பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 2, 2012

தமிழில் சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்


       சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளுக்குச் சிகரம் வைத்தது போல அமைந்தவை அவருடைய பஞ்ச ரத்ன கீர்த்தனைகள். அந்த கீர்த்தனைகளின் ஜீவன் குறையாமல் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் கோட்ட மேலாளராகப் பணியாற்றி பணி விறைவு பெற்ற திரு என்.வி.சுப்பராமன். இவர் தஞ்சைத் தரணி தந்த ஒரு மாணிக்கம். இவர் ஒரு சிறந்த கவிஞ்சர். ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றவர். தெலுங்கு மொழி நன்கு அறிந்தவர். இவர் மொழிபெயர்த்து திருமதி ரெங்கனாயகி பாடி வெளிவந்த "ஜெகதானந்தகாரக" எனும் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளில் முதல் பாடல் சி.டி. வெளியாகி யூ ட்யூபிலும் வெளியாகியுள்ளது. ஃபேஸ் புக்கிலும் அதனை வெளியிட்டிருக்கிறோம். பார்த்து கேட்டு கருத்துக்களைச் சொல்லுங்கள். மற்ற பாடல்களும் விரைவில் வெளியாகும். இந்த முதல் பாடலில் ஸ்ரீ ராமனின் திவ்ய நாமங்கள் நூறு குறிப்பிடப்பட்டிருப்பதாக திரு என்.வி.சுப்பராமன் தெரிவிக்கிறார். காஞ்சி மடத்தில் இருக்கும் திரு இராமாயணம் சீனிவாசன் என்பவர் இதனைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார். சற்குரு தியாகராஜரைத் தமிழில் கேட்கவும், அவர் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளில் அடங்கியிருக்கும் ராமபிரானின் நூற்றியோரு நாமங்களைக் கேட்கவும் செய்த அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.அந்தப் பெயர்களைத்தான் இப்பதிவில் வெளியிட்டிருக்கிறேன். படியுங்கள்.

ஜகத்திற்கு இன்பம் அளிப்பவனே!


