பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, October 26, 2012

அன்னாள் ஜனாதிபதியுடன் பின்னாள் ஜனாதிபதி

அன்னாள் ஜனாதிபதியுடன் பின்னாளில் ஜனாதிபதியாக வரப்போகிறவரும்.

சற்று விசித்திரமாக இருக்கிறதல்லவா? இருக்காதா பின்னே! அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடியை அவர் காலத்தில் மாணவனாக இருந்தவரும், பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதியாக வந்தவருமான கிளின்டன் சந்தித்துக் கை குலுக்கிய அரிய புகைப்படம் இதோ. இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் காட்டும் வேறு புகைப்படங்கள் இருந்தால் வெளியிடலாமே!


Wednesday, October 24, 2012

அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள கரூர்


இந்த நகரம் திருச்சிக்கு மேற்கே அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள அழகான நகரம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் எறிபத்த நாயனாரும், புகழ்ச்சோழ நாயனாரும் சிவபெருமான் கருணைக்கு ஆளான ஊர். சேர நாட்டின் தலைநகர் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இங்குள்ள புகழ்பெற்ற ஆநிலையப்பர் ஆலயம் ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்ற நகரம் கரூர். பழம்பெரும் நகராட்சி எனும் புகழ் வாய்ந்தது இந்த ஊர். திருச்சி மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக இருந்த இந்தப் பகுதி 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. சங்க காலத்திலிருந்தே புகழ்வாய்ந்த பகுதியாக விளங்கியது இந்த ஊர். இங்கிருந்து வடக்கில் காவிரி ஆறு ஓடுகிறது.

இந்த ஊரை பழங்காலத்தில் வஞ்சி என்றும் கருவூர் என்றும் அழைப்பர். ஆதிபுரம், திருஆநிலை, பசுபதீச்சரம், கருவைப்பட்டினம், வஞ்சுளாரண்யம், கர்ப்பபுரம், பாஸ்கரபுரம், முடிவழங்கு வீரசோழபுரம், ஆடகமாடம் இப்படிப் பல பெயர்களைச் சொல்லுகிறார்கள். இந்நகரின் மத்தியில் ஓடும் ஆம்பிராவதி (அமராவதி) நதியை ஆண்பொருனை என்று சங்க நூல்கள் கூறுகின்றன. புராணங்களின்படி பிரம்மன் தனது படைப்புத் தொழிலை இங்குதான் தொடங்கினானாம். கருவூர்த்தேவர் எனும் சித்தர் இங்கு தோன்றினார். இவருடைய திருவிசைப்பா பன்னிரு திருமுறைகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் காலத்தில் இந்த சித்தர் வாழ்ந்ததாகத் தெரிகிறது.

கரூர் நகராட்சி 1874இல் துவக்கப்பட்டது. 1969இல் இது முதல் நிலை நகராட்சியாக ஆனது. 1988இல் தேர்வுநிலை நகராட்சியாக ஆனது. சென்னைக்குத் தென்மேற்கே 371 கி.மீ. தூரத்தில் உள்ளது கரூர். திருச்சி ஈரோடு ரயில் மார்க்கத்திலுள்ளது கரூர் நகரம். இப்போது சேலம் திண்டுக்கல் மார்க்கமும் இங்கு சந்திக்கிறது. கரூர் நகர எல்லைக்குள் 2011 கணக்கெடுப்புபடி மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் மேல்.

கரூரில் எங்கு திரும்பினாலும் கைத்தறித் தொழில்தான் நிரம்பியிருக்கும். வீட்டுக்கு வீடு தறி. பெட்ஷீட், பெட் ஸ்ப்ரெட், டவல், பனியன் என்று கைத்தறித் தொழில் வளம் பெருக்கும் ஊர். ஜெய்ஹிந்த் டெக்ஸ்டைல்ஸ் போன்ற பல பழைய கம்பெனிகள் பல காலமாகத் தொழில் புரிந்து வருகின்றன. பின்னி கம்பெனியில் கிடைத்த கருப்பு பிளாங்கெட் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டன. இவ்வூரிலிருந்து ஏற்றுமதியாகி வெளிநாட்டு செலாவணி ரூ.6000கோடிக்கும் மேல் ஒவ்வோராண்டும் கிடைக்கிறது. கின்னிங் மில், நூல் நூற்பு மில், சாயப்பட்டறைகள் இவைகளில் சுமார் 3 லட்சம் பேர் பயனடைகிறார்கள்.

கரூரில் இருக்கும் வீவிங் தொழிற்சாலைகளை கணக்கில் எடுக்க முடியாத அளவு அதிகம். கரூர் வைஸ்யா வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கி ஆகியவற்றின் தலைமையகம் இங்குதான். ஆதி வி.சூரியநாராயணா, ஆதி வி.கந்தசாமி குடும்பத்தினர் வங்கிகள், வியாபாரம் ஆகிய துறைகளில் தலைசிறந்தவர்களாக இருக்கின்றனர். எம்.கே. கே.பி. எனப்படும் எம்.காளியண்ண கவுண்ட, கே.பெரியசாமி கவுண்டர் இவர்களின் கைத்தறி நிலையம் புகழ் பெற்றது. கோபுரம் மார்க் பனியன்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டன. இங்கு நகரின் நடுநாயகமாக இருக்கும் பசுபதீஸ்வரர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

கரூரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள புகளூரில் பாரி கம்பெனியின் சர்க்கரைத் தொழிற்சாலையும், தமிழக அரசின் காகித ஆலையும் இருக்கிறது. பேருந்துகள் கட்டும் தொழிலும் இங்கு உண்டு. எல்.ஜி.பி. கம்பெனி முதன்முதலில் இந்தத் தொழிலை இங்கு ஆரம்பித்தது. இப்போது பல தொழிற்சாலைகள் பஸ் பாடி கட்டும் தொழிலைச் செய்து வருகின்றன. கரூரை அடுத்த புலியூரில் செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை இருக்கிறது.

இவ்வூரில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் தவிர, கம்பம் ஆற்றில் விடும் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் மாரியம்மன் கோயில், அபயப்பிரதான ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலயம், தாந்தோன்றிமலை ஸ்ரீ வெங்கடரமணசுவாமி ஆலயம், வெண்ணை மலை முருகன் ஆலயம், வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் இவை இங்கு புகழ்பெற்ற கோயில்களாகும்.

கரூருக்கு அருகிலுள்ள நெரூரில்தான் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி அடைந்தத் தலம். இங்கு காவிரிக் கரையில் அவரது சமாதி கோயில் இருக்கிறது. நெரூர் அக்கிரகாரம் அழகான பகுதி. இரு வரிசையில் வீடுகளும், நடுவில் ஒரு வாய்க்காலும் போகிறது. சதாசிவ பிரம்மேதிரர் ஆராதனையின் போது இவ்விரு கரைகளிலும் உட்கார்ந்து பக்தர்கள் உணவு உண்டபின் அந்த இலைகளில் பக்தர்கள் அங்கப் பிரதக்ஷணம் செய்வது அரிய காட்சி. பழம்பெரும் ஆயுர்வேத மருத்துவரும், பாலசஞ்சீவினி எனும் குழந்தைகளுக்கான கட்டி வைத்தியத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ராமசர்மா அவர்களின் மருந்து உற்பத்தி இங்குதான் நடைபெறுகிறது.

கரூரிலும் சுற்று வட்டாரத்திலும் பல கல்விச்சாலைகள் உள்ளன. பொறியியல், கலைக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் போன்ற பல இப்பகுதியில் உண்டு. பழம்பெரும் கரூர் நகரம் வளமும், செல்வமும் நிறைந்த பகுதி.











Tuesday, October 23, 2012

காவிரிக் கரையில் அமைந்துள்ள மயிலாடுதுறை


காவிரியில் துலாகட்டம்

மயிலாடுதுறை, மாயூரம், மாயவரம் என்றெல்லாம் புகழ்பெற்ற தமிழகத்தின் காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். தென்னாட்டின் காசி எனப் புகழ் பெற்ற ஊர். இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலாஸ்னானமும், மாதம் முழுதும் மயூர நாதசுவாமி நகர்வலம் வந்து 'தீர்த்தம்' வழங்கும் விழாவும் இனிமையானவை. இவ்வூர் அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்திலும், தற்போது பிரிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்திலும், சென்னை - ராமேஸ்வரம் இடையிலான ரயில்வழியின் மெயின் லைன் என வழங்கப்படும் வழித்தடத்திலும் உள்ள நகரம். இந்த ஊர் பற்றிய ஒரு சில விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மயூரநாதசுவாமி ஆலய கோபுரம்

சென்னைக்குத் தெற்கே 280 கி.மீ. தூரத்தில் மெயின் லைனில் உள்ளது இவ்வூர். இவ்வூருக்குக் கிழக்கே சில கல் தொலைவில் உள்ளதுதான் வரலாற்றுப் புகழ்மிக்க தரங்கம்பாடி. முதல் அச்சு இயந்திரம் கொண்டுவரப்பட்டு, டச்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஊர் தரங்கம்பாடி. தரங்கம் என்றால் அலை, இவ்வூர் கடலில் எழும் அலைகளின் ஓசையையொட்டி இப்பெயர் பெற்றது இவ்வூர்.
காவிரிக்கரையில் வேதபாடசாலை

அட்டவீரட்டான சிவத் தலங்களில் ஒன்றான திருக்கடவூர் இங்குதான் உள்ளது. மார்க்கண்டன் எனும் சிறுவனைக் காக்க எமனைச் சிவபெருமான் தன் காலால் உதைத்துக் கொன்ற தலம் இது.
அமிர்தகடேஸ்வரர் என்பது சுவாமியின் பெயர், அபிராமியம்மை அம்பாளின் திரு நாமம்.
துலாகட்டம் தூரத்துக் காட்சி

மயிலாடுதுறை இப்போது ஒரு பாராளுமன்ற தொகுதியாக உள்ளது. மணி சங்கர் ஐயர் அவர்கள் இந்தத் தொகுதியில் முன்பு வெற்றி பெற்று இந்தத் தொகுதிக்குப் பல நற்பணிகளை செய்துள்ளார். மக்களின் அன்பையும் பெற்றிருந்தார்.
வரலாற்றுப் புகழ்பெற்ற நகராட்சி மே.நி.பள்ளி

மயூரம் என்றால் மயில். இந்த ஊரின் தல புராணம் அம்பாள் மயிலாக இருந்து தவம் புரிந்ததாகக் கூறுவதால், அந்த மயில் ஆடும் காவிரிக் கரை என்பதால் இவ்வூர் மயிலாடுதுறை என வழங்கப் படுகிறது. ஆடுதுறை என்றும், குரங்காடுதுறை என்றும் ஊர்கள் உள்ளன. தட்ச யக்ஞம் எனும் தட்சன் செய்த யாகம் குறித்தும், அதற்கு அவன் தன் மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை. தட்சனின் மகள் தாட்சாயினியை யாகத்துக்குப் போக சிவன் அனுமதிக்கவில்லை. தன்னை அவமதித்த அந்த தட்சனின் யாகத்தை நடைபெறாமல் தடுக்க சிவன் வீரபத்திரன் எனும் சிறு தேவதையை அனுப்புகிறார். கணவனின் ஆணையை மீறி தாட்சாயினி தந்தை செய்த யாகத்துக்குச் சென்று விடுகிறாள்.
மயிலாடுதுறை ரயில் நிலையம்

சிவனால் அனுப்பப்பட்ட வீரபத்திரன் தட்சனின் யாகத்தைக் கலைக்கும் போது ஒரு மயில் அடிபட்டுவிடுகிறது. அது ஓடி தாட்சாயனியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறது. எல்லாம் முடிந்தபின் கணவனின் ஆணையை மீறியதற்காக தாட்சாயினி வருந்துகிறாள். பாவ விமோசனம் தேடி தீ மூட்டி அதில் இறங்குகிறாள். அப்படி தீயில் மாயும் முன்பாக தன்னிடம் அடைக்கலமடைந்த அந்த மயிலை நினைக்கிறாள். அதனால் தாட்சாயினி ஒரு மயிலாகப் பிறக்கிறாள்.
நகரத்தின் நடுவில் மணிக்கூண்டு

மயிலாகப் பிறந்த தாட்சாயினி பலகாலம் சிவனை நோக்கித் தவம் புரிகிறாள். அவள் தவத்தை ஏற்று சிவபெருமான் பார்வதியை மீண்டும் ஏற்றுக் கொள்கிறார். பார்வதி தேவி மயிலாக இருந்து சிவனை நோக்கித் தவம் செய்த இடமாதலின் இவ்வூர் மயூரம் என ஆயிற்று. இவ்வூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் மயூர நாதர் என்றும் பெயர் பெருகிறார். அன்னைக்கு அபயப்பிரதாம்பாள், அபயாம்பிகா,அஞ்சல நாயகி, அஞ்சலை என்றெல்லாம் பெயர். மயிலுக்கு அபயம் கொடுத்ததால் இந்தப் பெயர்கள் வந்தன.
ரயில் நிலைய நடைமேடை ஒரு காட்சி

மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இந்த ஊரில் வசித்தார். தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாத ஐயர் இவ்வூரில் மேற்படி ஆசானிடம் தமிழ் பயின்றார். மாயூரத்தில் முன்சீபாக இருந்த வேதனாயகம் பிள்ளை இவ்வூர்க்காரர். பிரதாபமுதலியார் சரித்திரம் எனும் முதல் தமிழ் புதினம் படைத்தவர் இவர். கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி இவ்வூருக்கருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவர், மாயூரம் முனிசிபல் உயர் நிலைப் பள்ளியில் படித்தவர். கர்னாடக இசை வித்வான் மதுரை மணி ஐயர் இவ்வூரில் பல காலம் வசித்தவர். மாயூரம் ராஜம் ஐயர், மாயூரம் கோவிந்தராஜப் பிள்ளை ஆகியோர் இவ்வூர்க்காரர்கள் என்பதில் இசைப்பிரியர்களுக்குப் பெருமை.

தமிழிசைக்குப் பெருமை சேர்த்தவரும், நந்தனார் சரித்திரம் படைத்தவருமான கோபாலகிருஷ்ண பாரதியார் வசித்த ஊர். இவ்வூருக்கு அருகிலுள்ள ஆனைதாண்டவபுரம் என்பது இவர் ஊர். சைவ மடங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ள ஊர் மாயூரம். இந்த ஊரின் ஒரு பகுதியும், ரயில் நிலையம் அமைந்துள்ள கூறை நாடு எனும் பகுதி கைத்தறி சேலைகளுக்குப் பெயர் பெற்ற இடம். ஐப்பசி மாதத்தில் இவ்வூர் காவிரியில் கங்கையும் சேர்ந்து வருவதாக புராணங்கள் சொல்வதால் அந்த மாதம் முழுவதும் காவிரி ஸ்னானம் புனிதமானது.
காவிரியின் வடகரை தென்கரையை இணைக்கும் நடைபாலம்

இவ்வூரில் உள்ள கல்வித் தாபனங்கள் பெருமை வாய்ந்தவை. தரமானவை. மாயூரம் அன்பனாதபுரம்  வகையறா குடும்பத்தாரின் ஏ.வி.சி.கல்லூரி, பொறியியல் கல்லூரி, மாயூரம் நகராட்சி மேல் நிலைப் பள்ளி, தேசிய மேல் நிலைப் பள்ளி, அரசினர் மகளிர் மேல் நிலைப் பள்ளி, செயிண்ட் பால் மேல் நிலைப் பள்ளி முதலான கல்வி நிலையங்களும், தருமபுரம் ஆதீனம் கல்லூரி, தமிழ்க் கல்லூரி முதலியனவையும் சிறப்பான இடம் பெற்றவை.
திருவிழந்தூர் பெருமாள் கோயில்

இவ்வூரை அடுத்த திருவிழந்தூர் வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு பள்ளிகொண்ட பெருமானை தரிசிக்க வெகு தூரங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருவார்கள். ஐப்பசி மாதம் இந்த ஆலயத்திலும் மாதம் முழுதும் திருவிழா நடைபெறும். ஏவிசி. திருமண மண்டபம், ஏவிசி சத்திரங்கள் அனைத்தும் இப்பகுதியில் உள்ளன.

மாயூரம் எனப் பெயர் வரக் காரணமான மயில்

மாயூரத்துக் காரர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வது என்ன தெரியுமா? "ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது" என்பது. அது எல்லா காலத்துக்கும் பொருந்துமா, அல்லது 'அந்த'க் காலத்துப் பழமொழியா தெரியாது. எனினும் மாயூரத்துக் காரர்களுக்குத் தங்களைப் பற்றிய பெருமை எந்தக் காலத்திலும் மாறாமல் இருக்கும் என்பது துணிபு.

