பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 16, 2012

தியாகிகளை நினைவுகூரும் தினம்

இன்று தியாகிகளை நினைவுகூரும் தினம். இந்திய மக்களின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டு எல்லா தியாகங்களையும் செய்துவிட்டு எந்த பிரதிபலனும் பெறாமல் மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்ட மாபெரும் தியாகசீலர்களுக்கு நமது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம். தமிழ் நாட்டைச் சேர்ந்த சுமார் நூறு தியாகிகளின் வாழ்க்கைக் குறிப்பினைத் தெரிந்து கொள்ள கீழ்கண்ட என்னுடைய வலைப்பூவிற்கு வந்து படியுங்கள். அவர்கள் மலர்ப்பாதங்களில் நம் அன்பையும் மரியாதையையும் அளித்து வணங்குவோம்.
http://www.tamilnaduthyagigal.blogspot.com/


2 comments:

 1. மறந்து விட்டோம் அய்யா, அனைத்தையும் மறந்துவிட்டோம். சுதந்திரத்தை நினைவு படுத்துவது தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் மட்டுமே. இல்லையெனில் சுதந்திரத்தையும் மறந்துவிடுவோம். செஞ்சோற்று கடன் எனும் மரியாதையையும் வணக்கங்களையும் செலுத்த நினைவு படுத்திய மேன்மைக்கும் அதன் ஆக்கத்திற்கும் நன்றிகள் அய்யா.

  ReplyDelete
 2. உங்கள் வலைப்பதிவிற்கு செல்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

  பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

  ReplyDelete

You can give your comments here