பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, April 30, 2013

மே தின வாழ்த்து


               1-5-2013 மே தின வாழ்த்துக்கள்


"தொழிலாளர் தினமான" மே முதல் தேதியன்று அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். தொழிலாளர் பிரச்சினைகள் தீர்ந்து நலமுற்று வாழ‌
வாழ்த்துகிறோம்.

நாட்டுப்புற விளையாட்டுகள்


"முகநூலில்" திருவையாறு பாலாஜி வெளியிட்டு நாராயணன் சடகோபன் அவர்கள் அதனை மறுவெளியீடு செய்திருக்கும் தமிழ்நாட்டுக் குழந்தைகளின் பண்டைய விளையாட்டுக்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய செய்தி என்பதால் அதனை இந்த வலைப்பூவில் தந்திருக்கிறேன். திருவையாறு பாலாஜிக்கு நன்கு தெரியும். தில்லைஸ்தானத்தில் மரபு ஃபவுண்டேஷன் எனும் கலாச்சார அமைப்பை நடத்தும் முனைவர் இராம.கெளசல்யா அவர்கள் கிராமத்துக் குழந்தைகளுக்கு இந்தப் பட்டியலில் கண்ட பல விளையாட்டுகளோடு, தேவாரம், தமிழ்ப்பாக்கள் ஆகியவற்றை கற்பித்து வருகிறார். இதுபோன்ற நமது புராதன விளையாட்டு மற்றும் கலைகளை ஆங்காங்கே கற்பித்து நமது பாரம்பரிய பெருமையைக் காத்திட அனைவரும் முன்வர வேண்டுமென்பதே நமது அவா!


Narayanan Sadagopan and Thiruvaiyaru Balaji shared தமிழும் சித்தர்களும் Thamil.Siththars's photo.
தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

சிறுவர் (பையன்கள்) கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான் 
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு 
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு 
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது) 
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை 
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம் 
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

நன்றி: நவீனன்













தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

சிறுவர் (பையன்கள்) கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

நன்றி: நவீனன்

பரதநாட்டியம்

1. பரதநாட்டியம்

"இந்தியாவின் பெருமைமிகு நடன வகைகள்" எனும் கட்டுரையைப் படித்தபின் வளைகுடா நாட்டில் இருக்கும் நண்பர் கவிஞர் தனுசு அவர்கள் ஒவ்வொரு வகை நடனம் பற்றியும் அறிந்து கொள்ள ஆவல் எனத் தெரிவித்திருக்கிறார். ஆம்! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் இந்த கலையில் ஆர்வம் உள்ளவன் என்பதைத் தவிர அதன் முழு பரிமாணத்தையும் அறிந்தவன் அல்ல. அப்படி முழுமையாகத் தெரிந்தவர்களைக் கொண்டு எழுதவைக்க நேரமும் இல்லை. ஆகையால் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைத் தொகுத்து இங்கே தருகிறேன். இதில் என் சொந்த சரக்க, மொழி நடையைத் தவிர, வேறு எதுவும் இல்லை. இதெல்லாம் ஏற்கனவே விஷயம் தெரிந்தவர்கள் எழுதி வைத்ததிலிருந்து தொகுத்தெடுத்தது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் பரத நாட்டியம் பற்றி ஓரளவு தெரிந்து கொள்வோம்.

தமிழகத்தில் உருவானது பரதநாட்டியம். தமிழகத்திலும் தஞ்சாவூரில் உருவானது இது. தஞ்சை நால்வர் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள், அவர்களால் பிரபலப்படுத்தப் பட்டது இது. அதற்கு முன்பும் பரதநாட்டியம் இந்த நாட்டில் சிறப்பாக ஆடப்பட்டு வந்திருக்கிறது, வேதங்களிலிருந்து தான் நடனக் கலை தோன்றியதாகவும், பின்னர் பரத முனிவர் உருவாக்கினதாகச் சொல்கிறார்கள். நம் ஊர்களில் ஆலயங்களில் காணப்படும் பல சிற்பங்கள் பரதக் கலையின் சிற்பங்களே. தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம் ஆகிய ஆலயங்களில் காணப்படும் நடனச் சிற்பங்கள், கரணங்கள் குறித்து நடன மேதை பத்மஸ்ரீ பத்மாசுப்ரமண்யம் அவர்கள் ஆய்ந்து ஒரு நூலை இயற்றியிருக்கிறார்கள். ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டி முடித்தபோது நானூறுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களை நியமித்து, அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து குடியேற்றியதாக கல்வெட்டுகள் இருக்கின்றன. தஞ்சை கோயிலுக்கு முதன்முதலாக திருவையாற்று கோயிலில் இருந்து பல நடனமாதர்களை மாற்றல் செய்து தஞ்தைக்கு அனுப்பியதாகவும் செய்திகள் இருக்கின்றன.

இந்த அரிய நடனக் கலை 1946 வரை குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மட்டும் பாதுகாக்கப்பட்டு ஆலயங்களில் ஆடப்பட்டும், மன்னர்கள் சபைகளில் ஆடப்பட்டும் வந்திருக்கிறது. இவர்கள் மட்டும் இந்தக் கலையை புனிதம் கெடாமல் பாதுகாத்திருக்காவிட்டால், இந்த அரிய கலை மறைந்து போயிருக்கவும் வாய்ப்பு உண்டு. நம் கலைகள் அனைத்துமே இறைவனை மையப்படுத்தி நடத்தப்படுவதால், இந்த நடனக் கலை நமது ஆலயங்களின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. நாட்டை ஆள்கின்ற உயர்ந்த நிலையில் இருந்ததால் மன்னர்கள் தங்கள் அவைகளிலும் இவர்களை ஆடச் செய்திருக்கின்றனர். பின்னர் பல செல்வந்தர்களும் ஆடற்கலையைப் பார்த்து ரசித்திருக்கின்றனர். இந்த கலை இன்று மக்கள் கலையாக மாறி, நம் அனைவர் வீட்டுக் குழந்தைகளும் பயிலுகின்றதொரு அற்புதக் கலையாக மாறி இருக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.

மகாகவி பாரதியார் "அபிநயம்" எனும் தன்னுடைய கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்:--

"நாட்டிய சாஸ்திரத்தை உண்மையாகப் பயின்றால் அதிலிருந்து ஆண்களுக்கு ஆண்மையும், பெண்களுக்குப் பெண்மையும் உண்டாகும். அதை நெறி தவறிப் பயிற்சி செய்தால் அதிலிருந்து ஆணுக்குப் பெண்மையும், பெண்ணுக்கு ஆண்மையும் விகாரமாகத் தோன்றும்"

"நாட்டிய சாஸ்திரத்தை ஆதியில் பரமசிவன் நந்திக்குக் கற்றுக் கொடுத்தார். அப்போது பகவான் நந்தியை நோக்கி, 'கேளாய் நந்தி! அபிநயம் தவறுவதாலே ஜனங்கள் நரகத்தை அடைகிறார்கள். தர்மிஷ்டனாகிய கூத்தன் அபிநய உண்மைகளை ஆசார்யனிடமிருந்து நியமங்களுடனே கற்றுக்கொள்ள வேண்டும். ........ தர்மிஷ்டனாகிய சிஷ்யன், நெறிப்படி அசார்யனிடமிருந்து கற்றுக் கொண்ட நாட்டியத்தில் நவரஸங்களும் ஸமரஸப்பட்டுக் காண்போருக்கு ஆனந்தத்தையும், லக்ஷ்மி கடாக்ஷத்தையும் ஏற்படுத்தும். நல்ல ஆசார்யன் இல்லாமல் இந்த நாட்டிய சாஸ்திரத்தைப் பழகுவோன் உண்மையான பக்தியுடையவனாக இருக்க வேண்டும். தெய்வ பக்தியினாலே ஸகல வித்தைகளும் வசப்படும்"

மகாகவியின் கருத்துப்படி இதுபோன்ற கலைகள் தெய்வ பக்தியினாலே கைகூடுவது என்கிறார். இந்த நாட்டிய சாஸ்திரத்தை விரும்பியவர் எல்லோரும் கற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் அதில் சிறந்து விளங்குவதற்கு எல்லோராலும் முடிவதில்லை. யாரோ சிலர்தான் இந்தக் கலையில் சிறந்து விளங்கும் நிலைமையை இன்றும் நாம் பார்த்து வருகிறோம். திறமை, முயற்சி, குருபக்தி, உடல்வாகு, இவை அத்தனையும் இருந்தாலும் தெய்வானுக்ரகம் என்பது மிக அவசியம் என்பது தெரிகிறது. ஆடற்கலை இறைவனால் கொடுக்கப்பட்டது என்பதைப் பார்த்தோம். அந்தக் கலையில் நாம் தேர்வதற்கு அவன் அருள் அவசியம் தேவை. இவற்றால் எல்லால் நாம் அறிந்து கொள்ளும் உண்மை, தெய்வத்தின் பெயரால், தெய்வத்தை முன்னிட்டு நாம் கற்கும் இந்தக் கலை அவனுக்கே அர்ப்பணிக்கப் படுகிறது. அப்படிச் செய்யும்போது அதில் மேலும் ஒளியும், சிறப்பும் உண்டாகிறது என்பதே. இந்த கட்டத்தில் இந்த தெய்வீகக் கலையில் சிறந்து விளங்கும் ஆயிரமாயிரம் அற்புதமான கலைஞர்களை வணங்கிப் போற்றிவிட்டு மேலே தொடர்கிறேன்.

