திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
நடத்தும்
மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா
திருவையாறு பாரதி இயக்கத்தின் 35ஆம் ஆண்டு விழா
அன்புடையீர்!
வணக்கம். மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டியும், திருவையாறு பாரதி இயக்க 35ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான மாணவர் கருத்தரங்கம் திருவையாற்றில் நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் படிப்பதற்கு கீழ்கண்ட தலைப்புகளில் ஏதாவதொன்றில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவற்றிலிருந்து சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை எழுதியவர்களே விழாவில் கலந்து கொண்டு படிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்படாத மற்ற கட்டுரையாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இக்கருத்தரங்கில் கல்லூரி மாணவ மாணவியர் பெருமளவில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கட்டுரைத் தலைப்புகள்:-
1. மகாகவி பாரதியாரின் நிறைவேறாத ஆசைகள்.
2. மகாகவி பாரதியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள்
3. மகாகவி பாரதியாரின் மரபும் புரட்சியும்
4. மகாகவி பாரதியாரின் இசைக் கோட்பாடுகள்
கருத்தரங்க நிகழ்வுகள்
இடம்: திருவையாறு அரசர் கல்லூரி வளாகம், திருவையாறு.
தலைமை: திரு ஆராவமுதன், முதல்வர், அரசர் கல்லூரி, திருவையாறு
நேரம்: காலை 10-00 மணி முதல் 4-00 மணி வரை.
நிறைவு விழா: மாலை 4-00 மணிக்கு.
சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை:
முனைவர் இரா. காமராசு, எம்.ஏ.,பி.எட்.,எம்.பிஃல்.,பி.எச்.டி.,
தமிழிலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
பாரதி இயக்கத்தின் 35ஆம் ஆண்டு விழா
இடம்: சரஸ்வதி அம்பாள் பள்ளி, மேட்டுத் தெரு, திருவையாறு.
நாள்: 25-12-2012 செவ்வாய்க்கிழமை மாலை 4-00 மணி.
சிறப்புச் சொற்பொழிவு:
திரு சி.மகேந்திரன்,
"Thamarai" Editor, Chennai.
2 comments:
நன்றி.
மகாகவியின் பிறந்தநாள் கொண்டாட்டம் மகிழ்வைத் தருகிறது.
அதே நேரம் தோழர். திருவாளர். சி.மகேந்திரன் அவர்களோடு பேசி அளாவிய எனது சிறுவயதுப் பருவமும் ஞாபகம் வருகிறது.
வாழ்க! வளர்க!! பாரதியின் புகழ்!!!
Post a Comment