பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, July 26, 2012

பழைய சென்னை மாநகர் Part I


பழைய சென்னை மாநகரைப் பார்க்க வேண்டுமா?

நம்மில் அனேகர் இன்றைய சென்னை நகரைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரம் எப்படி இருந்தது. அன்றைய தினம் அந்த பழைய சென்னையைப் பார்த்தவர்கள் இப்போது பழைய நினைவுகளில் அசைபோடவும், இன்றைய தலைமுறையினர் பழைய சென்னையைப் பார்த்து பெருமூச்சு விடவும் ஓர் அரிய வாய்ப்பை நமக்குத் தந்திருக்கிறார் எனது அருமை நண்பரும், நான் பணியாற்றிய அலுவலகத்தில் என்மீது அபார அன்பு பாராட்டியவரும், என் நன்மையில் அக்கறை கொண்டவருமான திரு சி.ஆர்.சங்கரன் அவர்கள். இந்தப் புகைப் படங்களை அவருக்கு அனுப்பியவர்கள் வேறு நண்பர்களாக இருக்கலாம். என்றாலும் அவை அத்தனையும் அரிய பொக்கிஷங்கள். இந்தப் புகைப்படங்களை நண்பர் சி.ஆர்.சங்கரனுக்குக் கொடுத்துதவிய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. இனி மூழ்கிவிடுங்கள் பழைய சென்னை நினைவுகளில்.

மேலும் சில புகைப் படங்களை அடுத்த பதிவில் தொடர்ந்து பாருங்கள்.

No comments:

Post a Comment

You can give your comments here