பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, December 24, 2016

ஆத்திசூடி ஒளவையார்/பாரதியார்

த்திசூடி என்றதும் ஒளவையார் நமக்கு நினைவுக்கு வருவார். தொடர்ந்து மகாகவி பாரதியார் இயற்றிய புதிய ஆத்திசூடியும் நம் நினைவுக்கு வரும் இவ்விரு நூல்களையும் ஒருசேர வைத்துப் படிப்பதென்பது எல்லோருக்கும் முடியுமா என்பது தெரியவில்லை. ஆகையால் இவ்விரு அற்புதமான இலக்கிய அற்புதத்தை இங்கே ஒருசேர தருகிறேன். ஒன்றுக்கொன்று சில கருத்துக்குள் எதிரும் புதிருமாக இருப்பதைக் கவனியுங்கள். அவரவர் காலத்துக்குத் தக்கபடி அறிவுரை கூறியுள்ளனர். பல வரிகள் பலமுறை படித்து இன்புறத் தக்கவை இவை. படியுங்கள்!

ஒளவையாரின் ஆத்திசூடி.                    பாரதியாரின் புதிய ஆத்திசூடி
     கடவுள் வாழ்த்து                             பரம்பொருள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை                                     ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.                           மோனத்திருக்கு முழுவெண் மேனியான்,
                                                                                                       
கருநிறங்கொண்டு பாற்கடல்மிசைக் கிடப்போன்
1. அறம் செய விரும்பு.                                                     மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
2.
ஆறுவது சினம்.                                                           ஏசுவின் தந்தையெனப் பல மதத்தினர்
3.
இயல்வது கரவேல்.                                                  உருவகத்தாலே உணர்ந்துணராது
4.
ஈவது விலக்கேல்.                                                          பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
5.
உடையது விளம்பேல்.                                                ஒன்றே; அதனியல் ஒளியுறு மறிவாம்
6.
ஊக்கமது கைவிடேல்.                                                 அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
7.
எண் எழுத்து இகழேல்.                                            அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
8.
ஏற்பது இகழ்ச்சி.
9.
ஐயம் இட்டு உண்.                                                            அச்சம் தவிர்
10.
ஒப்புரவு ஒழுகு.                                                         ஆண்மை தவறேல்
11.
ஓதுவது ஒழியேல்.                                                  இளைத்தல் இகழ்ச்சி
12.
ஔவியம் பேசேல்.                                                       ஈகைத் திறன்
13.
அஃகம் சுருக்கேல்.                                                         உடலினை உறுதி 
செய்                                                          14. கண்டொன்று சொல்லேல்.                                      ஊண்மிக விரும்பு
15. ஙப் போல் வளை.                                                          எண்ணுவது உயர்வு
16.
சனி நீராடு.                                                                         ஏறுபோல் நட
17.
ஞயம்பட உரை.                                                              ஐம்பொறி ஆட்சிகொள்
18.
இடம்பட வீடு எடேல்.                                                  ஒற்றுமை வலிமையாம்                     
19.
இணக்கம் அறிந்து இணங்கு.                                   ஓய்தல் ஒழி
20.
தந்தை தாய்ப் பேண்.                                                    ஒளடதம் குறை
21.
நன்றி மறவேல்.                                                             கற்றது ஒழுகு
22.
பருவத்தே பயிர் செய்.                                                காலம் அழியேல்
23.
மண் பறித்து உண்ணேல்.                                          கிளை பல தாங்கேல்
24.
இயல்பு அலாதன செய்யேல்.                                 கீழோர்க்கு அஞ்சேல்
25.
அரவம் ஆட்டேல்.                                                         குன்றென நிமிர்ந்து நில்
26.
இலவம் பஞ்சில் துயில்.                                            கூடித் தொழில் செய்
27.
வஞ்சகம் பேசேல்.                                                        கெடுப்பது சோர்வு
28.
அழகு அலாதன செய்யேல்.                                   கேட்டிலும் துணிந்து நில்
29.
இளமையில் கல்.                                                          கைத்தொழில் போற்று
30.
அரனை மறவேல்.                                                        கொடுமையை எதிர்த்து நில்
31.
அனந்தல் ஆடேல்.                                                       கோல் கைக்கொண்டு வாழ்
32.
கடிவது மற.                                                                      கவ்வியதை விடேல்
33.
காப்பது விரதம்.                                                             சரித்திரத் தேர்ச்சி கொள்
34.
கிழமைப்பட வாழ்.                                                       சாவதற்கு அஞ்சேல்
35.
கீழ்மை அகற்று.                                                            சிதையா நெஞ்சு கொள்
36.
குணமது கைவிடேல்.                                               சீறுவோர்ச் சீறு
37.
கூடிப் பிரியேல்.                                                            சுமையினுக்கு இளைத்திடேல்
38.
கெடுப்பது ஒழி.                                                              சூரரைப் போற்று
39.
கேள்வி முயல்.                                                             செய்வது துணிந்து செய்
40.
கைவினை கரவேல்.                                                 சேர்க்கை அழியேல்
41.
கொள்ளை விரும்பேல்.                                           சைகையிற் பொருள் உணர்
42.
கோதாட்டு ஒழி.                                                           சொல்வது தெளிந்து சொல்
43.
கௌவை அகற்று.                                                      சோதிடந்தனை இகழ்
44.
சக்கர நெறி நில்.                                                          செளரியந் தவறேல்
45.
சான்றோர் இனத்து இரு.                                         ஞமலி போல் வாழேல்
46.
சித்திரம் பேசேல்.                                                        ஞாயிறு போற்று
47.
சீர்மை மறவேல்.                                                        ஞிமிறென இன்புறு
48.
சுளிக்கச் சொல்லேல்.                                              ஞெகிழ்வ தருளின்
49.
சூது விரும்பேல்.                                           ஞேயங் காத்தல் செய்
50.
செய்வன திருந்தச் செய்.                                      தன்மை இழவேல்
51.
சேரிடம் அறிந்து சேர்.                                              தாழ்ந்து நடவேல்
52.
சையெனத் திரியேல்.                                              திருவினை வென்று வாழ்
53.
சொற் சோர்வு படேல்.                                              தீயோர்க்கு அஞ்சேல்
54.
சோம்பித் திரியேல்.                                                  துன்பம் மறந்திடு
55.
தக்கோன் எனத் திரி.                                                 தூற்றுதல் ஒழி
56.
தானமது விரும்பு.                                                      தெய்வம் நீ என்றுணர்
57.
திருமாலுக்கு அடிமை செய்.                                தேசத்தைக் காத்தல் செய்
58.
தீவினை அகற்று.                                                        தையலை உயர்வு செய்
59.
துன்பத்திற்கு இடம் கொடேல்.                            தொன்மைக்கு அஞ்சேல்
60.
தூக்கி வினை செய்.                                                   தோல்வியில் கலங்கேல்
61.
தெய்வம் இகழேல்.                                                    தவத்தினை நிதம் புரி
62.
தேசத்தோடு ஒட்டி வாழ்.                                        நன்று கருது
63.
தையல் சொல் கேளேல்.                                        நாளெல்லாம் வினை செய்
64.
தொன்மை மறவேல்.                                                நினைப்பது முடியும்
65.
தோற்பன தொடரேல்.                                               நீதிநூல் பயில்
66.
நன்மை கடைப்பிடி.                                                    நுனியளவு செல்
67.
நாடு ஒப்பன செய்.                                                       நூலினைப் பகுத்துணர்
68.
நிலையில் பிரியேல்.                                                நெற்றி சுருக்கிடேல்
69.
நீர் விளையாடேல்.                                                     நேர்படப் பேசு
70.
நுண்மை நுகரேல்.                                                       நையப் புடை
71.
நூல் பல கல்.                                                                  நொந்தது சாகும்
72.
நெற்பயிர் விளைவு செய்.                                       நோற்பது கைவிடேல்
73.
நேர்பட ஒழுகு.                                                               பணத்தினைப் பெருக்கு
74.
நைவினை நணுகேல்.                                               பாட்டினில் அன்பு செய்
75.
நொய்ய உரையேல்.                                                   பிணத்தினைப் போற்றேல்
76.
நோய்க்கு இடம் கொடேல்                                      பீழைக்கு இடங்கொடேல்
77.
பழிப்பன பகரேல்                                                         புதியன விரும்பு
78.
பாம்பொடு பழகேல்.                                                   பூமி இழந்திடேல்
79.
பிழைபடச் சொல்லேல்.                                          பெரிதினும் பெரிது கேள்
80.
பீடு பெற நில்.                                                                  பேய்களுக்கு அஞ்சேல்
81.
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.                                பொய்மை இகழ்
82.
பூமி திருத்தி உண்.                                                       போர்த்தொழில் பழகு
83.
பெரியாரைத் துணைக் கொள்.                              மந்திரம் வலிமை
84.
பேதைமை அகற்று.                                                    மானம் போற்று
85.
பையலோடு இணங்கேல்.                                       மிடிமையில் அழிந்திடேல்
86.
பொருள்தனைப் போற்றி வாழ்.                           மீளுமாறு உணர்ந்து கொள்
87.
போர்த் தொழில் புரியேல்.                                      முனையிலே முகத்து நில்
88.
மனம் தடுமாறேல்.                                                     மூப்பினுக்கு இடங்கொடேல்
89.
மாற்றானுக்கு இடம் கொடேல்.                          மெல்லத் தெரிந்து சொல்
90.
மிகைபடச் சொல்லேல்.                                           மேழி போற்று
91.
மீதூண் விரும்பேல்.                                                  மொய்ம்புறத் தவம் செய்
92.
முனைமுகத்து நில்லேல்.                                      மோனம் போற்று
93.
மூர்க்கரோடு இணங்கேல்.                                      மெளட்டியம் தனைக் கொல்
94.
மெல்லி நல்லாள் தோள்சேர்.                                யவனர்போல் முயற்சி கொள்
95.
மேன்மக்கள் சொல் கேள்.                                       யாரையும் மதித்து வாழ்
96.
மை விழியார் மனை அகல்.                                  யெளவனம் காத்தல் செய்
97.
மொழிவது அற மொழி.                                            ரஸத்திலே தேர்ச்சி கொள்
98.
மோகத்தை முனி.                                                        ராஜஸம் பயில்
99.
வல்லமை பேசேல்.                                                     ரீதி தவறேல்
100.
வாது முற்கூறேல்.                                                    ருசிபல வென்றுணர்
101.
வித்தை விரும்பு.                                                       ரூபம் செம்மை செய்
102.
வீடு பெற நில்.                                                              ரேகையில் கனி கொள்
103.
உத்தமனாய் இரு.                                                      ரோதனம் தவிர்
104.
ஊருடன் கூடி வாழ்.                                                  ரெளத்திரம் பழகு
105.
வெட்டெனப் பேசேல்.                                              லவம்பல வெள்ளமாம்
106.
வேண்டி வினை செயேல்.                                    லாகவப் பயிற்சி செய்
107.
வைகறைத் துயில் எழு.                                        லீலை இவ்வுலகு
108.
ஒன்னாரைத் தேறேல்.                                           (உ)லுத்தரை இகழ்
109.
ஓரம் சொல்லேல்.                                                    (உ)லோகநூல் கற்றுணர்                                          லெளகிக 
ற்று                                                                           வருவதை மகிழ்ந்துண்                                                                  வான நூல் பயிற்சி  கொள்                                                              விதையினைத் தெரிந்திடு                                                               வீரியம் பெருக்கு                                                                   வெடிப்புறப் பேசு                                                                   வேதம் புதுமை செய்                                                                    வையத் தலைமை  கொள்                                                             வெளவுத னீக்கு
                                              


2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இக்காலகட்டத்திற்குத் தேவை இவை போன்ற பாடல்களே. பதிவிற்கு நன்றி.

குரு said...

இவ்வுலக வாழ்க்கையிலும் சரி , மெய்வுணர்வான வாழ்க்கையிலுசம் சரி கெத்தா வாழனும்ன , திருவள்ளுவர் ,ஒளவையார் , பாரதியார் , வேதாத்திரி மகரிஷிய் இவர்கள் நால்வரை ஆராயிந்து பின்பற்றினாளே போதும் ... வாழ்நாள் முழுவது கெத்தா வாழலாம்

இது என் அனுபவ உண்மையே .... எவன நம்பியும் வாழ வேண்டாம்


பரம்பொருளோடைய நேரடி நெட்வொர்கிலேயே வாழலாம்
நினைப்பது விரைந்து நடந்து விடும்
எண்ணங்கள் ஆச்சிரியமாக நிறைவேறும்

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்