இனி, பரத நாட்டியம் பற்றி நான் தொகுத்த சில விஷயங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பரத நாட்டியம் இன்றைய நிலைமையில் பலரும் விரும்பி கற்றுக் கொள்ளும் கலையாக விளங்குகிறது. இறைவனை வழிபடுவதற்கு 9 மார்க்கங்களை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவை முறையே:--

1. ஸ்ரவணம்: புராண இதிகாஸ வரலாற்றுக் கதைகளை புராணிகர்கள் சொல்ல அமர்ந்து கேட்பது.
2. கீர்த்தனம்: இறைவன் புகழை இசைவடிவில் பாடி, பஜனை செய்து இன்புறுதல்.
3. ஸ்மரணம்: இறைவன் நாமத்தை சதாகாலமும் உச்சரிப்பது அல்லது மந்திரங்களை சொல்வது.
4. பாதஸேவனம்: கர்ம யோகத்தில் கண்டபடி பக்தி செய்து பிறருக்குச் சேவை செய்வது.
5. அர்ச்சனம்: பூஜை, ஹோமம் போன்றவற்றால் இறைவனுக்கு அர்ச்சனை செய்தல்.
6. வந்தனம்: உடலின் எட்டு பாகங்கள் தரையில் பட பூமியில் பணிந்து வணங்கி எழுதல்.
7. தாஸ்யம்: இறைவனுக்கு தன்னலமின்றி, நான் எனது எனும் உணர்வு நீக்கிப் பணி செய்வது.
8. ஸஹ்யம்: இறைவனுக்குத் தோழன் போன்ற நட்புறவு பூண்டு பணியாற்றுதல்.
9. ஆத்மநிவேதனம்: இறைவனிடம் பூரண சரணாகதியடைந்து பக்தி செய்தல்.

இந்த ஒன்பது வகைகளில் கீர்த்தனம் என்பது இசை, பஜனை, ஆடல், பாடல் மூலம் இறைவனை நினைந்து வழிபடுதல். பாண்டுரங்கனை நினைத்து பக்தர்கள் தன்னை மறந்து பாடி ஆடி பஜனை செய்து வழிபடுகிறார்கள் அல்லவா? மக்கள் ஒரிடத்தில் கூடி இறைவன் மீது பாடல்களைப் பாடி மகிழ்கிறார்கள் அல்லவா? அதைப் போல இறைவன் வகுத்துக் கொடுத்த அந்த நடனக் கலையைப் பாடலோடு ஆடி வழிபடுவது ஒரு முறை, அதுவே பரதக் கலை.

தொழில் முறையில் ஆலயங்களில் ஆடுவதும் பாடுவதும் பக்தி மார்க்கத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது என்பதையும், அதனை இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் செய்து வந்தார்கள் என்பதையும் பார்த்தோம். அந்த முறை 1946க்குப் பிறகு சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது. பின்னர் இந்த ஆடலையும், பாடலையும் சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் கற்றுக் கொள்ளவும், ஆடவும் பாடவும் தலைப்பட்டனர். ஒரு வகுப்பினருக்கு மட்டும் உரிமை எனக் கருதப்பட்ட இந்தக் கலை இன்று பொதுமக்கள் அனைவருக்கும் உரித்தான் பொதுவான கலையாக ஆகிவிட்டது. 1930களில் சென்னை மாகாணத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்பார் இந்த தேவதாசி முறை ஒழிப்புக்கு முன்நின்று பாடுபட்டு அவர்களிடம் இருந்த கலையை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வழிவகுத்தார்.

முன்பே குறிப்பிட்டபடி இந்து மதத்தில் சிவபெருமான் நடராஜனாக ஆந்த நடனமும், ஊர்த்துவ நடனமும் ஆடி நடனத்துக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். இதனைச் சிவதாண்டவம் என்பர். கி.பி. 8 அல்லது 9ஆம் நூற்றாண்டில் சிவபெருமானை நடராஜ மூர்த்தியாக இப்போது நாம் காணும் வடிவத்தில் சோழ நாட்டில்தான் முதன்முதலாக சிற்பம் வடித்தனர். அந்த சிற்பத்தின் சிறப்பு குறித்து நிறைய பேசமுடியும். நான்கு கரங்களையும், அந்த கரங்களின் பாவங்களையும், கையிலுள்ள தீ, உடுக்கை போன்றவற்றுக்கும், கால்களில் வீழ்ந்து கிடக்கும் அபஸ்மாரம் என்பவனைப் பற்றியும், அவரைச் சுற்றி தீ ஜ்வாலைகளோடு அமைந்த திருவாசி பற்றியும் நிறைய செய்திகள் உண்டு, அவற்றைத் தனியே பார்க்கலாம்.

தஞ்சையில் சின்னண்ணா பெரியண்ணா எனும் அமைச்சர்கள் கடைசி மராத்திய மன்னரின் அவையில் இருந்தார்கள். இவர்கள் இசை, நடனம் இவற்றைப் போற்றி பாதுகாத்தவர்கள். பரதநாட்டியத்தை முறைப்படுத்தி ஆடுவதற்கு இலக்கணம் வகுத்த பெருமை தஞ்சாவூர் கிருஷ்ணய்யர் என்பவருக்கு உண்டு. திருமதி ருக்மணி தேவி அவர்கள் இந்தக் கலையில் மேன்மையடைந்து பந்தநல்லூர் பாணி எனும் வகையை நாட்டியத்தில் நுழைத்தவர். மேலை நாடுகளும் இந்தக் கலையைக் கண்டு வியக்கும் வண்ணம் செய்த பெருமை இந்த ருக்மணி தேவிக்கு உண்டு. பின்னாளில் கலாக்ஷேத்ரா எனும் அமைப்பின் மூலம் ருக்மணி தேவி அருண்டேல், மைலாப்பூர் கெளரி அம்மாள் போன்றவர்கள் இந்தக் கலையை மேலும் பிரபலப் படுத்தக் காரணமாக இருந்தவர்கள். பரதநாட்டியம் என்பது தெய்வீகமான, சில இலக்கணங்களுக்கு உட்பட்ட, அற்புதமான கலை என்பதை உலகறியச் செய்தவர்கள் இவர்கள்.

1936இல் திருமதி ருக்மணி தேவி அருண்டேல் சென்னையில் அடையாறு பகுதியில் கலாக்ஷேத்ரா எனும் நிறுவனத்தைத் தோற்றுவித்து அரியகலைகள் பலவற்றையும், பரதநாட்டியம் உட்பட பலவற்றைப் போற்றி வளர்த்து மக்கள் கரங்களில் கொடுக்க உதவியிருக்கிறார். அவருடைய காலத்தில் பெண்கள் மட்டுமே ஆடக்கூடியதாக இந்த பரதக் கலை இருந்திருக்கிறது. ஆண்கள் நட்டுவனாராக மட்டுமே இருந்தனர்.
தற்போது ஆண், பெண் பேதமின்றி அனைவருமே இந்தக் கலையில் தேர்ச்சி பெற்று ஆடிவருகின்றனர். தென்னிந்திய திரைப்படங்களும் ஓரளவு இந்தக் கலை பிரபலமடைய காரணமாக இருந்திருக்கிறது. புகழ்வாய்ந்த நடனக் கலைஞர்கள் திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்திருக்கின்றனர் என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். தற்போது ஆயிரக்கணக்கான பரதநாட்டியக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் வாழையடிவாழையாக இந்தக் கலை இளைய தலைமுறைக்குப் போய்ச்சேரும், அவர்கள் இதனை இன்னமும் செம்மைப் படுத்தி காலத்திற்கேற்றவாறு அழகுபடுத்தி மக்கள் மத்தியில் பெருமை சேர்ப்பார்கள். ஆலயங்களில் மட்டும் ஆடப்பட்ட இந்தக் கலை இன்று ஆலயத்தினுள்ளும், வெளியிலும், சபாக்களிலும், திருமணம் மற்ற விசேஷங்களிலும் ஆடப்படுவதும், இதில் திறமைமிக்க இளைய தலைமுறை முன்னுக்கு வந்து கொண்டிருப்பதும் கலை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.

நிருத்யம் என்று முதலில் குறிப்பிட்டது நினைவில் இருக்கிறது அல்லவா. இது குறித்து நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருத்தை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன்.

Natyam refers to Dance, Drama and Music; it has three main aspects. i) Nritta or the purely rhythmic: This is confined to footwork and movements of the body and the hands, with no symbolic meaning. ii) Natya or mime: It is conveyed through gestures and facial expressions; we can call it "the suggestive language of imagination". iii) Nrithya. This employes both dance and drama to emphasise the meaning of lyrics and mood in the music.

These three aspects combined together create unique dance form. Abhinay Darpana says:

"Whither the hand goes, the glances lead,
Whither the glances lead, there the mind follows,
Whither the mind goes, there the mood follows,
Whither the mood goes, there is real flavour born."

இப்படி ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும்போது உருவாகும் கலையே பரதநாட்டியக் கலை.

பரதநாட்டியத்துக்கு மிருதங்கம், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு இவை மட்டுமே முதலில் இருந்தன. பின்னர் பல வாத்தியக் கருவிகளும் பயன்படலாயின. பரதநாட்டியத்துக்கென்று விசேஷமான உடை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதை அணிந்துகொண்டு ஆடும்போதுதான் அதன் சிறப்பு வெளிப்படும்.

பரதநாட்டியத்தில் கடைபிடிக்கப்படும் முறைகளை ஓரளவு வரிசைப்படுத்தித் தருகிறேன். இது நூறுசதவீதம் சரி என்பதற்கில்லை. மிகச் சிறந்த ஆசான்கள்தான் அதை கூறமுடியும்.

முதலில் அலாரிப்புடன் தொடங்குகிறது. நடனக் கலைஞர் நமக்கும் மேலே இருக்கும் இறைவனையும், கண்முன் அமர்ந்திருக்கும் குருவையும், கண்டு ரசிக்கும் மக்களையும் வணங்குவது. நடனமணியின் கால் கைகள்கள் தடங்கலின்றி செயல்படுவதை நிச்சயம் செய்துகொள்வது போல இந்த அலாரிப்பின்போது, தங்கள் அசைவுகளை இடமும் வலமும் கால், கை, உடல் இவற்றை மாற்றி மாறி அசைந்து காண்பிப்பார்கள். உடல் உறுப்புகள் மீது அவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு இதில் வெளிப்படும். கடவுள் வணக்கம் என்று இதனைக் கொள்ளலாம்.

அடுத்து ஜதிஸ்வரம்: இசைக்கும், அதன் ராகம், ஸ்வரம், ஜதி ஆகியவற்றுக்கு இணைந்து ஆடுவது. ஒலி, நடை, வேகம் இவற்றுக்கு ஈடுகொடுத்து ஆடும் பகுதி இது.

ஸப்தம்: லயத்திலிருந்து அபிநயத்துக்குக் கொண்டு செல்வது. பாடப்படும் பாடலின் பொருள் வெளிக்கொணரும்படியான நடனப் பாங்கு. கடவுளர்களின் லீலைகளை, விளையாட்டை விளக்கி பல்வேறு உணர்ச்சி பாவங்களோடு வெளிப்படுத்துவது.

வர்ணம்: நடனத்தின் முதுகெலும்பு, அல்லது நரம்பு மண்டலம் என்று வர்ணத்தைக் குறிப்பிடலாம். மிகவும் சிரமமான பகுதி இது. கிட்டத்தட்ட முக்கால் அல்லது ஒருமணி நேரம் ஆடக்கூடிய இந்த வர்ணத்தில் கலைஞர் தங்கள் திறமை முழுவதையும் காட்ட வேண்டியிருக்கும். கைகள், விரல்கள், கால்கள், தாளங்கள், அசைவுகள், முத்திரைகள் இவை அத்தனையும் வரிசையாக வந்து போகும்போது சீராக நீரோட்டம் போல் அமைந்திருக்கும் இந்தப் பகுதி. உணர்ச்சிகள், பாவங்களாக முகத்தில் வெளிப்படும். நன்கு தேர்ந்த மூத்த கலைஞர்கள், அனுபவமிக்க கலைஞர்களால்தான் இதனைத் திறமையாகக் கையாளமுடியும்.

பதம்: ஒரு பாடலின் உணர்ச்சிகளை பாவங்களோடு வெளிக் கொணர்வது. கிருஷ்ண லீலை என்று எடுத்துக் கொண்டால் அவற்றின் பல்வேறு பாவங்களைக் காட்ட வேண்டும்.

தில்லானா: தில்லானா என்பது வேகமும், விருவிருப்பான சொற்கட்டுகளும் கொண்ட பகுதி. இதில் வேகத்தோடு, கால், கை, விரல்கள் செயல்படும் விதமும், இதில் அடங்கியிருக்கும் பல்வேறு ஒலிஜாலங்களைக் காட்டும் சொற்களும் தில்லானாவை அழகுபடுத்திக் காட்டக் கூடியவை.

நிறைவில் ஏதாவதொரு ஸ்லோகத்தோடு நடனத்தை நிறைவு செய்வர். இது மேலோட்டமாக பொதுவான கருத்துக்களைச் சொல்லப்பட்டிருக்கும் கட்டுரை. இதில் நன்கு தேர்ந்த நடன ஆசிரியர்கள் சொல்வதே சரியென்று கொள்ள வேண்டும். இது அரிச்சுவடி போல ஒரு வழிகாட்டி அவ்வளவே. கவிஞர் தனுசுவின் விருப்பத்தை ஓரளவு நிறைவு செய்திருப்பதாக நினைக்கிறேன்.














Thursday, April 25, 2013

திருநெய்த்தானம்

திருநெய்த்தானம்

திருநெய்த்தானம் எனும் இத்தலம் திருவையாற்றுக்கு மேற்கில் சுமார் 2 கி.மீ.தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்திருக்கும் அழகான கிராமம். இவ்வூரில் தேவாரம் பாடப்பட்ட நெய்யாடியப்பர் ஆலயமும், வைணவ ஆலயமொன்றும், கிராம தேவதை ஆலயமும் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன.

இவ்வூர் சிவாலயம் நெய்யாடியப்பர் ஆலயம் என்று குறிப்பிட்டோமல்லவா. அந்த ஆலயத்துள் இப்போது செல்வோம். ஆலயம் காவிரிக் கரையில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. நதிக்கும், ஆலயத்துக்கும் இடையில் கல்லணையையும் திருவையாற்றையும் இணைக்கும் சாலை இருக்கிறது. ஆலயத்துள் நுழைந்ததும் வலதுபுறம் அமைந்திருப்பது அம்மன் கோயில் கொண்டிருக்கும் சந்நிதி உள்ளது. அம்மனின் பெயர் பாலாம்பிகை. தமிழில் இவரை இளமங்கையம்மை என்பர். அற்புதமாகக் காட்சியளிக்கும் பாலாம்பிகையை தரிசித்து நலம் பெறுவோம்.

சிவபெருமான் சந்நிதிக்குச் செல்வதற்கு நேராக மேற்கில் சென்றால் அங்கு விநாயகர், முருகன் சந்நிதிகளை தரிசிக்கலாம். இவர்களுக்கான தனி சந்நிதிகள் தவிர லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பிரம்ம ஆகியோர் மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். உட்பிரஹாரத்தைச் சுற்றி வந்து சிவபெருமான் சந்நிதியை அடையலாம். இருபுறமும் துவாரபாலகர்கள். அழகிய பெரிய சிலைகள். மூலஸ்தானத்தில் நமக்குக் காட்சியளிப்பவர் நெய்யாடியப்பர். இவருக்கு நெய்யினால் அபிஷேகம் நடைபெறும். திரு+நெய்+தானம் என்பதே இப்போது தில்லைஸ்தானம் என வழங்கப்படுகிறது.

பசு, பால், நெய் இவை சம்பந்தப்பட்ட தலபுராணங்களைப் பார்த்தால் ஒரே மாதிரியான வரலாறு சொல்லப்படும். அதாவது புல்வெளிகளில் மேய்வதற்காகப் பசுக் கூட்டங்கள் செல்லும். அங்கு கறவைப் பசுவொன்று ஓரிடத்தில் தன் மடியிலிருந்து பாலைப் பொழிந்துவிட்டு வந்து விடும். வீடு வந்ததும் அந்தப் பசு பால் கறக்கவில்லை என்றதும், அதன் உரிமையாளர் என்ன நடக்கிறது என்று பார்ப்பார். அப்போது அந்த பசு ஓரிடத்தில் தினமும் பாலைப் பொழிவதைக் கண்டு அந்த இடத்தைத் தோண்டிப் பார்ப்பார். அங்கு ஒரு சிவலிங்கம் புதையுண்டிருக்கும். அதை எடுத்து ஆலயம் எடுப்பித்து வழிபடுவர். அதே கதைதான் இந்த ஊரின் தல வரலாற்றிலும்.

திருநெய்த்தானம் சப்தஸ்தான தலங்களில் ஒன்று. மற்றவை திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துறுத்தி ஆகியவையாகும். இவ்வூரில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தில்

மையாடிய கண்டன் மலைமகள் பாகமதுடையான்
கையாடிய கேடில் கரியுரி மூடிய வொருவன்
செய்யாடிய குளை மலர் நயனத் தவளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்தான மெனீரே

என்று பாடுகிறார். திருவையாறு வரும் அனைவருமே இங்கு வந்து நெய்யாடியப்பரை தரிசித்துச் செல்லலாம்.
முனைவர் இராம கெளசல்யா

இவ்வூருக்குச் சிறப்பு சேர்ப்பவை பல இருக்கின்றன. பிரபலமான தேசபக்தர் சாம்பசிவ ஐயர் என்பவர் இங்குதான் இருந்தார். தமிழுலகில் சேக்கிழாரடிப்பொடி எனப் புகழ்வாய்ந்த அறிஞர் வாழும் ஊரும் இதுதான். சிதம்பரம் பிள்ளை எனும் தியாகி வாழ்ந்த ஊர் இது. ராஜாஜி காலத்தில் அமைச்சராக இருந்த தி.செள்.செள.ராஜன் தந்தையார் ஊரும் இதுவே. இவை தவிர மரபு ஃபவுண்டேஷன் எனும் பெயரில் இந்த மண்ணுக்குரிய கலை பண்பாட்டு முறைகளைக் கட்டிக் காத்திடும் பொருட்டு ஒரு அமைப்பை ஏற்படுத்தி நடத்திக் கொண்டு வருபவர் முனைவர் இராம கெளசல்யா இங்கு தனது பணிகளைச் சிறப்பாக செய்து வருகிறார். தமிழகச் சிறுமிகளின் உடை, உணவு, பேச்சு அனைத்துமே மாறிக் கொண்டிருக்கும் இந்த நாளில், பண்டைய பண்பாட்டு முறைகளைக் குறிப்பாக சிறுமிகள் ஆடக்கூடிய கும்மி, கோலாட்டம், கோலமிடுதல், ஊசி நூல் கொண்டு துணி தைத்தல், வாழை நாறில் பூத்தொடுத்தல், தேவாரம் ஓதுதல் போன்ற பண்பாட்டு வழிமுறைகளை தன் செலவில் செய்து வருகிறார் முனைவர் இராம கெளசல்யா. இத்தனை பெருமை பெற்ற ஊருக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துகொள்வதோடு, முனைவர் கெளசல்யாவின் பணிகளையும், அதற்கு அவருடைய முதிய வயதான தாயாரின் பங்களிப்பையும் பார்த்துச் செல்லலாமே.


இந்தியாவின் பெருமைமிகு நடன வகைகள்.

                                   
 
இயமம் முதல் குமரி வரையிலான பரந்து விரிந்த பாரதவர்ஷம் எனும் இத்திருநாட்டில் கங்கையும், காவிரியும் வேறுபல நீர்நிலைகளும், புனிதத் தலங்களும், தீர்த்தங்களும் புகழ்பெற்று விளங்குவதைப் போல் இந்த பூமியில் உருவான கலைகளும் அற்புதமானவை. அவற்றில் நடனக் கலை சிவபெருமானால் ஆடப்பட்டது.

