பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, August 28, 2020

பரண் ஏணிகள்!

                                                                    

தலைநகரம் டெல்லியில் ராம்லீலா மைதானம் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. மக்கள் ஆயிரக் கணக்கில் வந்து மைதானம் நிறைந்து கூடியிருந்தார்கள். அவர்களில் பலரும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வந்தவர்களாகத் தெரிந்தார்கள்.

பலர் கட்டுச்சொறு கட்டிக் கொண்டு வந்து மைதானத்தின் ஓரத்தில் மரத்தடியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த மேடையில் ஒல்லியான உருவமும், தலையில் காந்திக் குல்லாயும் அணிந்த ஒரு மனிதர் பேசிக் கொண்டிருந்தார். அவர் இந்தியிலோ அல்லது மராத்தி மொழியிலோ பேசியிருக்க வேண்டும், அவ்விரண்டு மொழியும் தெரியாத எனக்கு அவர் பேசுவது என்ன என்பது புரியவில்லை. என்றாலும் அவ்வப்போது மக்கள் ஆரவாரம் செய்தும் கைதட்டியும் வந்ததைப் பார்த்தால் அவர் ஒரு வெகுஜனத் தலைவராக இருக்க வேண்டும். அங்கு கட்டப்பட்டிருந்த பற்பல விளம்பரப் பலகைகளிலும் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்ததால் அவைகளில் என்ன எழுதியிருக்கிறது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

            நான் பயணம் செய்த காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அங்கு கூட்டத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஒருவரிடம் போய் ஆங்கிலத்தில் அங்கு என்ன நடக்கிறது, அதில்  பேசுபவர் யார், அங்கு நடப்பது என்ன கூட்டம் என்று விசாரித்தபோதுதான், அது ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம் என்றும், நாட்டில் நடக்கும் ஊழல்களையும், கட்டுப்பாடு இல்லாமல் நடைபெறும் கள்ள மார்க்கெட், மதுவினால் மக்கள் படும் துயரம் இவற்றைக் களைய வேண்டுமென்ற கோரிக்கைகளோடு அந்த கூட்டம் நடைபெறுவதாகவும் அவர் சொன்னார்.

அங்கு எதற்குக் கூட்டம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்ததே தவிர, அங்கு பேசுபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த எனக்கு இந்தி படிக்கும் வாய்ப்பு பள்ளிக்கூடங்களில் மறுக்கப்பட்டதால் என்னால் அங்கு நடப்பதை அறிந்து கொள்ள இயலவில்லை. இப்படி ஒரு நாள் வட இந்தியாவுக்கு வந்து பணியாற்ற வேண்டியிருக்கும் என்பது தெரிந்திருந்தால், தனிநபர்களிடமாவது அல்லது இந்தி பிரச்சார சபா மூலமாவது நான் இந்தி மொழியைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டுமென்று இப்போதுதான் என் மனதில் உயதயமானது. என்ன செய்வது காலம் கடந்து விட்டது.

            நான் பேச்சுக் கொடுத்த மனிதர் டெல்லிக்காரர் போல தோன்றவில்லை. அவருடைய உடை, தலையில் அணிந்த தலைப்பாகை இவற்றிலிருந்து அவர் ஒரு மராத்திய மாநிலத்தவராக இருக்க வேண்டுமென்று நினைத்து அவரை எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டேன்.

            அவர் சொன்னார் தான் மராத்திய மாநிலம் அகமதுநகரைச் சேர்ந்தவர் என்றும், அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட ராலேகான் எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூக போராளிதான் அங்கு பேசிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

            இவர் மராத்தியத்திலிருந்து இங்கு வந்து போராட என்ன காரணம், அவரது பின்னணி என்ன என்பதை விசாரித்தேன். அந்த மனிதர் சற்று பொறுமையாக எனக்கு அவரைப் பற்றியும், அவர் கடந்து வந்த பாதைகள், அவரால் அகமதுநகர் மாவட்டத்திலுள்ள அவர் கிராமம் எப்படி முன்னேறி தற்சார்புடையதாக ஆயிற்று என்பதையெல்லாம் பற்றி விரிவாகச் சொல்லத் தொடங்கினார்.

            அப்போது ஒரு சாய்வாலா  டீ விற்றுக் கொண்டு வந்தார். அவரிடம் டீ வாங்கி இருவரும் அருந்திக் கொண்டே, அவர் சொன்ன வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன். கூட்டம் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது, அவ்வப்போது கைதட்டலும் கோஷமிடலும் கேட்டுக் கொண்டிருந்தது.

            அவர் சொன்ன வரலாறு இது.

“இதோ பேசிக் கொண்டிருக்கிறாரே, இவர்  மராத்திய மாநிலத்தில், அகமதுநகர் மாவட்டம் ராலேகானைச் சேர்ந்தவர். அந்த கிராமம் மிகச் சிறிய கிராமம். அங்கு சுமார் முன்னூறு குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தனர். அங்கு மழைக்காலத்தில் மட்டும் மழைத் தண்ணீரைப் பயன்படுத்திச் சில புஞ்சைப் பயிர்களைப் பயிரிட்டு, மற்ற காலங்களில் வேலை வெட்டி இல்லாமல் குடித்துவிட்டு வறுமையில் காலம் கழித்து வந்தனர் மக்கள். அந்த ஊரின் ஒதுக்குப் புறத்தையும், கல்வி அறிவு அதிகமில்லாத சூழ்நிலையையும் பயன்படுத்தி அங்கு சில கள்ளச் சாராய வியாபாரிகள் சாராயம் காய்ச்சும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வூர் மக்களும் பெரும்பாலும் அவர்கள் காய்ச்சும் கள்ளச் சாராயத்தைக் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தார்கள். திருட்டும் வழிப்பறியும் அந்தப் பகுதியில் அதிகமாக இருந்து வந்தது.

            அந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளி மட்டுமே இருந்தது. அதில் படிக்கும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க அந்த ஊருக்கு எந்த ஆசிரியரும் வரத் தயாராக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த ராலேகான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தற்செயலாக அகமதுநகர் சென்றிருந்த போது, அங்கே ராணுவத்துக்கு ஆள் எடுப்பதாக அறிந்து அங்கு போய்ச் சேர்ந்தார். அங்கு இவர் உடல் தகுதியில் சற்று முன் பின்னாக இருந்த போதும் எப்படியோ ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

            இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது இவர் பயணம் செய்த லாரியில் பாகிஸ்தான் விமானப் படை விமானங்கள் குண்டு வீசிப் பலரைக் கொன்றதை இவர் கண் முன்னால் பார்த்தவர். அதில் தப்பிப் பிழைத்த இவர் பணியிலிருந்து விடுபட்டுத் தன் கிராமத்துக்குத் திரும்பினார். அங்கு கிராமத்தில் இருந்த குடும்பங்களில் எவரும் வசதியுள்ளவர்களாகவோ, நன்கு படித்தவர்களாகவோ இல்லை என்பதால் கிராம முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதென்று முடிவெடுத்து அங்கிருந்த பல இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை உருவாக்கினார். அதை அவர்கள் மொழியில் சொல்வதானால் “தருண் மண்டல்” ஆங்கிலத்தில் “யூத் கிளப்” என்ற பெயரோடு அது தொடங்கியது.

            அந்த இளைஞர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை முதலில் ஒழிக்க அரும்பாடுபட்டு அரசாங்க அதிகாரிகளையெல்லாம் சென்று பார்த்து முறையிட்டு ஒருவழியாகச் சாராய தொழிலை ஒழித்தனர். தங்கள் ஊருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி வேண்டுமென்று பல காலம் மாவட்டத் தலைநகரத்துக்கும், மாநிலை தலைநகரான பம்பாய்க்கும் அலையாய் அலைந்தார்கள். கையில் காசில்லாமல், இருந்த காசில் ரயிலில் பயணம் செய்து, ரயில் நிலையங்களில் செய்தித் தாள்களை விரித்து அதில் படுத்திருந்து மேலதிகாரிகளைச் சந்தித்துத் தங்கள் கிராமத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டுகோள் விடுத்துப் பார்த்தனர். ஆனால், எதுவுமே நடைபெறவில்லை.

            கடைசியில் கிராமத்து இளைஞர்கள் அனைவரும் தத்தமது குடும்பத்தோடு மாவட்டத் தலநகருக்குச் சென்று மாவட்ட உயரதிகாரிகளை முற்றுகை இட்டனர். ஒரு கிராமமே படையெடுத்து வந்து சூழ்ந்து கொண்ட பிறகுதான் அரசாங்க அதிகாரிகள் விழித்துக் கொண்டு, இவர்களது குறைகளைக் காதுகொடுத்துக் கேட்டனர்.

            இவர்கள் கேட்டதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயங்கள் அல்ல. படிப்பதற்கு நல்ல பள்ளிக்கூடம், உடல் நலத்தைப் பேண ஒரு மருத்துவ மனை இவகளோடு, மழைக் காலத்தில் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்க நீர்நிலைகள், விவசாயத்துக்கான உதவிகள் அவ்வளவே. எந்தவித நவீன வசதிகளுக் இல்லாத, அந்த கிராமத்துக்கு எவரும் ஆசிரியராக வர விருப்பப் படவில்லை என்பதைக் காரணமாகச் சொன்னார்கள். அதன் பிறகு கிராம மக்களே ஒன்று சேர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அவர்கள் கிராமத்தில் பணியாற்ற படித்த இளைஞர்கள் வந்தால், அவர்களுக்குத் தங்க இடமும், உணவுக்கு வசதிகளும் செய்து தருவதாகச் சொன்னதும் ஒருசிலர் வந்தனர். பள்ளிக்கூடம் நன்கு நடைபெறத் தொடங்கியது.

            எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் கிராமத்து மக்களே ஒருங்கிணைந்து அங்கிருந்த ஒரு பெரிய குளத்தைத் தூர் வாரி, மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கும்படி கரைகள் அமைத்து, பாசனத்துக்கு ஒரு வாய்க்காலையும் உருவாக்கி ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும்படி இவர்களே ஏற்பாடு செய்து கொண்டனர்.

            இப்படியொரு புரட்சி இந்த கிராமத்தில் நடைபெற்று வருவது செய்திகளில் பார்த்து பலரும் இவர்களுக்கு உதவி புரிய முன்வந்தனர்.  முழுமையான உயர்நிலைப் பள்ளியும் உருவாயிற்று. அதில் பணியாற்ற ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இப்படி ஒன்றுக்கும் உதவாத கிராமமாகக் கிடந்த இடத்தை இப்போது எல்லோரும் திரும்பிப் பார்க்க வைத்த அந்த இளைஞர் மீது மக்களின் கவனம் சென்றது.

            அந்த கிராமத்தில் ஒரு பழைய கோயில் இடிந்து விழும் நிலையில் இருந்தது. கிராமத்து மக்கள் வழிபடவும், பொதுக்காரியங்களை விவாதிக்க ஒரு பொதுவிடமும் தேவை என்பதை உணர்ந்து அவர்கள் கோயிலைப் புனருத்தாரணம் செய்தனர். கிராம சங்கத்துக்கான ஒரு கட்டடமும் கட்டி பயன்பாட்டுக்கு வந்தது. சுதந்திரம் அடைந்த பின் நாடு அடைந்து வரும் முன்னேற்றத்துக்கும் அதன் வேகத்துக்கும் தக்கபடி இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு இந்த ராலேகான் கிராமமும் முன்னேறத் தொடங்கியது. மின்சாரமும், குடிநீர் மேல்தொட்டி கட்டி தண்ணீர் விநியோகமும் தொடங்கியது. காய்கறிகள் பயிரிட்டு அவற்றை வெளியிடங்களுக்குக் கொண்டு சென்று விற்றதில் நல்ல லாபம் பெறத் தொடங்கினர்.

            அப்படி ஒரு கிராமத்தை அடிமட்டத்திலிருந்து மேலே கொண்டு வந்து அனைவரும் ஆர்வத்தோடு பார்க்க வைத்த அந்த இளைஞன், ராணுவத்தில் பணியாற்றியிருந்த போதும், பார்ப்பதற்கு அப்படியொன்றும் வாட்ட சாட்டமான ஆள் இல்லை. சுமாரான உடலமைப்பு, மெல்லிய குரல் இவற்றோடு மனதில் மட்டும் இரும்பு போன்ற உறுதியைக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

            அவர்தான் இதோ இந்த ராம்லீலா மைதானத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் கிராமத்தை எப்படி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வந்தாரோ, எப்படி அரசாங்க அதிகாரிகளை திரும்பிப் பார்க்க வைத்தாரோ, எப்படி மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை விதைத்தாரோ, அதைப் போல இந்த நாடு முழுவதிலும் பரவிக்கிடக்கும் ஊழலை, லஞ்சத்தை ஒழித்து இங்கு ஒரு ராம ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்பது இவரது எண்ணம்.

            “அது சரி! இவர் வந்து இங்கே டெல்லியில் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்கிறாரே, இவருக்கு இங்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா என்ன?” என்றேன்.

            “அப்படிச் சொல்ல முடியாது. அவர் பெயர் வேண்டுமானால் இங்கு உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் அவர் செய்ய விரும்புகின்ற மாற்றங்கள் நியாயமானவை, ஊழல் நிறைந்த நிர்வாகத்தை மாற்றியமைக்க வேண்டுமென்கிற ஆர்வம், ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமுதாயம், இளைஞர்களுக்குத் தகுந்த வேலை வாய்ப்புகள் இவைகள் எல்லாம்தான் இவருடைய கோரிக்கை. இவைதான் மக்களை இவர் பக்கம் ஈர்க்கிறது என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.

            “அவருடன் ஒரு இளைஞர் இருக்கிறாரே, அவர் யார்? அவருக்கும் இவரைப் போல நாட்டின் மீது அக்கறை இருப்பதால் தான் இங்கும் வந்து கலந்து கொண்டிருக்கிறாரா?” என்றேன்.

            “இல்லை, அப்படிச் சொல்ல முடியாது. பெரியவருடைய பணிகளையும், கடந்த கால சாதனைகளையும் அறிந்தவர்கள், இவர் சமூகத்தை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறார், இவருடைய மாநிலத்தில் இவர் சாதித்தவைகள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் இவருக்காக இங்கே வந்திருக்கிறார்கள். இவருடன் இருப்பவர்கள் பற்றியெல்லாம் மக்களுக்கு அப்படியொரு எண்ணம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பெரியவருடைய நிழலில் தாங்களும் வளர நினைப்பவர்கள் இவர்கள். ஆகையால் இங்கு உரையாற்றும் அனைவருமே ஊழலுக்கு எதிரானவர்கள் என்றோ, ஒரு ஒளிமயமான வருங்காலத்தை விரும்புபவர்கள் என்றோ, அல்லது இவர்கள் அனைவருமே நேர்மையானவர்கள் என்றோ சொல்ல முடியாது” என்றார் அவர்.

            “அப்படியானால், இன்றைய நிலைமையில் பெரியவர் ஒரு கட்சியைத் தொடங்கி, அந்தக் கட்சி தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சி புரிந்தால், அவர் விரும்புகின்ற மாற்றங்களையும், ஊழல் இல்லாத ஆட்சியையும் கொடுக்க முடியுமல்லவா? செய்வாரா?” என்றேன்.

            “என்னங்க இது! உலகம் புரியாத ஆளா இருக்கீங்களே! ஊருக்கு வெளிச்சம் போட்டு வேடமிடும் வேடதாரிகள்தான் பதவிகளைப் பெற முடியும். அப்படிப் பெற்ற பதவிகள் உங்களுக்கும் எனக்கும் சேவை செய்வதற்காக அல்ல, தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் வாழவைக்கத்தான். அதுதான் இன்றைய அரசியல் நிலைமை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.”

            “அப்படியென்றால், இந்தப் பெரியவர் இதனால் தனக்கு எந்தவித பயனும் இல்லை, எதிர்காலம் இல்லை, பதவிகள் இல்லை, எந்த ஆதாயமும் இல்லை என்பது தெரிந்தும் ஏன் இப்படி தன்னை வருத்திக் கொள்ள வேண்டும்?” என்றேன்.

            “நீங்கள் சொல்வது மிகவும் சரி. பிழைக்கத் தெரியாத மனிதன். தான் நேர்மையாக வாழ்ந்து, தனக்கென்று ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு, அதைத் தன் சொந்த ஊரில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டியதுடன், இந்த நாட்டையே அதுபோல மாற்றிவிட முடியும் என்று நம்பிச் செயல்படும் இவரை புத்திசாலியாக - அல்ல அல்ல, இன்றைய அரசியலுக்கு ஏற்றவராகக் கருத முடியாது” என்றார் அவர்.

            “அப்படியானால், அவருடைய நிழலில் குளிர்காய வந்து அமர்ந்திருக்கும் இதரத் தலைவர்கள் நிலைமை என்ன? அவர்கள் எதிர்பார்ப்பது என்ன?” என்றேன்.

            “இவரைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் சாமர்த்தியத்தால் ஏதேனும் பதவிகளையோ, பலன்களையோ பெற்று சுகபோக வாழ்வுக்கு வழிவகுத்துக் கொள்வார்கள்” என்றார்.

            “அப்படியானால் இவர் நிலைமை?”

            “அவர் ஏமாளியாக இருந்து, அடுத்தவர்களை மேலே ஏற்றிவிடும் ஏணியாக இருந்து கொண்டிருக்கிறார் என்பதை இவர் உணராமல் போனால் என்ன செய்ய முடியும்? இவர் தலைவிதி அவ்வளவுதான். இவர் தோளின் மீது பயணம் செய்து மற்றவர்கள் எல்லா சுகங்களையும் அனுபவிக்கப் போகிறார்கள், இவர் பாவம், இருக்குமிடம் தெரியாமல் எங்கோ போய் மறைந்து கொள்வார், அதுதான் நடக்கப் போகிறது” என்று சொல்லிவிட்டுப் போனார் அந்த உள்ளூர்க்காரர்.

            எனக்கு தமிழ் நடிகர் பி.யு.சின்னப்பா பாடிய ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. அது “உலகோரை மேலேற்றும் அருள்ஞானி நான், தான் ஓர் முழம் ஏற முடியாத பரண் ஏணி நான்” எனும் ‘கிருஷ்ண பக்தி” படப்பாடல்.

            ஆம்! அவர் சொன்னது முற்றிலும் உண்மை. இந்த கதாநாயகன் வேறு யாரும் அல்ல! சாட்சாத் அண்ணா ஹசாரே எனும் போராளியே அவர்.



Wednesday, August 19, 2020

1947 ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி எங்கே இருந்தார்?

 

            1947 ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி எங்கே இருந்தார்?                                    என்ன செய்து கொண்டிருந்தார்?

                   இந்தியா பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திர நாடாக உருவானது 1847 ஆகஸ்ட் 15 அன்று என்பது அனைவருக்கும் தெரியும். ஆகஸ்ட் 14 நள்ளிரவில் நடந்த இந்திய பாராளுமன்ற கூட்டத்தில் ஜவஹர்லால் நேருவின் உரை இன்று அனைவராலும் பேசப்படுகின்ற உரை. சரி! இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 1919 தொடங்கி தொடர்ந்து தலைமை வகித்துக் கலந்து கொண்டு போராடியவரும், மக்களால் “மஹாத்மா” என்று போற்றப்பட்டவருமான மகாத்மா காந்தி அன்றைய தினம் எங்கே என்ன செய்து கொண்டிருந்தார்? டெல்லியில் நடந்த கோலாகலமான கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு சுதந்திரத்தின் சுவாசக் காற்றை உணர்ந்து கொண்டிருந்தாரா? இந்திய பாராளுமன்றத்தில் இதர காங்கிரஸ் தலைவர்களுடன் இந்திய சுதந்திரத்துக்கான உரை நிகழ்த்திக் கொண்டிருந்தாரா? செங்கோட்டையில் கொடியேற்றி வணக்கம் செய்து கொண்டிருந்தாரா? இதை இன்றைய குழந்தைகள் அறிந்து கொள்ள ஆவலாயிருப்பார்கள் அல்லவா? ஆகையால் அன்றைய தினம், அதாவது 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்திய கோலாகலமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மகாத்மா காந்தி இருந்த இடம் கல்கத்தா. மகாத்மா காந்தி கல்கத்தாவில் என்ன செய்து கொண்டிருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அது இரண்டாக பிளவுபட்டு இருவேறு நாடாக, இந்தியா, பாகிஸ்தான் என்று உருவாயிற்று. நாட்டின் எல்லைப் பகுதிகளிலும், வேறு பற்பல நகரங்களிலும் கலவரங்கள் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மத அடிப்படையில் மக்கள் ரத்தக் களரியில் தவித்துக் கொண்டிருந்தனர். இனிப்பு வழங்கி, மகிழ்ந்து கொண்டாடப்பட வேண்டிய சுதந்திரம் வேதனையும், துன்பமும் கலந்த நாளாக விளங்கியது கொடுமையிலும் கொடுமை. இவற்றையெல்லாம் எண்ணித்தான் மகாத்மா காந்தி, தான் எந்தவித கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், மக்களிடையே ஒற்றுமை, அமைதியை நிலைநாட்ட பாடுபடுவேன் என்று சொல்லி கலவரம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த கல்கத்தா அதன் சுற்றுப்புற இடங்களுக்குப் போய் மக்களிடையே பாடுபடுவேன் என்று சொல்லிவிட்டு கல்கத்தா புறப்பட்டுச் சென்றார். அவருடன் எல்லை காந்தி என்று பேசப்பட்ட கான் அப்துல் கஃபார்கானும் கூட இருந்தார். இவர்தான் இந்திய பிரிவினையை கடைசி வரை உறுதியாக எதிர்த்து நின்றவர்.

            அப்போது காந்தி சொன்ன வாசகம் என்ன தெரியுமா? “ஆகஸ்ட் 15ஐ என்னால் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாது. உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. அதே நேரத்தில் , உங்களையெல்லாம் கொண்டாடாதீர்கள் என்று சொல்லவும் மாட்டேன். துரதிர்ஷ்டவசமாக நாம் இன்று பெற்றிருக்கும் சுதந்திரமானது எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தகராறுக்கான விதை விதைக்கப்பட்டிருக்கிறது . அப்படியிருக்கும்போது சுதந்திர ஒளியை நான் எப்படி ஏற்ற முடியும்? என்று ஜூலை மாதமே காந்திஜி சொல்லியிருந்தார்.

            1947 ஆகஸ்ட் 9ஆம் தேதியே அவர் வங்கத்திலுள்ள (இப்போது வங்கதேசம்) நவகாளி (NaoKhali) என்கிற இடத்தில் மதக்கலவரம் மிக உச்சத்தில் இருப்பதால் தான் அங்கே செல்லப் போவதாகச் சொல்லியிருந்தார். கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்த காந்தியை அங்கிருந்த தேசபக்தர்கள் இப்போது நிலவும் சூழலில் கிழக்கு வங்காளத்துக்குப் போக வேண்டாம் என்று வேண்டிக் கொண்டனர். மதக் கலவரத்தால் சிதைந்து போயிருந்த கல்கத்தா நகரத்தில் காந்திஜி அமைதியைக் கொண்டு வந்தால் அது வங்கம் முழுவதுக்கும் பலன் தரும் என்று நம்பினார்கள்.

            ஆகவே கல்கத்தாவில் காந்திஜி முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் ஹைதரி மன்சில் (Hyderi Manzil) என்கிற பகுதியில் தங்குவதற்கு முடிவு செய்தார்.  அங்கு தங்கியிருக்கும் போது அவரைக் காண நூற்றுக் கணக்கில் மக்கள் வந்து கூடினர். அப்போதெல்லாம் அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசினார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு வெளியில் “காந்தி திரும்பிப் போ” என்று அவர் முஸ்லீம்களுக்குச் சாதகமாக இருக்கிறார் என்ற கருத்தில் அவருக்கெதிராகக்  கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

            ஆகஸ்ட் 13 தொடங்கி அவர் இரு தரப்பினரிடமும் வன்முறைகளைக் கைவிட்டு அமைதி காத்திட வேண்டிக் கொண்டிருந்தார். கோபத்தின் உச்சியில் இருந்த மக்களின் சில பிரிவினர் அவர் வேண்டுகோளை நிராகரித்து விட்டனர், அப்படியிருந்தும் காந்தி தன் முயற்சியைக் கைவிடவில்லை. ஒருசில தினங்களில் நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியது. அப்போது கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் மவுண்ட் பேட்டன் சொன்னார், “பஞ்சாபில் 55,000 படை வீரர்கள் இருந்தும் அங்கு வன்முறை குறையவில்லை. வங்கத்திலோ ஒரே ஒருவர் காந்தி இருப்பதால் இங்கு மன்முறை கலவரம் அடங்கியிருக்கிறது” என்றார்.

            கல்கத்தாவில் இருந்த காந்திஜியை ராஜாஜி சென்று பார்த்துப் பேசினார். அப்போது காந்தி சொன்னார், “ நாட்டில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமை, பாதுகாப்போடு இருந்து ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி தத்தமது வீடுகளுக்கு பாதுகாப்பாகச் செல்லும்வரை எனக்கு திருப்தி தராது” என்றார்.

Courtesy: Article by Kunal Majumthaar in “Catch News” website.

Tuesday, August 18, 2020

மகாத்மா காந்தியும் ஆகஸ்ட் புரட்சியும்.

     இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது முதல் இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் பல விறுவிறுப்பான செயல்கள் நடக்கத் தொடங்கின. 1941 டிசம்பரில் ஜப்பான் ஆசியா கண்டத்தில் இருந்த பல இங்கிலாந்தின் காலனி நாடுகள் மீது போர்தொடுத்து பர்மா, மலாய் தீப்கர்ப்பம், இந்தோனேஷியா, சிங்கப்பூர் வழியாக முன்னேறிக் கொண்டிருந்தது. இந்தியாவின் தலைவாசல் வரையில் ஜப்பான் தன் படைகளை உள்ளே கொண்டு வந்து விட்டது. அதே காலகட்டத்தில் ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஹிட்லரின் நாஜிப் படைகள் வெற்றி மேல் வெற்றிகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருந்தனர். அப்போது இங்கிலாந்துக்கு பிரதமராக பதவியேற்றிருந்த சர் வின்ஸ்டன் சர்ச்சில் இந்திய தலைவர்களிடம் போருக்கான முயற்சிகளில் அவர்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் கேட்டிருந்தார்.

            இந்த சூழ்நிலையில்தான் 1942 மார்ச் மாதத்தில் சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்  என்பவர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து, காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகளின் தலைவர்களோடு சந்தித்துப் பேச வந்திருந்தார். அவர் அரசியல் ரீதியாக இந்தியாவுக்குச் சுதந்திரம் தவிர இதர சலுகைகள் சிலவற்றை அளிக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடைய யோசனைகளை மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல் காங்கிரசைப் பொறுத்த வரை இந்தியாவை மதரீதியாக இரண்டாகப் பிரிக்கும் யோசனையையும் முழுதுமாக நிராகரித்தார்கள். இந்த சூழ்நிலையில்தான் மகாத்மா காந்தி, ஒருபுறம் இங்கிலாந்து உலகப் போரில் ஈடுபட்டு போராடிக்கொண்டிருக்க, இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது பற்றி எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், நாட்டைத் துண்டாடவும் தூது வந்தவரிடம் காந்தியடிகள் தாட்சண்யமின்றி நிராகரித்துத் திருப்பி அனுப்பியதுமே இங்கே ஒரு அரசியல் கிளர்ச்சிக்கு வித்திட்டு விட்டதாகக் கருத வேண்டும். 1942 ஆகஸ்ட் மாதம் இந்திய அரசியல் வானில் போராட்ட மேகம் சூழ பம்பாயில் காங்கிரஸ் மகாநாடு கூடியது.

            1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாய் காங்கிரஸ் மகாநாட்டில் மகாத்மா காந்திஜியின் வழிகாட்டலின்படி ஜவஹர்லால் நேரு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அது ஆங்கிலேய அரசு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்கிற தீர்மானம் தான் அது. ஆங்கிலத்தில் அது “க்விட் இந்தியா” தீர்மானம் என்றார்கள். அந்தத் தீர்மானத்தின் மீது மகாத்மா காந்தி பேசுகையில் ஒரு கடுமையான எச்சரிக்கையை பிரிட்டிஷ் அரசுக்கு விடுத்தார். பம்பாயில் ஆகஸ்ட் க்ரந்தி மைதானத்தில் அவர் ஆற்றிய உரை பிரிட்டிஷ் அரசை இந்தியாவை விட்டு வெளியேறு என்று சொல்லி, அந்தப் போராட்டத்தில் தேசபக்தர்களை “செய் அல்லது செத்து மடி” (Do or Die) என்ற கோஷத்தையும் எழுப்பினார்.

            காந்தி சொன்னார், “நான் உங்களுக்கு ஒரு சுருக்கமான மந்திரத்தை உபதேசிக்கிறேன். அதை நீங்கள் உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவர் மூச்சுக் காற்றிலும் அந்த மந்திரத்தின் தாக்கம் வெளிப்பட வேண்டும். அந்த மந்திரம் தான் “செய், அல்லது செத்து மடி” (Do or Die) என்பது. அதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கட் கூட்டம் ஆர்ப்பரித்து காந்தியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

            அந்தக் கூட்டத்தில் பேசிய காந்திஜி அரசாங்க ஊழியர்களை காங்கிரசின் சுயராஜ்ய கோரிக்கையை ஆதரிக்கும்படியும், ராணுவ சிப்பாய்களை தங்கள் சொந்த சகோதரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்றும், நாட்டிலுள்ள சமஸ்தான மன்னர்களை தங்கள் மக்களின் உரிமையை மதித்து நடந்து கொள்ளவும், ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். சுதேச சமஸ்தானங்களின் மக்கள் அனைவரும் தாங்கள் இந்தியப் பெருநாட்டின் குடிமக்கள் என்பதை உணர்ந்து, தங்கள் சுதேச மன்னர்கள் இதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர்களை மன்னர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் காந்திஜி சொன்னார்.

            1942 ஆகஸ்ட் 9ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத், பாபு ராஜேந்திர பிரசாத் போன்ற பெரும் தலைவர்கள் அனைவரும் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்தத் தலைவர்களை 1942இல் கைது செய்து,  உலக யுத்தம் 1945இல் முடியும் வரை எந்தவித நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் சிறையில் வைத்திருந்தார்கள். காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. காங்கிரஸ் அலுவலகங்கள் சோதனையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. கட்சியின் நிதி அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன. கலவரங்களால் நாடே பற்றி எரிந்து கொண்டிருந்தது.

            1942 ஆகஸ்ட் 9, 10 தேதிகளில் இந்தியப் பெரு நகரங்களிலும், சிற்றூர்களிலும் மக்கள் கொதித்தெழுந்து தெருக்களில் வந்து போராடத் தொடங்கினார்கள். எங்கு பார்த்தாலும் மறியல், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்று நாடு அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் காவல் துறை தடை உத்தரவு பிறப்பித்து அடக்குமுறையைக் கையாண்டார்கள். ஏராளமான பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டர்கள். அரசாங்கமும் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டது. போலீஸ் துப்பாக்கிச் சூடுகளும், தடியடிகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன. காவல் துறையின் அடக்குமுறை நீடித்தது. 1942 ஆகஸ்ட்டில் தொடங்கி 1944 வரை எந்தவிதமான பேச்சு வார்த்தைக்கும் காங்கிரசை அழைக்காமல், தலைவர்களையும், தொண்டர்களையும் சிறையில் அடைத்து வைத்திருந்தது அரசாங்கம்.

            1942 ஆகஸ்ட் தொடங்கி அந்த ஆண்டின் இறுதியில் சுமார் 60,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 26,000 க்கும் அதிகமான பேர் சிலபல அரசியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட்டிருந்தார்கள். இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் படி சுமார் 18000 பேர் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

            இத்தனை களேபரங்களுக்கிடையில் இந்திய மக்கள் மத்தியில் ஒரு சுதந்திர தாகம் பெருகி விட்டிருந்ததைக் காண முடிந்தது. அதுவரை இல்லாத அளவுக்கு பொதுமக்களின் பங்களிப்பு இந்த ஆகஸ்ட் போராட்டத்தில் மிக அதிகமாக இருந்தது. சிறைக்குச் செல்வதையோ, தடியடி படுவது, போலீஸ் துன்புறுத்தலுக்கு ஆளாவது என்பதெல்லாம் சாதாரண குடிமக்களுக்குக் கூட பங்கெடுப்பதில் வேகம் உண்டாகியது. இப்படி இந்தியாவையே புறட்டிப் போட்ட இந்த சுதந்திர வேள்வியில் மகாத்மா காந்தியின் ஆன்ம பலம் தான் மேலோங்கியிருந்தது. இந்தியாவில் இருந்த பல்வேறு அமைப்புகள் எல்லாம் இந்த “க்விட் இந்தியா” போரில் பங்கெடுக்காத போதிலும், காந்திஜியின் தலைமையில் இந்தப் போர் உச்சத்தை எட்டியது.

            இப்படி பல்வேறு அமைப்புகள், தலைவர்கள் இவர்களெல்லாம் இந்த ஆகஸ்ட் புரட்சியை புறக்கணித்த போதும், மனம் தளராமல் மகாத்மா காந்தி போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதோடு, இதில் பங்கெடுக்காதவர்களை தனி மனிதர்களையும் சரி, அமைப்புகளையும் சரி எந்தவிதத்திலும் குறை சொல்லவே, குற்றம் சாட்டவோ இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

            அதுதான் காந்திஜியின் தனித் தன்மை. வெற்றி பெற்றால் அது தன்னால் என்பதும், தோல்வி அடைந்தால் பிறரைக் குற்றம் சாட்டுவதுமான வழக்கம் காந்திஜியிடம் இல்லை. தான் ஒரு அழைப்பு விடுத்தால் அதை வெற்றிகரமாக ஆக்குவதில்தான் அவர் குறியாக இருந்தாரே தவிர, பிறரைத் தோல்விக்குக் குற்றம் சாட்டி தான் தப்பித்துக் கொள்ளும் வழக்கத்தை அவர் கையாண்டதே இல்லை. அதுதான் காந்திஜி. அவர் போன்ற தலைவர் கிடைத்தது இந்தியா செய்த புண்ணியம் என்றே சொல்லலாம். வாழ்க காந்திஜியின் புகழ்!

கட்டுரை ஆக்கம்:

தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007. # 9486741885           

           

           

Friday, August 14, 2020

சுதந்திரப் போராட்டத் தியாகி ரா.நாராயண ஐயங்கார்.

