புருனெய் கவிஞர் தனுசு தன் தோட்டத்தில்
தனிமையில் ஆழ்ந்திருந்த சமயம் அங்கு வந்த பறவைகளும், அணிலும் அவருக்குப் பல சிந்தனைகளை
உண்டாக்கின. நாம் பார்த்திருந்தால் ஒருக்கால் அவற்றை அப்போதே மறந்திருப்போம். மகாகவி
பாரதிக்குக் குயிலின் பாடல் பொருள் புரிந்ததைப் போல் இந்த மாயப் புட்களும், அணிலும்
செய்த செய்கைகளின் பொருள் அவருக்குப் புரிந்தது. அதுவே இந்தக் கவிதை. சுவைத்துப் பார்த்துச்
சொல்லுங்கள் கவிஞர் தனுசுவின் கவித்துவத்தை.
என் தோட்டம்
++++++++++++++++
++++++++++++++++
என் தோட்டத்துத்
தோழரே தோழியரே
இன்று
என்னை விட்டு விலகுவதேன்?
என் மீது கோபமா
மயக்கம் தரும்
இந்த வசந்தகாலமா?
பளபளன்னு பறக்கும்
பட்டாம் பூச்சியே
நீ
படபடன்னு போவதெங்கே?
கை படாத மலரை
தேடுகிறாயா
கன்னி பூஜைக்கு
கரு கருன்னு மின்னும்
குயிலே
நீ
குக்கூ.....என கூவுவது என்ன?
உன் ஜோடிக்குயிலை
பாடி அழைக்கிறாயா
காதல் சந்திப்புக்கு.
சொட்ட சொட்ட நிற்கும்
பச்சைக்கிளியே
நீ
திக்கி திக்கி சொல்வதென்ன?
ஊர் அசரும் நேரம்
விருந்து என்கிறாயா
உன் இச்சைக்கிளிக்கு
சிட்டு சிட்டென்று தாவும்
சிட்டுக் குருவியே
நீ
துரு துருன்னு ஓடுவதெங்கே?
துணையை தேடிப்
போகிறாயா
ராத்திரி உலா போவதற்கு
மரம் விட்டு மரம் ஓடும்
அணிலே
நீ
பயந்து பயந்து சிரம் தூக்குவதென்ன?
தனிமையைத் தேடுகிறாயா
பயந்து பயந்து சிரம் தூக்குவதென்ன?
தனிமையைத் தேடுகிறாயா
கனிந்த காதலைத்
தனித்துச் சுவைப்பதற்கு
தோப்புக்குள் துணைதேடும்
தோட்டக்காரன் உயிர்களே!
என்னை
தட்டிக் கழித்து போவதால்
கோபமில்லை!
துணையோடு சேராத இனமுமில்லை !-
கொண்டாட வாழ்த்துகள்!
-தனுசு-
No comments:
Post a Comment