Cosmic Dance என்று அறிஞர்களால் விவரிக்கப்படும் நடராஜப் பெருமானின் ஆடல் இந்த பூமியில் ஆடப்பட்ட முதல் நடனம். இதில் ஆனந்த நடனமும், ருத்ர தாண்டவமும் அந்த இறைவனின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. தமிழகத்தில் பொன்னம்பலம் தொடங்கி, வெள்ளி, தாமிரம் என பல சபைகள் உண்டு, அவைகளில் எல்லாம் ஆடல்வல்லான் ஆடிய அற்புத நடனங்களை உலகமே வியந்து போற்றி பாராட்டுகிறது. அதன் அடிப்படையில் இந்த பரந்து விரிந்த பாரத தேசத்தில் நிலவுகின்ற ஆடல் பலவகைப்படுகின்றது.

இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் நிலவுகின்ற கலாச்சாரம் அடிப்படையில் ஒரே உயிரூட்டமுள்ள இந்து கலாச்சாரம் என்பதில் ஐயமில்லை. இவை உருவில், அமைப்பில் மாறுபட்டாலும் அனைத்துமே ஒரே நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கு கலைகள் அனைத்துமே இறைவனை மையமாகக் கொண்டு, இறைவனுக்கு அர்ப்பணிப்புச் செய்யப்படுகின்றன. இதைப் போல் கலைகளை தெய்வத்துக்கு ஒதுக்கி வைத்த கலாச்சாரம் வேறு எங்கும் உண்டா தெரியவில்லை. குறிப்பாக இங்கு இசையும் நடனமும் இறைவனுக்கு அர்ப்பணிக்கவே பயன்பட்டிருக்கின்றன என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். இந்து கடவுளர்களில் சிவபெருமான், காளி, கிருஷ்ண பரமாத்மா தவிர, நடன விநாயகர் என்றெல்லாம் இறைவனையும் ஆடற்கலையையும் இணைத்தே வழிபட்டு வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

நாட்டியக் கலையின் பெருமையைச் சொல்லப் புகுந்தால் அது முடிவே இல்லாதது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான நாட்டியம் நிலவி வந்திருக்கிறது. அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுப்புறம், பழக்க வழக்கங்கள், மொழி, கலாச்சாரம், தெய்வ வழிபாட்டு முறை இவற்றையொட்டி அவரவர்க்கு ஏற்ற நாட்டிய வகைகளைக் கையாண்டு வந்திருக்கின்றனர். சில இடங்களில் பிற பகுதிகளின் தாக்கங்கள் கூட இவர்களது கலை நயத்தை செம்மைப் படுத்தியிருக்கிறது. இந்திய அரசின் அங்கமான சங்கீத நாடக அகாதமி இந்திய நடன வகைகளை எட்டு பிரிவாக அறிவித்துள்ளது. அவை இந்திய சாஸ்திரிய நாட்டிய வகைகள் என அறியப்படுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு வகை நடனமும் அந்தந்தப் பகுதிகளின் சமய வழிபாட்டு முறைகளுக்கேற்ப வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

சாஸ்திரிய நடன வகைகளைத் தவிர அந்தந்த பகுதிகளில் நிலவிய, நிலவுகின்ற நாட்டுப்புற கலைகளின் வடிவங்கள் பற்பல உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. நமது பாரத தேசத்தில் தொன்றுதொட்டு இசை நாட்டியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து பண்டைய நாட்களில் மன்னர்களின் ஆதரவையும் பெற்றிருந்ததால், கலைஞர்கள் ஏராளமாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் கலையை தெய்வமாகப் போற்றி பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் சென்ற இடங்களுக் கெல்லாம் இந்தக் கலையைக் கொண்டு சென்று அந்த இடங்களிலுள்ள கலைகளின் அம்சங்களையும் ஏற்றுக் கொண்டும், பொதுவாக நமது நடங்களின் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் குடிபெயர்ந்த பல இடங்களிலும், குறிப்பாக கிழக்காசிய நாடுகளில் இந்திய பாரம்பரியக் கலைகள் இன்னமும் உயிர்ப்போடு வளர்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா போன்ற இடங்களில் தமிழகக் கலைகள் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் திரைப்படங்கள் நடனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, சாஸ்திரிய, பாரம்பரிய நாட்டிய வகைகளை அப்படியே நடத்திக் காட்டியும், காலத்திற்கேற்ப அதில் சில புதுமைகளையும், மக்கள் மனங்களைக் கவர்வதற்கான புதிய யுத்திகளையும் கையாண்டு ஒருவகை நாட்டியத்தைக் கொடுத்ததனால், சாஸ்திரியம் என்று சொல்ல முடியாவிட்டாலும், புதிய வகை நடனங்களாக திரைப்பட நடனங்களும் மக்கள் மத்தியில் நிலைபெற்றுவிட்டன. தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் முன்பெல்லாம் நடனங்கள் இல்லாத படங்களே இல்லையெனலாம். நடனம் தெரிந்தவர்கள்தான் திரைப்பட நட்சத்திரங்கள் ஆனார்கள். அவர்களில் டி.ஆர்.ராஜகுமாரி, குமாரி கமலா, லலிதா, பத்மினி, ராகினி, குசலகுமாரி, சாயி சுப்புலட்சுமி, எல்.விஜயலட்சுமி என்று பல புகழ்பெற்ற நட்சத்திரங்கள் திரைகளில் மின்னினார்கள். அவர்களுக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள்.

பாரதத் திருநாட்டில் நடன சாஸ்திரத்தை பரதமுனிவர் உருவாக்கியதாக நம்புகிறார்கள். நடனக் கலையின் இலக்கணத்தை வகுத்தவராக பரதமுனிவர் நம்பப்படுகிறார். அதன் அடிப்படையில்தான் நடனமும், நடனத்திலிருந்து நடிப்பும், நடிப்பிலிருந்து கூத்து, நாடகம், சினிமா என்று பரிணாம வளர்ச்சி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. சாஸ்திரிய நடனத்தில் இசை, தாளம், பாவம், முத்திரைகள் என பல கூறுகள் உண்டு. இவைகளுக்கு அடிப்படையானவை வேதங்கள். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்களிலிருந்து இந்த நாட்டிய சாஸ்திரத்துக்குத் தேவையான பல கூறுகள் உருவாக்கம் செய்யப்பட்டதாக பெரியோர்கள் கூறுவார்கள்.

இந்தக் காலம் போல சபாக்கள், அரங்குகள், சபைகள் ஆகியவை முறையாக இல்லாத காரணத்தால் இதுபோன்ற கலைகள் எல்லாம் ஆலயங்களில் பல்லாயிரம் மக்கள் கூடும் இடங்களில் நடைபெற்றிருக்கின்றன. ஆலயங்களில் பூஜை வேளைகளில் நடனமும் இசையும் இடம்பெற்றிருப்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆலயங்களில் திருவிழா நாட்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளாக நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இப்போது போல இல்லாமல் மக்கள் புராணங்களையும், இதிகாசங்களையும், அவைகளில் உள்ள கிளைக் கதைகளையும் கதையாகக் கேட்பது ஒருபுறம் இருந்தாலும், அவற்றை நாட்டியம் மூலமும், நாட்டிய நாடகங்கள் மூலமும் நடித்துக் காட்டுவதைப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. ஆலயங்களில் நடனமிடுபவர்களுக்கு மன்னர்கள் மானியங்களைக் கொடுத்து பாதுகாத்து வந்தார்கள். அந்தந்த ஆலயங்களுக்கென்று நடனக் கைங்கங்கர்யத்தை செய்துவர சில குடும்பத்தார் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். மன்னர்களுக்குள் யுத்தங்கள் வந்தாலும், மக்கள் பாதிக்காத வகையில் போர்கள் நடத்தப் பட்டன. குறிப்பாக கலைஞர்கள் பாதுகாக்கப் பட்டார்கள். கல்கியின் "சிவகாமியின் சபதம்" புதினத்தில் சிவகாமி நடன அரசி என்பதால் புலிகேசி அவளை தங்கள் நாட்டுக்கு செல்வங்களோடு செல்வமாக கடத்திச் சென்றிருக்கிறான் என்பதைப் பார்க்கிறோம்.

சங்கீத நாட்டிய அகாதமி நடன வகைகளை நம் நாட்டில் எட்டு வகைகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். அவை:--

1. பரதநாட்டியம் (தமிழ்நாட்டைச் சார்ந்தது)
2. கதக்களி (கேரளம்) ஆண்கள் மட்டும் ஆடுவது
3. குச்சிபுடி (ஆந்திர பிரதேசம்)
4. மோஹினி ஆட்டம் (கேரளம்) பெண்களுக்காக
5. ஒடிசி (ஒடிஷா மாநிலம்)
6. மணிபுரி (மணிப்பூர்)
7. கதக் (பொதுவாக வட இந்தியா) முகலாயர் காலத்தில் உருவானது
8. சத்ரியா (அசாம்)

பொதுவாக நாட்டியங்களுக்கென்ற வழிமுறைகள் நாட்டிய சாஸ்திரம் என்று புனிதமாகக் காப்பாற்றப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளில் ஆடப்படும் நாட்டுப்புற கலைகளுக்கு பொதுவான நடைமுறைகள் உண்டே தவிர சாஸ்திரிய நடனங்களைப் போல உறுதியான வழிமுறைகள், இலக்கணங்கள், சட்ட திட்டங்கள் இவை இல்லாததால் அவ்வப்போது அது இடத்திற்கேற்றவாறு ஆடப்படுகின்றன.

சாஸ்திரிய நடன வகைகள் மேற்கண்ட எட்டுக்கும் தனித்தனி பாணி, முறைகள் அனைத்தும் உண்டு. அவைகளை தெரிந்து கொள்ள மேலும் விரிவான பல செய்திகளைப் பார்க்கவேண்டும். அதையும் காலம் கைகொடுக்குமானால் பார்க்கலாம்.