       திருச்சி நகரத்தில் சகோதரர்களாக காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டவர்களில் ரா.நாராயண ஐயங்காரும் அவரது தம்பி ரா.கிருஷ்ணசாமியும் முக்கியமானவர்கள். இவர்களோடு சுதந்திரப் போரில் ஈடுபட்ட திருச்சி மாநகர சகோதர காங்கிரஸ் காரர்கள்: டி.வி.சுவாமிநாத சாஸ்திரி, டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி; எம்.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், எம்.எஸ்.ரங்கசாமி ஐயங்கார்; டி.எஸ்.திருஞாானசம்பந்தம், டி.எஸ். அருணாசலம், வேலாயுதம்பாளையம் எம்.கே.எம்.முத்து, கே.பாலகிருஷ்ணன் ஆகியோராவர்.

இதில் ரா.நாராயண ஐயங்காரின் தாயின் தியாகம் மிகவும் சிறப்பானது. மகாத்மாவிடம் பக்தியுடைய இந்த முதிய அம்மையார், காந்தி சுடப்பட்டு இறந்தார் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மயங்கி விழுந்து உயிர் துறந்தார். இந்த ரா.நாராயண ஐயங்கார் பற்றிய சில சுதந்திரப் போராட்ட அனுபவங்களை இங்கு பார்க்கலாம்.

1916இல் ஐரிஷ் பெண்மணியான அன்னிபெசண்ட் அம்மையார் “ஹோம்ரூல் லீக்” எனும் அமைப்பைத் தோற்றுவித்து சுயாட்சிப் போராட்டமொன்றைத் தொடங்கினார். இவருடைய இந்த ஹோம்ரூல் கிளர்ச்சியில் அந்தக் காலத்தில் சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்த எஸ்.சத்தியமூர்த்தி, ஏ.ரங்கசாமி ஐயங்கார், சி.பி.ராமசாமி ஐயர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். முதலாம் “ஹோம்ரூல் மாணவர் கன்வென்ஷன்” என்ற பெயரில் முதல் மாநாடு சென்னையில் நடந்தது. இரண்டாவது மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் பல கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

1917 ஜூன் 15ஆம் தேதி அன்னிபெசண்ட் அம்மையாரும், அருண்டேல், பி.பி.வாடியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிறகு தண்டனை தளர்த்தப்பட்டு இவர்கள் விரும்பினால் ஊட்டி, கோவை ஆகிய இடங்களில் எங்கேனும் தங்கிக் கொள்ளலாம் என்ற தளர்வும் அறிவிக்கப்பட்டது. 1918இல் காஞ்சிபுரத்தில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சரொஜினி நாயுடு தலைமை தாங்கினார். அதில் அன்னிபெசண்ட்டும் கலந்து கொண்டார். ராஜாஜி முதன் முறையாக இந்த மகாநாட்டுக்கு வருகை புரிந்திருந்தார்.

1919இல் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு திருநெல்வேலியில் நடந்தது. அச்சமயம் பஞ்சாபில் நடந்த படுகொலையை எதிர்த்து அட்வகேட் ஜெனரலாகப் பதவி வகித்து வந்த எஸ்.சீனிவாச ஐயங்கார் தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தார். அவரே இந்த திருநெல்வேலி மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

1921இல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்போது அங்கு பிரதாப்நாராயண வாஜ்பாய் என்பவர் மாணவர்களுக்கு இந்தி மொழி கற்றுக் கொடுத்து வந்தார்.  அவர் அந்தக் காலத்தில் திருச்சியில் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவர் எந்தவித ஆசாபாசங்களுக்கு ஆட்படாமல் திடசித்தத்துடன் வாழ்ந்த வரலாறு நம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கும். வட நாட்டுக் காரரான அவர் தமிழ்நாட்டில் திருச்சியில் வந்து பொது நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு தேசப்பணியாற்றி வந்தார். அப்படி ஒருநாள் அவர் இந்தி வகுப்பு எடுத்து வரும்போது அவர் பெயருக்கு ஒரு தந்தி வந்தது. அதைப் பிரித்துப் படித்துப் பார்த்துவிட்டு, அதைத் தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு தொடர்ந்து பாடம் நடத்தி முடித்தார். கடைசியில் தந்தி வந்த விஷயம் என்னவென்று விசாரித்த போதுதான் தெரிந்தது, வடக்கே அவருடைய சொந்த ஊரில் அவரது மனைவி காலமானார் என்ற செய்தி அந்தத் தந்தியில் வந்திருந்தது என்பது. அத்தகைய மனவுறுதி உள்ளவர் அவர்.

ஒத்துழையாமை இயக்கத்திற்காக திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் ஒரு காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. இந்த பிரதாப்நாராயண வாஜ்பாய்தான் முக்கியப் பேச்சாளர். இவருடைய இந்தி பேச்சை திருச்சி வக்கீல் பாலகிருஷ்ண சாஸ்திரி என்பவர் மொழிபெயர்த்துச் சொல்லி வந்தார். அவர் உரை தேசத் துரோகம் என்று குற்றம் சாட்டி அவருக்கும் அவர் உரையை மொழிபெயர்த்த பாலகிருஷ்ண சாஸ்திரிக்கும் தலா ஒரு வருஷ சிறைதண்டனை கிடைத்தது. சிறை தண்டனையை அனுபவித்து விட்டு வெளிவந்த பிறகும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை இவர் கடுமையாக விமர்சித்துப் பேசிய குற்றத்துக்காக மீண்டும் ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது இவருக்கு. சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவரும் போது அவர் உடல் நலம் கெட்டு இயலாத நிலைமையில் நண்பர் சுவாமிநாத சாஸ்திரியார் இல்லத்தில் இறந்து போனார். வடக்கில் அவர் ஊரில் மனைவி, உறவினர்கள் இவர்களையெல்லாம் விட்டுவிட்டு எட்டத்தில் திருச்சியில் காலமான அவருக்கு சுவாமிநாத சாஸ்திரியாரே இறுதிக் கடன்களைச் செய்தார்.

            அந்தக் காலத்தில் திருச்சியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் இரட்டை மால் வீதியில் இருந்து வந்தது. இவரைப் போன்ற பல தியாக புருஷர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்த தொடக்க கால காங்கிரஸ் வரலாற்றில் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் உண்டு. நாட்டுக்காக சர்வபரித்தியாகம் செய்த தியாகப் பெருமக்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.


Sunday, August 2, 2020

மகாகவி பாரதியாரின் "தேசியக் கல்வி"

சமூகம் - தேசீயக் கல்வி

 

தேசமென்பது குடிகளின் தொகுதி. இது கொண்டே நமது முன்னோர் குடிக்கட்டுகளினின்று விலகி நிற்போரைப் பரதேசிகள் என்றனர் போலும்.

குடும்பக் கல்வி

தேசக் கல்விக்குக் குடும்பக் கல்வியே வேர்.

வீட்டுப் பழக்கந்தான் நாட்டிலும் தோன்றும். வீட்டில்யோக்கியன் நாட்டிலும் யோக்யன்; வீட்டில் பொறுமையுடையவன்"நாட்டிலும் பொறுமை யுடையவன்.மனைவியின் பொருளைத் திருடமனந்துணிந்தோன் கோயிற் பணத்தைக் கையாடக் கூசமாட்டான்.தான் பெற்ற குழந்தைகளுக்கிடையே பக்ஷபாதஞ் செய்பவன் ஊரில் நியாயாதிபதியாக நியமனம் பெறத்தக்கவன் ஆகமாட்டான். குடும்பம் நாகரீக மடையாவிட்டால், தேசம் நாகரீக மடையாது. குடும்பத்தில் விடுதலை இராவிடில், தேசத்தில் விடுதலை இராது.

ஒரு குடும்பத்தார் கூடித் துன்பமில்லாமல் வாழ்வதைக் காட்டுமிருகங்களும் பிற மனிதரும் தடுக்காத வண்ணமாக, ஆதியில் மனிதர் காட்டை அழித்து வீடு கட்டினார்கள். பல வீடுகள் கூடி, ஊர் ஆயிற்று.

வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில் எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடுதலைப்பட்டு வாழத் தகுந்த இடத்துக்கு வீடு என்ற பெயர் கொடுத்தனர் போலும்.'விடத்தக்கது வீடு' என்ற பிற்கால உரை ஒப்பத்தக்கதன்று."'விடத்தக்கது வீடு' என்பது கற்றோர் துணிபாயின், அக் கற்றோர் வீட்டில் குடியிருப்பது யோக்கியதையன்று; அவர்கள் காட்டில் சென்று வாழ்தல் தகும். குழந்தைகள் வீட்டையே அரணாகக் கருதுகிறார்கள். ஸ்திரீகளும் அப்படியே செய்கிறார்கள்.இடை வயதிலுள்ள ஆண் மக்கள் பெரும்பாலும் வீட்டைக்காட்டிலும் வெளி இடங்களில் அதிக இன்பம் காண்கிறார்கள்.இந்த விஷயத்தில், குழந்தைகள், ஸ்திரீகள் முதலியோர்களின்கொள்கையை ஆண்மக்கள் பின்பற்றுதல் தகும் என்றுநம்புகிறேன். 'வீட்டிலிருந்து வெளியே ஓடிப்போய், வீட்டாருடன் கலகம் பண்ணிக்கொண்டு வாழ்வதே மேல்' என்று கருதும் மக்களின் கூட்டங்களே பெரிய படைகளாய், உலகத்தில் பெரிய போர்களை நிகழ்த்தி, எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகச் செய்கின்றன. வீடு துயரிடம் ஆவதற்குக் காரணம் விடுதலையும் அன்பும் இல்லாமையே. வீட்டில் அண்ணன்தம்பிகளையும் தாய் தந்தையரையும்,அக்கா தங்கைகளையும், பெண்டு பிள்ளைகளையும் அடிமைப்படுத்தி ஆளச் சதிசெய்யும் ஜனங்களின் கூட்டங்களே தேசங்களையும் அடக்கி அடிமையாக்கி ஆளச் சதி செய்கின்றன. 

 

  வீடு துன்பமாக இருப்பதின் மூல காரணம் கணவனுக்கும் மனைவிக்கும் மனப் பொருத்தமில்லாமை. ஸ்திரீ புருஷ விரோதத்தால் உண்டாகும் துன்பங்களே வீட்டுத் துன்பங்களுக்கெல்லாம் ஆதாரம்.

கொடுங்கோன்மை தவறு என்றும், கொடுங்கோன்மை இழைத்தால் அதற்குமேல் கொடுங்கோன்மை அவசியம் விளையும் என்றும், அவனவன் வீட்டிலிருப்போரைக் கொல்லாமல் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்வானாயின், உலகத்தில் கொடுங்கோன்மையும் போரும் விளையக் காரணமில்லையென்றும் "நான் கருதுகிறேன். குடும்ப வாழ்க்கையே மற்றெல்லா வாழ்க்கைகளிலும் சிறந்தது. இதனால் அன்றோ திருவள்ளுவரும்,

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்      நல்லாற்றின் நின்ற துணைஎன்றார்.

காதல்-விடுதலை வேண்டுமென்று கூறும் கக்ஷியொன்றுஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித பண்டிதைகளால்ஆதரிக்கப்படுகிறது. அது நியாயம் என்பதற்கு அந்தக் கக்ஷியார்காட்டும் ஆதாரங்கள் பல. அதாவது, பூமண்டல முழுதில் சென்றகால - நிகழ்கால அனுபவங்களை ப்ரமாணமாகக் காட்டுகிறார்கள்.அதாவது, பூமண்டலத்தின் சரித்திரத்தில் வ்யபிசாரம் ஜனவழக்கத்தில் தள்ளப்படாமலும் ஏகபத்நீவ்ரதம் பாதிவ்ரத்யம்என்ற இரண்டுவித தர்மங்களும் பெரும்பாலும் ஆதர்சங்களாகவும்நடைபெற்று வருகின்றனவென்றும், அக்னி ஸாக்ஷி வைத்து'உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை என்று ஸத்யம்பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மிமிதிப்பதும்,அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம்அனுபவத்தில் ஸஹிக்கத்தக்க அல்லது ஸஹிக்கத்தகாத"பந்தங்களாகவே முடிகின்றனவென்றும், ஆதலால் அவற்றைஇஷ்டப்படி அப்போதப் போது மாற்றிக்கொள்ளுதலே நியாயமென்றும். இல்லாவிட்டால் மனுஷ்ய ஸ்வதந்திரமாகிய மூலாதாரக் கொள்கைக்கே ஹானி உண்டாகிறதென்றும், ஆதலால், விவாகம் 'சாச்வத பந்தம்' என்று வைத்தல்பிழையென்றும் மேற்படி கக்ஷியார் சொல்லுகிறார்கள். மேலும்,ஐரோப்பாச் சட்டத்திலும் மகமதியச் சட்டத்திலும் ஸ்திரீபுருஷர் தனது விவாகத்தை ரத்து செய்துகொள்ளலாம் என்றநியாயம் ஏற்பட்டிருத்தல் தமது கொள்கையை மனுஷ்ய நீதிஏற்கனவே அங்கீகாரஞ் செய்து கொண்டுவிட்டது என்பதற்கு ஒரு பலமான திருஷ்டாந்தம் என்று மேற்படி விடுதலைக் காதல் (Free Love)  கக்ஷியார் சொல்லுகிறார்கள்.

   ஆனால், தேசீயக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம் மேற்படி விடுதலைக் காதற் கொள்கையை அங்கீகாரம் செய்தல் ஸாத்யமில்லை. ஏனென்றால், தேசமாவது,குடும்பங்களின் தொகுதியென முன்னரே காட்டியுள்ளோம். குடும்பங்களில்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லாவிடிலோ, தேசீயக் கல்வியைப் பற்றிப் பேச இடமில்லை. விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மனைவாழ்க்கைக்கும் பொருந்தாது. மனை வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும் 'இன்று வேறு மனைவி, நாளை வேறு மனைவி' என்றால், குழந்தைகளின் நிலைமை என்னாகும்?  குழந்தைகளை நாம் எப்படி ஸம்ரக்ஷணை பண்ண முடியும்? ஆதலால், குழந்தைகளுடைய ஸம்ரக்ஷணையே நாடி ஏகபத்நீவ்ரதம் சரியான அனுஷ்டானம் என்று முன்னோரால் ஸ்தாபிக்கப் பட்டது.

தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அது 'தேசீயம்' என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை; இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்கவேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்கவேண்டும்.இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேசவிரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்யபாஷை விரோதம் பூண்டு பேசுகிறேன் என்றுநினைத்து விடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரததேச முழுதிலும் எப்போதும்போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரததேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும், தமிழ் நாட்டில் தமிழ் மொழிதலைமை பெற்றுத் தழைத்திடுக.

ஆரம்பப் பள்ளிக்கூடம்

உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதமாகஎத்தனை பள்ளிக்கூடங்கள் ஸாத்யமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள். ஆரம்பத்தில், மூன்று உபாத்தியாயர்கள் வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் போதும். இவர்களுக்குச் சம்பளம் தலைக்கு மாஸம் ஒன்றுக்கு 30 ரூபாய்க்குக் குறையாமல் ஏற்படுத்தவேண்டும். இந்த உபாத்தியாயர்கள் பி.ஏ., எம்.ஏ. பட்டதாரிகளாகஇருக்கவேண்டிய அவசியமில்லை. மெட்றிகுலேஷன் பரீஷை தேறினவர்களாக இருந்தால் போதும். மெட்றிகுலேஷன் பரீஷைக்குப் போய் தவறினவர்கள்கிடைத்தால் மிகவும் நல்லது. இந்த உபாத்தியாயர்களுக்கு தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்கவேண்டும். திருஷ்டாந்தமாக, இங்ஙனம் தமிழ் நாட்டில் ஏற்படும்தேசீயப் பாடசாலைகளில் உபாத்தியாயராக வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்கவேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வதர்மாபிமானமும், எல்லா ஜீவர்களிடத்திலும் கருணையும் உடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுத்தல் நன்று. அங்ஙனம் தேசபக்தி முதலிய உயர்ந்த குணங்கள் ஏற்கெனவே அமைந்திராத உபாத்தியாயர்கள் கிடைத்த போதிலும், பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியாயர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும். ஆரோக்கியமும் திடசரீரமுமுடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுப்பது நன்று..

(அ) எழுத்து, படிப்பு, கணக்கு(ஆ) இலேசான சரித்திரப் பாடங்கள்

வேதகால சரித்திரம், புராணகால சரித்திரங்கள், பௌத்த காலத்துச்சரித்திரம், ராஜபுதனத்தின் சரித்திரம் இவை மிகவும் சிரத்தையுடன் கற்பிக்கப்படவேண்டும். பள்ளிக்கூடம் ஏற்படுத்தப்போகிற கிராமம் அல்லது பட்டணம் எந்த மாகாணத்தில் அல்லது எந்த ராஷ்ட்ரத்தில் இருக்கிறதோ, அந்த மாகாணத்தின் சரித்திரம் விசேஷமாகப் பயிற்றுவிக்கப்படவேண்டும். (இங்கு நான் மாகாணம் அல்லது ராஷ்ட்ரம் என வகுத்திருப்பது சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் முதலிய தற்காலப் பகுதிகளைக் குறிப்பதன்று, பாஷைப்பிரிவுகளுக்கு இசைந்தவாறு வகுக்கப்படும் தமிழ் நாடு, தெலுங்கு நாடு, மலையாள நாடு முதலிய இயற்கைப் பகுதிகளைக் குறிப்பது.)  இந்தச்சரித்திரங்களில் மஹா கீர்த்தி"பெற்று விளங்கும் பருவங்களை உபாத்தியாயர்கள் மிகவும்உத்ஸாகத்துடனும்,ஆவேசத்துடனும், பக்தி சிரத்தைகளுடனும்கற்பிக்கும்படி ஏற்பாடு செய்யவேண்டும். அதிபால்யப் பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையன. ஆதலால்,பள்ளிப்பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தில் அற்புதமான பகுதிகளை யூட்டி, அசோகன், விக்ரமாதித்யன், ராமன், லக்ஷ்மணன், தர்மபுத்திரன், அர்ஜூனன் இவர்களிடமிருந்த சிறந்த குணங்களையும் அவற்றால் அவர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட மஹிமைகளையும் பிள்ளைகளின் மனதில் பதியும்படி செய்வது அந்தப் பிள்ளைகளின் இயல்பைச் சீர்திருத்திமேன்மைப்படுத்துவதற்கு நல்லஸாதனமாகும்.