Saturday, October 20, 2012

நவராத்திரி கொலு பொம்மையின் தத்துவம்


C R Sankaran
11:59 (0 minutes ago)
---------- Forwarded message ----------
From: Seetha And Kishore <rbkseetha@yahoo.com>
Date: 2012/10/21
Subject: Fw: Fwd: Fw: Fwd: நவராத்திரி கொலு பொம்மையின் தத்துவம்! -o:

----- Forwarded Message -----
From: kv chari <kvchari@gmail.com>


ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குருசுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக்களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து,உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான். அந்த வேண்டுதலின் பயனாகஅந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டுபண்ணினான். "ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னைபூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும்அளிப்பேன்...' என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதாமகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின்இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான். எனவே, அம்பிகைக்கு பிடித்தபொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில்,குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன்படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்கவேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள்அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள்அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.1வது படி - ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)2வது படி - இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)3வது படி - மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)4வது படி - நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)5வது படி - ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)6வது படி - ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)7வது படி - மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.8வது படி - தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.9வது படி - பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி,செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.***கொலுபடி தத்துவம் !கொலுவில் கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு,பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும்; அடுத்த மூன்று படிகளில்வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்;மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்வ குணத்தை அடையும்வழியை நமக்குக் காட்டுகின்றன.***சரஸ்வதி வழிபாட்டின் பலன்!வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள்.அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனியவாழ்க்கையைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும், "சுவாகா' என்றபதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம்பெருகும். ***நங்கையருக்கு நலம் தரும் நவராத்திரி!சக்தியை சித்திரை மாதத்தில் வழிபடுவது, "வசந்த நவராத்திரி!' புரட்டாசிமாதத்தில் வழிபடுவது, "பாத்ரபத நவராத்திரி' அல்லது "சாரதா நவராத்திரி.சாரதா நவராத்திரியை கொண்டாடுவது எல்லாருக்கும் சிறப்பு தரும்.நவராத்திரிவழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர். சுமங்கலி பெண்கள்பெறுவது மாங்கல்ய அனுகூலம். மூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மனநிறைவு, திருப்தி பெறுவர். புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி,விஜயதசமியில் முடிகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால், "தசரா' என்றுஅழைக்கின்றனர். நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோதுர்க்கை, ஜூவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீபதுர்க்கை, ஆகரி துர்க்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.அஷ்டலட்சுமி: ஆதிலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி,சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி. இவை லட்சுமியின்அம்சங்கம்.அஷ்ட சரஸ்வதி; வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீத்தீஸ்வரி, அந்தரிட்சசரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி. இவர்கள் சரஸ்வதியின்அம்சங்கள். உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னததத்துவம். அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்துஇருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம்.விரதம் இருக்கும் பக்தர்கள் (பெண்கள்) அன்னையை பல வேடங்கள் புனைந்துவழிபாடு செய்கின்றனர்.__,_._,___

--
தமிழா தமிழா..
மனம் மலரட்டும்.. மகிழ்ச்சி பொங்கட்டும்...

Wednesday, October 17, 2012

வினோதத் தோற்றங்கள்

உலக அரசியல் தலைவர்களின் வினோதத் தோற்றங்கள்.

பொதுவாக அரசியல் தலைவர்கள் பொது இடங்களில் தோன்றும் போது மனதுக்கு இதமளிக்கும் விதத்தில் நன்றாக உடையணிந்து, முகத்தை மலர்ச்சியோடு வைத்துக் கொண்டு மக்கள் மனங்களில் இடம்பிடிக்கும் நோக்கத்தோடு நாகரிகமாகத்தான் நடந்து கொள்வார்கள். அவர்களும் மனிதர்கள்தானே! சில சந்தர்ப்பங்களில் அவர்களும் விதவிதமான முகபாவத்தோடும் காட்சியளிப்பது உண்டு. அப்படிப்பட்ட காட்சிகளைப் பொதுவாக நாம் பார்க்க முடிவதில்லை. இதோ இப்போது கீழே உள்ள இருபது படங்களில் பாருங்கள். உலகத் தலைவர்கள் பலர் பலவித முகபாவக் காட்சிகளோடு. படங்களை அனுப்பியவர் ராஜ் என்பவர் யாஹூ குழுமத்தின் வழியாக, அவருக்கு நமது நன்றிகளை உரித்தாக்குவோம்.
       ஒபாமாவும் மிச்செல் ஒபாமாவும். அட! என்னய்யா நாங்க   சாப்பிடறதை அப்படி வேடிக்கைப் பாக்கறீங்க.  





