பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 1, 2012

மே தினம்!


 மே தினம்!
+++++++++++++
முதலாளியின்
மக்களுக்கு
உடையில் பஞ்சம்!.
தொழிலாளியின்
மக்களுக்கு
உணவில் பஞ்சம்!.

அங்கு
பசிக்கு மாத்திரைகள்
இங்கு
பசியில் யாத்திரைகள்.

மலைகளை வளைப்பான்
முதலாளி!-அவனுக்காக
முதுகை வளைப்பான்
தொழிலாளி!

நா வறண்டு உழைப்பான்
தொழிளாளி!
இதயம் வறண்டு
கொடுப்பான் முதலாளி!.

வியர்வையே
ஏழையின் மூலதனம்!
அந்த மூலதனமே
முதலாளிக்கு வருமானம்!

ஒரே வியர்வையில்
இரண்டு உலகம்
இரண்டு வறட்சியில்
ஒரு உலகம்
இதுதான் "மே'தினமோ!

-தனுசு-


1 comment:

thanusu said...

எனது கவிதையை வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

படத்தில் உள்ளது போல் இந்தியர் பல்லக்கில் படுத்திருந்தால் நாமெல்லாம் முதலாளிகள் தான் .நல்ல படத்தேர்வு.