Tuesday, April 23, 2013

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள்

 ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள்

சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி

                                       

சதாசிவ பிரம்மேந்திரர் உருவம்


   சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டான நுழைவு வாயில்

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அவருடைய அதிஷ்டானம் கரூர் அருகிலுள்ள நெரூர் எனும் ஊரில் காவிரிக் கரையில் அமைதியான சூழ்நிலையில் பசுஞ்சோலைகளுக்கிடையே அமைந்திருக்கிறது. அவருடைய கீர்த்தனைகள் சிலவற்றை அவ்வப்போது இசைக் கச்சேரிகளில் பாடுவதையும் கேட்டிருப்பீர்கள். சில பாடல்கள் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவை. அவருடைய பாடல்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளுமுன் திரைப்படங்களில் வந்த ஒரு சில பாடல்களை இங்கு பார்க்கலாமே. முதலில் "மானஸ ஸஞ்சரரே" எனும் பாடல். இது சங்கராபரணம் எனும் படத்தில் வந்த பாடலாதலால் பலரும் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு.

ராகம் நவ்ரோஜ்/ஆதி தாளம்:


பல்லவி
மானஸ ஸஞ்சர ரே ப்ரஹ்மணி (மான)

சரணம்
ஸ்ரீ ரமணி குச துர்க்கவிஹாரே
ஸேவக ஜனமந் திரமந்தாரே (மான)

மதஸிகி பிஞ்சா லங்க்ருத சிகுரே
மஹணீ யகபோ லவிஜித முகுரே (மான)

பரம ஹம்ஸமுக சந்த்ர சகோரே
பரிபூரித முரளீ ரவதாரே (மான)

இந்தப் பாடலின் பொருளைத் தெரிந்து கொண்டால் இன்னமும் ரசிக்க முடியும் அல்லவா? அது இதுதான். "ஏ மனமே! உலாவிக் கொண்டிரு! பிரம்மத்தை நோக்கி உலவுவாய். அங்கு ஸ்ரீதேவியானவள் இருக்கிறாள். அவளுடைய இரு கொங்கைகள் எனும் மலைகளுக்கிடையே மகிழ்ச்சி தருவதும், அடியார்களுக்கு அருளும் ஐந்து கல்பக விருக்ஷங்களில் சிறந்த மந்தார விருக்ஷமாகவும் உள்ள பிரம்மத்தை நோக்கி உலவுவாய். கர்வம் கொண்ட மயிலின் பீலியைத் தலையில் அணிந்து, ஒளிவீசும் கன்னங்களை உடையதுமான பிரம்மத்திடம் ஏ மனமே உலவுவாய். புண்ணியர்களின் முகங்களான திங்களின் ஒளியைப் பருகும் சகோரப் பறவையாகவும், முரளி எனும் குழல் எழுப்பும் நாதமாகவும் இருக்கும் பிரம்மத்திடம் ஏ மனமே உலாவுவாய்!

இனி மற்றொரு பாடல். இது பழம்பெரும் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடி வெளிவந்த ஒலித்தட்டுகளில் கேட்டிருக்கலாம். அது இதோ.

ஹூருடி ராகம்/ஆதி தாளம். பாடல்: ப்ரூஹிமுகுந்தேகி

பல்லவி
ப்ரூஹி முகுந்தேவி ரஸனே (ப்ரூஹி)

சரணம்
கேசவ மாதவ கோவிந்தேதி
கிருஷ்ணானந்த ஸ்தாநந்தேதி (ப்ரூஹி)

ராதா ரமண ஹரே ராமேதி
ராஜு வாக்ஷ கனச்யா மேதி (ப்ரூஹி)

கருட கமன நந்தகஹஸ்தேதி
கண்டித தசகந்தர மஸ்தேதி (ப்ரூஹி)

அக்ரூரப்ரிய சக்ரதரேதி
ஹம்ஸ நிரஞ்சன கம்ஸஹரேதி (ப்ரூஹி)

அற்புதமான இந்தப் பாடல் சொல்லும் கருத்து என்ன தெரியுமா? "என் நாவே! முகுந்தா! என்று சொல்வாய். கேசவா என்றும் மாதவா என்றும் கோவிந்தா என்றும், ஆனந்த மயமான கிருஷ்ணனே என்றும் எப்போதும் சொல்வாய் என் நாவே. ராதையின் நாயகனே, ஹரி, இராமா, தாமரைக் கண்ணா, கருமேகத்தை ஒத்தவனே, நந்தகம் எனும் வாளை உடையவனே, இலங்கேசன் இராவணன் தலைகளைக் கொய்தவனே என்றெல்லாம் சொல்லி ஏத்து என் நாவே. அக்ரூரரின் நண்பரே, சக்கராயுதம் கைக்கொண்டவனே, அன்னம் போல மாசற்றவனே, கம்ஸனைக் கொன்ற சூரனே என்றும் போற்றுவாய் என் நாவே."

எஸ்.ஜி.கிட்டப்பாவைப் பற்றி கேள்விப் பட்டிருப்போம். அந்தக் கால நாடகமேடைக் கலைஞர். அவரது இசையால் கவரப்படாத மனமே அந்த நாளில் இல்லை எனலாம். தன் கானத்தால் கானக்குயில் கே.பி.சுந்தராம்பாளைத் தன் மனைவியாகக் கொண்டவர் இந்த இசைத் தென்றல். அவர் அந்த நாளில் நாடக மேடைகளில் இந்தப் பாடலைப் பாடாத நாட்களே இல்லையாம். இதோ அந்தப் பாடல். நாமும் படிக்கும்போது அவர் பாடலைக் கேட்பது போன்ற உணர்வை அடைவோம்.

குந்தலவராளி ராகம்/ஆதி தாளம். பாடல்: காயதி வனமாலி.

பல்லவி
காயதி வனமாலீ மதுரம் (காயதி)

சரணம்
புஸ்பஸு கந்தஸு மலயஸமீரே
முனிஜன ஸேவித யமுனா தீரே (காயதி)

கூஜிதசுகபிக முககககுஞ்சே
குடிலாளகபஹு நீரதபுஞ்சே (காயதி)

துளஸீ தாமவி பூஷணஹாரி
ஜலஜபவஸ்துத ஸத்குண செளரீ (காயதி)

பரமஹம்ஸ ஸ்ருத யோத்ஸவகாரி
பரீபுரிதமுர ளீரவதாரீ (காயதி)

வனத்தில் மலர்ந்த மாலை அணிந்த கண்ணன் பாடுகிறான்; இனிமையாய்ப் பாடுகிறான், மலர்ந்து மலர்களின் மணமும், மாமலையிலிருந்து வீசும் தென்றலும், முனிவர்கள் பலரும் சென்று தேடுகின்ற யமுனை நதிக் கரையில் அவன் பாடுகிறான். கிளி, குயில்கள் கூவும் காவினில், கருத்த மேகக் குழல்கள் படியும் யமுனை நதிக்கரையில் பாடுகிறான். கழுத்தில் துளசி மாலையணிந்து மனதைக் கவருகின்றவனும், தாமரையில் பிறந்த பிரம்மன் வழிபடுபவனும், நற்குணங்கள் வதிகின்றவனும், வீரர்வழித் தோன்றலான கிருஷ்ணன், முரளி எனப்படும் தன் புல்லாங்குழலில் இனிமையை வழியவிட்டுப் பாடுகிறான்.




Saturday, April 20, 2013

"சின்ன மேளம்"

      தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழாவையொட்டி
                       "சின்ன மேளம்" நாட்டியத் திருவிழா.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து வரலாற்றின் ஏடுகளில் புகழ் பெற்று விளங்கும் தஞ்சை பெரியகோயில் என வழங்கும் "ராஜராஜேச்சரம்" ஆலயத்தில் இவ்வாண்டு சித்திரை திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, தஞ்சை அரண்மனை தேவஸ்தானமும் Thanjavur Heritage Arts and Cultural Academy அமைப்பும் இணைந்து "சின்ன மேளம்" எனப்படும் நாட்டிய விழா நடைபெற்று வருகிறது.

கடந்த 7-4-2013 ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய இந்த விழா முதல் நாள் மாலை 6-05 மணிக்கு தஞ்சாவூர் தர்மராஜ், செந்தில்குமார் குழுவினரின் மங்களைசையுடன் இனிய ஆரம்பம் ஆகியது. தொடர்ந்து தஞ்சை இளவரசர் பாபாஜிராஜா போன்ஸ்லே துவக்கி வைத்த பிறகு, சென்னை கலா சாதனாலயா எனும் அமைப்பின் குரு திருமதி ரேவதி இராமச்சந்திரன் தனது மாணவிகளுடன் மிக அற்புதமான நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார்.

8-4-2013 திங்கட்கிழமையன்று மாலை இரு நடன நிகழ்ச்சிகள். முதலில் 6 மணிக்கு புதுச்சேரி தானிய கனக மகாலக்ஷ்மியும் 7 மணிக்கு திருப்பதி செல்ல ஜெகதீஷ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

9-4-2013 செவ்வாயன்று மாலை 7 மணிக்கு புது டில்லியிலிருந்து நிருத்ய பாரதி அமைப்பின் குரு திருமதி கனகா சுதாகர் தலைமையில் மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி ஏராளமாகக் கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

10-4-2013 புதன் அன்று சென்னை செல்வி சுகன்யா குமார் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் தொடர்ந்து 11-4-2013 வியாழன் அன்று சென்னை பரதாஞ்சலி அமைப்பின் குரு திருமதி அனிதா குஹா அவர்களின் மாணவியரின் மிக அற்புதமான நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நீண்ட அனுபவத்தின் முத்திரை அந்த நடனமணிகளின் ஆட்டத்தில் தெரிந்ததை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.