தேச பாஷையின் மூலமாகவே இந்தச் சரித்திரப்"படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப்படவேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். தேச பாஷையின்மூலமாகப் பயிற்றப்படாத கல்விக்கு தேசீயக் கல்வி என்ற பெயர்சொல்லுதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ?  இது நிற்க.
       
ஹிந்து தேச சரித்திரம் மாத்திரமே யல்லாது ஸௌகர்யப்பட்டால் இயன்றவரை அராபிய, பாரஸீக, ஐரிஷ்,போலிஷ், ருஷிய, எகிப்திய, இங்கிலீஷ், ப்ரெஞ்சு, அமெரிக்கா, இத்தாலிய, கிரேக்க, ஜப்பானிய, துருக்க தேசங்கள் முதலியவற்றின் சரித்திரங்களிலும் சில முக்கியமான கதைகளும் திருஷ்டாந்தங்களும் பயிற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்தால் நல்லது.

(இ) பூமி சாஸ்திரம்

ஆரம்ப பூகோளமும், அண்ட சாஸ்த்ரமும், ஜகத்தைப் பற்றியும், ஸூரிய மண்டலத்தைப் பற்றியும், அதைச் சூழ்ந்தோடும் கிரகங்களைப் பற்றியும், நக்ஷத்திரங்களைப் பற்றியும், இவற்றின் சலனங்களைப் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவரை தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். பூமிப் படங்கள், கோளங்கள், வர்ணப் படங்கள் முதலிய கருவிகளை ஏராளமாக உபயோகப்படுத்தவேண்டும். ஐந்து கண்டங்கள், அவற்றிலுள்ள முக்கிய தேசங்கள், அந்த தேசங்களின் ஜனத்தொகை, மதம், ராஜ்ய நிலை, வியாபாரப் பயிற்சி, முக்கியமான விளைபொருள்கள், முக்கியமான கைத்தொழில்கள் இவற்றைக் குறித்து பிள்ளைகளுக்குத் தெளிந்தஞானம் ஏற்படுத்த வேண்டும். முக்கியமான துறைமுகப் பட்டணங்களைப் பற்றியும், அவற்றில் நடைபெறும் "வியாபாரங்களைக் குறித்தும் தெளிந்த விவரங்கள் தெரியவேண்டும். மேலும், இந்தியர்களாகிய நம்மவர் வெளித்தேசங்களில்எங்கெங்கே அதிகமாகச் சென்று குடியேறியிருக்கிறார்கள் என்றவிஷயம் பிள்ளைகளுக்குத் தெரிவதுடன் அங்கு நம்மவர்படிப்பு, தொழில், அந்தஸ்து முதலிய அம்சங்களில் எந்தநிலையிலே இருக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிய வேண்டும். மேலும் உலகத்திலுள்ள பல தேசங்களின்நாகரிக வளர்ச்சியைக் குறித்து பிள்ளைகள் தக்க ஞானம்பெறவேண்டும்.

பாரத பூமி சாஸ்த்ரம், இந்தியாவிலுள்ள மாகாணங்கள், அவற்றுள், அங்குள்ள தேச பாஷைகளின் வேற்றுமைக்குத் தகுந்தபடி இயற்கையைத் தழுவி ஏற்படுத்தக்கூடிய பகுதிகள்-இவைவிசேஷ சிரத்தையுடன் கற்பிக்கப் படவேண்டும். வெளிமாகாணங்களைக் குறித்துப் பின் வரும் அம்சங்களில் இயன்றவரை விஸ்தாரமான ஞான முண்டாக்க வேண்டும்; அதாவது பாரதபூமி சாஸ்த்ரத்தில், மற்ற மாகாணங்களில் வசிக்கும்ஜனங்கள், அங்கு வழங்கும் முக்கிய பாஷைகள், முக்கியமான ஜாதிப் பிரிவுகள், தேச முழுமையும் வகுப்புகள் ஒன்றுபோலிருக்கும் தன்மை, மத ஒற்றுமை, பாஷைகளின் நெருக்கம், வேதபுராண இதிஹாஸங்கள் முதலிய நூல்கள் பொதுமைப்பட வழங்குதல், இவற்றிலுள்ள புராதன ஒழுக்க ஆசாரங்களின் பொதுமை, புண்ணிய க்ஷேத்திரங்கள், அவற்றின் தற்கால நிலை,

இந்தியாவிலுள்ள பெரிய மலைகள், நதிகள், இந்தியாவின் விளைபொருள்கள், அளவற்ற செல்வம், ஆஹார பேதங்கள், தற்காலத்தில் இந்நாட்டில் வந்து குடியேறியிருக்கும் பஞ்சம், தொத்து நோய்கள், இவற்றின் காரணங்கள், ஜல வஸதிக் குறைவு, வெளிநாடுகளுக்கு ஜனங்கள் குடியேறிப் போதல் - இந்த அம்சங்களைக் குறித்து மாணாக்கருக்குத் தெளிவான ஞானம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பாரத தேசத்தின் அற்புதமான சிற்பத் தொழில்கள், கோயில்கள், இவற்றைப்பற்றி மாணாக்கருக்குத் தெரிவிக்க வேண்டும்.

உங்கள் சொந்த ராஷ்ட்ரம் அல்லது மாகாணத்தின் பூமி சாஸ்திரம்.

இது கற்றுக் கொடுப்பதில், ஜனப்பாகுபாடுகளைப் பற்றிப் பேசுமிடத்து, ஹிந்துக்கள், மகம்மதியர் என்ற இரண்டு பிரிவுகளே பிரதானம் என்பதையும், இவர்களில் மகம்மதியர்களிலே பெரும்பாலார் ஹிந்துக்களின் சந்ததியில் தோன்றியவர்கள் என்பதையும், அங்ஙனமன்றி வெளி நாட்டோரின் சந்ததியாரும் இப்போது முற்றிலும் ஸ்வதேசிகளாக மாறி விட்டனர்

(ஈ) மதப் படிப்பு

நான்கு வேதங்கள், ஆறு தர்சனங்கள்.உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிஹாஸங்கள், பகவத்கீதை,பக்தர் பாடல்கள், சித்தர் நூல்கள் - இவற்றை ஆதாரமாகக்கொண்டது ஹிந்து மதம். ஹிந்து மதத்தில் கிளைகள்இருந்தபோதிலும், அக் கிளைகள் சில சமயங்களில்அறியாமையால் ஒன்றை யொன்று தூஷணை செய்துகொண்ட போதிலும், ஹிந்து மதம் ஒன்றுதான். பிரிக்கமுடியாது. வெவ்வேறு வ்யாக்யானங்கள் வெவ்வேறு அதிகாரிகளைக் கருதிச் செய்யப்பட்டன. தற்காலத்தில்சில குப்பைகள் நம்முடைய ஞான ஊற்றாகிய புராணங்கள்முதலியவற்றிலே கலந்துவிட்டன. மத த்வேஷங்கள், "அனாவசிய மூட பக்திகள் முதலியனவே அந்தக் குப்பைகளாம். ஆதலால் தேசீயப் பள்ளிக்கூடத்துமாணாக்கர்களுக்கு உபாத்தியாயர் தத்தம் இஷ்டதெய்வங்களினிடம் பரம பக்தி செலுத்தி வழிபாடு செய்து வர வேண்டும் என்று கற்பிப்பதுடன், இதர தெய்வங்களைப்பழித்தல், பகைத்தல் என்ற மூடச் செயல்களை கட்டோடுவிட்டுவிடும்படி போதிக்க வேண்டும். 'ஏகம் ஸத் விப்ரா:பஹூதா வதந்தி' (கடவுள் ஒருவரே, அவரை ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர்) என்ற ரிக் வேதஉண்மையை மாணாக்கரின் உள்ளத்தில் ஆழப் பதியுமாறுசெய்ய வேண்டும். மேலும், கண்ணபிரான் 'எல்லா உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்' என்று கீதையில் கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர் - எல்லா உயிர்களும் பரமாத்மாவின் அம்சங்களே என்பதை நன்கறிந்து, அவற்றை மன மொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையே செய்து வர வேண்டும்' என்பது ஹிந்துமதத்தின் மூல தர்மம் என்பதை மாணாக்கர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். மாம்ஸ போஜனம் மனிதன் உடல் இறைச்சியைத் "தின்பதுபோலாகும் என்றும், மற்றவர்களைப் பகைத்தலும்அவர்களைக் கொல்வதுபோலேயாகும் என்றும் ஹிந்து மதம்கற்பிக்கிறது. 'எல்லாம் பிரம்மமயம்,' 'ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்' என்ற வசனங்களால் உலக முழுதும் கடவுளின் வடிவமேஎன்று ஹிந்து மதம் போதிக்கிறது. 'இங்ஙனம் எல்லாம் கடவுள் மயம் என்றுணர்ந்தவன் உலகத்தில் எதற்கும் பயப்படமாட்டான்,எங்கும் பயப்படமாட்டான்; எக்காலத்திலும் மாறாத ஆனந்தத்துடன் தேவர்களைப்போல் இவ்வுலகில் நீடூழி வாழ்வான்' என்பது ஹிந்து மதத்தின் கொள்கை. இந்த விஷயங்களெல்லாம் மாணாக்கருக்குத் தெளிவாக விளங்கும்படி செய்வது உபாத்தியாயர்களின் கடமை. மத விஷயமான போராட்டங்கள் எல்லாம் சாஸ்தர விரோதம்; ஆதலால், பரம மூடத்தனத்துக்கு லக்ஷணம். ஆசாரங்களை எல்லாம் அறிவுடன் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால்,ஸமயக் கொள்கைக்கும் ஆசார நடைக்கும் தீராத ஸம்பந்தம்கிடையாது. ஸமயக் கொள்கை எக்காலத்திலும் மாறாதது.ஆசாரங்கள் காலத்துக்கு காலம் மாறுபடும் இயல்புடையன.

ஸ்ரீீராமாயண மஹாபாரதங்களைப் பற்றி பிரஸ்தாபம் நடத்துகையிலே, நான் ஏற்கெனவே சரித்திரப் பகுதியிற் கூறியபடி, இதிஹாஸ புராணங்களில் உள்ள வீரர், ஞானிகள் முதலியோரின் குணங்களை நாம் பின்பற்றி நடக்க முயலவேண்டும். உண்மை,நேர்மை, வீர்யம், பக்தி முதலிய வேதரிஷிகளின் குணங்களையும்,ஸர்வதேச பக்தி, ஸ்வஜனாபிமானம், ஸர்வ ஜீவ தயை முதலியபுராதன வீரர்கள் குணங்களையும் பிள்ளைகளுக்கு நன்றாகஉணர்த்தவேண்டும். சிபி சக்கரவர்த்தி புறாவைக் காப்பாற்றும்பொருட்டாக தன் சதையை அறுத்துக்கொடுத்த கதை முதலியவற்றின் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டி மாணாக்கர்களுக்கு ஜீவகாருண்ணியமே எல்லா தர்மங்களிலும் மேலானது என்பதை விளக்கவேண்டும். ஏழைகளுக்கு உதவி புரிதல், கீழ் ஜாதியரை உயர்த்தி விடுதல் முதலியனவே ஜனஸமூஹக் கடமைகளில் மேம்பட்டன என்பதைக் கற்பிக்க வேண்டும்.

(உ) ராஜ்ய சாஸ்திரம்

ஜனங்களுக்குள்ளே ஸமாதானத்தைப்பாதுகாப்பதும், வெளி நாடுகளிலிருந்து படை எடுத்துவருவோரைத் தடுப்பதும் மாத்திரமே ராஜாங்கத்தின்காரியங்கள் என்று நினைத்துவிடக்கூடாது.ஜனங்களுக்குள்ளே செல்வமும், உணவு, வாஸம்முதலிய ஸௌகர்யங்களும், கல்வியும், தெய்வ பக்தியும்,ஆரோக்கியமும், நல்லொழுக்கமும், பொது சந்தோஷமும் மேன்மேலும் விருத்தியடைவதற்குரிய உபாயங்களைஇடைவிடாமல் அனுஷ்டித்துக் கொண்டிருப்பதேராஜாங்கத்தின் கடமையாவது.

குடிகள் ராஜாங்கத்தைத் தம்முடையநன்மைக்காகவே சமைக்கப்பட்ட கருவியென்று நன்றாகத்தெரிந்துகொள்ள வேண்டும். குடிகளுடைய இஷ்டப்படியேராஜ்யம் நடத்தப் படவேண்டும். தீர்வை விதித்தல், தீர்வைப் பணத்தை பல துறைகளிலே வினியோகித்தல், புதுச்சட்டங்கள் சமைத்தல், பழைய சட்டங்களை அழித்தல்முதலிய ராஜாங்கக் காரியங்களெல்லாம் குடிகளால்நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளின் இஷ்டப்படியே நடத்தவேண்டும்.

குடிகளின் நன்மைக்காகவே அரசு ஏற்பட்டிருப்பதால், அந்த அரசியலைச் சீர்திருத்தும் விஷயத்தில் குடிகளெல்லாரும் தத்தமக்கு இஷ்டமானஅபிப்பிராயங்களை வெளியிடும் உரிமை இவர்களுக்கு உண்டு.இந்த விஷயங்களை யெல்லாம் உபாத்தியாயர்கள்மாணாக்கர்களுக்குக் கற்பிக்குமிடத்தே, இப்போதுபூமண்டலத்தில் இயல்பெறும் முக்கியமான ராஜாங்கங்கள் "எவ்வளவு தூரம் மேற்கண்ட கடமைகளைச் செலுத்தி வருகின்றனஎன்பதையும் எடுத்துரைக்க வேண்டும். மேலும், உலகத்துராஜாங்கங்களில் சுவேச்சா ராஜ்யம், ஜனப்பிரதிநிதியாட்சி,குடியரசு முதலியன எவையென்பதையும், எந்த நாடுகளில் மேற்படி முறைகள் எங்ஙனம் மிசிரமாகி நடைபெறுகின்றன என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டும்.

கிராம பரிபாலனம், கிராம சுத்தி, வைத்தியம் முதலியவற்றில் குடிகளனைவரும் மிகுந்த சிரத்தை காட்டவேண்டுமாதலால், மாணாக்கர்களுக்கு இவற்றின் விவரங்கள் நன்றாக போதிக்கப்பட வேண்டும்.

கோயிற் பரிபாலனமும் அங்ஙனமே. ஏழைகளுக்குவீடு கட்டிக் கொடுப்பதும், தொழில் ஏற்படுத்திக்கொடுத்து உணவுதருவதும், ராஜாங்கத்தாரின் கடமை என்பது மட்டுமன்றி, கிராமத்துஜனங்கள் அத்தனை பேருக்கும் பொதுக்கடமையாகும்.

(ஊ) பொருள் நூல்

பொருள் நூலைப்பற்றிய ஆரம்பக் கருத்துக்களைமாணாக்கர்களுக்கு போதிக்குமிடையே, தீர்வை விஷயத்தைமுக்கியமாகக் கவனிக்கவேண்டும். ஜனங்களிடம் தீர்வைஎத்தனைக் கெத்தனை குறைவாக வசூல் செய்யப்படுகிறதோ,அங்ஙனம் குறைவாக வாங்கும் தீர்வையிலிருந்து பொதுநன்மைக்குரிய காரியங்கள் எத்தனைக் கெத்தனை மிகுதியாக நடைபெறுகின்றனவோ, அத்தனைக் கத்தனைஅந்த ராஜாங்கம் நீடித்து நிற்கும்; அந்த ஜனங்கள் க்ஷேமமாகவாழ்ந்திருப்பார்கள். வியாபார விஷயத்தில், கூட்டுவியாபாரத்தால் விளையும் நன்மைகளை மாணாக்கர்களுக்குஎடுத்துக்காட்டவேண்டும். மிகவும் ஸரஸமான இடத்தில்விலைக்கு வாங்கி, மிகவும் லாபகரமான சந்தையில் கொண்டுபோய் விற்கவேண்டும் என்ற பழைய வியாபாரக் கொள்கையைஎப்போதும் பிராமணமாகக் கொள்ளக்கூடாது. விளைபொருளும்,செய் பொருளும் மிஞ்சிக் கிடக்கும் தேசத்தில் விலைக்கு வாங்கிஅவை வேண்டியிருக்கு மிடத்தில் கொண்டு போய் விற்கவேண்டும் என்பதே வியாபாரத்தில் பிரமாணமான கொள்கையாகும்.

வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ஙனம்சிறந்ததோ, அதுபோலவே கைத்தொழிலிலும் கூட்டுத் தொழிலேசிறப்பு வாய்ந்ததாம். முதலாளி யொருவன் கீழே பல தொழிலாளிகள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும்தொழிலாளிகள் பலர் கூடிச்செய்யும் தொழிலே அதிகநன்மையைத் தருவதாகும்.

