பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, December 31, 2012

சின்னஞ்சிறு மலருக்கு அஞ்சலி

டெல்லி கொடூரம்.

புது டெல்லியில் ஓடும் பேருந்தில் மனித உருவில் வந்த சில மிருகங்களால் சீரழிக்கப்பட்ட அந்த சின்னஞ்சிறு பெண் தன் தாய் மண்ணில் உயிரை விடாமல் அன்னிய மண்ணுக்குக் கொண்டு சென்று அங்கு உயிரை விடும்படி செய்துவிட்டார்கள். இந்தியாவின் அவமான நிகழ்ச்சியில் தன் உயிரை  இழந்துவிட்ட அந்த சின்னஞ்சிறு மலருக்கு அஞ்சலி செலுத்துவோம். இப்போது நாம் வேறு என்ன செய்ய முடியும்?


2 comments:

  1. கண்களில் உருண்டோடும் கண்ணீரைத் தவிர அந்தப் பெண்ணுக்கு நாம் என்ன தந்து விட முடியும்?. நெஞ்சம் நிறைய வாழ்வைப் பற்றிய வண்ணக் கனவுகளோடு சுற்றிப் பறந்த பட்டாம்பூச்சியை கருக வைத்தவர்களுக்கு தண்டனை வழங்கினால் மட்டும் போதாது. பெண்மையைத் தெய்வமாகக் கும்பிடும் மண்ணில் அவளை மனித உயிராகக் கூட மதிக்காத இந்தக் கொடுமை நிரந்தரமாக நீங்க வேண்டும். அந்தப் பெண்ணின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. இந்த மலரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete

You can give your comments here