பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, January 13, 2012

பொங்கலைக் கொண்டாடு !
 
போகிப் பொங்கலில் 
 நீ பழையதை  
எரிப்பதற்கு முன்-உனது 
பிழைகளையும் குறைகளையும் எரித்துவிடு.

பெரும் பொங்கலில்
 நீ  பச்சரிசியைப் புதுப் பானையில்
பொங்க  வைக்கு முன் 
உன்  ஈகையால் 
 மகிழ்ச்சி பொங்கும்
 முகத்தையும் மனங்களையும் பார்த்துவிடு.

சர்க்கரைப் பொங்கலை 
நீ சாப்பிடு முன் 
சக மனங்களில் இருக்கும் 
கசப்பை நீக்கிவிடு.

காணும் பொங்கலை 
நீ கொண்டாடு முன் 
உன்னைக் காண்போர் 
உன்னைக் கொண்டாட வைத்துவிடு.

-தனுசு

1 comment:

  1. மனதில் அன்பை பொங்கவிட்டு சுற்றம்
    சூழ பொங்கலைக் கொண்டாடு.... என்றே...
    அருமையானக் கவிதையை எழுதிய கவிஞர் தனுசுவிற்கு பாராட்டுக்களும்,
    அவரோடு அவரின் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்களும்!

    ReplyDelete

You can give your comments here