செல்வம் ஒரு நாட்டில் சிலருக்கு வசப்பட்டதாய்பலர் ஏழைகளாக இருக்கும்படி செய்யும் வியாபார முறைகளைக்காட்டிலும், சாத்தியப்பட்டவரை அநேகரிடம் பொருள்பரவியிருக்கும்படி செய்யும் வியாபார முறைகள் மேன்மையாகபாராட்டத்தக்கனவாம்.

(எ) ஸயன்ஸ் அல்லது பௌதிக சாஸ்திரம்

ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத்தக்க கருவிகள் மூலமாகவும் பரீக்ஷைகள் மூலமாகவும்பிள்ளைகளுக்குக் கற்பித்துக் கொடுத்தல் மிகவும்அவசியமாகும். பிள்ளைகளுக்குத் தாங்களே 'ஸயன்ஸ்'சோதனைகள் செய்து பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். வியாபார விஷயங்களுக்கு ரஸாயனசாஸ்திரம் மிகவும் பிரதானமாகையால் ரஸாயன பயிற்சியிலேஅதிக சிரத்தை காண்பிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாதநுட்பமான பூச்சிகள் தண்ணீர் மூலமாகவும், காற்று மூலமாகவும்,மண் மூலமாகவும் பரவி நோய்களைப் பரப்புகின்றன என்றவிஷயம் ஐரோப்பிய 'ஸயன்ஸ்' மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதில் ஒரு சிறிது உண்மை இருப்பதுமெய்யே யாயினும், மனம் சந்தோஷமாகவும் ரத்தம்சுத்தமாகவும் இருப்பவனை அந்தப் பூச்சிகள் ஒன்றும்செய்யமாட்டா என்பதை ஐரோப்பியப் பாடசாலைகளில்அழுத்திச் சொல்லவில்லை. அதனால், மேற்படி சாஸ்திரத்தைநம்புவோர் வாழ்நாள் முழுவதும் ஸந்தோஷமாய் இராமல் தீராதநரக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆதலால், நமது தேசீய ஆரம்பப்பாடசாலையில் மேற்படி பூச்சிகளைப்பற்றின பயம் மாணாக்கருக்குச்சிறிதேனும் இல்லாமல் செய்துவிட வேண்டும்.

உலகமே காற்றாலும், மண்ணாலும், நீராலும்சமைந்திருக்கிறது. இந்த மூன்று பூதங்களை விட்டு விலகி வாழயாராலும் இயலாது. இந்த மூன்றின் வழியாகவும் எந்த நேரமும் ஒருவனுக்கு பயங்கரமான நோய்கள் வந்துவிடக்கூடும் என்றமஹா நாஸ்திகக் கொள்கையை நவீன ஐரோப்பிய சாஸ்திரிகள்தாம் நம்பி ஓயாமல் பயந்து பயந்து மடிவது போதாதென்றுஅந்த மூடக்கொள்கையை நமது தேசத்தில் இளஞ் சிறுவர்மனதில் அழுத்தமாகப் பதியும்படி செய்து விட்டார்கள். சிறுபிராயத்தில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வலிமை உடையன, அசைக்க முடியாதன, மறக்கமுடியாதன. எனவே,நமது நாட்டிலும் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்தபிள்ளைகள் சாகுமட்டும் இந்தப் பெரும் பயத்துக்குஆளாய் தீராத கவலைகொண்டு மடிகிறார்கள்; பூச்சிகளால்மனிதர் சாவதில்லை; நோய்களாலும் சாவதில்லை; கவலையாலும்பயத்தாலும் சாகிறார்கள். இந்த உண்மை நமது தேசீயப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படிசெய்யவேண்டும்.

பௌதிக சாஸ்திரங்கள் கற்றுக் கொடுப்பதில், மிகவும்தெளியான எளிய தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும்ஸுலபமாக விளங்கும்படி சொல்லிக் கொடுக்கவேண்டும். இயன்றஇடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையேஉபயோகப்படுத்த வேண்டும். திருஷ்டாந்தமாக, "ஆக்ஸிஜன்","ஹைட்ரஜன்", முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராண வாயு, ஜலவாயு என்றநாமங்களையே வழங்க வேண்டும். தமிழ்ச் சொற்கள அகப்படாவிட்டால் ஸம்ஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்குமட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல்பொருந்தும். இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாதஇடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம்.ஆனால், குணங்கள், செயல்கள், நிலைமைகள்இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம்.ஆனால், குணங்கள், செயல்கள், நிலைமைகள் இவற்றுக்குஇங்கிலீஷ் பதங்களை ஒருபோதும் வழங்கக் கூடாது.பதார்த்தங்களின் பெயர்களை மாத்திரமே இங்கிலீஷில்சொல்லலாம், வேறு வகையால் உணர்த்த இயலாவிடின்.

(ஏ) கைத்தொழில், விவஸாயம், தோட்டப் பயிற்சி, வியாபாரம்.

இயன்றவரை மாணாக்கர்கள் எல்லாருக்கும், " விசேஷமாகத் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு, நெசவு முதலிய முக்யமான கைத்தொழில்களிலும், நன்செய்ப்புன்செய்ப் பயிர்த்தொழில்களிலும், பூ, கனி, காய், கிழங்குகள்விளைவிக்கும் தோட்டத் தொழில்களிலும், சிறு வியாபாரங்களிலும் தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படிசெய்தல் நன்று. இதற்கு மேற்கூறிய மூன்று உபாத்தியாயர்களைத்தவிர, தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகளிலே சற்றுப்படிப்புத் தெரிந்தவர்களும் தக்க லௌகிகப் பயிற்சி யடையவர்களுமான அனுபவஸ்தர்களைக் கொண்டு ஆரம்பப் பயிற்சி ஏற்படுத்திக் கொடுத்தல் மிகவும் நன்மை தரக்கூடிய விஷயமாகும்.

(ஐ) சரீரப் பயிற்சி

தோட்டத் தொழிகள், கிணறுகளில் ஜலமிறைத்தல்முதலியவற்றால் ஏற்படும் சரீரப் பயிற்சியே மிகவும் விசேஷமாகும்.பிள்ளைகளுக்குக் காலையில் தாமே ஜலமிறைத்து ஸ்நானம் செய்தல், தத்தம் வேஷ்டி துணிகளைத் தோய்த்தல் முதலியஅவசியமான கார்யங்களில் ஏற்படும் சரீரப் பயிற்சியும் நன்றேயாம். இவற்றைத் தவிர, ஓட்டம், கிளித்தட்டு, சடுகுடு "முதலிய நாட்டு விளையாட்டுகளும், காற்பந்து  (Foot ball)முதலிய ஐரோப்பிய விளையாட்டுகளும், பிள்ளைகளுடையபடிப்பில் பிரதான அம்சங்களாகக் கருதப் படவேண்டும்; குஸ்தி,கஸரத், கரேலா முதலிய தேசீயப் பயிற்சிகளும் இயன்றவரை அனுஷ்டிக்கப் படலாம். கபாத்து (ட்ரில்) பழக்குவித்தல் இன்றியமையாத அம்சமாகும். ஸௌகர்யப்பட்டால் இங்கிலீஷ்பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிக்கும் மரக்குதிரை. ஸமக்கட்டைகள் (parallelbars), ஒற்றைக் கட்டை  (horizontal bar)  முதலிய பழக்கங்களும் செய்விக்கலாம்.படிப்பைக் காட்டிலும் விளையாட்டுக்களில் பிள்ளைகள் அதிகசிரத்தை எடுக்கும்படி செய்யவேண்டும். 'சுவரில்லாமல்சித்திரமெழுத முடியாது.' பிள்ளைகளுக்கு சரீரபலம் ஏற்படுத்தாமல் வெறுமே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர்களுக்கு நாளுக்குநாள் ஆரோக்கியம் குறைந்து அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி, அவர்கள் தீராததுக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரிடும்.

(ஒ) யாத்திரை (எக்ஸ்கர்ஷன்)

பிள்ளைகளை உபாத்தியாயர்கள் பக்கத்தூர்களிலும்தமதூரிலும் நடக்கும் உற்சவங்கள், திருவிழாக்கள்முதலியவற்றுக்கு அழைத்துச் சென்று, மேற்படி விழாக்களின்உட்பொருளைக் கற்பித்துக்கொடுத்தல் நன்று. திருவிழாவுக்குவந்திருக்கும் பலவகை ஜனங்களின் நடையுடைபாவனைகளைப் பற்றிய ஞானம் உண்டாகும்படி செய்யவேண்டும். வனபோஜனத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும்.அங்கு பிள்ளைகள் தமக்குள் நட்பும், அன்பும் பரஸ்பரஸம்பாஷணையில் மகிழ்ச்சியும் எய்தும்படி ஏற்பாடு செய்யவேண்டும். மலைகள் கடலோரங்களுக்கு அழைத்துச் சென்றுஇயற்கையின் அழகுகளையும், அற்புதங்களையும், பிள்ளைகள் உணர்ந்து மகிழும்படி செய்யவேண்டும். பல விதமான செடி, கொடிகள், மரங்கள், லோஹங்கள், கல்வகைகள் முதலியவற்றின்இயல்பைத் தெரிவிக்க வேண்டும்.

மேலே காட்டிய முறைமைப்படி தேசீயப் பள்ளிக் கூடம் நடத்துவதற்கு அதிகப் பணம் செலவாகாது.மாஸம் நூறு ரூபாய் இருந்தால் போதும். இந்தத்தொகையை ஒவ்வொரு கிராமத்திலுள்ள ஜனங்களும்தமக்குள்ளே சந்தா வசூலித்துச் சேர்க்கவேண்டும். செல்வர்கள்அதிகத் தொகையும் மற்றவர்கள் தத்தமக்கு இயன்றளவு சிறு தொகைகளும் கொடுக்கும்படி செய்யலாம். 100 ரூபாய் கூடவசூல் செய்ய முடியாத கிராமங்களில் 50 ரூபாய் வசூலித்து.உபாத்தியாயர் மூவருக்கும் தலைக்கு மாஸச் சம்பளம் 12ரூபாய் கொடுத்து, மிச்சத் தொகையை பூகோளக் கருவிகள்,"ஸயன்ஸ்" கருவிகள், விவசாயக் கருவிகள் முதலியனவாங்குவதில் உபயோகப்படுத்தலாம். 100 ரூபாய்வசூலிக்கக்கூடிய கிராமங்களில் உபாத்தியாயர் மூவருக்கும், தலைக்கு 20 ரூபாய் வீதம் சம்பளம் ரூபாய் அறுபதுபோக மிச்சத் தொகையை மேற்படி கருவிகள் முதலியனவாங்குவதில் உபயோகப்படுத்தலாம். மேற்படி கருவிகள்எப்போதும் வாங்கும்படி நேரிடாது. முதல் இரண்து வருஷங்களுக்கு மாத்திரம் மாஸந்தோறும் மிஞ்சுந் தொகையை இங்ஙனம் கருவிகள் வாங்குவதிலும் புஸ்தகங்கள் வாங்குவதிலும் செலவிட்டால் போதும். அப்பால் மாஸந்தோறும் மிஞ்சுகிற பணத்தைப்பள்ளிக்கூடத்துக்கு க்ஷேமநிதியாக ஒரு யோக்கியமானஸ்ரீமானிடம் வட்டிக்குப் போட்டுவர ஏற்பாடு செய்யவேண்டும்.இவ்வாறன்றி ஆரம்பத்திலேயே கருவிகள் முதலியனவாங்குவதற்குப் பிரத்யேகமான நிதி சேகரித்து அவற்றைவாங்கிக்கொண்டு விட்டால் பிறகு தொடக்க முதலாகவே மிச்சப் பணங்களை வட்டிக்குக் கொடுத்துவிடலாம்.

மாசம் நாற்பது ரூபாய் வீதம் மிச்சப் பணங்களைக்ஷேமநிதியாகச் சேர்த்து வந்தால் பதினைந்து "வருஷங்களுக்குள்ளே தகுந்த தொகையாய்விடும். பிறகு,மாஸவசூலை நிறுத்திவிட்டுப் பள்ளிக்கூடத்தை அதன் சொந்தநிதியைக்கொண்டே நடத்தி வரலாம். தவிரவும், அப்போதப்போது அரிசித் தண்டல், கலியாண காலங்களில் ஸம்பாவனை, விசேஷ நன்கொடைகள் முதலியவற்றாலும் பள்ளிக்கூடத்து நிதியைப் போஷணை செய்து வரலாம்.

எல்லாவிதமான தானங்களைக் காட்டிலும் வித்யாதானமே மிகவும் உயர்ந்தது என்று ஹிந்து சாஸ்த்ரங்கள் சொல்லுகின்றன. மற்ற மத நூல்களும் இதனையே வற்புறுத்துகின்றன. ஆதலால் ஈகையிலும் பரோபகாரத்திலும் கீர்த்தி பெற்றதாகிய நமது நாட்டில், இத்தகைய பள்ளிக்கூட மொன்றை மாஸ வசூல்களாலும், நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் அல்லது சிறு சிறு தொகைகளாகவும் சேகரிக்கப்படும் விசேஷ நன்கொடைகளாலும் போஷித்தல் சிரமமான காரியம் அன்று. இது மிகவும் எளிதான காரியம்.

இந்தப் பள்ளிக்கூடங்களை ஒரு சில மனிதரின் ப்ரத்யேகஉடைமையாகக் கருதாமல், கோயில், மடம், ஊருணி முதலியன போல்கிராமத்தாரனைவருக்கும் பொது உடைமையாகக் கருதி நடத்தவேண்டும். பொது ஜனங்களால் சீட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப் படுவோரும் ஐந்து வருஷங்களுக்கு ஒருமுறைமாற்றப்பட வேண்டியவருமாகிய பத்து கனவான்களை ஒரு நிர்வாக ஸபையாகச் சமைத்து அந்த ஸபையின் மூலமாகப்பாடசாலையின் விவகாரங்கள் நடத்தப்படவேண்டும். இந்த நிர்வாகஸபையாரைத் தெரிந்தெடுப்பதில் கிராமத்து ஜனங்களில் ஒருவர்தவறாமல் அத்தனை பேருக்கும் சீட்டுப்போடும் அதிகாரம் ஏற்படுத்த வேண்டும்.

தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசீயக்கல்வி இன்றியமையாதது. தேசீயக் கல்வி கற்றுக்கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம். இந்த விஷயத்தைரவீந்திரநாத் தாகூர், ஆனி பெஸண்ட், நீதிபதி மணி அய்யர் முதலிய ஞானிகள் அங்கீகரித்து, நம்நாட்டில் தேசீயக் கல்வியைப் பரப்புவதற்குரிய தீவிரமான முயற்சிகள் செய்கின்றனர். ஆதலால் இதில் சிறிதேனும் அசிரத்தை பாராட்டாமல், நமது தேச முழுதும், ஒவ்வொரு கிராமத்திலும் மேற்கூறியபடி பாடசாலைகள் வைக்க முயலுதல் நம்முடைய ஜனங்களின் முதற்கடமையாகும்.

 

சமூகம் - தேசீயக் கல்வி (2)

 

ஸ்ரீமான் ஜினராஜ்தாஸரின் கருத்து

"கல்வியைப் பற்றிய மூலக் கொள்கைகள் எல்லா நாடுகளுக்கும் பொது. ஆனால், அந்தக் கொள்கைகளை வெவ்வேறு தேசங்களில் பிரயோகப்படுத்தும்போது இடத்தின்குணங்களுக்கும் ஜனங்களின் குணங்களுக்கும் தக்கபடி கல்வி வழியும் வெவ்வேறாய்ப் பிரிந்து தேசியமாகி விடுகிறது. இங்கிலாந்தின் கல்வி முறையில் பலவகை விளையாட்டுகளும் சரீரப் பயிற்சி முறைகளும் கட்டாயமாக ஏற்பட்டிருக்கின்றன. இத்தாலியில் அவை புறக்கணிக்கப்படுகின்றன. அங்கு கற்பனா சக்தியும், சிற்பம் முதலிய கலைகளும் தலைமையாகக் கொண்டகல்வியே பயிற்றப் படுகிறது. இதன் காரணம்: இங்கில"ாந்தில் பயிர் விளைவு குறைவு; ஆதலால், அநேக ஜனங்கள் வெளித் தேசங்களில் குடியேறி ஜீவனம் செய்தல் அவசியமாகிறது; அதற்குரிய குணங்களை ஆங்கிலக் கல்வி முக்கியமாகக்கருதுகிறது. அமெரிக்காவில், ஜனாதிகாரமே மேலான ராஜ்ய தர்மமென்றும், எத்தனை பெரிய ஏழையும் எத்தனை பெரிய செல்வனும் தம்முள் ஸமமேயன்றி அவர்களில் ஏற்றத்தாழ்வு கிடையாதென்றும், பிறரைச் சார்ந்து நிற்காமல் தன்மதிப்புடன் பிழைக்கத் தகுந்த கூலிதரும் எவ்விதமான கைத்தொழிலிலும்அவமானத்துக்கு இடமில்லை யென்றும் பாடசாலைகளில் முக்கிய போதனையாகக் கற்பிக்கிறார்கள். இந்தியாவில் மாத்திரம் சுதேசியக் கல்வி இல்லை. இந்நாட்டுக் கல்வி முழுதும் பிரிட்டிஷ் குணமுடையதாக இருக்கிறது. ஒரு வாரத்தில் இரண்டு மூன்று மணி நேரம் ஹிந்து தேசசரித்திரமும் தேச பாஷைகளும் கற்றுக்கொடுத்தால் போதாது. அதினின்றும் சுதேசிய ஞானம் ஏற்படாது. சென்னையில் 'பிரஸிடென்ஸி காலேஜ்' என்று சொல்லப்படும் மாகாணக் கலாசாலையின் கட்டடம் நமது தேசமுறையைத் தழுவியதன்று. பழைய இத்தாலிய வழியொன்றைஅனுஸரித்தது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் சர்வகலா சங்கங்களின் கட்டிடம் இத்தாலிய முறையிலா கட்டியிருக்கிறார்கள்?அதுபோலவே, பாரததேச முறைமைப்படி கட்டிய கட்டிடங்களில் கற்றுக்கொடுக்காத கல்வி இங்கு சுதேசீயக் கல்வி என்று சொல்லத் தகுந்த யோக்யதை பெறாது."

