முல்லைப் பெரியாறும் சிறாரும்
புருனெய் தனுசுக்கும் வேண்டுமோ அறிமுகம்?
இதோ அவர் கவிதை.
செம்மொழியும் இளமொழியும்
முத்தமிடும் மண்ணில்
மணியோசை கேட்கிறது- யானை வருமோ?
இடியோசை கேட்கிறது- மழை வருமோ?
மதம் அடங்குமோ? பிழை முடியுமோ?
பெரிய மனுஷன் பென்னி
சேகரித்து தந்தான் தண்ணி-அன்று
அந்நியனுக்கு இருந்தது அக்கறை -இன்று
அநியாயத்திற்கு அழைப்புவைக்குது அக்கரை.
"ஒழிக" ஒருபக்கம்
"மரியட்டே" மறுபக்கம்
அரபிக்கடலும் வங்கக்கடலும் -தீ
கொள்ளும் காலமோ ?
சிவகிரியும் சதுரகிரியும்
அறியும் அந்த நீர்வலம் என்னவென்று.
முல்லையும் பெரியாரும்
அறியும் அந்த நீர்வளம் யாதென்று.
யார்வளம் காண- நீர்வளம் களமானது?
இந்த நீர்பலமே - இங்கு
பசுமைக்கு அணையாவிளக்கு-அதை
யாருமறிய அணையே நீ விளக்கு.
எமக்கொரு உறவாய் நீர் பிறந்தீர்.
எமக்கென்று இருக்கும் நீர் பிரித்து
நீரின் எல்லை குறைப்பது நியாயமா?
நீர் எல்லைதாண்டுவது நியாயமா?
-தனுசு -
1 comment:
///யார்வளம் காண- நீர்வளம் களமானது?
இந்த நீர்பலமே - இங்கு
பசுமைக்கு அணையாவிளக்கு-அதை
யாருமறிய அணையே நீ விளக்கு.////
உண்மைதான்
விலக்க வேண்டியவைகளை விளங்காதவர்கள் கூடி
விலக்காமல் இருப்பதன் கொடுமை...
நதிநீர்களை இணைத்தால் இந்த சதிகள்
யாவும் மறையாதோ....
Post a Comment