பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, June 12, 2015

இந்தியா ‍‍.... ஒரு விநாடி வினா நிகழ்ச்சி.


திருவையாறு பாரதி இயக்கம்
(உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தியது)

1. இந்தியா எந்த ஆண்டில் சுதந்திரம் பெற்றது?       15 ஆகஸ்ட் 1947
2. இந்திய தேசியக் கொடியில் என்னென்ன வண்ணங்கள் உள்ளன? காவி, வெள்ளை, பச்சை.
3. தேசியக் கொடியில் வெள்ளைப் பகுதியில் இருக்கும் 'சக்கரம்' யாருடையது? அசோகர்
4. இந்திய தேசிய கீதத்தை இயற்றியவர் யார்? ரவீந்திரநாத் தாகூர்
5. இந்தியாவின் தேசியப் பறவை எது? மயில்
6. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது? ஹாக்கி
7. தயான் சந்த் எனும் விளையாட்டு வீரர் எந்த விளையாட்டில் சிறந்து விளங்கினார்? ஹாக்கி
8. நரி கண்ட்ராக்டர் என்பார் எந்த விளையாட்டில் இந்திய கேப்டனாக இருந்தார்? கிரிக்கெட்
9. நடன வகையில் 'குச்சிபுடி' என்பது இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது? ஆந்திரா
10. இந்தியாவில் கள்ளிக்கோட்டை, கோவா ஆகிய இடங்களில் வந்திறங்கிய ஐரோப்பியர்கள் யார்? போர்த்துகீசியர்
11. வடகிழக்கு மாநிலங்கள் என்பவை எவை? அசாம், நாகாலாண்ட், அருணாசலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா.
12. இந்திய மாநிலங்களி கல்வி அறிவு அதிகம் உள்ள மாநிலம் எது? கேரளா
13. எந்த விளையாட்டில் ஏஸ், டபுள் ஃபால்ட், செகண்ட் சர்வீஸ், கேம் பாயிண்ட் எனும் சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன? டென்னிஸ்
14. சானியா மிர்சா என்பவர் எந்த விளையாட்டில் சிறந்து விளங்குபவர்? டென்னிஸ்
15. தமிழ்நாட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு நீர்வீழ்ச்சியின்ன் பெயர்? குற்றாலம்,
16. இந்தியாவில் முதன் முதல் தொடங்கப்பட்ட அணு ஆராய்ச்சி மையம் எங்கு உள்ளது?   டிராம்பே, மும்பாய்.
17. இந்தியாவில் கப்பல் கட்டும் தொழில் எந்த நகரத்தில் இருக்கிறது? விசாகப்பட்டினம்.
18. தமிழ்நாட்டில் ரயில் பெட்டிகள் கட்டும் தொழிற்சாலை இருக்குமிடம்? பெரம்பூர்,சென்னை
19. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு அணுமின் நிலையங்களின் பெயர்கள்? கல்பாக்கம், கூடங்குளம்
20. ஆக்ரா நகரம் எந்த சக்ரவர்த்திகளின் தலைநகரமாக இருந்தது? முகலாய சக்ரவர்த்திகள்.
21. ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் இடம் எது? தாஜ்மகால்
22. தாஜ்மகால் யாரால் யாருடைய நினைவாகக் கட்டப்பட்டது?
ஷாஜஹானால், அவர் மனைவி மும்தாஜ் மஹல் நினைவாக.
23. இந்தியாவில் பொதுவாக நதிகள் எந்த திசையிலிருந்து எந்த திசை நோக்கி ஓடுகின்றன?
மேற்கிலிருந்து கிழக்காக.
24. இந்தியாவில் கிழக்கிலிருந்து மேற்காக ஓடி கடலுக்குள் செல்லும் இரு நதிகள் எவை?  நர்மதா, தப்தி
25. இந்தியாவில் ஓடுகின்ற நதிகள் அனைத்துக்கும் பெண் பெயர்கள்தான்; ஆண் பெயரில் ஓடும் ஒரு நதி எது? பிரம்மபுத்ரா
26. இந்திய பேரரசர்களில் பகதூர் ஷா என்பார் யார்? கடைசி முகலாய மன்னர்.
27. தமிழ்நாட்டை ஆண்ட சில வேந்தர்கள் பரம்பரையினர் யாவர்? சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்
28. பல்லவர்களின் தலைநகரமாக விளங்கிய நகரம் எது? காஞ்சிபுரம்
28. வடநாட்டில் இந்துக்கள் புனிதநதியாக வழிபடும் நதி எது? கங்கை
29. கங்கை நதி உற்பத்தியாகும் இடத்துக்கு என்ன பெயர்? கங்கோத்ரி
30. கங்கையோடு அலகாபாத் எனுமிடத்தில் கலக்கும் வேறு நதிகள் எவை? யமுனை, சரஸ்வதி
31. இந்தியாவில் மராத்திமொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மாநிலம் எது? மகாராஷ்ட்டிரா
32. கொணாரக் எனுமிடத்தில் சூரியனுக்கு ஒரு கோயில் உண்டு, அது எந்த மாநிலம்? ஒடிஷா
33. நிஜாம் மன்னர்கள் ஆண்ட ராஜ்யத்தின் தலைநகராக இருந்த ஊர் எது? ஐதராபாத்
34. தமிழகத்தில் தேயிலை, காபித் தோட்டங்கள் அதிகமுள்ள மாவட்டம் எது? நீலகிரி
35. தமிழ்நாடு அரசின் இலச்சினையில் காணப்படும் கோயில் எந்த ஊர் கோயில்? ஸ்ரீவில்லிபுத்தூர்
36. தமிழ்நாடு அரசின் இலச்சினையில் காணப்படும் வாசகம் எது? 'வாய்மையே வெல்லும்'
37. தற்போதைய டெல்லி மத்திய அரசியில் தமிழகத்தைச் சேர்ந்த கேபினட் அமைச்சர் யார்?
பொன்.ராதாகிருஷ்ணன்
38. ஜெம்ஷெட்பூர் எனும் ஊர் எந்த மாநிலத்தில் இருக்கிறது? சட்டிஸ்கர்
39. This Year குடியரசு தினவிழாவில் "பாரதரத்னா" விருது பெறும் இருவர் பெயர்?
அடல்பிகாரி வாஜ்பாய், மதன்மோகன் மாளவியா.
40. தமிழ்நாட்டில் "பாரதரத்னா" விருது பெற்ற வேறொரு தலைவர்? எம்.ஜி.ஆர்.
41. நாகார்ஜுனசாகர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? கிருஷ்ணா
42. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்படுத்திய தலைவர்:  திலகர் 1893
43. 'டில்லி சலோ' எனும் கோஷத்தைக் கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரர் யார்? நேதாஜி
44. 'புரட்சி' எனும் சொல்லை தமிழில் பயன்படுத்தியவர் யார்? பாரதியார்
45. 'புரட்சி ஓங்குக' 'இன்குலாப் ஜிந்தாபாத்' எனும் கோஷம் முதலில் எழுப்பியவர் யார்? பகத்சிங்
46. பாரதியாரின் குரு சகோதரி நிவேதிதாவின் இயற்பெயர் என்ன? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அயர்லாந்து, எலிசெபத் நோபிள்
47. தமிழ்நாட்டில் முதற் தமிழ்ச்சங்கம் இருந்த நகரம் எது? மதுரை
49. சிலப்பதிகாரம் எழுதிய ஆசிரியர் யார்? சிலம்பு கதை எந்த ஊரில் தொடங்குகிறது?  இளங்கோவடிகள், காவிரிப்பூம்பட்டினம்
50. ஒரு மாநிலத்தின் கவர்னர் பதவி ஏற்கும்போது பதவிப் பிரமாணம் செய்து வைப்பது யார்? ஐகோர்ட் தலைமை நீதிபதி
51. முதலமைச்சர் பதவியேற்பின்போது பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர்? கவர்னர்
52. ஒரு மாநில சட்டசபையின் நிர்வாகத்துக்கு யார் பொறுப்பானவர்? சபாநாயகர்
53. காந்திஜியின் சமாதி எந்த நகரத்தில் இருக்கிறது, அதற்கு என்ன பெயர்? டெல்லி, ராஜ்காட்
54. நேருவின் இல்லம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, அந்த மாளிகை இருக்கும் நகரம்?  அலகாபாத்
