பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, October 29, 2012

கரூர் ஆனிலையப்பர்அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம்

சிவாலயங்களில் சென்ற திங்கட்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது. கங்கைகொண்டசோழபுரம், தஞ்சை பெருவுடையார் ஆலயம் போன்ற பெரிய கோயில்களில் அவை விமரிசையாக நடைபெற்றன. பழம்பெரும் ஆலயமான கரூர் ஆனிலையப்பர் ஆலயத்திலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதோடு, அந்த விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் அன்று கரூர் ஆடல்வல்லான் நாட்டியாலயாவின் சார்பில் ஆலயத்தில் "பாரதியும் பரதமும்" எனும் தலைப்பில் பாரதியார் பாடல்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல்வல்லான் நாட்டியாலயாவின் ஆசிரியை திருமதி சுகந்தப் பிரியாவின் நட்டுவாங்கத்தோடு, நிகழ்ச்சியை அமைத்திருந்தார். பாரதியாரின் உள்ளத்தைத் தொடும் பல பாடல்களுக்கு குழந்தைகள் ஆடிய நடனம் மனம் கவர்வதாக இருந்தது. வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் எனும் பாடலுக்கு வெள்ளைத் தாமரை மீது, வெண்பட்டு உடுத்தி கையில் வீணையுடன் ஒரு குழந்தை நின்ற காட்சி மனத்தை விட்டு அகலாது. ஓம் சக்தி ஓம், பராசக்தி ஓம் சக்தி ஓம் என்று சின்னஞ்சிறு குழந்தைகள் கண்கள் சிவக்க பராசக்தியை வேண்டிய காட்சி அருமை. ஆடல்வல்லான் நாட்டியாலயாவின் நிகழ்ச்சி, கரூர் ஆனிலையப்பரின் அன்னாபிஷேக நிகழ்ச்சிக்கு மகுடமாக விளங்கியது. வாழ்க வளர்க பரதக் கலை. திருமதி சுகந்தப் பிரியாவுக்கும் அவரது குழுவினருக்கும், விழா அமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
                                             மத்தியில் இருப்பவர் சுகந்தப்பிரியா





No comments: