பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 9, 2012

ஹிட்லர் காலத்திய ஜெர்மனி

அடால்ஃப் ஹிட்லர் காலத்திய ஜெர்மனி

அடால்ஃப் ஹிட்லர் மெள்ள மெள்ள தனது ஆட்சியை வல்லமை பொருந்தியதாக ஆக்கிக் கொண்டு 1939இல் உலக நாடுகளை விழுங்கவும் முயற்சி செய்திருக்கிறான். அவன் காலத்தில் அந்த சர்வாதிகாரிக்கு இருந்த ஆதரவு, மக்கட்கூட்டம், படைபலம், துணை நின்ற ராணுவத்தினர், அதிகாரிகள், பொது இடங்களில் அவனுக்கிருந்த ஆதரவு இவைகளை நம்மில் பலர் படங்களில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஓரளவு வரலாற்றில் அவை இடம் பெற்றிருந்தாலும், பின்னாளில் அவன் இழைத்த கொடுமைகள்தான் நம் நினைவில் இருந்ததே தவிர அவன் வானுயர்ந்து ஆட்சி செய்து மக்கள் ஆதரவோடு கொடிகட்டிப் பறந்த நாட்களை நாம் நினைவு கூர்வதில்லை. இப்போது அத்தகைய படங்களைக் காணும் வாய்ப்பை எனது நண்பர் சி.ஆர்.சங்கரன் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அவர் அனுப்பியுள்ள அந்த காட்சிகளை நான் மட்டும் பார்த்தால் போதுமா, நீங்களும் பார்க்க வேண்டாமா? ஆகையால் அவற்றை இங்கே தந்திருக்கிறேன். நண்பர் சி.ஆர்.சங்கரன் அவர்களுக்கும், அவர்களுக்குக் கொடுத்து உதவியவர்களுக்கும் நன்றி.

அமெரிக்காவின் லைஃப் பத்திரிகையைப் பற்றி நாம் அறிவோம். அந்தப் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் 1939, 40 ஆண்டு காலத்தில் ஜெர்மனிக்குப் போனவர் காணாமல் போய்விட்டார். பெர்லினில் கடைசியாக அவர் இருந்தது தெரிகிறது. அவர் வைத்திருந்த ரோலெக்ஸ் காமிராவோடு அவரும் காணவில்லை என்ற செய்திதான் லைஃப் பத்திரிகைக்குக் கிடைத்தது. ஆனால் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைப் பற்றிய விவரங்கள் கிடைத்திருக்கின்றன.

ரோலெக்ஸ் காமிராவில் அவர் எடுத்த புகைப்படங்கள் 6"x9" அளவுள்ளவை. பெர்லின் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த செவிலியர் ஒருவரிடம் இந்தப் படங்கள் கிடைத்தன. அவர் அவற்றை எடுத்துப் பத்திரமாக வைத்திருந்திருக்கிறார். அவர் காலமான பிறகு அவருடைய மகள் அவற்றை எடுத்துப் பார்த்துவிட்டு, அவை லைஃப் பத்திரிகைக்குச் சொந்தம் என்பதை அறிந்து கொண்டு அவற்றை அந்த பத்திரிகைக்காரர்களுக்குத் தெரிவித்திருக்கிறார். இந்தப் படங்களைப் பார்க்கும்போது நாம் அந்த இடத்தில் நின்றுகொண்டு அந்தக் காட்சிகளைப் பார்ப்பது போல உணர்வு ஏற்படுகிறது.

தமிழ் நாட்டில் அரசியல் வாதிகள் தங்கள் தலைவர்களுக்கு வைக்கும் ஃப்ளக்ஸ் போர்டுகள் போலவும், அலங்கரித்த தோரணவாயில்களைப் போலவும் ஜெர்மனியில் அந்த நாளில் ஹிட்லர் வரவேற்கப் பட்டிருக்கிறான். ஒரு சர்வாதிகாரியின் ஏற்றமும், தாழ்ச்சியும் நம் காலத்தில் நாம் கண்ட காட்சிகள் அல்லவா. இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு, அவன் காலம் எப்படியிருந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். நன்றி.


2 comments:

Unknown said...

ஆதிக்க வெறியும், அதிகாரத் திமிரும்
உலகையே தனது ஆளுமைக்குள் கொண்டுவரவேண்டும் என்ற பொல்லாதப் பேராசையும் கொண்டிருந்த அந்த கொடுங்கோலனின் கொடுமைக்கு சாட்சியாக இருக்கிறது முதல் படம்.

மற்ற படங்களில் காணும் மக்கள் கூட்டம் அவனுக்கு ஆறுதலுக்காக இருந்தாலும் கூட... படத்தில் காணும் நேர்த்தியான சாலையும், நிமிர்ந்த கட்டிடங்களும், அந்த நேர்த்தியான சாலைகளில் அக்காலத்தில் இருக்கும் சமிக்கை விளக்குகளும் நகர அமைப்பும் ஜெர்மானியர்களின் விஞ்ஞான, தொழிற், உழைப்பின் மேன்மையைக் காண்பிக்கிறது. உண்மையில் அரியப் படங்கள் அறியத் தந்தமைக்கு அனைவருக்கும் நன்றிகள்.

thanusu said...

அரிய புகைப்படங்களை கானதந்த அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

பல படங்கள் அவன் காலம் எப்படி இருந்தது என்பதைக்காட்டியது. இரண்டாவது படம் அவன் எப்படி இருந்தான் என்பதை காட்டியது,