பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, August 16, 2012

தருமர் சொர்க்கம் செல்லும் காட்சிஇந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் மகாபாரதத்தில் கடைசி பகுதியில் தருமர் சொர்க்கம் செல்லும் காட்சி நினைவுக்கு வருகிறது. பாண்டவர்கள் தங்கள் இறுதிக் காலத்தில் வடக்கே மேரு மலையையும் தாண்டி மேலுலகம் செல்ல இமயமலையில் சென்று கொண்டிருக்கிறார்கள். யாரும் திரும்பிப் பார்க்காமல் போக வேண்டுமென்பது கட்டாயம். ஆனால் முதலில் திரெளபதியும், பின்னர் ஒவ்வொரு தம்பிகளாகவும் திரும்பிப் பார்த்து அங்கேயே இறந்து விடுகிறார்கள். இறுதியில் தருமன் மட்டும் செல்கிறான். அவன் பின்னால் ஒரு நாய் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. அப்போது தர்ம தேவதை மாற்றுரு எடுத்து வந்து தருமனிடம் நீ மட்டும் சொர்க்கத்துக்கு வரலாம், இந்த நாயோடு வந்தால் வரமுடியாது என்கிறது. அதற்கு தருமன் இந்த நாய் என்னை நம்பி என்னோடு வருகிறது; அதுவும் வரலாம் என்றால் நான் சொர்க்கம் வருகிறேன், இல்லையென்றால் நானும் இந்த நாயுடன் இங்கேயே இருப்பேன் என்கிறான். தருமனின் அன்பைக் கண்டு தர்மதேவதை தருமரையும் சொர்க்கத்துக்குப் போக அனுமதிப்பதாக கதை. அந்த காட்சிதான் இங்கு நினைவுக்கு வருகிறது. இங்கு 3 நாய்கள், அவ்வளவே.

1 comment:

  1. தருமர் தான் பழகிய நாயியுடன்தான் செல்வேன் இல்லை எனில் அப்படிபட்ட. சொர்க்கம் எனக்கு தேவையில்லை என் கூறுவது போற்றுவதற்க்குரியது

    ReplyDelete

You can give your comments here