இது ஜினராஜதாஸர் சில தினங்களின் முன்பு சென்னைப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்திருக்கும் ஒரு வ்யாசத்தின் ஸாரமாம். இதில் கடைசி அம்சம் மிகவும் கவனிக்கத் தகுந்தது. நமது தேசத்து முறைப்படி கட்டிய கட்டிடத்திலேயன்றிப் பிறநாட்டு முறை பற்றிக் கட்டிய மனைகளிலேகூட தேசீயக் கல்வி பயிற்றுதல் ஸாத்ய மில்லை யானால், ஓஹோ, பாஷை விஷயத்தை என்னென்று சொல்ல்வோம்! தமிழ் நாட்டில் தேசீயக்கல்வி கற்பிக்க வேண்டுமானால், அதற்குத் தமிழே தனிக் கருவியாக ஏற்படுத்த வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தமிழ்நாட்டுப் பெண்கள்

தமிழ்நாட்டு ஸ்திரீகளையும் சேர்த்துக்கொண்டு, அவர்களுடைய யோசனைகளையுந் தழுவி, நடத்தாவிடின் அக்கல்வி சுதேசீயம் ஆகமாட்டாது. தமிழ்க் கல்விக்கும்,தமிழ்க் கலைகளுக்கும் தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க் கோயில், தமிழரசு, தமிழ்க் கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ்மாதரன்றோ?  இப்போது ஸ்ரீமதி ஆனி பெஸண்ட் தம்முடன் திலகர், ரவீந்த்ரநாதர் முதலிய மஹான்கள் பலரையும் சேர்த்துக்கொண்டு மீளவும்எழுப்பியிருக்கும் தேசீயக் கல்வி முயற்சியில் ஏற்கெனவேநீதிபதி ஸதாசிவ அய்யர் பத்தினி ஸ்ரீமதி மங்களாம்பாள் முதலிய ஓரிரண்டு ஹிந்து ஸ்திரீகள் ஸர்வ கலா சங்கத்தின் ஆட்சி மண்டலத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது போதாது. தேசீயக் கல்வியின் தமிழ் நாட்டுக் "கிளையென ஒரு கிளை ஏற்படவேண்டும். அதன் ஆட்சி மண்டலத்தில் பாதித் தொகைக்குக் குறையாமல் தமிழ் ஸ்திரீகள் கலந்திருக்க வேண்டும். ஒரு பெரிய சர்வ கலா சங்கத்தின் ஆட்சி மண்டலத்தில் கலந்து தொழில் செய்யத்தக்க கல்விப் பயிற்சியும் லௌகிகஞானமும் உடைய ஸ்திரீகள் இப்போது தமிழ் நாட்டில் பலர் இலர் என ஆக்ஷேபங் கூறுதல் பொருந்தாது. தமிழ் நாடு முழுதும் தேடிப் பார்த்தால் ஸ்ரீமதி மங்களாம்பாளைப்போல இன்னும் பத்து ஸ்திரீகள்அகப்படமாட்டார்கள் என்று நினைக்க ஹேதுவில்லை. எதற்கும் மேற்படி ஆட்சி மண்டலம் சமைத்து, அதில் பத்துப் பெண்களைக் கூட்டி நடத்தவேண்டிய காரியங்களைப் பச்சைத் தமிழில் அவனிடம் கூறினால். அதினின்றும் அவர்கள் பயன்படத்தக்க பல உதவி யோசனைகளையும் ஆண்மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புது ஞானங்களையும் சமைத்துக் கொடுப்பார்கள் என்பதில் ஸந்தேகமில்லை. முன் தமிழ் நாட்டை மங்கம்மா ஆளவில்லையோ? ஓளவையார் உலக முழுதும் கண்டு வியக்கத்தக்க நீதி நூல்கள் சமைக்கவில்லையோ?

மீர்ஜா ஸமி உல்லா பேக்

முன்பு மகம்மதிய ஸர்வ கலா சங்கம் ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுந்த முயற்சியில் தலைவர்களில் ஒருவராக உழைத்த மீர்ஜா ஸமி உல்லா பேக், "ஜாதி மத பேதங்களால் சிதைந்து போயிருப்பதால், பாரத தேசத்தார் மேலேஎழமாட்டார்களென்று பிறர் கூறும் அவச்சொல்லை நீங்கள் கேட்காதிருக்க வேண்டினால், மேலும் ஸ்வராஜ்யத்துக்குத் தகுதியுடையோராக உங்களைக் காட்டிக்கொள்ள விரும்பினால், தேசீயக் கல்விக்குத் துணை செய்யுங்கள். இந்தத் தருணம் தவறினால், இனி வேறு தருணம் இப்படி வாய்க்காது' என்கிறார்.தேசீயக் கல்வியும் ஸ்வராஜ்யமும் தம்முள்ளே பிரிவு செய்யத் தகாதன என்றும், இவ்விரண்டினுள் ஒன்றன் அவசியத்தை அங்கீகாரம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அரவிந்த கோஷ் சொல்லியதும் மேற்படி ஸமி உல்லா சொல்வதும் பொருத்தமாகவே காணப்படுகின்றன. எந்த வினைக்கும் காலம் ஒத்து நின்றாலொழிய அதனை நிறைவேற்றுதல் மனிதனுக்கு ஸாத்யமில்லை. விதியின் வலிமை சாலவும் பெரிது. ஆனால் "விதி இப்போது தேசீயக்கல்வி முயற்சிக்கு அநுகூலமானகாலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்ற செய்தியை மீர்ஜா ஸமி உல்லா நம் நாட்டாருக்கு நினைப்பூட்டுகிறார்.

'காளயுக்தி' என்பது காலயுக்தி; அதாவது காலப் பொருத்தம். காலம் இந்த வர்ஷத் தொடக்கத்தில் எந்தப் பெருஞ் செயலுக்கும் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

பகவத் கீதையில் துர்க்காஸ்துதி முதலிய சில அம்சங்கள் சேர்த்தும், ஹம்ஸ யோகி என்பவரின் 'கீதா ரஹஸ்யம்' என்னும் உரைநூலில் கூறப்பட்டதைத் தழுவி 18அத்யாயக் கணக்கை 24 அத்யாயமாக மாற்றியும், சென்னை சுத்ததர்ம மண்டலத்தார் ஒரு புதிய பதிப்புப் போட்டிருக்கிறார்கள்.

இதற்கு நீதி நிபுண மணி அய்யர் ஒரு முகவுரை எழுதியிருக்கிறார். அந்த முகவுரையில் சக்தி தர்மத்தை மிகவும் உயர்த்திக் கொண்டாடுகிறார்.

இப்படிப்பட்ட மணி அய்யரும் ஆனி பெஸண்ட் அம்மையும் கலந்து நடத்தும் தேசீயக்கல்வி "முயற்சியில் பெண்களின் ஆதிக்யம் மேன்மேலும் ஓங்கி வளரும் என்பது சொல்லாமலே விளங்கும்.

மேற்பதிப்பின் முதல் ஏட்டின் முதுகுப் புறத்தின் தலைப்பில் 'ஓம் நம: ஸ்ரீ பரமர்ஷிம்யோ யோகிப்ய; (யோகிகளாகிய தலைமை முனிவரைப் போற்றுகிறோம் ஓம்) என்று அச்சிட்டு, அடியில்,

ஸ்ரீீம்; ஸ்ரைம்; ஸ்ரைம்; ஓம் - தாஸ:          என்ற மந்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.          இம் மந்திரங்களின் பொருள் யாதெனில் -           ஸ்ரீம் - லக்ஷ்மியை          (ஸ்ரீீ-திரு என்றவை ஒரு மொழியின்           வடிவங்கள்.)           ஸ்ரைம் - ஆச்ரயிக்கிறேன்: சார்ந்துநிற்கிறேன்;           ஆதலால், ஸ்ரைம் - அசைகிறேன்,          ஓம் - ப்ரணவம்=ப்ர+நவம்=மேன்மேலும் புதிய           நிலை.

எப்போதும் க்ஷணந்தோறும் புதிய புதிய உயிருடன் என்றும் அழியாத அமிர்த நிலை பெற்று விளங்குவேன்.

தாஸ:=அடியேன்.

இப்பொருளுடைய மந்திரங்களை துர்க்காஸ்துதி சேர்ந்த கீதைப் பதிப்புடன் ஆரம்பத்தில் போட்டது மிகவும் பொருத்தமுடைய செய்கையே யாம்.

மஹா சக்தியே தாய் அல்லது மனைவி வடிவத்தில் மனிதன் உயிருக்குத் துணைபுரிகிறாள். ஆதலால் பெண்ணை ஆச்ரயித்த வாழ்க்கையே தேவ வாழ்க்கை. "வந்தே மாதரம்" என்பதும் "ஓம் ஸ்ரீம்" என்பனவும் நம்முடைய தேசக் கல்விச்சாலைகளின் வாயிற் கதவுகளிலும் கொடிகளிலும் பொறிக்கத்தக்க மந்திரங்களாம்.

மேலும் அந்தப் பதிப்பின் மூன்றாம் ஏட்டின் முதுகுப் புறத்தைத் திருப்பினால், அதில்நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கண்ணன் நடத்த, அதில் அர்ஜூனன் வீற்றிருப்பதைப்போல் சித்திரம் வரையப்பட்டிருக்கிறது; இஃது ஆண்மக்கள் "ஒருவருக்கொருவர் நட்புச் செலுத்த வேண்டிய நெறியைக் காட்டுவது.

ஆண்மக்கள் இருவர் பரஸ்பரம் எங்ஙனம் பாவனை செய்யவேண்டும்? நர நாராயணரைப்போலே. நீ உனது மித்திரனைக் கண்ணனாகவும், உன்னைப்பார்த்தனாகவும், அவன் உன்னைக் கண்ணனாகவும், தன்னைப் பார்த்தனாகவும் உணர்ந்து கொள்ள வேண்டிய நெறி மேற்படி மந்திரங்களாலும் சித்திரத்தாலும் குறிக்கப்படுவது.

இந்த நெறி தேசீயக் கல்விச் சாலைகளில் கற்பிக்கும் விஷயங்களுள் ஒன்றாகக் கற்பிக்கப்படவேண்டும்.

ஹிந்து முஹம்மதிய ஸமரஸம்

தேசீயக் கல்வியில் முஹம்மதியர் எத்தனைக் கெத்தனை சேர்ந்துழைக்கிறார்களோ, அத்தனைக் கத்தனை அம் முயற்சி அதிகப் பயன் அடையும். மத பேதங்களை

வ்யாஜமாகக் காட்டி ஹிந்து முஹம்மதியர் ராஜரீக முதலிய பொது விஷயங்களிலும் கூடியுழைக்காமல் தடுக்கவேண்டும் என்று ஆங்கிலோ-இந்தியப் பத்திராதிபர் முதலிய பொதுச் சத்துருக்கள் செய்த தீய முயற்சிகளெல்லாம் விழலாய் விட்டன. மஹான் முஹம்மது "அலி, அவர் அண்ணன் ஷௌகத் அலி, ஸேட்யாகுப் ஹுஸேன், பெரிய ஜின்னா, மஹமதா பாத்ராஜா முதலிய மேலோர்களின் ப்ரத்யதனத்தால் ஹிந்து முஹம்மதியர் அண்ணன் தம்பிகளென்பது தென் அமெரிக்காக் கண்டத்தாருக்குக்கூட சம்சயம் ஏற்பட இடமில்லாமல் பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணிபோல் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது.

மேலும் இந்தியாவிலுள்ள முஸல்மான்களில் பலர் ஹிந்து ஸந்ததியார். அவர்களுடைய நெஞ்சில் ஹிந்து ரத்தம் புடைக்கிறது. இங்ஙன மில்லாமல் வெறும்பட்டாணிய அராபிய பாரஸீக மொகலாய ஸந்ததியாக இருப்போரும் இந்த தேசத்தில் ஆயிர வருஷங்களுக்கு மேலாக வாழ்வதால், ஹிந்து ஜாதியாராகவே கருதத்தக்கவர்ஆவர். எங்ஙனமெனில், ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன்; சீனத்தில் பிறந்தவன் சீனன்; ஹிந்து தேசத்தில் பிறந்தவன் ஹிந்து; இதர தேசங்களில் தேச எல்லையே ஜாதி எல்லையாகக் காணப்படுகிறது. இந்த நாட்டிலும் அதே மாதிரி ஏன் செய்யக் கூடாது?

இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி.

(2) கிறிஸ்தவர்

தேசீயக் கல்வி முயற்சிகளில் சேரக்கூடாதென்று ஒரு சில மூடப் பாதிரிகள் சொல்லக்கூடும். அதை ஹிந்துக் கிறிஸ்தவர் கவனிக்கக்கூடாது. தேசீயக் கல்வியில் ரிக்வேதமும், குரானும், பைபிலும் ஸமானம். கிறிஸ்து,கிருஷ்ணன் என்பன பர்யாய நாமங்கள். வங்காளத்தில் ஹிந்துக்கள் கிருஷ்ண தாஸ பாலன் என்று சொல்வதற்குக் கிறிஸ்தோதாஸ் பால் என்று சொல்கிறார்கள்.

(3) மனுஷ்யத்தன்மை

ஆங்கிலேயர், பிராமணர், ஆஸ்திரேலியாவில் முந்தி வேட்டைகளில் அழிக்கப்பட்ட புதர்ச்சாதியார் (Bushmen)  - எல்லாரும் பொதுவில் 'மனிதர், 'ஆதாம் ஏவா வழியில் பிறந்தவர்கள்' என்று கூறி, முஹம்மதியக் கிறிஸ்தவ வேதங்கள் 'மனிதர் எல்லோரும் ஒன்று' என்பதை உணர்த்துகின்றன. மஹாபாரதத்தில் மனிதர், தேவர், புட்கள், பாம்புகள் எல்லோருமே காச்யப ப்ரஜாபதியின் மக்களாதலால் ஒரே குலத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வேதாந்த சாஸ்த்ரமோ பிராமணர், நாயர், முதலை, கரடி, வெங்காயப்பூண்டு முதலிய ஸகல ஜீவன்களும் பரமாத்மாவின் அம்சங்களே யன்றி வேறல்ல என்று பல "நூற்றாண்டுகளாகப் பறையறைந்து கொண்டு வருகிறது.

ஆதலால், தேசீயக்கல்வி முயற்சியில் ஜாதிமத வர்ண பேதங்களைக் கவனிக்கக் கூடாதென்று அரவிந்த கோஷ், திலக், அனி பெஸண்ட் முதலியவர்கள் சொல்லுவதை இந்த நாட்டில் எந்த ஜாதியாரும், எந்த மதஸ்தரும், எந்த நிறத்தையுடையவரும் மறுக்க மாட்டார்களென்று நம்புகிறேன்.

கிராமப் பள்ளிக்கூடங்கள்

அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். 'கான்பரென்ஸ்' என்றும், 'மீட்டிங்' என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தை சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! படிப்பில்லாத ஜனங்கள் மிருகங்களுக்குச் சமானமென்று திருவள்ளுவர் பச்சைத் தமிழிலே சொல்லுகிறார். நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும், நம்மிலே முக்காற் பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒரு வழி பிறக்கவில்லையே! ஏன்?  எதனாலே? காரணந்தான் என்ன?

ஜாதி என்ற சொல் இரண்டு அர்த்தமுடையது. முதலாவது, ஒரு தேசத்தார் தமக்குள் ஏற்படுத்தி வைத்துக் கொள்ளும் பிரிவு; வேளாள ஜாதி, பிராமண ஜாதி, கைக்கோளஜாதி என்பது போல. இரண்டாவது, தேசப் பிரிவுகளைத் தழுவிய வேற்றுமை. ஜப்பானிய ஜாதி, சீன ஜாதி, பாரஸிக ஜாதி, ஆங்கிலேய ஜாதி, ஜர்மானிய ஜாதி, ருமானிய ஜாதி என்பதுபோல. இவ்விரண்டிலும் அதிக அநுகூல மில்லையென்பது ஸ்ரீமான் ரவீந்திரநாத தாகூருடைய கக்ஷி.

அமெரிக்காவிலே பிறந்தவன் தான் அமெரிக்க ஜாதியென்றும் ஆங்கில சாதியில்லை என்றும் நினைத்துக் கொள்கிறான். இங்கிலாந்திலுள்ள ஆங்கிலேயனுக்கும் குடியரசுத்தலைவர் வில்ஸனுக்கும் நடை, உடை, ஆசாரம், மதம், பாஷை எதிலும் வேற்றுமை கிடையாது ஆனால், தேசத்தை யொட்டி வேறு ஜாதி 'நேஷன்'. இந்த தேச ஜாதிப் பிரிவு மேற்குப் பக்கத்தாரால் ஒரு தெய்வம்போல் ஆதரிக்கப் படுகிறது. அங்கு, யுத்தங்களுக்கு இக்கொள்கை ஒரு முக்கிய காரணம். எல்லா தேசத்தாரும் சகோதரர் என்றும், மனுஷ்ய ஜாதி முழுதும் ஒன்றே யென்றும். ஆதலால் தேச வேற்றுமை காரணமாக ஒருவரை ஒருவர் அவமதிப்பதும் அழிக்க முயல்வதும் பிழையென்றும் ஸ்ரீீ தாகூர் சொல்கிறார்.