12-4-2013 வெள்ளிக்கிழமை இரு நிகழ்ச்சிகள். முதலில் இராமநாதபுரம் தியாகேசர் நாட்டியப் பள்ளி குரு திருமதி வேம்பு தியாகராஜசுந்தரம் அவர்களின் மாணவியரின் நடனமும், தொடர்ந்து சென்னை பவானி நாட்டியாலயா குரு திருமதி டி.பவானி அவர்களின் மாணவியரின் பரத நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

13-4-2013 சனிக்கிழமை சென்னை வாணி கலாலயா நுண்கலை நிலையத்தின் குரு திருமதி வாணி காயத்ரி பாலா குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது.

14-4-2013 ஞாயிறு தமிழ்ப் புத்தாணடையொட்டி இரு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலில் புதுச்சேரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரன் குழுவின் குரு திரு ஹெச்.சுவாமினாதன், திருமதி அனுராதா சுவாமிநாதன் ஆகியோரின் மாணவியரின் பரதம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ப்ரசன்ன பரதனாட்டிய வித்யாலயா சென்னை தஞை நாட்டிய கலைக் கூடம் குரு திருமதி கீதா நவநீதன் குழுவினரின் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

15-4-2013 திங்கட்கிழமை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கலைத் துறையில் பணிபுரிபவரும், சித்ரா ஆர்ட்ஸ் அண்டு கல்சுரல் அகாதமியின் தலைவருமான திருமதி சின்னமனூர் சித்ரா அவர்களின் மாணவியர் தங்கள் குருவின் தலைமையில் மிக சிறப்பானதொரு நிகழ்ச்சியை அளித்தனர்.

16-4-2013 செவ்வாய் அன்று பெங்களூரு லக்ஷ்மி கலாலயம் திருமதி ரமா வேணுகோபாலன் அவர்களின் மாணவியர் சிறப்பானதொரு நிகழ்ச்சியை அளித்தனர்.

17-4-2013 புதன்கிழமை சென்னை சமர்ப்பண இசை நாட்டியப் பள்ளியின் குரு சுவாமிமலை திரு K.சுரேஷ் அவர்களின் குழுவினர் தஞ்சை நால்வரின் வாரிசும், பிரபலமான நட்டுவனார் கிட்டப்பா பிள்ளையின் பாடாந்திரத்தில் மிக அழகான நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினர். இளம் வயதில் மத்திய அரசின் விருதுகளையும், வேறு பல சிறப்புக்களையும் பெற்ற வித்வான் திரு கே.சுரேஷ் மிக அற்புதமாக நட்டுவாங்கம் செய்ய, அவரது மாணவியர் நடனமாடியதை தஞ்சை மக்கள் மறக்கமுடியாது.

18-4-2013 வியாழக் கிழமை சென்னையின் சிறப்பு மிகு கலைக் கேந்திரமாக விளங்கும் கலாக்ஷேத்ராவின் மாணவ மாணவியர் பரதக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலாக்ஷேத்ராவின் முத்திரை விளங்கும்படியான அவர்கள் நடன நிகழ்ச்சி பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்திருந்தது.

19-4-2013 வெள்ளிக்கிழமை சென்னை சாய் நாட்டியாலயா திருமதி திவ்யஸ்ரீ குழுவினரின் பரதம் நடந்தது. தொடர்ந்து சென்னை நூபுர்லயா ஸ்கூல் ஆஃப் பெர்பாமிங் ஆர்ட்ஸ் குரு திருமதி லலிதா கணபதி அவர்களின் மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

இன்று 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும் நிகழ்ச்சிகள் உண்டு. தஞ்சை மக்களுக்கு இத்தனை நீண்ட நாட்கள் நடன விருந்து அமைவது இந்த சின்ன மேளம் நிகழ்ச்சியில் மட்டுமே. இதனை மிகச் சிறப்பாக நிர்வகித்து நடத்திவரும் குரு திரு ஹேரம்பநாதன், அவருடைய குடும்பத்தார் பாராட்டுக் குரியவர்கள். பொதுமக்களும் கலை ஆர்வலர்களும் மிகப் பெருமளவில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு நல்கினால்தான் கலை வளரும். தஞ்சை கலைகளுக்குத் தலைமையகம் எனும் பெருமையும் நிலைத்து நிற்கும். இந்த நிகழ்ச்சிக்கு மெலட்டூர் பாகவத மேளாவைச் சேர்ந்த பரதம் மகாலிங்கம் அவர்களும், திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலிக் குழுத் தலைவரும், நடனக் கலைஞரும், தஞ்சை ப்ரஹன் நாட்டியாஞ்சலிக் குழு உறுப்பினருமான திரு சுப்பிரமணியம் போன்றவர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறார்கள்.
கடந்த 7-4-2013 முதல் தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற்று வரும் "சின்ன மேளம்" விழாவைப் பற்றி எழுதியிருந்தேன். 19ஆம் தேதி வரையிலான நிகழ்ச்சிகள் அதில் இடம்பெற்றன. அதன் பின் நடந்தவைகளை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டி எழுதுகிறேன்.

20-4-2013 சனிக்கிழமை மாலை கோயம்பத்தூரிலிருந்து பக்தி நாட்டிய நிகேதன்அமைப்பின் குரு திருமதி கருணாசாகரி குழுவினர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கலாக்ஷேத்திரா பயிற்சியும், கருணாசாகரி அவர்களின் கற்பனைத் திறனும் உழைப்பும் அவருடைய நடன நிகழ்ச்சியில் வெளிப்பட்டன. அற்புதமான நிகழ்ச்சி என்று அனைவராலும் போற்றப்பட்டது இந்த நிகழ்ச்சி. ஒவ்வொரு நிகழ்ச்சியின் முன்பும், அந்த நடனம் பற்றிய விளக்கங்களை அளித்து அவரே உரையாற்றியது பாராட்டுக்குரியது. தொடர்ந்து சென்னை நிருத்திய சுதா நடனக் கலைக்கூடத்தின் குரு திருமதி சுதா விஜயகுமார் அவர்களும், அவருடைய மாணவிகளும் சிறப்பானதொரு நடன நிகழ்ச்சியை நடத்தினர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், யாருடைய நினைவாக இந்த விழா நடைபெறுகிறதோ, அந்த தஞ்சை நால்வர், தஞ்சை கிட்டப்பா பிள்ளை ஆகியோருடைய பாணியில் இவர்களுடைய நாட்டியம் அமைந்தது சிறப்பு. நன்றி கூறியபோது அமைப்பாளர் திரு ஹேரம்பநாதன் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் கலைஞர்களைப் பாராட்டிப் பேசினார்.
21-4-2013 ஞாயிறு அன்று சென்னை நாட்டியோபாசனா பள்ளியின் திருமதி பி.வசந்தி குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சென்னை பத்மஸ்ரீ நிருத்யாலயாவின் நிறுவனர் திருமதி சுஜாதா மோகன் அவர்களுடைய மாணவிகள் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் மிகச் சிறந்த நடனமனியாகத் திகழும் திருமதி பத்மா சுப்ரமண்யம் அவர்களுடைய மாணவியான திருமதி சுஜாதா மோகன், அவர்கள் பாணியில் மிக சிறப்பாக நடனமாடி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தனர்.


விழா தொடர்ந்து 24-4-2013 வரை நடைபெறும். மற்ற நாட்களின் நிகழ்ச்சிகளும் அவ்வப்போது இதில் இணைக்கப்படும்.



Monday, April 15, 2013

பூ.கக்கன்

எளிமையின் சின்னம் பூ.கக்கன்

தமிழகத்தில் திரு காமராஜ் அமைச்சரவையில் இருந்த போலீஸ் துறை அமைச்சர் பூ.கக்கன். அவர் மதுரை ஏ.வைத்தியநாத ஐயரின் நிழலில் ஒரு தேசபக்தராக வளர்ந்தவர். வைத்தியநாத ஐயரின் மகனைப் போல அவருடனேயே இருந்தவர் பூ.கக்கன். மதுரைக்கருகிலுள்ள மேலூரைச் சேர்ந்தவர். இவர் மக்கள் மத்தியில் பிரபலமானதே இவரது எளிமையினால்தான். 1908 ஜூன் 18இல் பிறந்தவர் கக்கன். எங்கோ மேலூருக்கருகில் தும்பைப்பட்டி எனும் ஊரில் பிறந்து வளர்ந்த இந்த மனிதர் இந்திய அரசியல் வானில் ஒளிமிகுந்த நட்சத்திரமாகத் திகழ்ந்தது மட்டுமல்ல, இவரது எளிமை, மனிதாபிமானம், தூய்மை இவற்றுக்காக இவரைத் திரும்பிப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. இப்படியும் ஒரு மனிதரா? இவர் அமைச்சராக இருந்தவரா? சாதாரண மக்களுடன், மிகச் சாதாரணமாகப் பழகி வாழ்ந்த இவரை என்னவென்று சொல்லி போற்றுவது?

தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்துவிட்டாலும், இவர் மிக உயர்ந்த பண்புகளால் மேல் தட்டுக்காரர்களில் உத்தமமானவர்களுக்கு இணையாக, ஏன் மேலானவராகவே வாழ்ந்து புகழ் பரப்பியவர். மத்திய அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்தவர். நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இப்படி இவர் வகிக்காத பதவிகளே இல்லை எனும்படி பணியாற்றியவர்.

