பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, October 22, 2015

காந்தியடிகளின் 12 பொன்மொழிகள்.

                           

1.    ஒரு தனிமனிதனுக்கு ஒரு தடவை சேவை செய்வதைக் காட்டிலும் ஆயிரம் தலைகள் வணங்கி இறைவனிடம் இறைஞ்சுவது மேலானது.

2.    மனித இனத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. ஏனென்றால் மனித இனம் ஒரு கடல்; அதில் ஒருசில துளிகள் அழுக்கு என்றால் அந்தக் கடலே அழுக்காகி விடாது.

3.    கவலைகள் மனிதனை அரித்துத் தின்றுவிடும்; ஆனால் இறைவனிடம் பக்தி கொண்டவன் எதனைக் குறித்தும் கவலைப்பட வெட்கப்படுவான்.

4.    இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றபோது சொற்கள் இல்லாமல் இதயத்தைச் செலுத்து; இதயத்தின் ஈடுபாடு இல்லாத சொற்களை நிறுத்து.

5.    நண்பர்களிடம் நட்பாக நடந்து கொள்வது சுலபம்; ஆனால் நம்மை எதிரியாக எண்ணும் ஒருவனிடம் நட்பு கொள்வது என்பது உண்மையான புனிதச் செயல்பாடு. மற்றவை வெறும் கொடுக்கல் வாங்கல்.

6.    மனிதன் பிறரை அவமதிப்பதில் மகிழ்ச்சியடைவதன் இரகசியம்தான் என்னவென்று ஆச்சரியப் படுகிறேன்.

7.    இவ்வுலகத்தில் மனிதனின் அவசியத் தேவைகளுக்கேற்ப எல்லாமே கிடைக்கின்றன; ஆனால் அவனுடைய பேராசைகளுக்கு ஏற்ப எல்லாம் கிடைப்பதில்லை.

8.    நான் மனிதனின் இனிய குணங்களை மட்டுமே காண்கிறேன்; நானே குற்றமற்ற புனிதனாக இல்லாத நிலையில், பிறரிடம் குற்றம் காண முயற்சிக்க மாட்டேன்.

9.    இந்த உலகத்தில் உண்மையான அமைதி நிலவ வேண்டுமானால், யுத்தத்துக்கு எதிரான யுத்தமொன்று நிகழ வேண்டுமானால், சின்னஞ்சிறு குழந்தைகளிடம் நம் போதனைகளைத் தொடங்க வேண்டும்.

10. எதில் உண்மையான மகிழ்ச்சி தோன்றுகிறது? உங்கள் சிந்தனையும், சொல்லும், செயலும் ஒரே மாதிரி இருக்கும்போதுதான்.

11. மலை வாயில் கதிரவன் விழுந்து மறைகின்ற அற்புதக் காட்சியையோ, அல்லது கீழ் வானில் உதிக்கின்ற சந்திரனின் அழகையோ பார்க்கின்ற போதெல்லாம் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவனை எண்ணி வணங்குகிறேன்.


12. உன்னையே நீ யார் என்று உணர்ந்து கொள்ள வேண்டுமானால், பிறருக்குச் செய்யும் சேவையில் நீ உன்னை அர்ப்பணித்துக் கொள்.

1 comment:

  1. எக்காலத்திற்கும் பொருந்துவன. நன்றி.

    ReplyDelete

You can give your comments here