தில்லை வெளியிலே...
ராகம் : யமுனா கல்யாணி
தாளம் : ஆதி
தில்லைவெளியிலே கலந்து கொண்டாலவர் திரும்பியும் வருவாரோ
எல்லைக்கண்ட பேரினிப்பிறவாரென்று இயம்புவதறியாரோ
பெண்டுபிள்ளைகள் வெறுங்கூட்டம் அது பேய்ச்சுரைக்காய்த்தோட்டம்
கண்டுகொள்ளுவார் பெரியோரறிவில் கனகசபையினாட்டம்
திருவாதிரையில் தரிசனங்காணத் தேடித் திரியாரோ
அரிதாகிய இந்த மானிடங்கிடைத்தால் ஆனந்தமடையாரோ
குஞ்சிதபாதத்தைக் கண்டாலொழிய குறையது நீங்காதே
சஞ்சிதரவினையாதிகளுடாடிய சடமுந் தாங்காதே
சேரியிடையிலே குடியிருந்தாலிந்தச் சென்மமுந் தொலையாதே
சிதம்பரம்போவேன் பதம்பெறுவேன் தடைசெய்வது மறியாதே
இரவும்பகலும் ஒழியாக் கவலை இருப்பது சுகமோடா
இன்பம் பெருகும் பரமானந்த வெள்ளம் அமிழ்ந்துநீ போடா
1 comment:
என்ன,திடீரென்று பாடல்களில் இறங்கிவிட்டீர்கள்?
உங்கள் திறமைகள் முழுவதும் வெளியாக இணையம் நல்ல மேடையாக அமைந்தது.உங்களுடைய அறிவு, அனுபவம் ஆகியவற்றின் வீச்சை இப்போது உணர்கிறேன்.
Post a Comment