1967 இல் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ்
நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 45 தனித் தொகுதிகளில் இருந்தும்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
* (1954-1963) முதல் ஒன்பது வருடங்களாக முதல்வராக
இருந்த காமராஜர் தான் வகித்திருந்த முதலமைச்சர் பதவியில் இருந்து
தாமகவே விலகி 1964 இல்அவர் அகில இந்திய காங்கிரசு
கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று கொண்டு டெல்லி சென்று விட்டார்.
* அவர் இடத்தில் எம்.பக்தவத்சலம்
முதலமைச்சராக பதவி யேற்றார். 1964 இல் தமிழகத்தில் கடும் உணவுத்
தட்டுப்பாடு பஞ்சம் ஏற்பட்டது. அதனால் காங்கிரஸ் அரசு மக்களின்
நம்பிக்கையின்மையையும் எதிர்ப்பையும் பெற்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இயலாத
அரசைக் கண்டித்து திமுக போராட்டங்களை நடத்தியது.[2]
* 1964 ஆம் ஆண்டு பிரதம மந்திரியாக
இருந்த ஜவஹர்லால் நேரு காலமானார். அவருடைய மரணத்திற்கு பிறகு இந்தியா
மற்றும் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி பலமான சரிவை சந்தித்து.
* நேருவுக்குப் பிறகு அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்
பதவிக்கு வந்தார். அவர் பிரதமராக ஆன பின்பு 1965 ஆம் ஆண்டு இந்தி கட்டாயமாக்கபடவேண்டும்.
என்று அவர் கொண்டு வந்த சட்டம் தமிழகத்தில் இந்தி தினிப்பு போராட்டமாக தமிழகத்தில்
திமுக தலைமையில்
மாறி இருந்தது.
·
இந்தித் திணிப்பை எதிர்த்து
தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட பல
கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\
·
1965 இல் ஜனவரி-பிப்ரவரி-களில் இப்போராட்டம்
தீவிரமடைந்தது. வன்முறைச் செயல்கள் மிகுந்தன.
·
இதனால், மக்கள் காங்கிரசின் மீது
வெறுப்பும், அதிருப்தியும் கொண்டனர்.
·
முந்தைய தேர்தலில் ஒற்றுமையில்லாமல் இருந்த எதிர்க்கட்சிகள்
இப்போராட்டத்தின் மூலம் ஒன்றினைந்து ஒரு குடையின் கீழ் வந்தது. அரிசிப்
பஞ்சத்தினை திமுக சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு
வந்தால் நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்கப்படும்
என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது.
·
வாக்குப்பதிவு நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் திமுக வின் வேட்பாளரும் முன்னணி நடிகருமான எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்), நடிகர் எம். ஆர். ராதாவால் சுடப்பட்டார். இச்சம்பவம்
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் திமுகவுக்கு ஆதரவான அனுதாப அலையையும் ஏற்படுத்தியது.]
கட்சிகள்
இத்தேர்தலில் காங்கிரஸ் தனித்தும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தும்
போட்டியிட்டன. பெரியார் ஈ. வே. ராவின் திராவிடர் கழகம் காமராஜரையும் காங்கிரசையும்
ஆதரித்தது. திமுக தலைமையிலான எதிர்க்கட்சி
கூட்டணியில் சுதந்திராக் கட்சி, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட், சி. பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட்
கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம. பொ. சிவஞான கிராமணியாரின் தமிழரசுக் கழகம் ஆகியவை
இடம்பெற்றிருந்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரு
கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது. இந்திய அரசியலில் இரு துருவங்களாக
இருந்த ராஜாஜியும் சி.என்.ஏ.வும் இங்கு ஒன்றாகக் கூட்டணி அமைத்தார்கள்.
தேர்தல் முடிவுகள்.
இத்தேர்தலில் வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக
நடைபெற்றது 76.57% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 51 இடங்களைக்
கைப்பற்றியது. நாம் தமிழர் மற்றும்
தமிழ் அரசுக் கழக வேட்பாளர்கள் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்.
|
கூட்டணி |
கட்சி |
போட்டியிடட இடங்கள் |
வென்ற இடங்கள் |
|||
|
ஐக்கிய முன்னணி |
174 |
137 |
||||
|
27 |
20 |
|||||
|
22 |
11 |
|||||
|
பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி |
4 |
4 |
||||
|
3 |
3 |
|||||
|
சங்கதா சோஷ்யலிஸ்ட் கட்சி |
3 |
2 |
||||
|
திமுக ஆதரவு சுயேட்சைகள் |
2 |
2 |
||||
|
இந்திய தேசிய காங்கிரஸ் |
காங்கிரசு |
232 |
51 |
|||
|
மற்றவர்கள் |
சுயேட்சைகள் |
246 |
1 |
|||
|
32 |
2 |
|||||
|
1 |
1 |
|||||
|
13 |
0 |
|||||
|
பாரதீய ஜன சங் |
24 |
0 |
||||
|
மொத்தம் |
11 கட்சிகள் |
— |
234 |
திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. இந்தியக் குடியரசில் காங்கிரசல்லாத ஒரு கட்சி தனியாக ஆட்சியமைத்தது
இதுவே முதல் முறை. நாற்பதாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி தோற்றது.
1967 முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டு
வருகின்றன. இத்தேர்தலில் அன்றைய தகவல் தொடர்பு அமைச்சர் பூவராகன் தவிர அனைத்து அமைச்சர்களும்
தோல்வியைத் தழுவினர். முதல்வராயிருந்த பக்தவத்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் காமராஜர் விருதுநகர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர்.
இக்கூட்டணி அப்போது தமிழகத்திலிருந்த பதினான்கு
மாவட்டங்களில் பத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரசால் ஒரு மாவட்டத்தில் கூட
வெற்றி பெற முடியவில்லை. திமுக நகர்ப்புறங்களில் தன் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்ததுடன்,
கிராமப் புறங்களிலும் முதல் முறையாகக் காலூன்றியது.
திமுக அமைச்சரவையில் 6 மார்ச்
1967 இலிருந்து 10 பிப்ரவரி 1969 வரை இடம் பெற்றிருந்த அமைச்சர்கள்
|
அமைச்சர் |
துறை |
|
முதல்வர், பொது நிர்வாகம், நிதி, திட்டம், மதுவிலக்கு, அகதிகள் |
|
|
கல்வி, தொழில், மின்சாரம், சுரங்கங்கள், கனிமம், ஆட்சி மொழி, கைத்தறி, அறநிலையங்கள் |
|
|
பொதுப் பணிகள், சாலைகள், போக்குவரத்து, துறைமுகங்கள் |
|
|
உணவு, வருவாய், வணிக வரி |
|
|
விவசாயம், கால்நடை, மீன்வளம், வனங்கள் |
|
|
சுகாதாரம் |
|
|
ஹரிஜனர் நலம், தகவல் |
|
|
உள்ளாட்சி, காதி, கிராமப்புறத் தொழில் |
|
|
சட்டம், கூட்டுறவு, வீட்டு வசதி |
|
|
தொழிலாளர் நலம் |
No comments:
Post a Comment