பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, November 15, 2011

நேரு எனும் மாமேதை!


என்.வி.சுப்பராமன், 12/1045, ஜீவன் பீமா நகர்                                     சென்னை 600101   
                        
               நேரு எனும் மாமேதை!

நேரு எனும் மாமேதை
    பாரதத்தில் வந்துதித்தான்
மேரு மலை போன்ற அவன்-காந்திக்குச்
    சாரதியாய் நின்றுழைத்தான்!

பாரதத்தின் விடுதலைக்குப்
    பாடுபட்ட பெருந் தலைவன்
பாரதத்தின் பிரதமராய்
     பலகாலம் பணிபுரிந்தோன்!

பாழ்பட்டு நின்ற பாரதத்தின்
     வேரறுந்த பொருள்நிலையை
தோள் தந்தே அவன் நிறுத்தி வைத்தான்
     பெரும் சோசலிசத் தத்துவத்தால்!
      
அணைகளும் ஆலைகளும்
      ஆயிரமாய்க் கட்டி வைத்தான்
அழகான கல்விக் கூடங்களை
      ஆலயமாய்ச் செதுக்கி வைத்தான்!

கல்வி அளித்தான் குழந்தைகள்
      கனவில் நிறைந்தான்
கண்கள் திறந்தான் சாசா நேரு என
      நினைவில் மலர்ந்தான்!

அண்ணல் காந்தியின் அடிச்சுவட்டில்
      அருமையாக நடந்து சென்றான்
மண்ணில் பாரதம் உயர்ந்திடவே
      அல்லும் பகலும் உழைத்திட்டான்!

பாரில் உயர்ந்த ஆலைகளே
      ஆலயம் என்றே போற்றிநின்றான்
பண்பில் உயர்ந்த மனிதர்களே
      ஆண்டவன் என்றே புகழ்ந்திட்டான்!

பாரதந் தன்னைப் பாரோர்கள்
      வியக்குமாறு வளர்த்திட்டான்
யாரிதற்கெல்லாம் வேரென்றால்
      நேரு எனும்மா மேதைதான்!                  

1 comment:

Unknown said...

திருவாளர் என்.வி.சுப்பராமன் அவர்களின் நல்ல கவிதை நாயகன் நேருவை போற்றியே நின்றது.
நேரு என்னும் மாமேதை
நேர்த்தியானப் பெருந்தலைவன்
பாரதத்தை பாரினில் உயர்த்திடவே
பாடுபட்ட அருந் தலைவன்

எண்ணெய் சுனைகள் இந்தியாவில்
இல்லையென்றே அமெரிக்கன் தந்த
தவறானத் தகவல்களை தவறென்று
தரணிக்கு தவறாமல் உணர்த்திடவே...

சோவியத்துடன் கை கோர்த்தான்
சோதனைகள் நடத்தி எண்ணெய்
சுனைதனை கண்டிடவே - அச்
சோதனையில் கண்டிட்டார் பல
எண்ணெய் சுனையோடு - இன்னும்
பலகனி வளமதையும் கண்ணுட்டார்

நல்லோர் கைகோர்த்தே நாயகன்
அரசியலிலே காவியமும் படைத்திட்டார்
மறக்காமல் அவர்தம் மகளுக்கும்
சொல்லியும் வைத்தார் அதன்படியே
அன்னை இந்திராவும் செயல்பட்டார்.

பதிவிற்கு நன்றிகள் ஐயா!
வாழ்க! வளர்க!! பாரதி இலக்கியப் பயிலகம்!!!