அமெரிக்காவிலே ஒரு சபையிலே மேற்படி கொள்கையை எடுத்துக் காட்டுகையில், அந்த தேசத்தான் ஒருவன் இவரை நோக்கி "இவ்விதமான கொள்கையிலிருந்தது. பற்றியே உங்கள் தேசத்தை அன்னியர் வென்று கைப்பற்றிக்கொள்ள நீங்கள் தோற்றுக் கிடக்கிறீர்கள்" என்றான். "நாங்கள் இப்பொழுது புழுதியோடு புழுதியாக விழுந்து கிடந்தாலும், எங்கள் பூமி புண்யபூமி. உங்களுடைய செல்வத்தின் மேலே தெய்வ சாபம் இருக்கிறது" என்று ரவீந்திர தாகூர் அவனுக்கு மறுமொழி சொன்னாராம்.அதாவது, இந்த நிமிஷத்தில் செல்வத்திலும் பெருமையிலும் நம்மைக் காட்டிலும் அமெரிக்க தேசத்தார் உயர்வு பெற்றிருந்த போதிலும், இந்த நிலைமை எப்போதும் மாறாமலிருக்கும் என்று அமெரிக்கா நினைப்பது பிழை. நாங்கள் தெய்வத்தையும்தர்மத்தையும் நம்பி யிருக்கிறோம். கீழே விழுந்தாலும் மறுபடி " எழுந்து விடுவோம். அமெரிக்கா விழுந்தால் அதோகதி, ஆதலால், இனிமேலேனும் ஹிந்து தர்மத்தை அனுசரித்து, உலகமுழுதிலும் எல்லா தேசத்தாரும் உடன் பிறப்பென்றும் ஸமான மென்றும் தெரிந்துகொண்டு, பரஸ்பரம் அன்புசெலுத்தினால் பிழைக்கலாம்' என்று ரவீந்தரர் அவர்களுக்குத் தர்மோப தேசம் செய்கிறார்.

வெளி தேசத்தாருக்கு தர்மோபதேசம் செய்கையில், நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கலாமா? இங்கே, அனாவசியமான ஜாதி விரோதங்களும் அன்புக் குறைவுகளும் அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழித்து உடனே அன்பையும் உடன்பிறப்பையும் நிலைநாட்டுவது நம்முடைய கடமையன்றோ?

எது எப்படியானாலும், இந்த தினத்தில் இந்த க்ஷணத்தில் நாமெல்லோரும் பறையர், பார்ப்பார் எல்லோரும், ராஜாங்க விஷயத்தில் ஒரே ஜாதி. இப்போது எங்களுக்குஅதிகாரிகள் தயவு செய்யவேண்டிய விஷயம் என்ன வென்றால்:-  எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டு பிரதி நிதிகள் குறிக்கவேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்த தொரு மகாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு செலவு உட்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மகாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேய ஸாம்ராஜ்யத்தை விட்டு விலகவேண்டும் என்ற யோஜனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் விண்ணப்பம் செய்கிறோம். விடுதலை விண்ணப்பத்துக்கு நல்ல உத்தரவு கொடுக்கவேண்டும்.

காள யுக்தி

காளயுக்தி என்பது கால யுக்தி; அதாவது, காலத்தின்பொருத்தம்; காலம் இந்த வருஷத்தின் ஆரம்பத்தில் எந்தப்பெருஞ் செயல்களுக்கும் மிகவும் பொருத்தமாகச் சமைந்திருக்கிறது.

தேசீயக் கல்வி, மனுஷ்ய ஜாதியின் விடுதலை,இவ்விரண்டும் பெருங்காரியங்களைத் தொடங்குவதற்கும் இப்போது காலம் மிகவும் பொருத்தமாக வாய்த்திருக்கிறது.

இவற்றுள் மனுஷ்ய ஜாதியின் விடுதலை நிறைவேற வேண்டுமாயின் அதற்கு பாரத தேசத்தில் விடுதலை இன்றியமையாதமூலாதாரமாகும்.

இங்ஙனம் பாரத தேசம் விடுதலை பெற வேண்டுமாயின்அதற்கு தேசீயக் கல்வியே ஆதாரம்.

"அ......................................................................ன்"

மேலே காட்டிய குறியின் பொருள் யாது?

தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லாவ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பதுபொருள்.

ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும்.பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; "ஸ்லேட்""பென்சில்" என்று சொல்லக் கூடாது.

சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம்

 

இந்தியா முழுதிலுமுள்ள ஹிந்துக்களின்அனுகூலத்திற்குப் பாடுபட்டு வரும் ''அகண்ட பாரதஹிந்து சபை''யின் காரியதரிசியான ஸ்ரீ ரத்னசாமு என்பவர்தேராதூன் பட்டணத்திலிருந்து ''ஹிந்து'' பத்திரிகைக்குஎழுதியிருக்கும் லிகிதமொன்றில் பின்வருமாறுசொல்லுகிறார்:-

'இந்த மாதம் முதல் தேதி, சென்னைத்தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும்குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்துமதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்தவிஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து"வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தைவிளைவிக்கத் தக்கது.''

ஆம்; ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான்அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள்குறைவுபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல,வாலில் நெருப்புப் பிடித்தெரியும்போது தூங்கும் வழக்கம்இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள்; ஜனத் தொகைகுறையும்போது பார்த்துக்கொண்டே சும்மா இருப்போர்விழித்திருக்கும்போதே தூங்குகிறார்கள்; அவர்கள்கண்ணிருந்தும் குருடர்.

பஞ்சமர்களின் விஷயமாக அகண்ட பாரத ஹிந்துசபையின் காரியதரிசி ஸ்ரீீ ரத்னசாமு என்பவருக்கு ஸ்ரீ காசிஹிந்து சபையின் தலைவராகிய வைதிகமணி ஸ்ரீமான் பகவான்தாஸர் எழுதியிருக்கும் கடிதத்தில் ஒரு நல்ல யோசனைசொல்லுகிறார்: 'பறையர்களுடைய தீண்டாமையை உடனேநீக்கி விடவேண்டும். காசி, நவத்வீபம், பிருந்தாவனம் என்றஸ்தலங்களிலுள்ள பண்டிதர்களும் சங்கரமடத் தார்களும்மற்றுமுள்ள மடதிபதிகள் முதலியவர்களும் இவ்விஷயமாக"உடனே உத்தரவு கொடுக்கவேண்டும்.?

பஞ்சமருடன் பந்தி போஜனம் செய்யவேண்டும்மென்றாவது சம்பந்தங்கள் செய்யவேண்டும் மென்றாவது,மேற்படி ரத்னசாமு முதலிய தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை.ஹிந்துக்களுக்கு இதர வகுப்பினர் பந்தி போஜனம், சம்பந்தங்கள் இல்லாதிருக்கும் வரை பஞ்சமரும் அப்படியேஇருக்கலாமென்று ஸ்ரீ ரத்னசாமு சொல்லுகிறார். ஆனால்பஞ்சமரின் சேரிகளிலே கிறிஸ்துவப் பாதிரிகள் பள்ளிக்கூடங்கள்முதலியன வைப்பது போல் நமது குருக்கள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு ஹிந்து மதோபதேசம் செய்யும்கடமை யாரைச்சேர்ந்தது? அதற்கு மேற்படி மடாதிபதிகள் ஏன்ஆளனுப்பவில்லை? ஹிந்து தர்மத்தின் மஹிமையை நன்றாகஅறிந்தோர் இஹலோக வாழ்க்கையில் எத்தனை கொடூரமானகஷ்ட நிஷ்டூரங்கள் நேரிட்டாலும் இந்த தர்மத்தைக்கைவிடமாட்டார்கள். உலகத்தில் நிகரற்றதாகிய வறுமையானதுநமது தேசத்தை வந்து பிடித்துக் கொண்ட கால முதலாக நமதுநாட்டார் பசியாலும் அதனாலேற்படும் நோய்களாலும்லக்ஷக்கணக்காக அகால மரணதுக் கிரையாகி வருகிறார்கள்.பசித் துன்பம் எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும், கீழ்வகுப்பினருள் அதிகமாகப் பாதிக்கிறது. நாட்டில் பஞ்சம்நேரிட்டால் பஞ்சமர் முதலிய தாழ்ந்த வகுப்பினர் அதிகமாகச்"சாகிறார்கள். பறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும்,நம்மைப் போல ஹிந்துக்களென்பதையும், விபூதி நாமம்போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும், மடாதிபதி, புரோஹிதர், குருக்கள் முதலியவர்கள்சற்றே மறந்து போய் விட்டதாகத் தோன்கிறது.

''அங்கமெலாங் குறைந்தழுகு தொழு நோயராய்       ஆவுரிதுத் தின்றுழலும் புலையரேனும்       கங்கை வார்சடைக் கரந்தார்க் கன்பராயின்       அவர் கண்டீயாம் வணங்குங் கடவுளாரே''

என்ற வாக்கைத் தமிழ் வேதமாகக் கொண்டாடுவோர்"அதன் பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை.

'ஒக்கத் தொழுகிற்றிராயின் கலியுகம் ஒன்றுமில்லை'என்ற திருவாய்மொழிக் கருத்தை அநேகர் அறியாதிக்கின்றார்கள்.ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள்மிகுதிப்பட்டாலும் பெரியதில்லை. அதனால் நாம் தொல்லைப்படுவோமேயன்றி அழிந்து போய் விடமாட்டோம்.ஹிந்துக்களுக்குள் இன்னும் வறுமை மிகுதிப்பட்டாலும்பெரியதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள்புண்படும்; இருந்தாலும் நமக்கு ஸர்வ நாசம் ஏற்படாது. ஹிந்துதர்மத்தை கவனியாமல், அசிரத்தையாக இருப்போமானால்நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும்; அதில்சந்தேமில்லை.

ஹிந்து மதம் ஒன்று, சைவம் வைஷ்ணவம் முதலியஆறு சமயங்களும் அதன் உட்பிரிவுகள். இதை தேசத்துஜனங்களில் பெரும்பாலோர் நன்றாக ஞாபகத்தில் வைத்துக்"கொண்டிருக்கிறார்கள். ஆனால், குருக்கள், மடாதிகாரிகள் முதலியசிலர் மறந்து போயிருப்பதாகத் தெரிகிறது.

'திரமென்று தந்தம் மதத்தையே தாமதச்       செய்கை கொடுமுளற அறிவரார்?       ஆறு சமயங்கடொறும் வேறு வேறாகி       விளையாடும் உனையாவரறிவார்?'

என்று தாயுமானவர் சொல்லியது பாரத தேசத்துமகா ஜனங்களுக்கன்று. மஹாஜனங்கள் இவ்வுண்மையைநன்றாகத் தெரிந்து நடக்கிறார்கள். பிரம்ம,க்ஷத்ரிய, வைசிய,சூத்ர - என்ற நான்குபிரிவிலும் பெரும்பகுதியோர் எல்லாத்தெய்வங்களையும் ஒன்று போலவே வணங்குகிறார்கள்,வேதரிஷிகளைப்போலே.

ஆனால் சைவ வைஷ்ணவ மடங்களிலும்பௌராணிகர் கூட்டத்திலும் பரஸ்பரமாகியமதகண்டனைகள் கொஞ்சம் நடந்து வருகின்றன. அதைஉடனே நிறுத்தவேண்டும்.

ஹிந்துக்கள் யார்?

வேதத்தை நம்புவோர்.

ருத்ரன், நாராயணன், குமாரன் முதலியதேவர்கள் ரிஷிகளால் ஒன்றாகக் கருதி வணங்கப்பெற்றோர். ஒரே தெய்வத்தை இங்ஙனம் பல பெயர் கூறிவணங்கியதாக அந்த ரிஷிகளே சொல்லி யிருக்கிறார்கள்.

நல்ல காலம்

ஹிந்து மதம் ஒன்று. ஆகவே, வைஷ்ணவ"சமயாசாரியார், சைவ சமயாசாரியார். சங்கரமடத்தார் முதலியகுருக்களெல்லாம் தமது பிரதிநிதிகள் மூலமாக ஒன்று கூடியோசனை செய்து, ஹிந்துக்களுடைய ஜனத்தொகைகுறையாமல் பாதுகாப்பதற்கு வழி செய்யவேண்டும் ''பிறமதங்களிலிருந்து ஜனங்களை நமது கூட்டத்தில் சேர்த்துக்கொள்வதற்கு வழிகளென்ன, என்பதைப்பற்றி யோசனைசெய்ய வேண்டும். தெய்வம் ஹிந்துக்கள் மீது கடைக்கண்செலுத்தி விட்டது; நாம் கும்பிடும் சிலைகளெல்லாம் வெறும்கல்லும் செம்புமல்ல. மனிதர்களாலே சீர்படுத்த முடியாதபடிஅத்தனை கெட்ட நிலைமையில் ஹிந்துக்கள் வீழ்ந்தசமயத்தில், மேற்படி தெய்வங்கள் காப்பாற்றக் கருதிமுற்பட்டு நிற்கின்றன. நமக்குள்ளே மஹா ஞானிகளும், சித்தபுருஷர்களும் அவதரித்து விளங்குகிறார்கள். ஹிந்துக்களுக்குநல்ல காலம் பிறந்துவிட்டது. இதனை எல்லொரும் தெரிந்துநடக்க வேண்டும்.

ஜாதிப் பிரிவு

காச்மீர ராஜ்யத்திலே ஹிந்து ராஜா; ஆனால்ஹிந்துக் குடிகளைக் காட்டிலும் முகம்மதியக் குடிகள்அதிகம். அந்த ராஜ்யத்து ஹிந்துக்களிலே ஒரு விசேஷம் "என்னவென்றால் அவர்களத்தனை பேரும் பிராம்மணர்;வேறு ஜாதியே கிடையாது. இமயமலைக் கருகேயுள்ளகாஸ்கரா ஜில்வாவில் பிராம்மணரைக் காட்டிலும் க்ஷத்திரியஜாதியாருக்கு மதிப்பு அதிகம். க்ஷத்திரியன் உயர்ந்த ஜாதி;பிராமணன் தணிந்த ஜாதி. திருநெல்வேலி ஜில்லாவில் ''கம்பளத்து நாயகர் என்ற ஜாதியைச் சேர்ந்த சிலஜமீன்தார்கள் இருந்தார்கள். இவர்கள் கலியாணத்திலேதாலி கட்டும்பொழுது பிராம்மணன் வரக்கூடாது. அவர்கள்ஜாதி புரோகிதர்கள் வந்து கலியாணத்திலே முக்கியச்சடங்கு நடத்த வேண்டும். அப்போது அரண்மனைக்குசமீபத்திலே ஒரு பிராம்மணன் வந்தால் அதுவேஅபசகுனம். அடித்துத் துரத்தி விடுவார்கள். ''ஜாதி பேதவினோதங்கள்'' என்று யாரேனும் புஸ்தகம் எழுதினால்நிறைய விலையாகும். சர்க்கார் அச்சிடும் (ஜனசங்கியை)புஸ்தகத்திலும் வட இந்தியா ஜாதிகளைப் பற்றி நெஸ்பீல்டு(Nesfield)  என்ற ஆசிரியர் எழுதியிருக்கும் புத்தகத்திலும்,பத்திரிகைகளிலும் அனுபவத்திலும் தெரியக்கூடியசெய்திகளை யெல்லாம் ஒன்றுசேர்த்து நல்ல தமிழ்ப்புஸ்தகம் போடலாம்; நிறையலாபம் கிடைக்கும். இந்தமாதிரியான புஸ்தகம் எழுதுவதற்கு வேண்டியசௌகரியங்கள் எனக்கு இல்லை. தமிழ்நாட்டில் வேறுயாரேனும் இந்தத்தொழில் செய்தால் நான் பத்துப் புஸ்தகம்விலைக்கு வாங்கிக்கொள்வேன்.