மிக இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்திற்கு இழுக்கப்பட்டுப் பணியாற்றினார். பள்ளிப் பருவத்திலேயே மகாத்மா காந்தி, இந்திய சுதந்திரம், அதற்காகப் பாடுபட்டு பெருமக்கள் என இவரது சிந்தனை தூய்மையான அரசியல் பணியில் ஈடுபட்டது. 1939க்கு முன்பு வரை தாழ்த்தப்பட்டவர்களையும், சாணார் எனப்படுவோரையும் ஆலயங்களுக்குள் அனுமதிப்பதில்லை. இந்த கொடுமைக்கு எதிராக மகாத்மா காந்தியடிகளின் முன்முயற்சியால் ராஜாஜி தமிழகத்தில் ஆலயப் பிரவேசத்தைத் தொடங்கி வைத்தார். இது மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்தது. இந்த ஆலயப் பிரவேசத்துக்குச் சநாதனிகள் மத்தியிலும், பரம்பரையாக இந்த ஆலயத்தின் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த பெரிய இடத்து மனிதர்கள்: மத்தியிலும் எதிர்பு இருந்தது. ராஜாஜி கேட்டுக் கொண்டதற்கிணங்க பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள் ஆலயப் பிரவேசம் செய்த வைத்தியநாத ஐயர் அவருடன் உள்ளே நுழைந்த தொண்டர்கள் ஆகியோருக்கு ஆதரவு கொடுத்த போது, அந்த தொண்டர்கள் வரிசையில் பூ.கக்கனும் இருந்தார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு அலிப்பூர் சிறையில் தண்டனை அனுபவித்தார்.

1946இல் இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 முதல் 1950இல் அரசியல் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இவர் அங்கு உறுப்பினராக இருந்து பணியாற்றினார். 1952இல் இவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு 1957 வரை இருந்தார். தமிழ்நாட்டில் கு.காமராஜ் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு சென்னை முதலமைச்சராக ஆனபோது இவர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆனார். 1957 தேர்தல் வெற்றிக்குப் பிறகு இவர் தமிழ்நாடு அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றுக்கு அமைச்சர் பொறுப்பேற்றார். பிறகு விவசாயத்துறை அமைச்சரானார். 1963இல் போலீஸ் துறைக்கு அமைச்சரானார். அவர் இந்தப் பதவியில் 1967இல் காங்கிரஸ் தோற்றது வரை இருந்தார்.

1967இல் அடித்த அரசியல் புயலில் ஆனானப்பட்ட பெருந்தலைவரே தோற்கடிக்கப்ப்ட்டபோது இவரும் மேலூர் தொகுதியில் தி.மு.க.வின் ஓ.பி.ராமன் என்பவரிடம் தோல்வியுற்றார். இந்தத் தோல்விக்குப் பிற்கு கக்கன் அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். கக்கன் எனும் இந்த அரிய மனிதருக்குக் குடும்பம் என்று ஒன்று இருந்ததா? உறவினர்கள் இருந்தார்களா? அவர்களில் யாராவது அரசியலில் ஈடுபட்டார்களா? என்றால் இல்லை.

இவருக்கு ஒரு தம்பி, விஸ்வநாதன் என்று பெயர். இவருக்கு போலீசில் வேலைக்கு உத்தரவு வந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அண்ணன் கக்கன் அவர்களிடம் சென்று தனக்கு அவருடைய இலாகாவில் வேலை கிடைத்திருக்கிறது என்று சொன்னதும், ஊகூம் வேண்டாம், நீ போலீஸ் வேலைக்குப் போகக்கூடாது. நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், என் சிபாரிசில் வந்ததாகச் சொல்வார்கள் என்று அவரை போலீசில் சேர கக்கன் அவர்கள் அனுமதிக்கவில்லை. இப்படியும் ஒரு மனிதர்! அந்த விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர் ஆனார். பின்னர் இந்து முன்னணியின் துணைத் தலைவருமானார். இவர் காஞ்சி சங்கராச்சாரியார்களிடம் அபரிமிதமான பக்தியுடையவர். அண்ணனின் பாரம்பரியத்தையொட்டி இவரும் 2006 தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியிலிருந்து ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 23-12-1981இல் உடல்நலம் கெட்டு பூ.கக்கன் அவர்கள் இந்த உலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார். தான் ஒரு முன்னாள் அமைச்சர் என்பதைக்கூட மருத்துவமனையில் சொல்லாமல், தரையில் பாய்விரித்துப் படுத்திருந்த இவரை அங்கு வேறு யாரையோ பார்க்க வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்தபோது திடுக்கிட்டுப் போய், இவரா, இங்கேயா, இப்படியா என்று வருந்தி இவருக்குப் படுக்கையளித்து சிகிச்சைக்கு ஆணையிட்டதாகச் சொல்வார்கள். மகாகவி பாரதி தன் சுயசரிதையில் சொல்வான், "தந்தை போயினன், பாழ்மிடி சூழ்ந்தது, தரணி மீதினில் அஞ்சல் என்பாரிலர், மன்பொருள் போக்கிப் பயின்றதாம் மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை, ஏது செய்குவன், ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே" என்று இந்த நாட்டை எப்போதும் போற்றிப் பாடும் வாயால், இத்துயர் நாடு என்று சொல்லவைத்தது எதுவோ, அதுவே தியாகி கக்கனையும் தரையில் படுக்க வைத்து சாகடித்தது. வாழ்க தியாகசீலர் பூ.கக்கன் புகழ்.




Thursday, April 11, 2013

சின்ன மேளம்

                                      சின்ன மேளம்


தஞ்சை பிரகதீச்சரம் எனும் பெரிய கோயிலில் சித்திரை பிரம்மோத்சவத்தையொட்டி, தஞ்சாவூர் பாரம்பரியக் கலை பண்பாட்டு ஆய்வு மன்றம் (Thanjavur Heritage Arts and Cultural Academy) சார்பில் "சின்ன மேளம்" திருவிழா 2013 கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இம்மாதம் 24ஆம் தேதி நிறைவடையும். ஒவ்வொரு நாளும் மாலை 6-30 மணி முதல் 9-00 மணி வரை பெரிய கோயில் நந்திமண்டபத்தின் அருகில் இவ்விழா நடைபெறும்.

இதில் கலந்துகொண்டு நாட்டியமாடும் கலைஞர்கள் தஞ்சை நால்வர் பாரம்பரியத்தின்படி கிட்டப்பா பிள்ளை நினைவாகத் தங்கள் நடனக் கலையை அர்ப்பணிப்பார்கள். பங்கு பெறும் கலைஞர்கள் விவரம் இதோ:

 7-4-2013   ஞாயிறு   சென்னை கலாசாதனாலயா திருமதி ரேவதி ராமச்சந்திரன்
 8-4-2013   திங்கள்    1. புதுச்சேரி செல்வி தானிய கனகமகாலக்ஷ்மி
                                      2. திருப்பதி திருமதி செல்லா ஜெகதீஷ் குழுவினர்
 9-4-2013   செவ்.        புது டில்லி நிருத்யபாரதி ஸ்ரீமதி கனகா சுதாகர் குழுவினர்
10-4-2013 புதன்         சென்னை செல்வி சுகன்யா குமார்
11-4-2013 வியா        சென்னை பரதாஞ்சலி குரு திருமதி அனிதா குஹா
12-4-2013 வெள்ளி  1. இராமநாதபுரம் தியாகேசர் நாட்டியப் பள்ளி   திருமதி வேம்பு      தியாகராஜசுந்தரம்
2. சென்னை பவானி நாட்டியாலயா குரு D.பவானி மாணவியர்
13-4-2013 சனி சென்னை வாணி கலாலயா குரு திருமதி வாணி காயத்ரி பாலா
14-4-2013 ஞாயிறு 1. புதுச்சேரி ஸ்ரீராஜராஜேஸ்வரன் குழுவினர் குரு: H.சுவாமிநாதன் & அனுராதா
                                    2. சென்னை தஞ்சை நாட்டியக் கலைக்கூடம் ஸ்ரீபிரசன்ன  பரதநாட்டிய வித்யாலயா குரு ஸ்ரீமதி கீதா நவனீதன் குழுவினர்
15-4-2013 திங்கள்  சிதம்பரம் சித்ரா ஆர்ட்ஸ் & கல்சுரல் அகாதமி குரு சின்னமனூர் திருமதி சித்ரா
16-4-2013 செவ்    பெங்களூரு லக்ஷ்மி கலாலயம் ஸ்ரீமதி ரமா வேணுகோபாலன் குழுவினர்
17-4-2013 புதன்    சென்னை சமர்ப்பணா இசை நாட்டியப் பள்ளி சுவாமிமலை சுரேஷ் குழுவினர்
18-4-2013 வியா சென்னை கலாக்ஷேத்ரா பவுண்டேஷன், கலாக்ஷேத்ரா மாணவியர்
19-4-2013 வெள்ளி 1. சென்னை ஸ்ரீ சாய் நாட்டியாலயா ஸ்ரீமதி திவ்யஸ்ரீ குழுவினர்
2. சென்னை நூபுர்லயா ஸ்கூல் ஆப் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் ஸ்ரீமதி லலிதா கணபதி
20-4-2013 சனி 1. கோவை பக்தி நாட்டிய நிகேதன் ஸ்ரீமதி கருணாசாகரி குழுவினர்
2. சென்னை நிருத்ய சுதா ஸ்ரீமதி சுதா விஜயகுமார் குழுவினர்
21-4-2013 ஞாயிறு 1. சென்னை நாட்யோபாசனா நடனப் பள்ளி ஸ்ரீமதி பி.வசந்தி குழுவினர்
2. சென்னை பத்மஸ்ரீ நிருத்யாலயா ஸ்ரீமதி சுஜாதா மோகன் குழுவினர்
22-4-2013 திங்கள் 1. ஸ்ரீ ஹேரம்ப இசை நாட்டியாலயா, சென்னை ஸ்ரீமதி ஜி.மீனலோசனி குழுவினர்
2. திரிசூர் பாலாஜி கலாபவன் ஸ்ரீ கே.வெங்கடேஷ் குழுவினர்
23-4-2013 செவ் 1. கோவை பரதாலயா பரதநாட்டியப் பள்ளி ஸ்ரீமதி அமுதா தண்டபாணி மாணவியர்
2. சென்னை அக்ஷயா கலைக்குழு ஸ்ரீ பினேஷ் மகாதேவன் குழுவினர்
24-4-2013 புதன் விருது வழங்கி கெளரவிக்கும் விழா - விருது பெறுவோர்:
1. சென்னை நிருத்யோதயா மூத்த நடனக் கலைஞர், குரு
பத்மபூஷன் டாக்டர் பத்மா சுப்ரமண்யம் அவர்கள்.
2. மும்பை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரதநாட்டியக் கலா மந்திர்
திருவிடைமருதூர் குரு நாட்டியக்கலாநிதி ஸ்ரீ கே.கல்யாணசுந்தரம் அவர்கள்.

