பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 10, 2012

தடியெடு! பாரதம் தலையெடுக்க எடு!

       தடியெடு! பாரதம் தலையெடுக்க எடு!

வாடா
வருங்கால தலைவா!
இந்திய தேசத்தை
ஆளப்போகும் முதல்வா!

நீ
கல்லூரி படிப்பில்
தேர்ச்சி பெற்றாயோ இல்லையோ
நினைத்ததை நினைத்தவுடன்
அடைய துடிக்கும்
உன் வேகம்
எனக்கு பிடித்திருக்கிறது.

உற்ற நன்பனுக்கு
உடுக்கை இழந்தவன் போல்
கை கொடுக்கும்
தன்மை
எனக்கு பிடித்திருக்கிறது.

நீ
தருதலையா
சே...சே...யார் சொல்வது.

தடி எடுத்த
தம்பிமார்களே
இனி தலை எடுத்திடும் பாரதம்!

கட்டையில் போகும் முன்
உருட்டுக்கட்டையால்
சட்டத்தை
விதைக்கும்
நீ
நடு வீதியையும் சட்டமன்றமாக்குகிறாய்!
சட்டையொடு வரும் சட்டம் காக்கும் காவலையும்
நீ
வந்தவழி போகசெய்து வலுவிழக்க செய்க்றாய்!

இந்த ஆக்ரோஷத்தை
வண்டு புரளும்
அரிசியை கொடுக்கும் அரசுக்கு எதிராக காட்டு!
உண்டு புரளும்
அதிகாரி கேட்கும் லஞ்சத்துக்கு எதிராக காட்டு!

மாண்டு போகும் மக்கள்
கூடி செல்லும்
வழிதடத்தை நசுக்கலாமா?
மாணவர் எனும்
மரியாதையை
நீ
பொசுக்கிக்கொள்ளலாமா?

பாரடா
இந்தா சேதாரம்!
நீ
படித்ததுக்கு இதுதானா
ஆதாரம்?

பெற்றடெடுத்த உயிருக்கு
பெரும் பெருமை தரவேண்டாம்.
உனை சுமந்த வயிருக்கு
பற்றியெரியும் நிலை வேண்டாம்.

மீண்டும் சொல்கிறேன்
வருங்கால தலைவா!
இந்திய தேசத்தை
ஆளப்போகும் முதல்வா!
நீ
தடியெடு-அது
பாரதம் தலையெடுக்க மட்டும் எடு!

-தனுசு-

Tamil_News_large_501650.jpg
எதிர்காலத் தலைவர்களின் சமூகத் தொண்டு காணீர்!

No comments: