பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, January 27, 2012

அலுவலகங்கள் முதலான இடங்களில் ஆயுத பூஜை

அலுவலகங்கள் முதலான இடங்களில் ஆயுத பூஜை

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடுவது என்பது காலங்காலமாக தொழில் நடக்குமிடங்கள், அலுவலகங்கள் முதலான இடங்களில் நடைபெற்று வந்ததுண்டு. சமீப காலமாக இதுபோன்ற பூஜைகள் "செகூலரிசம்" எனும் பெயரில் அரசாங்க அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியது. ஆண்டு முழுவதும் தொழிலாளிகள் உபயோகப்படுத்தி வரும் இயந்திரங்கள், பயன்படுத்தும் கருவிகள், அலுவலக இயந்திரங்கள் இவற்றை அன்றொரு நாள் சுத்தப்படுத்தி எங்களுக்கு உணவு படைக்கும் கருவிகளே உங்களை வணங்குகிறோம் என்று சொல்லி ஆயுத பூஜையன்று வணங்குவதில் என்ன தவறு? இதைப் பிரச்சினையாக்குபவர்களுக்கு இதனால் என்ன ஆதாயம். இவற்றையெல்லாம் நம்பாதவர்கள் நம்பாமலே இருக்கட்டும். அரசாங்க அலுவலகங்களில் இதுபோன்ற பூஜைகள் நடத்தக்கூடாது என்று சிலர் நீதிமன்றம் போனார்கள். அங்கு என்ன தீர்ப்பு கிடைத்தது என்பதை தமிழகத்தின் பத்திரிகைகளில் பலரும் வெளியிடவில்லை. ஆனால் தீர்ப்பு வந்துவிட்டது என்பது "விஜயபாரதம்" வார இதழில் எழுதியுள்ள தலையங்கம் (3-2-2012) மூலம் தெரிய வருகிறது. அந்தத் தலையங்கத்தைப் பார்ப்போம். 

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை 
பரபரப்பான நீதிமன்ற தீர்ப்பு.

"அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடுவது என்பது, அரசின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது என கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது. 

எஸ்.பி.முத்துராமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் மேற்படி தீர்ப்பை நீதிபதிகள் ஆர்.சுதாகர், அருணா ஜெகதீசன் ஆகியோர் அளித்தனர். இந்த இரு நீதி அரசர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.

ஆயுத பூஜையை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடுகின்றனர். தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கருதக்கூடிய கருவிகளை வணங்குவதுதான் ஆயுதபூஜையாகும். எனவே அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கலும் ஆயுத பூஜை கொண்டாடுவதை தவறு எனக் கருத முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

மதச்சார்பின்மை என்பதே நமது பண்பாடு, கலாச்சாரத்திற்கு விரோதமானது என கருதுபவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு சவுக்கடியாகும்.

ஒரு விழாத் துவக்கத்தில் விளக்கு ஏற்றுவதும், இறைவணக்கம் பாடுவதும் இந்த நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை ஒட்டியதாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியார் தீபாவளி வாழ்த்து அட்டைகளை அனுப்பும்போது அதில் காயத்ரி மந்திரத்தை அச்சிட்டிருந்தனர். அதை எதிர்த்து தி.க. தலைவர் வீரமணி வழக்கு தொடர்ந்தார். சென்னை நீதிபதி தனது தீர்ப்பில் (1991 அக்டோபர் 15) காயத்ரி மந்திரம் எந்த ஒரு சமூகம், வகுப்பு, இனம் ஆகியோர்களுக்குச் சொந்தமானது இல்லை. ஆண்டவனிடம் ஆசிர்வாதம் கேட்பது தவறல்ல என சொல்லி வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

'இந்துத்துவம்' என்பதுகூட மத ரீதியானது என்பது இல்லை. பண்பாட்டோடு தொடர்புடையது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது."

நன்றி: "விஜயபாரதம்"

இது சரியல்ல

விழாக்களின் போது குத்து விளக்கு ஏற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மெழுகுவத்தியை உபயோகிப்பதைத் தவிர்த்து, சிறு அகல் விளக்கின் மூலம் குத்து விளக்கு ஏற்றுவது நல்லது. மேலும், விளக்கு ஏற்றும் போது கைதட்டுகிறார்கள். இது சரியான செயல் அல்ல. - ஆலயம் எஸ்.ராஜா

நன்றி: "விஜயபாரதம்"

3 comments:

 1. நல்ல பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 2. "செய்யும் தொழில் தெய்வமாகும்" என்பதை எந்த மதத்தவரும் ஏற்பதே...
  அப்படி இருக்க, இது போன்ற நாளை இந்துக்கள் அல்லாமல் வேற்று மதத்தவரும் அவரவர் தெய்வமாக கருதி அதை ஒரு தெய்வீகமான தொழிற்சாலை விழாவாக கொண்டாடுவதில் தான் எண்ணத் தவறு இருக்கிறது...

  அரசியல்வாதிகள், சீர்திருத்த வாதிகள் என்று சொல்லிக் கொண்டு குறிப்பாக சிறுபானமையினரின் மனதில் விசத்தைக் கலப்பது போன்றதொரு நடவடிக்கைகளிலே ஈடுபட்டு. அவர்களின் மதம் கூட சொல்லிய மத இணக்க நல் கொள்கைகளை அவர்களையே மறக்க / மீறச் செய்யும் செயல்களுக்கு வித்திடுவதே ஒருவகையில் மத கலவரத்திற்கு வழி வகுப்பதே.

  எதற்கும் ஒரு அளவுண்டு... எந்த ஒரு மூடப் பழக்கம் என்றாலும் கூட... அதனது பின்புலத்தில் ஒரு நல்ல உண்மையானக் காரணம் உண்டு. என்பதை அறிய இவர்கள் முற்படுவதே இல்லை... அப்படி இருக்க இது போன்ற காரண காரியம் கூடிய உன்னத விழாக்களையும் கலகம் செய்து கெடுக்க மட்டும் இவர்கள் தாம் சிறுபான்மை மதத்தினரின் அபிமானிகள் மாதிரி காண்பிக்க முயலுவதும் நகைப்பு உரியதாகவே இருக்கிறது. இந்த மத நல்லிணக்கம் கீதையே கூறித்தான் சென்றுள்ளது... அதைப் புனித நூலாக வணங்கும் பெரும் பான்மை மதத்தவரின் உண்மையான வெளிப்பாடை இவர்கள் திரித்து கலகம் மூட்டுவதே வேலையாக இருக்கிறார்களே ஒழிய வேறு ஒரு சீர்திருத்தமும் செய்வதாகத் தெரியவில்லை. கலாச்சாரம் நாட்டின் அந்த மக்களின் பழைய தொன்று தொட்ட அடையாளங்கள்... அதில் தனிப் பட்ட முறையில் யாரும் பாதிக்காத வரையில் அவைகளை ஒதுக்க வேண்டிய அவசியமே இல்லை... வரவேற்க மாலையும், அஞ்சலிக்கு மலர் வளையம் வைப்பதுவும் தான் என்ன கட்டாயமாக இவர்களும் செய்து வருகிறார்கள் என்று ஒரு முறை பத்திரிக்கையாளர் 'சோ" வீரமணியை ஒரே மேடையில் இருந்துக் கொண்டு கேட்டதை நான் கண்டேன்.

  கலாச்சாரங்கள் மறந்தால் அடையாளம் இல்லாத அனாதைகள் ஆகிவிடுவோம் என்பதை இந்த அறிவாளிகள் தூங்குவதாக நடிப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும் என்று அறிந்த பின்பாது விழித்துக் கொண்டிருப்பதாகவே காட்டிக் கொள்ள வேண்டும். படித்து உலக கலாச்சாரம் அறிந்தும் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் மத்தியில் இது போன்ற உத்திகள் இனியும் எடுபடாது என்பதை உணர்ந்தார்கள் என்றால் நன்றாக இருக்கும்...

  நல்லவேளை நீதித்துறையில் இருப்பவர்களும் இந்த அரசியல் வாதிகளைப் போல் செயல் படாதது தான் மகிழ்ச்சிக்குரியது... அப்படிப் பட்டவர்களை பாராட்டுவதும் நம் கடமையே!

  பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

  நமது மகாத்மாவின் நினைவு நாளான இன்றைய தினம் அவரை மனதில் நினைத்து போற்றுவோம்.... வாழ்க வளர்க மகாத்மா காந்திஜின் கொள்கைகளும், புகழும்.

  ReplyDelete
 3. "செய்யும் தொழில் தெய்வமாகும்" என்பதை எந்த மதத்தவரும் ஏற்பதே...

You can give your comments here