55. நேருவின் தந்தையார் பெயர் என்ன? மோதிலால் நேரு
56. வல்லபாய் படேலின் சொந்த மாநிலம் எது? குஜராத்
57. தமிழ் நாட்டில் ஆலயப் பிரவேசம் நடத்தி அனைவரும் கோயிலுக்குள் செல்லலாம் என சட்டமியற்றிய முதல்வர்?  ராஜாஜி
58. மதுரையில் ஆலயப் பிரவேசம் நடத்திய காங்கிரஸ் தலைவர் யார்? மதுரை வைத்தியநாத ஐயர்
59. கீழ்கண்ட கதாபாத்திரங்கள் எந்த காப்பியத்தில் வருகிறார்கள்?
நகுலன்: மகாபாரதம்
குடிலன்: மனோன்மணீயம்
சகுனி: மகாபாரதம்
தாரை: இராமாயணம்
சபரி: இராமாயணம்
மாடல மறையோன்: சிலப்பதிகாரம்
கவுந்தி அடிகள்: சிலப்பதிகாரம்
சீவகன்: சீவகசிந்தாமணி

60. மக்சேசே விருது பெற்ற தமிழ்நாட்டு இசையரசி யார்? எம்.எஸ்.சுப்புலட்சுமி
61. இந்தியாவில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்தது எந்த ஊர், எந்த மாநிலம்?  பொக்ரான், ராஜஸ்தான்
62. தமிழ் வழக்கில் "கல்வியில் சிறந்தவர் ............." யார்? கம்பர்.
63. சுதந்திரப் போராட்ட காலத்தில் "கேசரி", "மராட்டா"  பத்திரிகை நடத்தியவர்? திலகர்
64. தமிழ்நாட்டில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்துக்குத் தலைமை வகித்தவர் யார்? எந்த ஊரில்?  வேதாரண்யம், ராஜாஜி.
65. மது அருந்துவதால் நம் உடலில் பாதிக்கப்படும் உறுப்பு எது? கிட்னி
66. கதக்களி, மோகினியாட்டம், துள்ளல் இந்த வகை நடனங்கள் எந்த மாநிலம்? கேரளம்
67. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள்? எத்தனை யூனியன் பிரதேசங்கள்? 29 மாநிலம் 7 யூனியன் பிரதேசம்.
மாநிலங்கள்: ஆந்திரபிரதேசம், அருணாசல பிரதேசம், அசாம், பிகார், சட்டிஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, இமாசல் ப்ரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாட்கா, கேரளா, மத்யபிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிஷா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்திரபிரதேசம், உத்தர்கண்ட், மே.வங்கம்.

யூனியன் பிரதேசம்: அந்தமான், நிகோபார், சண்டிகர், தாத்ரா & நாகர்ஹவேலி, டாமன் & டையு, லட்சத்தீவுகள், புதுடில்லி, புதுச்சேரி.

68. இந்தியாவின் வடமேற்கில் இந்திய எல்லையையொட்டி அமைந்துள்ள நாடுகள்?  ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான்
69. நமது தேசிய கொடியின் அளவு எந்த விகிதத்தில் அமைந்துள்ளது? 2:3
70. நமது தேசிய கீதம் எந்த மொழியில் முதன்முதல் பாடப்பட்டது? வங்காளி
71. பக்கிம்சந்திர சட்டர்ஜி இயற்றிய ஒரு பாடலை பாரதியார் இருமுறை மொழிபெயர்த்தார், அது எந்தப் பாடல்? வந்தேமாதரம்
72. நமது தேசிய மிருகம் எது? வரிப்புலி
73. தேசிய மரம் எது? ஆலமரம்
74. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேறிய ஆண்டு? 1949
75. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தல் நடந்த ஆண்டு? 1952
76. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்? அவர் எந்த மாநிலத்தவர்?  பாபு ராஜேந்திர பிரசாத், பிகார்.
77. முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாண முதலமைச்சராக பதவியேற்றவர் யார்? ராஜாஜி
78. மொழிவாரி மாநிலம் எப்போது பிரிக்கப்பட்டது? முதலில் அமைந்த மொழிவாரி மாநிலம் எது?
1.10.1953, ஆந்திரா பின்னர் அது ஆந்திர பிரதேசம் எனப் பெயரிடப்பட்டது.
79. பர்மா எனப்படும் மயன்மார் இந்தியாவிலிருந்து எப்போது பிரிக்கப்பட்டது?
1-10-1937இல் நேரடியாக பர்மாவை பிரிட்டிஷ் ஆட்சி
80. எந்த மாகாணம் மகாராஷ்டிரா, குஜராத் என்று பிரிக்கப்பட்டது? எந்த ஆண்டில்?  1960இல் பம்பாய்.
81. நாடாளுமன்ற சபாநாயகராக இருந்து குடியரசுத் தலைவரான தலைவர் யார்?  நீலம் சஞ்சீவி ரெட்டி
82. கேரள மாநிலத்தின் தலைநகரம் எது? திருவனந்தபுரம்
83. மத்திய பிரதேசத் தலைநகர் எது? போபால்
84. இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியவர் யார் எந்த ஆண்டில்? ஏ.ஓ.ஹ்யூம் 1885
85. ஜம்மு கஷ்மீரின் ஆட்சி மொழி எது? In Jammu and Kashmir, the principal spoken languages are Kashmiri, Urdu, Dogri, Pahari, Balti, Ladakhi, Gojri, Shina and Pashto. However, Urdu written in the Persian script is the official language of the state.
86. இந்தியாவின் அண்டை நாடாக இருந்து பின்னர் இந்தியாவோடு ஒரு மாநிலமாக இணைந்த நாடு எது? சிக்கிம் 16-5-1975
87. இந்தியாவின் ஒரே கவர்னர் ஜெனரலாக இருந்த இந்தியர்? ராஜாஜி
88. இந்தியாவில் மத்திய அரசு 13 நாட்கள் மட்டுமே இருந்து பதவி விலகியது, அந்த பிரதமர் யார்? அடல்பிகாரி வாஜ்பாய்
89. இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே சிறிய மாநிலம் எது? கோவா
90. இந்திய அரசின் இலச்சினையில் எத்தனை சிங்க முகங்களைப் பார்க்க முடியும்? 3
91. தேசியக் கொடியின் வெள்ளைப் பகுதியிலுள்ள சக்கரம் எந்த வண்ணத்தில் இருக்க வேண்டும்?   நேவி நீலம்
92 இந்தியாவில் மிக நீளமான நதி? கங்கை 2525 கி.மீ நீளம்
93. கிரீன்விச் நேரத்துக்கும் இந்திய நேரத்துக்குமுள்ள வித்தியாசம் எவ்வளவு? 5-1/2 மணி
94. புத்த மதத்தை ஸ்தாபித்தது யார்? சித்தார்த்தர்
95. இந்தியப் பெண்கள் நெற்றியில் திலகமிட காரணம் என்ன? திலகம் இருந்தால் மனோவசியம் செய்யமுடியாது என நம் முன்னோர்கள் நம்பினார்கள்.
96. இந்தியாவை இந்துஸ்தான் என்கின்றனர், அப்படியென்றால் என்ன பொருள்? Land of Water என்று பாரசீக மொழிச் சொல்.

India is also referred to as Hindustan. What does the word “Hindustan” mean ?
