பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, August 24, 2013

"குழலூதி மனமெல்லாம்"

                                               "குழலூதி மனமெல்லாம்"


ராகம்: காம்போஜி                                                                               தாளம்: ஆதி

                                                              பல்லவி

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ - ஒரு சிறு
குறையேதும் எனக்கேதடீ.

                                                        அனுபல்லவி

அழகான மயில் ஆடவும் (மிக) காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும்

                                                       மத்யம காலம்

அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே - தனை மறந்து புள்ளினம் கூட
அசைந்தாடி மிக -இசைந்தோடி வரும் - நலம் காண ஒரு மனம் நாட
தகுமிது என ஒரு - பதம் பாட - தகிடததிமி என - நடம் ஆட
கன்று பசுவினொடு - நின்று புடைசூழ - என்றும் மலருமுக இறைவன் கனிவொடு (குழ)

                                                              சரணம்

மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும் ...........
மிகவும் எழிலாகவும் ......... காற்றில்
மிளிரும் துகில் ஆடவும் ........
அகமகிழ்ந் .................. இறைவன் கனிவோடு (குழ)

1 comment:

  1. குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
    குறையேதும் எனக்கேதடீ!..

    - உண்மைதான்!.. குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!...

    ReplyDelete

You can give your comments here