பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, December 11, 2012

பாரதி பதினாறு!

இன்று மஹாகவி பிறந்த நாள்! அவர் ஆசியைக்கோரி..........

                     பாரதி பதினாறு!

”கவிதை மேதை” பார்புகழ் பாரதி
கருணை வடிவாய் நிற்பவன் பாரதி!

’கவிதா மூர்த்தி’யாய்ச் சிறந்தவர் பாரதி
கவிஞர்க்குப் பாதை வகுத்தவர் பாரதி!

காந்தியைக் குருவாய்க் கொண்டவர் பாரதி
காலத்தைக்  கடந்து நிற்பவர் பாரதி!

பற்பல மொழிகள் பயின்றவன் பாரதி
சொற்களால் உலகை வென்றவன் பாரதி!

எதிர்வரும் காலம் கண்டவன் பாரதி
என்றும் மனத்தில் அமர்ந்தவன் பாரதி!

கற்பனை வளத்தில் சிறந்தவன் பாரதி
மனிதனை நன்றாய் அறிந்தவன் பாரதி!

கவிதை வானில் மறையா பாரதி
மக்கள் எவரும் மறவா பாரதி!

அகிலம் அனைத்தும் உணர்ந்தவன் பாரதி
உலகில் அனைவரும் போற்றும் பாரதி!பாரதித் தொண்டன்

என் வி சுப்பராமன்

2 comments:

 1. வாழ்க பாரதி! வாழ்க பாரதம்!

  ReplyDelete
 2. எத்தனை மரியாதையாக அவனை மொழியத் துணிந்தாலும் போகப் போக அவனின் மீது இருக்கும் அன்பு உரிமை நெருக்கம் ஒரு கடவுளைப் போலவே அவனையும் ஒருமையிலே அலைச் செய்து விடுகிறது. அதனால் அவனை எப்போதும் ஒருமையிலே தான் அழைக்கிறேன். அது எனது உரிமையெனவும் நினைக்கிறேன்.

  ///எதிர்வரும் காலம் கண்டவன் பாரதி
  என்றும் மனத்தில் அமர்ந்தவன் பாரதி!///

  மிகவும் சத்தியமானப் பொருத்தமான வரிகள்!!
  ஆம், அவன் நான்காவது பரிமாணமான (4D / Time travelling)காலத்திலும் பயணம் செய்திருக்கிறான் என்பதை அவனை ஆராய்வோர் காணலாம்.

  அருமையானப் பாடல் ஆக்கிய பகிர்ந்த உங்களிருவருக்கும் எனது நன்றிகள் ஐயா!

  ReplyDelete

You can give your comments here