விருது வழங்கி கெளரவிப்பவர்: தஞ்சை மூத்த இளவரசர் ராஜாஸ்ரீ பாபாஜி ராஜா பான்ஸ்லே
பாராட்டு வழங்குவோர்: கபிஸ்தலம் ஸ்ரீ எஸ்.சுரேஷ் மூப்பனார், தொழிலதிபர்
மருத்துவர் வி.வரதராஜன், தலைவர் பிரஹன் நாட்டியாஞ்சலி
டாக்டர் E.N.சுஜீத், இயக்குனர், தென்னக பண்பாட்டு மையம்
டாக்டர் பப்பு வேணுகோபால் ராவ், சங்கீத நாடக அகாதமி, டில்லி நடன நிகழ்ச்சிகள்.
1. டாக்டர் ஸ்ரீமதி காயத்ரி கண்ணன் & குமாரி மஹதி கண்ணன்
(பத்மபூஷன் டாக்டர் பத்மா சுப்ரமண்யம் அவர்களின் மாணவியர்)
2. குமாரி S.சிவகாமி, குமாரி N.ஸ்ருதி, குமாரி S.கனகவல்லி, குமாரி C.சங்கீதா
குமாரி S.மேகனா (ஸ்ரீ கே.கல்யாணசுந்தரம் அவர்களின் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
பரதநாட்டிய கலாமந்திர் மாணவியர்)

கலை ஆர்வலர்கள் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கவும், நடனக் கலையில் சாதனை புரிந்த
பெரியோர்களை கெளரவிக்கவும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்
கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday, April 9, 2013

பாரதி பயிலகம் வலைப்பூ: "பாலியல் அறிவு"

பாரதி பயிலகம் வலைப்பூ: "பாலியல் அறிவு"

KMR.Krishnan KMR.Krishnan
20:04 (16 hours ago)
to me
அக் கட்டுரையைப் படித்தேன்.

தவறாமல் உங்கள் பதிவுகளைப் படித்துவருகிறேன். உங்கள் பதிவுகள் இளைய சமுதாயத்தினருக்கு நல்ல அறிமுகம்தான். என்னைப் போன்ற பிறந்தது முதல், ஆன்மீக, தேசிய, இலக்கிய, பாரதி இலக்கியச் சூழலில் வளர்ந்த 'பெரிசு'களுக்கு ஒரு மீள்வாசிப்பு அனுபவம் தான்.தங்கள் பணி மேலும் சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன். பதிவுலகில் தாங்கள் இன்று பெற்றுள்ள மதிப்பான இடத்திற்கு அடியேனின் பங்களிப்பும் உண்டு என்று இரும்பூது எய்துகிறேன்.பல வலை தளங்களிலும் தங்களுடைய படைப்புக்கள் சுட்டப்படுகின்ற‌ன.

இப்போது அக்கட்டுரையைப்பற்றி.படங்களைப் பற்றி முதலில். வெளியிட்டு இருக்க வேண்டாம் அந்த ஆபாசப் படங்களை.அவர்கள் எல்லோரும் மாடல் அழகிகள். எல்லாப் பெண்களும் அதுபோல ஆடை அணிவதில்லை.மாடல் தொழில் செயபவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கைதான். சினிமாவில் ஆடை குறைப்புச் செய்வதைப் போல எந்தப் பெண்ணும் நடைமுறை வாழ்க்கையில் செய்வதில்லை. எம் ஜி ஆர் படத்தில் 'கிளப் டான்ஸ்' காட்சிகளைக் காட்டிவிட்டு, அதனை எம் ஜி ஆர் கணிடிப்பது போலக் காட்டுவார்கள். அதைப் போன்ற 'டெக்னிக்'தான் இங்கே வெளியாகியுள்ள படங்கள். வருத்தமாக இருக்கிறது.

இதுபோல சினிமா, விளம்பரங்களில், மேலும் வலைதளம், நீலப்பட குறுந்தட்டுக்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு காம‌ உணர்வு மிகுந்து,கிளர்ச்சி அடைந்து(குடிபோதையில்) அதற்கு வடிகால் தேடி அலையும் விருதாப் பயல்களின் வெறிச் செயலை, பெண்கள் கவர்ச்சி காட்டுவதால் தான் அப்படி விருதாக்கள் நடப்பதாக கட்டுரையாளர் சொல்வது ஏற்புடையதல்ல.

பெண்களுக்கு அறிவுறை கூறும் கட்டுரையாளர் ஆண்களுக்கு என்ன அறிவுரை கூறியுள்ளார்? பெண்கள் அடக்க ஒடுக்கமாக, கிட்டத்தட்ட முஸ்லிம் பெண்களைப் போல பர்தா அணிந்து நடமடினால் ஒழுக்கமாக ஆண்கள் இருப்பார்கள் என்று உத்திரவாதம் அளிக்க முடியுமா?

எளியாரை வலியார் வாட்டுவது மிருகபுத்தி. பெண் உடலால் வலுவற்றவள்.
உடலால் வலுவான ஆண் வலுவற்ற பெண்ணை வாட்டுகிறான்.'வலுவற்றதை
வாட்டக் கூடாது; வீரம் எனில் அதனை தனக்கு சமமானவர்களிடம் காட்டவேண்டும்' என்று ஆணுக்கு கட்டுரையாளர் ஏன் கூறவில்லை?

என் மூத்த பெண் +2 படிக்கும் போது அதிக மதிப்பெண் பெறுவதற்காக காலை மாலை டியூஷன் போய் வந்தாள். ஒருநாள் இரவு 7.30 மணியளவில் அவளுடைய சைக்கிளைப் பின் தொடர்ந்த ஒரு விடலை அவளை மார்பில் தொட்டுவிட்டான். அவள் அவனை சைக்கிளோடு கீழே தள்ளி நான்கு மிதி மிதித்து விட்டாள். தப்பி ஓடி விட்டான். வீட்டில் வந்து சொன்னதற்கு வீட்டுப் பெண்கள் அவளைக் கண்டித்ததுடன், டியூஷன் செல்வதைத் தடை செய்துவிட்டனர்.அவனால் அவளுக்கு ஆபத்து வரலாம் என்று பயந்து பயந்து வாழ்ந்தோம். விளைவு? அவள் தொழிற்கல்விக்குச் செல்ல முடியவில்லை. ஒரு விடலையினால் அவள் முன்னேற்ற‌ம் தடைப்பட்டது. இதில் பெண் செய்த தவறென்ன?

என் இரணடாவது பெண் ஒரு குழந்தை வயது விளையாட்டுத் தோழனிடம் சகஜமாகப் பேசிப் பழகியதை ஒருதலைக் காதலாக பாவித்துக் கொண்டு அவளை வெளியில் வரமுடியாமல் தொந்திரவு செய்தான்.அவளுடைய படிப்பும் பாதிக்கப்பட்டது.

என் மூன்றாவது பெண் 'விப்ரோ'வில் சேர்ந்த பின்னர் பலருக்கும் மின் அஞ்சல் மூலம் கம்பெனிகளில் வேலை வாய்ப்பு பற்றிச் சொல்லி வந்தாள். அதில் நாலில் இரண்டு ஆண்கள் காத‌லுக்கு அழைத்தனர்.முகத்தைக்கூடப் பார்த்திராதவர்கள் எந்தக் கவர்ச்சியால்  காதல் வசப்பட்டனர்?

இன்று தன்னிடம் படிக்கும் சிறுமிகளிடம் சில் விஷமம் செய்யும் முதிர்ந்த ஆசிரிய ஆண்கள் சிறுமிகளின் கவர்ச்சியால்தான் அப்படிச் செய்கின்றன‌ரோ?

பொதுவாக ஆண் காமத்தில் வக்கிரமான சேர்க்கைகளை விரும்புகிறான். ஒரு நாகரிகமான, கலாச்சாரக் குடும்பத்தில் வந்த மனைவி அவனுடைய வக்கிரங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறாள். அப்போது அவன் வெளியில் சென்று பொறுக்கி போல நடந்து கொள்கிறான். சொல்லப் போனால் இளைஞர்களைவிட முதியவர்களே அதிக வக்கிரங்களுக்கு ஆட்பட்டவர்கள்.

'சேலை மீது முள் விழுந்தாலும், முள் மீது சேலை விழுந்தாலும் சேலைக்கு மட்டுமே பாதிப்பு'; 'பெண்பிள்ளை சிரிச்சா போச்சு;புகையில விரிச்சா போச்சு';'தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை';'கல்லானுலும் கணவன் புல்லானாலும் புருஷன்' இவைப் போன்ற பத்தாம்பசலிப் பழ மொழிகளின் தாக்கத்தால் கட்டுரையாளர் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆண்களுக்கு அறிவுரை தேவை. ஆண் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்ற மனோபாவத்தில் வளர்க்கப்படுகிறான்.'உனக்கென்னடா, நீ
ஆண்பிள்ளை"என்று சொல்லி சொல்லி வளர்க்கப்படும் ஆண், விடலைப் பருவத்தில் ஊர்சுற்றியாக, தறுதலையாக, பொறுப்பற்றவனாக, பொறுக்கியாக வடிவெடுக்கிறான்.

பெண்களூக்கு வேண்டிய அளவு அறிவுரை சொல்லியாயிற்று. இனி ஆண்களுக்குச் சொல்லத் துவங்குவோம். ஆமாம் அவர்களுக்கான  அறிவுரைகள் இன்னும் துவங்கப்படவில்லை. நீங்களாவது துவங்குங்கள்.

நன்றி வணக்கம்.

கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)