பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 9, 2013

உத்தர்கண்ட் வெள்ள நிவாரணம் 1

We Salute Indian Army  
Indian army and paramilitary troupes has done a commendable Job in rescuing more than 80,000 People ,This was one of the worst disaster world has seen in such High altitude and worst and difficult terrain,it is their dedication and love for country has made it possible ,even no one to guide or no idea of the land scape made them as most dangerous operation as there is no place to land even helicopters

Kudos to squadron leader Radhakrishnan Nair of Indian Air Force, Lt general Anil Chait for coordinating such a task in a place where they have no previous experience and it was Like we are in war with some unknown enemy
 
This was one of the tragedy never before any of the army personal has seen in their whole service Life.

With Warm Regards Holy Pranams..., 
HV Kamdar
 
Associated Press photos


சென்ற சில நாட்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கிய உத்தர்கண்ட் வெள்ளம், நிலச்சரிவு பற்றி உலகமே அறியும். எந்த இயற்கை அழிவு நேர்ந்தாலும், அப்போதெல்லாம் நிவாரணம் பற்றிய விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கும். அரசியல் வாதிகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளால் அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதும் நடக்கும். ஆனால் இவைகள் எதனாலும் பாதிக்கப்படாமல், தங்கள் கடமையை ஓசையின்றி செய்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது என்றால் அது இந்திய ராணுவம் தான். அந்த வீரர்களை யார் நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள்? எவரெல்லாம் நன்றி பாராட்டுகிறார்கள்? இவை எதையும் கவனிக்காமல் தங்கள் கடமையே கண்ணாக இருந்து பாடுபடும் இவர்களுக்கும் குடும்பம் உண்டு, பெண்டாட்டி பிள்ளை குட்டிகள் உண்டு, உறவும் நட்பும் உண்டு, ஆனாலும் இந்த நாடு, நாட்டின் நலன், நாட்டின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு இவைதான் இவர்கள் மனங்களில் ஊடாடும் உணர்வுகள். உத்தர்கண்ட் மாநில வெள்ளச் சேதத்துக்குப் பின் இப்போது ஊடகங்களில் ஓரளவு அமைதி நிலவுகிறது. ஆனால் அங்கே என்ன நடக்கிறது. இந்திய ராணுவம் என்ன செய்கிறது. தெரிந்து கொள்ள வேண்டாமா? பாருங்கள் இங்கே. உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

This is First Part of 10 pics. the other pic. will follow.1 comment:

  1. இந்திய வீரர்கள் ஆற்றும் மாபெரும் கடமையை நாங்கள் அறியத் தந்த உங்களுக்கு என்றும் நன்றிகள்.. தினமும் இணையத்தில் சில நாளிதழ்களை வாசிக்கின்றேன். அவை எதிலும் இவை என் கண்களில் படவில்லை!. தாய் நாட்டுக்கும் தாய் நாட்டின் மக்களுக்கும் - பகலென்றும் இரவென்றும் பாராமல் தம் உயிரைத் துச்சமாக மதித்து கடமை ஆற்றும் அவர்களை எல்லாம் வல்ல இறைவன் காத்தருள் புரிய வேண்டிக்கொள்வோம்!..ஜெய் ஹிந்த்!..

    ReplyDelete

You can give your comments here