பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, August 24, 2013

ஆடாது அசங்காது வா கண்ணா!

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். ஊத்துக்காடு வேங்கடகவியின் சில பாடல் வரிகளை இங்கு காணலாம்.

              ஆடாது அசங்காது வா கண்ணா!


ராகம்: மத்யமாவதி                                                                        தாளம்: ஆதி.

                                                             பல்லவி

ஆடாது அசங்காது வா கண்ணா, உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடுது எனவே (ஆடாது)

                                                      அனுபல்லவி

ஆடலைக் காண தில்லை அம்பலத்து இறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறு யாதவனே - ஒரு மாமயில் இறகணி மாதவனே நீ (ஆடாது)

                                                           சரணம்

சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதை
செவி மடுத்த பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே - மயில்
பீலி அசைந் தசைந்து நிலை கலைந்திடுமே
பன்னிருகை இறைவன் ஏறுமயில் ஒன்று - தன்
பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே - குழல்
பாடிவரும் அழகா - உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால்
மனம் புண்பட்டுப் போகுமே (ஆடாது)

1 comment:

  1. சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பு ஒலித்திடுமே அதை
    செவி மடுத்த பிறவி மனம் களித்திடுமே! -

    ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடாக - ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் கவிதை வரிகள்!..

    ReplyDelete

You can give your comments here