பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 8, 2012

  எங்கே போகும் இந்த பயணம்.  
   
எங்கே போகும் இந்த பயணம்.
எங்கே போகும்  இந்த பாதை. 
யாதும் ஊரோ? அந்தம் காடோ?   
படைப்பின் பொருளென்ன?
படைத்தவன்  பொறுப்பென்ன ?

தாயென்றும்  தந்தையென்றும்              
ஒன்றை ஒன்று நம்பி 
போகும் இந்த  ஊர்கோலம் -இது  
இந்த ஊர்க் கோலமோ?.

ஊரின்றி உறவின்றி வீடின்றி வழியின்றி
வீதிவழி போகும் விதியோ? 
சேய்யீன்ற தாயொன்று -காக்கும் அதன் நலம்  போன்று 
துணைதன்னை காக்கும் 
உத்தமி செல்லும் சபையோ? 

யார் கேட்டு பிறந்தார்கள்? -இவர்கள் 
யார் கெட்டு  பிறந்தார்கள்?
பிள்ளைகள் கை விட்டார்களா? இவர்களை 
பிள்ளையில் கை விட்டார்களா? 

எட்டடுக்கு  மாளிகைக்கும் 
கோலோச்சும்  மன்னனுக்கும் 
கிட்டாதபாசம்  எட்டாதநேசம் -இங்கு 
ஒட்டிக்கொண்டு  இருப்பது நிஜமே! 
.
 விலைமகளின்  வீட்டுக்கு -கணவனை 
கூடையில் கொண்டுசென்ற 
திருமகளின் கதையை கேட்டு
பத்தினி  பாசம்  அறிந்தோம் கதையினிலே.

கண்ணில்லா  கணவனை 
கண்ணில்  வைத்து  காக்கும்  -இந்த 
பெண்ணின முதல்வின் பதிபக்தியை!
 இம்மண்ணின்  பெரும்சக்தியை! 
 பார்க்கிறோம்  நேரினிலே.  

-தனுசு-  
Courtesy: Classroom 2007 & Dinamalar (pic)

3 comments:

Unknown said...

////தாயென்றும் தந்தையென்றும்
ஒன்றை ஒன்று நம்பி
போகும் இந்த ஊர்கோலம் -இது
இந்த ஊர்க் கோலமோ?.///

சுட்டிய இவ்வரிகள் எம்மை சுட்ட வரிகள்
கட்டியக் கணவனே கதியென்ற பின்
மெட்டியோடு முட்டியம் தேயும் முன்னே
தேய்ந்த திங்கே மனிதநேயம்?

வாழ்த்துக்கள் கவிஞரே!

Rathnavel Natarajan said...

அருமை ஐயா.
வணக்கம்.
எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Rathnavel Natarajan said...

உங்களது இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.