பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 9, 2013

கேதார்நாத் பேரழிவுக்கு முன்பும் பின்பும்.

கேதார்நாத் பேரழிவுக்கு முன்பும் பின்பும்.


உத்தர்கண்டில் வெள்ளம் வருவதற்கு முன்பு அந்தப் பகுதிகள் எத்தனை அழகாகவும் கண்களுக்கு ரம்மியமாகவும் இருந்தது என்பதை இங்கு கொடுத்திருக்கும் முதல் சில படங்களில் பாருங்கள். தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பிரளயத்தையடுத்து அந்தப் பகுதிகள் எவ்வாறு அழிவின் பிடியில் சிக்கிக் கிடக்கிறது என்பதையும் பாருங்கள். மனிதனுடைய சக்திக்கும், சாமர்த்தியத்துக்கும் மேலே, ஒரு மகா சக்தி மனிதனைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கப் பயன்படுத்தும் ஆயுதம் போலும் இந்த வெள்ளமும் அழிவும். இதன் பிறகாவது இறைவனின் சக்தியை உணர்ந்து மனிதன் நடந்து கொள்வது நல்லது அல்லவா? உணர்ந்தவர்களுக்குச் சரி!

Courtesy:  Venkatachalam Dothathiri (Mintamil group)
இனி இயற்கையின் சீற்றத்தால் சீரழிந்து கிடக்கும் கேதார்நாத்தைப் பாருங்கள். இவற்றைப் பார்த்துக் கண்ணீர் விடாத தேசபக்தர்கள் இருக்க முடியுமா? இவற்றைச் சீரமைக்க நமது இந்திய ராணுவம் செய்யும் சேவைகளை முந்தைய பதிவுகளில் பார்த்தீர்கள். ஜெய் ஹிந்த்!


1 comment:

  1. நமது வீரர்களுக்கும் குடும்பம் உண்டு. தாய் தந்தை, சகோதர சகோதரிகள், மனைவி மக்கள் உண்டு, உறவும் நட்பும் உண்டு, ஆனாலும் இந்த நாட்டுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், நாட்டு மக்களின் பாதுகாப்புக்காகவும் தம் உயிரையும் மதிக்காது தன்னலமற்று உழைக்கும் உணர்வுதான் நம் பாரதத்தை ஒரு நூலில் கட்டி வைத்ததைப் போல் விளங்குவது!...இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இந்த புண்ணிய பூமியே எமது தாயகமாக விளங்க அருள்வாய் கேதார நாதா!.. ஜெய்ஹிந்த!...

    ReplyDelete

You can give your comments here