக விறகு சேகரிக்க 6 மணி நேரம் மேற்குவங்க பெண்கள் அலைவதாகவும் இந்த அறிக்கை வருத்தத்துடன் குறிப்பிடுகின்றது.

அம்மாநிலத்தை சேர்ந்த அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், சிந்தனைவாதிகள் என்று புகழப்படும் வெகு சில பெண்களின் முன்னேற்றத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து பார்க்காமல், ஆழ்ந்து நோக்கினால் ஆண்- பெண் பிறப்பு விகிதாச்சாரம், பெண்கள் கல்வியறிவு ஆகியவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் குடும்பங்களில் கருத்து கூறுவதற்கு கூட பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படாத நிலையில் ஆணாதிக்கம் ஓங்கி உள்ளது.

கணவனின் அனுமதி இல்லாமல் பெற்றோரை பார்ப்பதற்கு கூட பெண்களால் முடியவில்லை. வீட்டிற்கு தேவையான சாதனங்களை வாங்குவதில் தொடங்கி என்ன சமையல் செய்ய வேண்டும் என்பது வரை பெண்ணின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.'' - Thanks Maalaimalar.