Land of water in Ancient Persian
Country of Hindus in Ancient Arabic
Land of Hindu Kush mountains in Ancient Sanskrit
Land of plenty in Ancient Pali

97. சவுதி அரேபியாவில் மெக்கா நகரத்தில் பிறந்த இஸ்லாமிய கல்விமான் ஒருவர் இந்தியாவில் நேரு காலத்தில் கல்வி மந்திரியாக இருந்திருக்கிறார்? அவர் யார்? மெளலான அபுல்கலாம் ஆசாத்.
98. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் நம் நாடு இந்தியா எனப்பட்டது. அதற்கு முன்பு இந்த தேசத்துக்கு என்ன பெயர்? பாரதம், பாரதநாடு.
99. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பயந்தயத்தில் தங்கம் வென்ற வீரரின் பெயர்? மில்கா சிங்
100. துரோணாச்சார்யா விருது எந்த பிரிவினருக்குக் கொடுக்கப் படுகிறது? விளையாட்டு வீரர்களுக்கு
101. டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டு சம்பந்தப்பட்டது? டென்னிஸ்
102. துராண்ட் கோப்பை எந்த விளையாட்டுக்கு? கால்பந்து
103. வட இந்தியாவில் ஏற்பட்ட ஒரு புரட்சி அதில் நானா சாகேப், லக்ஷ்மிபாய் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த புரட்சியின் பெயர் என்ன? அது எந்த ஆண்டு நடந்தது?         சிப்பாய் கலகம்/முதல் சுதந்திரப் போர் 1857
104. மகாத்மா காந்தி சுதந்திரத்துக்காக1942இல் ஒரு இயக்கம் தொடங்கினார், அதன் பெயர் என்ன? Quit India
105. ஹோம்ரூல் இயக்கம் என்ற பெயரில் சுதந்திரத்துக்காக ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. அதை தொடங்கிய தலைவர் யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?   அன்னிபெசண்ட். அயர்லாந்து.
106. I.N.A. எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவர் யார்? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
107. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?    அம்பேத்கர்
108. மகாபாரதத்தில் குந்தி சூரியனை வேண்டி ஒரு குழந்தை பெற்று அதை கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள். அந்த குழந்தை ஒரு தேரோட்டியிடம் வளர்ந்து பெரியவனாகி துரியோதனனுடன் சேர்ந்து கொண்டது. அவன் யார்?           கர்ணன்.
109. மகாபாரதத்தில் குரு துரோணர் அர்ஜுனனுக்கு வில்வித்தை சொல்லிக் கொடுத்ததை ஒரு சிறுவன் பார்த்துக் கொண்டிருந்து அவனும் பெரும் வில்லாளியானான். அவனது கட்டை விரலை குரு தட்சிணையாகக் கொடுக்கும்படி குரு துரோணர் கேட்டார். அந்த வில்லாளி யார்?   ஏகலைவன்.
110. மகாபாரதப் போரில் சக்கரவியூகத்தை உடைத்தெறிந்து உட்புகுந்தான் ஒரு வீரன். ஆனால் அவனுக்கு வியூகத்தை உடைத்து வெளிவரத் தெரியாது. அதனால் அவன் கெளரவர்களால் கொல்லப்பட்டான். அவன் யார்? அபிமன்யூ.
111. மகாபாரதத்தில் பீமனுக்கும் இடும்பி எனும் அசுரப் பெண்ணுக்கும் பிறந்த மகன் போரில் துரியோதனன் படைவீரர்கள் பலரைக் கொன்று குவித்து தானும் மாண்டான். அவன் பெயர்?   கடோத்கஜன்.
112. எந்த அறிவியல் கூறுகள் தண்ணீரை உருவாக்குகிறது? ஆக்சிஜன் + ஹைட்ரஜன்.
113. பூமிக் கோளத்தில் உள்ள தண்ணீரில் எத்தனை சதவீதம் நம் பயன்பாட்டுக்குக் கிடைக்கிறது?    0.3% மட்டுமே
114. பூமிக் கோளத்தில் தண்ணீரின் பரப்பு எத்தனை சதவீதம்? 75% தண்ணீர் 25% தரைப் பகுதி.