ஆசாரச் சீர்திருத்தம்

இன்று காலையில் நான் நம்முடைய ஸ்நேகிதராகியஇடிப்பள்ளிக்கூடம் பிரமராய வாத்தியாரைக் கண்டு, புரோகிதர்வந்தால் என் வீட்டுக்கு ஆவணி அவிட்டம் பண்ணுவிக்கும்பொருட்டு அனுப்பும்படி சொன்னேன். பிரமராயர் சொன்னார்:-''பெரிய வாத்தியாருடைய தங்கைக்கு உடம்பு சரியில்லை.மிகவும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாகக்கேள்விப்பட்டேன். என்ன செய்யலாம்? ஐயோ பாவம்?கிழவி; அந்த அன்னி பெஸன்ட் வயது இவளுக்குமிருக்கும்.அதனாலே அந்த வாத்தியார் இன்றைக்கு உபாகர்மம்"பண்ணிவைக்கக் கோவிலுக்கு வருவதே சந்தேகம். அவருடையமருமகன் குமார சாஸ்திரி வருவான். நான் கோவிலுக்குத்தான்போவேன். ராமராயர் உங்களைப்போல் உபாகர்ம உபநயனவிஷயங்களை வீட்டுக்குள்ளே ரஹஸ்யமாக நடத்திவருகிறாராகையால், அந்தக் குமார சாஸ்திரி என் வீட்டுப்பக்கமாக வருவான். நான் உங்கள் வீட்டுக்கு உடனேஅனுப்புகிறேன்? என்று சொன்னார். நான் அவரிடம்:- 'அதென்ன ஸ்வாமி? இந்த ப்ராம்மண ஸமூஹத்தில் வருஷந்தவறாமல் இன்றைக்கு ஆவணியவிட்டமா நாளை ஆவணியவிட்டாமா என்று சண்டை நியதமாகவேநடந்துகொண்டு வருகிறதே, காரணமென்ன?' என்று கேட்டேன். அவர் சொன்னார்:- 'இந்துக்களிலே பத்தாயிரத்தில்ஒன்பதாயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேர்அபண்டிதர்கள். பஞ்சாங்கமே முழுதும் தப்பிதம். உத்தராயணதக்ஷிணாயஹ்க் கணக்கில் 22 நாள் தப்பிதம் போட்டிருக்கிறான்;இருபத்திரண்டுக்கும் இருபத்து மூன்றுக்கும் நடுவிலே. அதாவது, பஞ்சாங்கம் பிரயோஜன மில்லை. நம்முடையவருஷ மாஸந் தேதியெல்லாம் தப்பிதம். இதைக் கவனிக்கநாதனைக் காணோம், ஆவணியவிட்டச் சண்டைநிர்த்தூளிப்படுகிறது. அஹோ! அபண்டிதா' என்றார்.'பத்திரிகைகளிலே நடக்கிறதே அதைத் தவிர இந்த உள்ளூர்ப்பண்டிதர்களுக்குள்ளே வேறே ''லடாயி''கள் உண்டோ?' "என்று கேட்டேன்.

'அதை என்ன சொல்வேன், போம்! அத்வைதசமாஜமே மிகவும் த்வைத ஸ்திதியில் இருக்கிறது. உச்சிகுமாஸ்தா முத்துஸாமி அய்யர் வியாழக்கிழமைதான் பூணூல்போட்டுக்கொள்ள வேண்டுமென்ற கக்ஷி. மணிலாக் கொட்டைமஹாதேவ அய்யர் வெள்ளிக்கிழமை கக்ஷி. வெங்காயக் கடைவெங்கு அய்யர் தெரியுமோ உமக்கு? அவருக்கு முத்துஸாமிஅய்யரே திதி, நக்ஷத்திரம் எல்லாம்; யாராவது நம்மிடம் வந்துஇன்றைக்குத் திதி என்ன்வென்று கேட்டால் நாம்பஞ்சாங்கத்தைப் பார்த்து சொல்லுகிறேன் என்று சொல்வோமோ,மாட்டோமோ?  அந்த இடத்தில், அவர் முத்து ஸாமியைப்பார்த்து வந்து சொல்லுகிறேன் என்பார். அவர்கூட இந்தத்தடவை ஸர்க்கார் ரஜா ஆவணியவிட்டத்துக்காகவெள்ளிக்கிழமை தான் விடுகிறார்கள் என்பதையும் அவருடையமாப்பிள்ளை ஸர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாலும்,அவருக்கு வியாழக்கிழமை ரஜா கிடையாதா கையாலும்வெள்ளிக்கிழமை யன்று உபாகர்மம் நடத்தினால் தான்மாப்பிள்ளையும் தானும் சேர்ந்து நடத்த முடியும் என்பதையும்உத்தேசித்து, இந்த நிலைமையில் முத்துஸாமி அய்யரைக்காட்டிலும் கும்பகோணமே ப்ரமாணம் என்பதாகத் தீர்மானஞ்செய்துவிட்டார். ருஷியாவிலே குழப்பம் எப்படி இருக்கிறதுஸ்வாமி? 'என்று பிரமராயர் முடித்தார். 'அது எக்கேடும்கெட்டுப் போகிறது மேலே உபாகர்ம விஷயத்தைச்சொல்லும்' என்றேன்.

இந்த சமயத்தில் கோயில் தர்மகர்த்தாவீரப்ப முதலியாரும் அங்கே வந்து சேர்ந்தார்.வந்தவர், என்னை நோக்கி இன்று கோவிலில் பிராமணஅட்டஹாஸம் அதிகமாக நடக்கும். நீங்கள் கோவிலிலேபூணூல் போட்டுக்கொள்ளுகிறீர்களா? வீட்டிலேதானா?''என்று கேட்டார். ''வீட்டில்'' என்றேன். ?கோயிலும் வீடும்ஒன்றுதானே?'' என்று பிரமராயர் ஸூக்ஷ்மார்த்தமாகக் கேட்டார். ''ஆம்'' என்றேன். வீரப்ப முதலியார் பேசத் தொடங்கினார்; ''பூணூலை எடுத்துப் போடுங்கள்; இந்தியாமுழுவதும் ஒரே ஜாதி, ஒரே உடுப்பு, ஒரே ஆசாரம்என்று செய்து விடவேண்டும்; அது வரை பிராம்மண"சபை, அப்ராம்மண சபை, ரெட்டி சபை, வன்னியர் சபை,முதலியார் சபை - இந்த இழவெல்லாம் தீராது. ஒரேகூட்டம் என்று பேசு. பூணூலென்ன கீணூலென்ன, வீண்கதை!' என்றார். பிரமராயர் சமாதானப் படுத்தப்போனார்,வீரப்ப முதலியார் சொல்லுகிறார்: 'எல்லாம் தெரியும்.தெரியும். யாரோ ஒரு ராஜாவாம்; அவன் பூணூலை ஒருதட்டிலும் பொன்னை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்துப்பார்த்தானாம்; பூணூல் கீழே இழுத்ததாம்; பொன்மேலேபோய்விட்டதாம். இதெல்லாம் மூட்டை. சரி சமானமாகஐரோப்பியர்களைப் போலே நடப்போம். ஜப்பானிலேஅப்படித்தான். ஜாதி வித்யாசத்தை முதலாவது நீக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கத் தொடங்கினார்கள்.ஜப்பானியரைப்போல இருப்போம்' என்றார்.

'ஹிந்துக்களைப்போலவே இருப்போம்' என்றுநான் சொன்னேன்.

'எப்போதும் பிரிவும் சண்டையும் இருக்கவேண்டுமென்பது உம்முடைய கக்ஷியோ?' என்று வீரப்பமுதலியார் கேட்டார். 'வேண்டியவர்கள் எல்லாம் பூணூல்போட்டுக்கொள்ளலாம். அது யாகத்துக்கு வெளியடையாளமாகஅந்தக் காலத்தில் ஏற்பட்டது. இஷ்டமான ஹிந்துக்கள்"எல்லாரும் பூணூல் போட்டுக்கொள்ளலாம். மற்றவர்கள் சரிசமானமாக இருக்கலாம். பூணூல் இருந்தாலும் ஒன்றுபோலே,இல்லாவிட்டாலும் ஒன்றுபோலே, ஹிந்துக்களெல்லாம் ஒரேகுடும்பம். அன்பு காப்பாற்றும். அன்பே தாரகம்? என்றேன்.'அன்பே சிவம்' என்று பிரமராயர் சொன்னார். இவ்வளவுடன்காலை சபை கலைந்தது.

இப்போது நடைபெறும் 1920-ம் வருஷம் ஜூன் மாஸம் 22-ம் தேதியன்று தொடங்கி, அன்றைக்கும், அடுத்த இரண்டு மூன்று தினங்களும் திருநெல்வேலியில் "மாகாணஆசாரத் திருத்த மஹாஸபை" நடைபெறும் என்று தெரிகிறது.21-ந் தேதியன்று மாகாணத்து ராஜரீக மஹாஸபை திருநெல்வேலியில் கூடுகிறது. அதை அனுசரித்து, அதே பந்தரில் ஆசார ஸபையும் நடக்கும்.

22-ந் தேதி முதல், இரண்டு மூன்று நாள் கூடி, அங்கு நம் மாகாணத்து ஆசாரத்திருத்தக்காரர் வழக்கப்படிவிவாதங்கள் நடத்தி மாமூலைத் தழுவி சில தீர்மானங்களைச்செய்து முடித்துப் பின்பு கலைந்து விடுவார்கள்.

எனக்குக் கிடைத்திருக்கும் அழைப்புக் கடிதத்தைப்பார்க்குமிடத்தே இந்த வருஷம் நடப்பது இருபத்திரண்டாவதுவருஷக் கூட்டமென்று விளங்குகிறது. சென்ற இருபத்திரண்டுவருடங்களாக இம் மாகாணத்திலுள்ள ஆசாரத் திருத்தக் கூட்டத்தார் வெறுமே ஸபைகள் கூடித் தீர்மானங்கள் செய்திருப்பதே யன்றி உறுதியான வேலை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிய வழியில்லை.

ராஜரீக மஹா சபையில் செய்யப்படும் தீர்மானங்கள்காரியத்துக்கு வராவிட்டால், "அதற்கு நாம் என்ன செய்யலாம்?அதிகாரிகள் பார்த்து வரங்கொடுத்தால் தானே உண்டு. நாம் கேட்கமாத்திரமே தகுதியுடையோர். நம்முடைய விருப்பங்கள் நிறைவேறவேண்டுமாயின், அதற்கு அதிகாரிகளின் தயவு வேண்டும்; அல்லது,இங்கிலீஷ் பார்லிமெண்டின் தயவு வேண்டும். அவை நிறைவேறாமலிருப்பது பற்றி நம் மீது குறை கூறுதல் பொருந்தாது" என்றுசாக்குப்போக்குச் சொல்ல இடமிருக்கிறது.

ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயமோ அப்படியில்லை. இதில் நம்மவர்கள் செய்யும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியவர்களும் நம்மவரே யன்றிப்பிறரில்லை. அதிகாரிகளின் தயவு வேண்டியதில்லை. இங்கிலீஷ் பார்லிமெண்டின் கருணையும் "அவசியமில்லை. இதில் நாமே வரங்கேட்டு, நாமே வரங்கொடுக்க வேண்டும். அப்படியிருந்தும், இந்த ஆசாரத் திருத்தச் கூட்டத்தாரின் முயற்சிகள் ராஜ்யத் திருத்தக் கூட்டத்தாரின் பிரயத்தனங்களைக் காட்டிலுங்கூடக்குறைவான பயன் எய்தியிருப்பதை நோக்கும் போது மிகவும் வருத்தமுண்டாகிறது.

இந்த தேசத்து ஜனத்தலைவர்கள் மனிதர்களா? அல்லது வெறும் தோல் பொம்மைகள்தானா? இவர்கள் மனித ஹ்ருதயத்தின் ஆவலையும், மனித அறிவின் நிச்சயத்தையும்அவற்றின் பெருமைக்குத் தக்கபடி மதிப்பிடுகிறார்களா? அல்லதுவெறும் புகையொத்த பதார்த்தங்களாகக் கணிக்கிறார்களா?

மேற்படி ஆசாரத் திருத்த சபைகளிலே அறிவுடையமனிதர் பலர், ஜனத்தலைவர்களும், உத்தியோக பதவிகளில்உயர்ந்தோரும், பிரபுக்களும், கீர்த்தி பெற்ற பண்டிதர்களும்,சாஸ்திரிகளும், நீதி நிபுணர்களும் கூடிஅறிவுடன் வாதங்கள்நடத்தி, அறிவுடன் சில தீர்மானங்கள் செய்து முடிக்கிறார்கள்.அப்பால், அத் தீர்மானங்களை தமது சொந்த ஒழுக்கத்திலும்தேசஜனங்களின் நடையிலும் செய்கைகளாக மாற்றுவதற்குரியமுயற்சிகள் ஒன்றுமே நடப்பதில்லை. எனவே, மனித அறிவைஇவர்கள் களைந்து போடும் குப்பைக்கு நிகராகவே மதிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. மேலும், அந்தத் தீர்மானங்கள்நிறைவேறு வதினின்றும் தேசத்து ஜனங்களுக்கு நன்மைவிளையும் என்ற உண்மையான நம்பிக்கையுடனேயே அவைபிரேரேபணை செய்யப்படுகின்றன. இந்த விஷயத்தில் ஏராளமானகால விரயமும் பொருட் செலவும் ஏற்படுகின்றன. இவ்வளவுக்கும் முடிவாக யாதொரு பயனும் விளையக் காணோமென்றால்,இந்த ஆசாரத்திருத்தக்காரரின் சக்தியைக் குறித்து நாம் என்ன சொல்லலாம்! இவ் வருஷமேனும், இவ்விஷயத்தில் தகுந்தசீர்திருத்தம் ஏற்படுமென்று நம்புகிறேன். முதலாவது விஷயம்,ஆசாரத்திருத்த மஹா சபையில் பேசுவோராவது, ''உண்மையிலேயேதாம் பேசும் கொள்கையின்படி நடப்பவரா'' என்பதை நிச்சயித்துஅறிந்து கொள்ளவேண்டும். மஹா சபைக்குப் பிரதிநிதியாகவந்திருப்போர் அத்தனை பேரிலும் பெரும் பகுதியார் ''இப்போதுஉடனே தத்தம் குடும்ப வாழ்க்கையில் என்னனென்னசீர்திருத்தங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள்''என்பதைக் கண்டுபிடித்துப் பத்திரிகைகளில் வெளியிடவேண்டும்.

நமது மாகாண முழுமையிலும் ஆசாரத் திருத்தவிஷயத்தில் சிரத்தையுடையோர் எல்லோரும் இந்த மாதம் திருநெல்வேலிக் கூட்டத்துக்கு அவசியம் வந்து சேரமுயற்சி செய்யவேண்டும். இந்தக் கூட்டத்தை யொட்டி மாதர்களின் சபையொன்றுநடக்கப்போகிறதாகையால், கல்வி கற்ற மாதர்களெல்லோரும் அவசியம் வந்திருந்து தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ''தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு'' அவரவருக்கு வேண்டிய விஷயங்களைக்குறித்து அவரவர் பாடுபட்டாலொழியக் காரியம் நடக்காது. மேலும்,நம் நாட்டு ஆண் மக்கள் தமது நிலைமையை உயர்த்திக் கொள்ளக் கூடிய சுலபமான உபாயங்களைக் கூடக் கையாளத்திறமையற் றோராகக் காணப்படுகிறார்களாதலால் நம்முடையஸ்திரீகளை மேன்மைப்படுத்துதற்குரிய காரியங்களை முற்றிலும்இந்த ஆண்மக்கள் வசத்திலே விட்டுவிடாமல், மாதர்கள் தாமேமுற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களைத் தேடிக்கொள்வதே நன்றாகும். அன்னிய தேசங்களில் விடுதலைக்காகஉழைக்கும் ஸ்திரீகள் பெரும்பாலும் ஆண்மக்களின் உதவியைஅதிகமாக நாடாமல் தமது மேம்பாட்டுக்குரிய வேலைகளைத்தாங்களே செய்து வருவதை நம் தேசத்து ஸ்திரீகள் நன்குகவனிக்க வேண்டும்.

தமிழ் நாட்டு மக்களே! ஆரம்ப முதல் சமீப காலம் வரை ஆசாரத் திருத்தத் தலைவர்கள் பெரும்பாலும் தேசாபிமானம், ஸ்வபாஷாபிமானம், ஆர்ய நாகரீகத்தில் அனுதாபம் இம்மூன்றும் இல்லாத வர்களாக இருந்துவந்தபடியால் பொது ஜனங்கள் இவர்களுடைய வார்த்தையைக்கவனிக்க இடமில்லாமல் போய்விட்டது. எனினும்,அவர்களுடைய கொள்கைகளிற் பல மிகவும் உத்தமமானகொள்கைகள் என்பதில் ஐயமில்லை.

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்        அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு."

தேசாபிமானம் முதலிய உத்தம குணங்கள் இல்லாவிடினும், இந்த முயற்சி தொடங்கியவர்கள் உலகப்பொது நீதிகளைநன்குணர்ந்தோர். யாவராலே தொடங்கப்பட்டதாயினும், இப்போது இம் முயற்சி தேச ஜனங்களின் பொதுக்கார்யமாக பரிணமித்து விட்டது. எனவே, இவ்வருஷத்து மஹா ஸபையில் தமிழ்மக்கள்பெருந்திரளாக எய்தி நின்று, ஸபையின், விவகாரங்கள் பெரும்பாலும் தமிழிலேயே நடக்கும்படியாகவும், தீர்மானங்கள் பின்பு தேச ஒழுக்கத்தில் காரியப்படும் வண்ணமாகவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யக்கடவர். எதற்கும் பிரதிநிதிகள் நல்ல பெருங்கூட்டமாக வந்தால்தான் நல்ல பயன் ஏற்படும். ஜெர்மன் பாஷையில் "கூட்டம்" என்பதற்கும் "உத்ஸாஹம்" என்பதற்கும்ஒரே பதம் வழங்கப்படுகிறது. பெருங்கூட்டம் சேர்ந்தால்,அங்கு உத்ஸாஹம் இயல்பாகவே பெருகும் என்பது குறிப்பு.

பொது ஜன உத்ஸாஹமே ஸகல கார்யங்களுக்கும் உறுதியான பலமாகும். எனவே, நமது தேச முன்னேற்றத்தின் பரம ஸாதனங்களில் ஒன்றாகிய இந்த ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயத்தில் நம்மவர், ஆண் பெண் அனைவரும், தம்மால் இயன்ற வகைகளிலெல்லாம் உதவி புரிந்து மிகவும் அதிகமானஉத்ஸாஹம் காட்டுவார்கள் என்று நம்புகிறேன்.