பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, March 27, 2013

Gopalakrishna Bharathiyar Songs. Nandan Charitham


ஐயே மெத்தகடினம்...


ராகம் : புன்னாகவராளி
தாளம் : ஆதி


பல்லவி
ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம் 

அநுபல்லவி
பொய்யாத பொன்ம்பலத் தையாஇருக்குமிடம் 
நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே] 

வாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவர்ப் 
பூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு) 
ஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே இந்த 

மானாபி மானம்விட்டுத்தானாகி நின்றவர்க்குச் 
சேனாதி பதிபோலேஞானாதி பதியுண்டு 
பாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே 

சரணம்
கோபாலகிருஷ்ணன் பணிந்திடும் சீலகுரு சிதம்பரம் 
மேலேவைத்த வாசையாலே காலனற்றுப் போவதென்று 
சாத்திரம் நல்ல க்ஷேத்திரம் சற்பாத்திரம் ஞானநேத்திரங்கொண்டு 

சங்கையறவே நின்று பொங்கிவரும் பாலுண்டு 
அங்கமிளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மைப் போலவே 
நில்லுமேஏதுஞ்செல்லுமே ஞானஞ்சொல்லுமே யாதும்வெல்லுமே இந்த 

அட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது 
கிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது 
பாயுமேமுனைதேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமேவேத 

மந்திரத்தி லேபோட்டு யெந்திரத்திலே பார்க்குநீ 
தந்திரத்தி லேயுமில்லை அந்தரத்திலே அவ 
தானமேஅது தானமே பலவீனமே பேசாமோனமே அந்த 

முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு 
இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம் 
ஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக் 

கண்டாருத கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை 
அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கும் 
அல்லவோபறையன் சொல்லவோ அங்கேசெல்லவோ 
நேரமாகுதல்லவோ [ஐயே]

2 comments:

Unknown said...

"முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு
இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம்
ஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக்

கண்டாருத கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை
அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கும்
அல்லவோபறையன் சொல்லவோ அங்கேசெல்லவோ
நேரமாகுதல்லவோ [ஐயே]"

"முப்பொழுதும் தாண்டி வந்து" என்றிருக்க வேண்டுமோ என்று எனது சிற்றறிவுக்குத் தோன்றுகிறது ஐயா!

சொல்லவோ! சொல்லி மாளாது சொல்லவும் கூடுமோ! அதனால் செல்லவோ நேரமாகுதல்லவோ என்று கூறியபடி செல்கிறார் போலும்...

அருமை பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

ஆன்மீக அறிவியல் said...

அற்புதம் அற்புதம் அற்புதம்