115. நீரிலிருந்து எடுக்கப்படும் மின்சாரத்துக்கு என்ன பெயர்? Hydroelectric
116. மனித உடலில் எத்தனை சதவீதம் தண்ணீர் இருக்கிறது? 80 சதவீதம்
117. தண்ணீரின் கொதியளவு என்ன? எத்தனை டிகிரியில் கொதிக்கிறது? 100 Centigrade
118. ஹிந்து புராணங்களில் மழைக்குக் கடவுள் யார்? இந்திரன்
119. அமெரிக்கர்கள் விரும்பி ஆடும் ஆட்டம், மரத்தால் ஆன மட்டை, குதிரைத் தோலால் மூடிய பந்து?               பேஸ்பால்.
120. ஓட்டப் பந்தயத்தில் On your mark, get, set, go! என்றதும் அவர்கள் ஓடும் நேரத்தைக் கணக்கிட ஒரு கருவி உண்டு. அதன் பெயர் என்ன? Stop Watch.
121. ஓட்டப் பந்தய வீரர்கள் காலில் அணியும் பூட்சின் பெயர்?     Spikes.
122. ஒரு கால்பந்து போட்டியில் ஒரு குழுவில் எத்தனை வீரர்கள்? 11
123. பீலி (Pele) or (the Black Pearl) எனும் பெயர் கொண்ட ஒரு விளையாட்டு வீரர் இருக்கிறார். அவர் எந்த விளையாட்டில் சிறந்தவர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?                                      Football. Brazil.
அவருடைய இயற்பெயர் நீளமானது: Edson Arantes Do Nascimento.
124. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த நாயகன் யார்?
சசின் டெண்டுல்கர். 33 மேட்ச் 1732 ஓட்டங்கள்.
125. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்களை அடித்தவர், எந்த நாடு?   ஆஸ்திரேலியா. ரிக்கி பாண்டிங் 8
126. இந்திய நகரம் ஒன்றில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட மூன்று ஸ்டேடியங்கள் உண்டு. எங்கு?  மும்பை. அவை: ஜிம்கானா, வாங்கடே, பார்போர்ன் ஆகிய 3 ஸ்டேடியங்கள்.
127. கிரிக்கெட் மட்டை செய்யப் பயன்படும் மரத்தின் பெயர்: வில்லோ
128. டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது? டென்னிஸ்
129. கூடைப் பந்து விளையாட்டில் ஒரு குழுவில் எத்தனை வீரர்கள் விளையாட முடியும்? 5
130. செஸ் விளையாடும் போர்டில் மொத்தம் எத்தனை கட்டங்கள் உண்டு? 64
131. எந்த விளையாட்டில் Dribbling எனும் சொல் பயன்படுத்தப் படுகிறது? கூடைப்பந்து
132. இங்கிலாந்திலிருந்து பிரான்சு கடற்கரைக்கு இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர் யார்? மிகிர் சென்.
133. இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை டைகர் என்பார்கள். யார் அவர்?
டைகர் பட்டோடி. /மன்சூர் அலிகான் பட்டோடி
134. ஈஸ்டர் பண்டிகை எதைக் குறித்து கொண்டாடுகிறோம்? இயேசு உயிர்த்தெழுந்தார்
135. ஈஸ்டர் எந்த கிழமையில் வரும்? ஞாயிறு
136. குட் ஃப்ரைடே என்பது எதைக் குறிக்கும்?              இயேசு சிலுமையில் அறையுண்ட தினம்
137. ஜைன மதத்தை ஸ்தாபித்தவர் யார்?               மகாவீரர்
138. முஹரம் பண்டிகை யாருடைய இறப்புக்கு துக்கம் அனுஷ்டிக்கிறோம்? இமாம் ஹுசேன்
139. பஞ்சாபில் 'பைஷாகி' என்றும் அசாமில் 'Bohag Bihu' என்றும் கொண்டாடப்படும் பண்டிகை எதைக் குறித்து? பயிர் அறுவடை தொடங்கும் பண்டிகை.