Tuesday, October 9, 2012

ஹிட்லர் காலத்திய ஜெர்மனி

அடால்ஃப் ஹிட்லர் காலத்திய ஜெர்மனி

அடால்ஃப் ஹிட்லர் மெள்ள மெள்ள தனது ஆட்சியை வல்லமை பொருந்தியதாக ஆக்கிக் கொண்டு 1939இல் உலக நாடுகளை விழுங்கவும் முயற்சி செய்திருக்கிறான். அவன் காலத்தில் அந்த சர்வாதிகாரிக்கு இருந்த ஆதரவு, மக்கட்கூட்டம், படைபலம், துணை நின்ற ராணுவத்தினர், அதிகாரிகள், பொது இடங்களில் அவனுக்கிருந்த ஆதரவு இவைகளை நம்மில் பலர் படங்களில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஓரளவு வரலாற்றில் அவை இடம் பெற்றிருந்தாலும், பின்னாளில் அவன் இழைத்த கொடுமைகள்தான் நம் நினைவில் இருந்ததே தவிர அவன் வானுயர்ந்து ஆட்சி செய்து மக்கள் ஆதரவோடு கொடிகட்டிப் பறந்த நாட்களை நாம் நினைவு கூர்வதில்லை. இப்போது அத்தகைய படங்களைக் காணும் வாய்ப்பை எனது நண்பர் சி.ஆர்.சங்கரன் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அவர் அனுப்பியுள்ள அந்த காட்சிகளை நான் மட்டும் பார்த்தால் போதுமா, நீங்களும் பார்க்க வேண்டாமா? ஆகையால் அவற்றை இங்கே தந்திருக்கிறேன். நண்பர் சி.ஆர்.சங்கரன் அவர்களுக்கும், அவர்களுக்குக் கொடுத்து உதவியவர்களுக்கும் நன்றி.

அமெரிக்காவின் லைஃப் பத்திரிகையைப் பற்றி நாம் அறிவோம். அந்தப் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் 1939, 40 ஆண்டு காலத்தில் ஜெர்மனிக்குப் போனவர் காணாமல் போய்விட்டார். பெர்லினில் கடைசியாக அவர் இருந்தது தெரிகிறது. அவர் வைத்திருந்த ரோலெக்ஸ் காமிராவோடு அவரும் காணவில்லை என்ற செய்திதான் லைஃப் பத்திரிகைக்குக் கிடைத்தது. ஆனால் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைப் பற்றிய விவரங்கள் கிடைத்திருக்கின்றன.

ரோலெக்ஸ் காமிராவில் அவர் எடுத்த புகைப்படங்கள் 6"x9" அளவுள்ளவை. பெர்லின் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த செவிலியர் ஒருவரிடம் இந்தப் படங்கள் கிடைத்தன. அவர் அவற்றை எடுத்துப் பத்திரமாக வைத்திருந்திருக்கிறார். அவர் காலமான பிறகு அவருடைய மகள் அவற்றை எடுத்துப் பார்த்துவிட்டு, அவை லைஃப் பத்திரிகைக்குச் சொந்தம் என்பதை அறிந்து கொண்டு அவற்றை அந்த பத்திரிகைக்காரர்களுக்குத் தெரிவித்திருக்கிறார். இந்தப் படங்களைப் பார்க்கும்போது நாம் அந்த இடத்தில் நின்றுகொண்டு அந்தக் காட்சிகளைப் பார்ப்பது போல உணர்வு ஏற்படுகிறது.

தமிழ் நாட்டில் அரசியல் வாதிகள் தங்கள் தலைவர்களுக்கு வைக்கும் ஃப்ளக்ஸ் போர்டுகள் போலவும், அலங்கரித்த தோரணவாயில்களைப் போலவும் ஜெர்மனியில் அந்த நாளில் ஹிட்லர் வரவேற்கப் பட்டிருக்கிறான். ஒரு சர்வாதிகாரியின் ஏற்றமும், தாழ்ச்சியும் நம் காலத்தில் நாம் கண்ட காட்சிகள் அல்லவா. இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு, அவன் காலம் எப்படியிருந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். நன்றி.