1 ஜகத்திற்கு இன்பம் அளிப்பவனே போற்றி!
2 ஜானகி உள்ளம் கவர்ந்தவனே போற்றி!
3 சூரிய குலத்தோன்றலே போற்றி!
4 அரசர்க்கரசே போற்றி!
5 நற்குண நிதியே போற்றி!
6 தேவர்கள் துதிக்கும் தேவே போற்றி!
7 சர்வ மங்களம் தருபவனே போற்றி!
8 தேவர்களிடையே தேநிலவே போற்றி!
9 தேவர்களின் கற்பகத் தருவே போற்றி!
10 பரிபூரணனே போற்றி!
11 பாபம் அற்றவனே போற்றி!
12 பாற்கடல்தனிலே படுத்திருப்பவனே போற்றி!
13 தயிரில் தேன் ருசி கண்டவனே போற்றி!
14 அமுதச் சொற்களை அருள்பவனே போற்றி!
15 அழகு முகந்தனைப் பெற்றவனே போற்றி!
16 ஆனந்த சாகரனே போற்றி!
17 லக்‌ஷ்மி பதே போற்றி!
18 பக்த ரக்‌ஷக போற்றி!
19 யெளவனபுருஷ போற்றி!
20 வேதகமல போற்றி!
21 அமுத போஷக போற்றி!
22 இமையோர்தமைக் காத்திடுவாய் போற்றி!
23 சுழற்காற்றே போற்றி!
24 கருட வாகனா போற்றி!
25 நற்கவிஞர் உளத்தே இருப்பவரே போற்றி!
26 வானவர் தலைவர் வண்ங்குவார் போற்றி!
27 பொன்னடியே போற்றி!
28 இந்திர நீல மணி மேனியனே போற்றி!
29 சூர்ய சந்த்ர நேத்ரனே போற்றி!
30 எல்லையிலா மகிமையனே போற்றி!
31 பிரம்ம பிதாவே போற்றி!
32 ஜகதீசனே போற்றி!
33 பாம்பின் மேல் பள்ளி கொண்டவனே போற்றி!
34 உமாதிபன் துதிப்பவரே போற்றி!
35 ரிஷிசாபம் தீர்த்தவரே போற்றி!
36 யாக ரக்‌ஷகா போற்றி!
37 வரமந்திரம் பெற்றவா போற்றி!
38 சாந்தஸ்வரூபா போற்றி!
39 சீதா நாதா போற்றி!
40 பரமனுக்கு வரம் அளித்தவா போற்றி!
41 முத்தொழில் புரியும் மேலோனே பொற்றி!
42 கோரிய வரங்களை அளிப்பவனே போற்றி!
43 சுந்தரத் திருமேனியனே போற்றி!
44 அரக்கர் அக்ரமம் அழித்தவனே போற்றி!
45 அன்பும் அறனும் பெற்றவனே போற்றி!
46 ராமகாதைத் தலைவனே போற்றி!
47 நல்லோர் மனமே போற்றி!
48 அமுதக் கடலே போற்றி!
49 கடலில் நிலவே போற்றி!
50 புஷ்பக விமானத்தில் பறந்தவனே போற்றி!
51 அனுமன் துதித்த திருவடியே போற்றி!
52 அரக்கர் திமிரைத் தணித்தவனே போற்றி!
53 சனாதனனே போற்றி!
54 பிரம்மன் துதிப்பவரே போற்றி!
55 பேருயிரே போற்றி!
56 பிரணவமே போற்றி!
57 பிரணவத்தை ஸ்வாசிக்கும் கிளியே போற்றி!
58 பிரம்ம வடிவானவரே போற்றி!
59 விஷ்ணு வடிவானவரே போற்றி!
60 சிவ வடிவானவரே போற்றி!
61 ராவண வதம் புரிந்தவரே போற்றி!
62 கலையே போற்றி!
63 கலை வள்ர் நிலவே போற்றி!
64 சிவாப்தரே போற்றி!
65 கருணைக் கடலே போற்றி!
66 அடைக்கலம் அளித்துக் காப்பவரே போற்றி!
67 நல்லவரே போற்றி!
68 நல்லவரை மகிழச் செய்பவரே போற்றி!
69 மாறுதலே போற்றி!
70 மாறுதல் அற்றவரே போற்றி!
71 வேதமே போற்றி!
72 வேதத்தின் சாரமே போற்றி!
73 கரங்களில் அம்பு ஏந்தியவரே போற்றி!
74 அரக்கர் அகந்தை அழித்தவரே போற்றி!
75 ப்ராம்மண ரக்‌ஷக போற்றி!
76 ராமா போற்றி!
77 ராம காவியத்தலைவா போற்றி!
78 புகழ் பெற்றவா போற்றி!
79 தியாகராஜன் துதிப்பவரே போற்றி!
80 புராண புருஷா போற்றி!
81 தசரத குமாரா போற்றி!
82 அடியார்க்கு அடியாரே போற்றி!
83 அரக்கர் வதம் செய்தவனே போற்றி!
84 பராசரனே போற்றி!
85 மனோஹரா போற்றி!
86 பாப விகாரம் அற்றவரே போற்றி!
87 நற்குணமே போற்றி!
88 நற்குண வாருதியே போற்றி!
89 மஞ்சள் பட்டு தரித்தவரே போற்றி!
90 அழகிய திருவடியே போற்றி!
91 பெருமையே போற்றி!
92 பெருமை மிகப் படைத்தவரே போற்றி!
93 கவிஞரே போற்றி!
94 கவிஞர் உள்ளத்தில் உரைபவரே போற்றி!
95 முனிவரே போற்றி!
96 தேவரே போற்றி!
97 ரக்‌ஷகரே போற்றி!
98 அலை மகள் நாதரே போற்றி!
99 பாப விமோசனனே போற்றி!
100 நரசிம்மா போற்றி!
101 தியாகராஜர்கள் துதிப்பவரே போற்றி! போற்றி!

No comments:

Post a Comment

You can give your comments here