பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, June 19, 2013

உத்தர்கண்ட் வெள்ளம்

ஆண்டுதோறும் ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் சென்று வருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பக்தர்களை அழைத்துச் செல்ல டெல்லியில் பல டூரிஸ்ட் நிறுவனங்கள் உள்ளன. இந்த ஆண்டு எதிர்பாராமல் இப்படியொரு அதிர்ச்சி. யாத்ரீகர்கள் சுமார் 75000 பேர் அந்தப் பகுதியில் பெய்த மழை வெள்ளம், நிலச்சரிவில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர். எங்கள் நண்பர் திரு செல்வவிநாயகமும் அவர் மனைவியும் தொடர்பு எல்லைக்கு அப்பால் எங்கோ சிக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய குழந்தைகள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயிரமாயிரம் யாத்ரிகர்கள் நலமாக வந்து சேர இறைவனை பிரார்த்திப்போம். அந்த வெள்ளக் காட்சிகள் சிலவற்றை இங்கு பாருங்கள்.
photos: courtsy: Visu Iyer.

1 comment:

  1. மனம் வலிக்கின்றது. எல்லாரையும் இறைவன் பாதுகாத்து அருள்வானாக!...

    ReplyDelete

You can give your comments here