பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 9, 2015

மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் டிசம்பர் 11

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11இல் அவருடைய நினைவாக “விநாயகர் அகவல்” சில பகுதிகள்:


காலைப் பிடித்தேன் கணபதி, நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமென்னும் நாட்டின் நிறுத்த குறியெனக்கே.

எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்திற் சலன மில்லாமல் மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந் திடநீ செயல் வேண்டும்,
கனக்குஞ் செல்வம் நூறுவயதுஇவையும் தர நீ கடவாயே.

தவமே புரியும் வகையறியேன்,  சலியா துறநெஞ் சறியாது
சிவமே, நாடிப் பொழு தனைத்தும் தியங்கித் தியங்கி நிற்பேனை,
நவமா மணிகள் புனைந்தமுடிநாதா! கருணா லயனே! தத்
துவமாகி யதோர் பிரணவமே அஞ்சேல் என்று சொல்லுதியே

சுடரே போற்றி! கணத்தேவர்  துரையே போற்றி! எனக்கென்றும்
இடரே யின்றிக் காத்திடுவாய்எண்ணாயிரங்கால் முறையிட்டேன்,
படர்வான் வெளியிற் பலகோடி கோடி கோடிப் பலகோடி
இடறா தோடும் அண்டங்கள் இசைத்தாய், வாழி இறையவனே!


நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கண நாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே! இம்மூன்றும் செய்.

2 comments:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  2. விநாயகர் அகவலிலிருந்து அருமையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete

You can give your comments here