பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, June 25, 2013

"மழை"

"மழை" எனும் தலைப்பில் மகாகவி பாரதியார் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அந்தப் பாடலைப் பார்ப்போமா?

"திக்குகள் எட்டும் சிதறி ‍ தக்கத்
     தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட‌
 பக்க மலைகள் உடைந்து ‍ வெள்ளம்
     பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட‌
 தக்கத் ததிங்கிட தித்தோம் ‍ அண்டம்
     சாயுது சாயுது சாயுது ‍ பேய்கொண்டு
 தக்கை யடிக்குது காற்று ‍ தக்கத்
     தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட‌

 வெட்டி யடிக்குது மின்னல் ‍ கடல்
     வீரத் திரை கொண்டு விண்ணை யிடிக்குது
 கொட்டி யிடிக்குது மேகம் ‍ கூ
     கூவென்று விண்ணைக் குடையுது காற்று
 சட்டச்சட சட்டச்சட டட்டா ‍ என்று
     தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
 எட்டுத் திசையும் இடிய ‍ மழை
     எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!

 அண்டம் குலுங்குது தம்பி!  தலை
     ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
 மிண்டிக் குதித்திடு கின்றான்  திசை
     வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
 செண்டு புடைத்திடு கின்றார்;  என்ன‌
     தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
 கண்டோம் கண்டோம் கண்டோம்  இந்தக்
     காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.

இனி உத்தர்கண்ட் மாநிலத்தில் இயற்கை செய்த பேரழிவையும், அதன் பாதிப்பு சிவபெருமான் கோயில் கொண்ட கேதார்நாத்தை எந்த பாடு படுத்தியது என்பதையும் பார்ப்போம்.






அத்தனையும் அழிந்தும் அந்த ஆலயம் மட்டும் நிற்கும் அதிசயத்தை என்னவென்பது? அந்த ஆலயத்தின் பின்புறம் இருந்த ஒரு பெரிய பாறை அடித்து வந்த வெள்ளத்தைத் தடுத்து ஆலயத்தின் இருபுறங்களுக்கும் பிரித்து அனுப்பி ஆலயத்தைக் காப்பாற்றி விட்டது என்கிறார்கள். இதை என்ன வென்பது?

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

கண்டோம் கண்டோம் கண்டோம் இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.

ம்ழையின் ஊழிக்கூத்து ..!

துரை செல்வராஜூ said...

எத்தனை நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கும் இந்த ஆலயம்!...நவீன தொழில் நுட்பம் எல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போன வேளையில் - இந்தப் பழங்காலக் கட்டுமானமாகிய கோயில் மட்டும் நிலைத்து நிற்கின்றது என்றால் - ஈறிலாதவன் ஈசன் ஒருவனே - என்று திருநாவுக்கரசர் போற்றுவது நினைவுக்கு வருகின்றது!..

துரை செல்வராஜூ said...

வீட்டில் அழுக்கும் குப்பையும் சேர்ந்தால் கழுவி விடுகின்றோம் அல்லவா!... அதைத் தான் இயற்கை அன்னை செய்திருக்கின்றாள்... இனி ஒழுங்காக வைத்துக் கொள்வது நமது வேலை...