140. இந்தியக் காடுகளிலும், பர்மாவிலும் 3000 ஆண்டுகளாக விளையும் பழங்கள் இது. ஐரோப்பாவுக்கு போர்த்துகீசியர்களால் 300 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்லப்பட்ட பழம் எது? மாம்பழம்
141. வெல்லம், இஞ்சி கலந்த இந்த பானம் ராமநவமியன்று படைப்பார்கள்? பானகம்.
142. Festival of Lights எனப்படும் இந்து பண்டிகை எது? தீபாவளி
143. கிருஷ்ண பரமாத்மா பிறந்த நாள் பண்டிகை எது? ஜன்மாஷ்டமி, ஸ்ரீஜயந்தி
144. நாகப் பாம்புகளை பூஜிக்கும் விழாவுக்கு என்ன பெயர்? நாகபஞ்சமி
145. கேரளத்தின் புகழ் மிகுந்த நாட்டிய நாடகம்?           கதக்களி
146. நமது தெருக்கூத்து போன்றதொரு கன்னட தெருக்கூத்து?        யட்சகானம்
147. யானைகளின் சரணாலயத்தின் பெயர்?              பேரியாறு
148. கேரளம் கோட்டக்கல்லில் பிரபலமான வைத்தியம், அதன் பெயர்? ஆயுர்வேதம்
149. ஓணம் பண்டிகையின்போது 'வள்ளம் களி' என்றொரு நிகழ்ச்சி, அது என்ன?  Back Watersஇல் பாம்பு படகு போட்டி
150. காவிரி நதி உற்பத்தியாகும் இடம் எது? எந்த மாநிலம்? தலைக்காவேரி, கர்நாடகம்.
151. பரப்பளவில் தமிழ்நாடு இந்தியாவில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது? 11ஆவது
152. தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன?     32
153. தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாவட்டம் எது?           விழுப்புரம்
154. தமிழ்நாட்டில் மிகச்சிறிய மாவட்டம் எது?            சென்னை
155. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைக் கட்டியவர் யார்?         மன்னன் குலசேகர பாண்டியன்
156. தமிழ்நாட்டில் முதன்முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார்?  சர் சி.வி.ராமன்
157. சங்கீத நாடக அகாதமி டில்லி ஒப்புதல் அளித்துள்ள நடன வகைகளில்
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடனம் எது?              பரத நாட்டியம்
158. கல்லணையைக் கட்டியவர் யார்?             கரிகால் சோழன்
159. தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் எது?            காளிதாஸ்
160. தமிழ்நாட்டில் உயரமான மலைச்சிகரம் எது? தொட்டபெட்டா/நீலகிரி
161. தமிழ்நாட்டில் பழமையான பறவைகள் சரணாலயம் எது? வேடந்தாங்கல்
162. தமிழ்நாட்டில் காவிரியில் கட்டப்பட்ட பழமையான அணை எது? மேட்டூர்
163. தமிழ் மொழிக்கு முதன்முதல் இலக்கணம் வகுத்தவர் யார்? அகத்தியர்
164. திருமுருகாற்றுப்படை இயற்றிய புலவர் யார்? நக்கீரர்
165. மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் எந்த அரசபரம்பரை? பல்லவா
166. வடக்கே சிப்பாய் கலகம் நடந்த ஆண்டு எது? 1857
167. சிப்பாய் கலகத்துக்கு முன்னதாகவே தமிழகத்தில் நடந்த சிப்பாய் கலகம் எங்கு நடந்தது?    1800இல் வேலூரில்
168. திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவர் யார்? சி.என்.அண்ணாதுரை
169. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவர் யார்? எம்.ஜி.ஆர்.
170. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் சின்னம் என்ன? கதிர் அரிவாள்
171. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் சின்னம் என்ன? அரிவாள், சுத்தியல், நட்சத்திரம்
172. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் எது? கை
173. பத்ம விபூஷன் விருது பெற்ற முதல் விளையாட்டு தமிழர் யார்? எந்த விளையாட்டு? விஸ்வநாதன் ஆனந்த்/செஸ்
174. சர் சி.வி.ராமன் எந்த ஆண்டில் நோபல் பரிசு பெற்றார். 1930
175. சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த முதல் தமிழ்ப் படம் எது? பராசக்தி 1950
176. உலகில் மிகப் பெரிய பறவை எது? நெருப்புக்கோழி
177. தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் எதைக் குறிக்கிறது.      தியாகம்
178. முதல் சுதந்திரப் போர் எங்கு யாரால் எந்த ஆண்டு தொடங்கியது? பாரக்பூர், மங்கள்  பாண்டே, 1857
179. 'சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்' சொன்னவர்? திலகர்
180. காங்கிரசின் முதல் தலைவரான முதல் பெண்மணி? அன்னிபெசண்ட்
181. 'சாரே ஜஹான் சே அச்சா' இயற்றியவர் யார்? முகமது இக்பால்
182. இந்திய தேசிய கீதம் எந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது?    24-1-1950
183. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீரர்?         ராகேஷ் ஷர்மா
184. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்?     அம்பேத்கர்
185. முதலை தன் குட்டியை எப்படித் தூக்கிச் செல்லும்? வாயால் கவ்விச் செல்லும்
186. ராஜ்யசபா உறுப்பினரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?    ஆறு 6
187. நாடாளுமன்ற தேர்தலில் நிற்க தகுதியுள்ள வயது?     25 வயது
188. 'வெள்ளி விழா' என்றால் எத்தனையாவது ஆண்டு?     25 ஆண்டுகள்
189. 'பொன் விழா' என்றால் எத்தனையாவது ஆண்டு?         50 ஆண்டுகள்
190. 'வைர விழா' என்றால் எந்த ஆண்டில்?                                60 ஆண்டுகள்
191. தென் இந்தியாவுக்கு தெற்கே உள்ள கடல்?            இந்துமகா சமுத்திரம்
192. தென் இந்திய கடற்கரையையும் இலங்கையும் பிரிக்கும் கடல்?      பாக் ஜலசந்தி
193. தமிழ்நாடு எனும் பெயர் வைக்கப்படுவதற்கு முன்பு என்ன பெயர்? சென்னை மாகாணம்
194. தமிழ்நாட்டின் தற்போதைய கவர்னர் பெயர் என்ன?        ரோசையா
195. கிரிக்கெட்டில் கோபாலன் டிராபி யார் யாருக்கிடையே நடக்கும்? இலங்கை - இந்தியா
196. சென்னை நகரின் ஒரு பகுதி சென்ற நூற்றாண்டில் தென்னந்தோப்பு
மிகுந்திருந்ததால் அந்த பெயரால் அழைக்கப்பட்டது,    அது எது? தென்னம்பேட்டை (தேனாம்பேட்டை)
197. சென்னைக்கு ஆருகில் டாங்க் தொழிற்சாலை உள்ள இடம்?    ஆவடி
198. தமிழர் ஒருவர் விம்பிள்டன் செமி ஃபைனல் சென்றார், அவர் யார்? ராமநாதன் கிருஷ்ணன்
199. முஹரம் பண்டிகையின் போது சென்னையில் ஆற்காடு நவாப்
மாளிகையில் முன்பெல்லாம் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படும்
அந்தப் பகுதிக்கு இப்போது என்ன பெயர்?    ஆயிரம் விளக்கு
200. கலைகள் கற்க சென்னையில் 1936இல் நிறுவப்பட்டது?     கலாக்ஷேத்ரா
201. தமிழ் நடிகை ஒருவரின் திறமையைப் பாராட்டி ரஷ்யா ஒரு
அஞ்சல் தலை வெளியிட்டது. யார் அவர்? நடிகை பத்மினி 

No comments: